A எனது நாட்குறிப்பு: ஜெயாவின் அறிக்கை, பதிவர்களுக்கு இலவச இண்டெர்நெட்.

Thursday, April 7, 2011

ஜெயாவின் அறிக்கை, பதிவர்களுக்கு இலவச இண்டெர்நெட்.

அன்புள்ள பதிவுலக குஞ்சா மணிகளே
பித்தத்தின் பித்தங்களே...

பெங்களூரிலிருந்து வரும்போதே என் தாய் சொன்னார், இந்த தமிழர்கள் செலக்டிவ் அம்னீசியாவால் பீடிக்கப்பட்டவர்கள்,தமிழ்நாட்டுக்காரனைத் தவிர வேறு யார் சொன்னாலும் என்ன சொன்னாலும் நம்புவார்கள்,கொஞ்சம் லட்சனமாக இருந்துவிட்டால் நாக்கை தொங்கப்போட்டு அலைவார்கள், இருக்குற எல்லாத்தையும் நமக்கு கொடுத்துவிடுவார்கள், அவ்வளவு ஏமாளிகள் என்றார். நான் நம்பவில்லை. அப்போ சின்ன வயது. அறியா வயது. மன்னித்துக்கொள்ளுங்கள்.

ஆனால் இன்று, ஒரு சாதாரண நடிகையாய், நடனக்காரியாய் இருந்தவளை இந்தளவுக்கு ஏற்றிவைத்தீர்களென்றால் என் தாய் சொன்னது உண்மை. சத்தியம்.

சும்மா கிடந்தவளை கொ.ப.செ’வாக ஆக்கி அழகு பார்த்த அந்த தானைத் தலைவனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் ராஜீவ் காந்திக்கு எழுதி அசிங்கப் படுத்தியும், பித்தத்தின் பித்தமே அனைத்தையும் மறந்து தலைமை ஏற்க சொன்னதை எப்படி மறப்பேன்?

சவ ஊர்வலத்தில் கூட சேர்க்கவிடாக் கூட்டத்திலே, அத்தனை எதிர்ப்பையும் மீறி கட்சியை உடைத்து தலைமையேற்க்க வைத்த திருநாவுக்கரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்,எஸ்.டி.எஸ் இப்படி எல்லோரையும் விரட்டி வேட்டையாடியும் என் மேல் தீராத அன்பு வைத்திருக்கிற என் குருட்டு தமிழ் சமுதாயமே..என்ன செய்வேன்?

திடமான தலைமையானதும் ஒவ்வொரு மூத்தக்குடி தமிழனையும் காலில் விழ வைத்து நோகடித்ததையும் அழகென்று சொல்லும் என் தமிழ் மூச்சே.. அய்யகோ என்ன செய்வேன்?

ஈழம் ஈழம் என்று கூக்குரலிடும் என் பித்தத்தின் பித்தமே,”போரென்றால் பொது மக்களும் சாவத்தான் செய்வார்கெளென்று” என்று நான் சொன்னதை அழகாக மறந்தாயடா என் மடச் செல்லமே,

கூட்டணி ஆரம்பிக்கும் முன்னரேகூட நான் கூட்டணிக்காக காங்கிரசைக் கெஞ்சிக் கதறினதை மறந்து, என்னை நல்லவளென்று சொல்வதை எப்படியடா சொல்வது...?

அதுமட்டுமா, ஒரு வேளை நான் ஜெயித்துவிட்டால் மறுபடியும் காங்கிரசிடம் போகமாட்டேன் என்று திடமாக நம்புகிறாயே என் முட்டா பித்தத்தின் பித்தமே, நீதாண்டா என் வெல்லம்.

இதற்கு முன் நான் பத்து வருடம் ஆண்டதையும் அதில் காவிரி பிரச்சினையும் முடிக்கவில்லை, பெரியார் பிரச்சினையும் முடிக்கவில்லை என்பதையும் மறந்து இனிமேல் முடிப்பேன் என்பதை நம்புகிறாயே என் எலும்பின் எலும்பே.. எப்படியடா உன்னை மறப்பது?

வாஜ்பாயி,வைகோ என நம்பி வந்தவங்களை நட்டாற்றில் விடுவதில் வரலாறு படைத்த என்னை இன்னும் நம்புகிறாயே என் தமிழ் சாம்பிராணியே, நீதாண்டா என் பலம்.

அடுத்த பலி விஜயகாந்தா,பாண்டியானா, ராமகிருஷ்ணனா எனக்கெப்படிடா தெரியும், சசிகலாவல்லவா என் ரிமோட் கண்ட்ரோலர்.

சோ அட்வைஸ் எனக்கிருக்க இன்னும் மத ஒற்றுமை காப்பேன் என்று நம்புகிறாயே என் பித்தத்தின் பித்தமே, அதுதாண்டா என் பலம்.

என்னோட தகிடத்தத்தங்கள் எதையும் வெளியிடாமல் எப்போதும் கருணாநிதியின் வில்லங்கத்தை நோண்டுவதிலிருந்து தினமலர்,தினமணி,ஹிண்டு,விகடன்,ரிப்போர்ட்டர் ஆரிஜின் தெரியாமல் என் காலுல கெடக்கும் மூதேவி தமிழனே உன்னை எப்படிடா மறப்பேன்?

சுடுகாட்டிலிரிந்து டான்ஸி வரைக்கும் ஊழலித்த என்னை ஊழலை ஒழிக்க அழைக்கிற மதி தமிழனைத் தவிர வேறு யாருக்குடா உண்டு?

தமிழ்நாட்டில் இருக்கும் லட்சம் சொச்சம் கிராமங்களில் இருக்கும் தீண்டாமயில் மிதிபடும் தமிழனை மறந்து உலகையே ரட்சிக்க என்னை அழைக்கும் அறிவு உன்னைவிட்டால் யாருக்குடா உண்டு?

என் தாய், படிக்காதவர்கள் தெயவத்துக்கு ஒப்பானவர்கள், மன்னிப்பார்கள் மறப்பார்கள் என்றார். இல்லை தாயே, படித்த பதிவர்களும் மறக்கும் தெய்வங்கள்..

நான் ஜெயித்தால் 24 மணி நேரமும் இலவச இணைய இணைப்பு கொடுப்போம் பதிவர்களே, இப்போது போல் அப்போது அம்னீசியாவிலே இருங்கள்.

அடுத்து மகாமகத்தில் இறப்போர் எண்ணிக்கை 48 லிருந்து 96 ஆக உயர்த்தப்படும்.

கட்டிய பாலம் இடிக்கப்படும்.

புது மசூதிகள் இடிக்க ஒத்துழைக்கப்படும்.

மதமாற்றம் நடப்பது ஏனென்று ஆராயாமல் தடுக்கப்படும்.

ஜாதிக் கலவரங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.

வருடம் ஒரு முறை வளர்ப்பு மகன்,அப்பா, அம்மா எல்லாம் நடை முறை படுத்தப்படும்.

வாழ்க ரத்ததின் ரத்தம்
வளர்க பித்தத்தின் பித்தம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.