A எனது நாட்குறிப்பு: ஆறாவது முறையும் அவரே ஆள்வார்!

Friday, April 8, 2011

ஆறாவது முறையும் அவரே ஆள்வார்!

தலைவர் கலைஞரே தமிழகத்தின் முதல் அமைச்சர் நாற்காலியில் அமரப்போகிறார். இது காலத்தின் கட்டாயம்; தமிழகத்தின் எதிர் காலம்!

இன்றைக்குத் தலைவர்களாக வலம் வருபவர்களைப்போல, நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல கலைஞர். 'தமிழாய்ந்த பெருமகன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருதல் வேண்டும்’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கனவை நிறைவேற்ற வந்தவர் கலைஞர். 'காலம் நமக்குத் தந்த கொடை கலைஞர். அவரது ஆட்சியை இன்னும் 10 ஆண்டுகளுக்குக் கண்ணும் கருத்துமாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்’ என்றார் பெரியார். 'என்னை அறிந்தவர்கள் இந்தக் கழகத்தில் நிறையப் பேர் உண்டு. ஆனால், முழுமையாக அறிந்தவர் தம்பி கருணாநிதி மட்டும்தான்!’ என்றார் அண்ணா. திராவிட இயக்கத்தின் தத்துவத்தை அறிமுகப்படுத்திய பெரியாரும், அதை நடைமுறைப்படுத்திய அண்ணாவும், கலை இலக்கியத் தளத்தில் கொண்டுசேர்த்த பாரதிதாசனும் பாராட்டிய பெருமை கலைஞருக்கு மட்டுமே உண்டு.

13 வயதில் திருவாரூர் வீதிகளில் கொடி பிடித்துக் களம் கண்டவர், 87 வயதில் இன்றும் தமிழ் இனத்துக்காக, நாட்டுக்காக வாதாடி வருகிறார்; போராடி வருகிறார். இதுவரை தங்களது மன சிம்மாசனத்தில் வைத்து வாழ்த்தி வந்த தமிழ்நாட்டு மக்கள், இம்முறையும் அதே இருக்கையில் அவரை அமர்த்தி அழகு பார்க்கக் காத்திருக்கிறார்கள்!

பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு 1969-ல் இருந்து ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கலைஞர், தமிழகம் வளம் பெற எவ்வளவோ திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். பேருந்துகள் நாட்டுடைமை, அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்பு, குடிசை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வசதிகள், கண்ணொளித் திட்டம், கம்யூனிஸ்ட்கள் ஆளும் மேற்கு வங்கத்தில்கூட செயல்படுத்தப்பட முடியாத கை ரிக்ஷா ஒழிப்பு, இந்தியாவுக்கே முன்னுதாரணமாகக் காவலர்கள் வாரியம், மே தினத்துக்கு ஊதியத்தோடு விடுமுறை, இந்தியாவிலேயே முதலாவது வேளாண்மைப் பல்கலைக்கழகம், மீனவர்களுக்கு இலவச வீட்டு வசதித் திட்டம், அநாதைச் சிறுவர்களுக்கு கருணை இல்லங்கள், சேலம் உருக்காலைத் திட்டம், நெய்வேலி இரண்டாவது சுரங்கம், சிப்காட் தொழில் வளாகங்கள், விவசாயத்துக்கு இந்தியாவிலேயே முதன் முதலாக இலவச மின்சாரம், பெண்களுக்கு சொத்துரிமை... என்று எத்தனையோ திட்டங்கள் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் அறிமுகமாகின.

ஆனால், 1991, 2001 என்ற இரண்டு முறை தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா பொறுப்புக்கு வந்தவுடன், தனது ஆட்சியை, எவ்வாறு மக்கள் விரோத ஆட்சியாக நடத்தினார் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அவருடைய நடவடிக்கைகளைத் திரும்பிப் பார்த்தால், ரண வேதனைகளே ஏற்படும். பாரதி குறிப்பிட்டவாறு 'பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்தான் அரசாளும்’ என்ற வரிகளே நினைவுக்கு வரும். ஜெயலலிதா ஆட்சியில் நடந்தவற்றை, தமிழக வாக்காளர்கள் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

. உலகமே கண்ணீர் வடிக்கும் வகையில், தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களை நடு இரவில் வீடு புகுந்து தாக்கிக் கைது செய்தது; இந்த நிகழ்வை குருவாயூர் கோயிலில் இருந்துகொண்டு ஜெயலலிதா செல்போனில் அகந்தையோடு ரசித்தார்; நினைவில் வாழும் முரசொலி மாறன், தளபதி, டி.ஆர்.பாலு ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளானது!

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டியின் கார் திண்டிவனம் அருகே தாக்கப்பட்டது; அவரைப்​​​​பற்றித் தரக் குறைவான விமர்சனங்களை ஜெயலலிதா செய்தார்.

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காரைக்குடி செல்லும் வழியில் அவரது கார் மறிக்கப்பட்டு, முட்டைகளை எறிந்து தாக்குதல் நடந்தது! பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது. ஜெயலலிதா அரசுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போகிறார் என்பதற்காக மூத்த வழக்கறிஞர்கள் விஜயன், சண்முகசுந்தரம் ஆகியோர் தாக்கப்பட்டனர்.

அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தூத்துக்குடி ரமேஷ், மதுராந்தகம் சொக்க​லிங்கம், உப்பிலியாபுரம் ரவிச்சந்திரன் தாக்கப்​பட்டனர். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சட்டமன்ற விடுதிக்குள்ளேயே தாக்கப்​பட்டார். இவை யாவும் ஜெயலலிதா ஆட்சியில் நடை​பெற்றன. ஜெயலலிதாவின் சாதனைகள் இவை மட்டும்தானா?

பொடா சட்டத்தின் கீழ் வைகோ, பழ.நெடுமாறன் போன்றவர்களைப் பகை உணர்வோடு சிறையில் அடைத்தவரும் இவரே. கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் மூன்று பேர் கொடூரமாக, பட்டப் பகலில் எரித்துக் கொல்லப்பட்டதற்கும் இவரது சுயநலம்தான் காரணம். மதுரையில் இளம் பெண் செரினா கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட மர்மம் இன்னமும் விலகவில்லை... என்று ஜெயலலிதாவின் அராஜக நடவடிக்கைகளை இன்னும் பட்டியல் போடலாம்!

கலைஞர் ஆட்சிக் காலம் சாதனைகளைக்​கொண்டது. ஜெயலலிதா காலம் வேதனைகளைக்​​கொண்டது.

தி.மு.க-வின் 2011 தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது. இலவச கிரைண்டர், மிக்ஸி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, வயதானவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்பவை உட்பட பல வாக்குறுதிகள் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளன. அதைக் கண்டு பொறுக்க முடியாமல், அலறியடித்துக்கொண்டு தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது. அதை நம்புவதற்கு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.

1991, 2001 சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் பலவற்றைக் காற்றில் பறக்கவிட்டவர் ஜெயலலிதா. இன்று எங்களது அறிக்கையைப் பார்த்து காப்பி அடித்து தேர்தல் அறிக்கை வெளியிடுவதை நம்ப தமிழ் மக்கள் தயாராக இல்லை!

தலைவர் கலைஞர், இந்தியத் திருநாட்டின் அரசியல் களத்தில் 75 ஆண்டுகளுக்கு சொந்தக்காரர். தி.மு.க-வையும், தமிழகத்தையும் சோதனைக் காலத்தில் வழி நடத்தியவர். எப்போதும், எவரும் அவரை சந்திக்கலாம். ஆனால், ஜெயலலிதாவை அவரது கூட்டணிக் கட்சித் தலைவர்கள்கூட சந்திக்க முடியாது. எப்போதும் உழைக்கத் தயாராக இருக்கும் கலைஞர் வேண்டுமா, சதா ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கும் ஜெயலலிதா வேண்டுமா என்பது தமிழக மக்கள் முன் உள்ள கேள்வி.

தொலைநோக்குப் பார்வைகொண்ட தமிழ் மக்கள் கலைஞரையே தேர்ந்து எடுப்பார்கள்!

நன்றி:ஜூவி (நடு நிலையாம்)

5 comments:

Anonymous said...

போங்க பாஸ் ! நமக்கு நிறைய வேலை இருக்குதுங்க ...........

pozhuthupoku said...

sompu nasungiyirukke....

VJR said...

ஹாஹா, இக்பால் செல்வன், வேலைதான் முக்கியம்.

VJR said...

//pozhthupoku said...
sompu nasungiyirukke//

ஓகோ நீதான் ஜெயா சொம்போ. ஜெயால்லாம் என்னத்தக் கிழிச்சுச்சுன்னு இங்க வந்து வாண்டடா குனியுற.

VJR said...

kama, ஒன்னால எழுத முடிஞ்சா எதையாச்சும் எழுதித் தொல. அத்தவுட்டுட்டு சும்மா என்கிட்ட வந்து உன் டவுசரக் கழட்டாத. நானே காண்ட்ல இருக்கேன். கிழிச்சுருவேன். மரியாதக் கொடுக்காத மசுருக்கு நான் ஏண்டா மரியாத தரனும்.
அத்தக் கேக்க ஒனக்கு துப்பில்ல, இங்க வந்துட்ட.

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.