A எனது நாட்குறிப்பு: தேவகோட்டையில் சாத்தான்!

Thursday, April 14, 2011

தேவகோட்டையில் சாத்தான்!







கண்மாய் கரையில் கற்பழித்து.. பீர் பாட்டிலை உடைத்து சங்கை அறுத்து...
தேர்தல் சத்தத்தை மீறி, பஞ்சவர்ணத்தின் அழுகுரல் சிவகங்கை


மாவட்டத்தைத் திடுக்கிடவைத்தது. நடந்த கொடூரம் கேட்டு அதிர்ந்து நிற்கிறார்கள், மக்கள்!

தேவகோட்டையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்​டரில் இருக்கிறது கீழஉச்சாணி. இந்தக் கிராமத்தின் ஆதி திராவிடர் காலனியைச் சேர்ந்தவர்கள் கண்ணன் - பஞ்சவர்ணம் தம்பதி. செங்கல் சூளையில் வேலை பார்த்தவர்களின் மகள் செல்வ பிரியா. அந்த 11 வயதுப் பூ இன்று இல்லை. காமக் கொடூரன் ஒருவனால் பாழ்படுத்தப்பட்டு உயிரையும் இழந்துவிட்​டாள்!

பித்துப் பிடித்தவர்போல் உட்கார்ந்திருந்த கண்ணன் நடந்த கொடுமையைத் தயக்கத்துடன் சொன்னார்.

''அடுத்தாப்புல இருக்கிற மேலஉச்சாணி கிராமத்துக்கு செங்கல் அறுக்குறதுக்காக நானும் என் பொஞ்சாதியும் இருபது நாளைக்கு முந்தி போனோம். அங்க இருந்து இங்க வந்து போறதுக்கு சிரமமா இருந்ததால, சூளைக்குப் பக்கத்துலயே ஒரு குடிசையைப் போட்டு குடும்பத்தோட தங்கிட்டோம். இந்த வீட்டுல எங்க ஆத்தா மாத்திரம் இருந்துச்சு. அந்த கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமியும் ராஜேந்திரனும் அடிக்கடி சூளைக்குப் பக்கம் உக்காந்து தண்ணியடிப்பாங்க. போதையில எங்கிட்ட ஏதாச்சும் பேசி வம்பு பண்ணுவாங்க. நான் அதைப் பெருசா எடுத்துக்கலை.

அஞ்சு நாளைக்கு முன்னாடி ராத்திரி நானும் என் பொஞ்சாதியும் வீட்டுக்குள்ள படுத்து இருந்தப்ப வேலுச்சாமி குடிபோதையில எங்க வீட்டுக்குள்ள புகுந்துட்டான். அவனப் புடிச்சு வெளிய தள்ளி, 'இந்த வேலை எல்லாம் எங்க கிட்ட வேணாம். அப்புறம் மானம் மருவாதி இருக்காது’ன்னு திட்டிட்டேன். அவங்க சாதிக்காரரான எங்க முதலாளிகிட்டேயும் இதைச் சொன்னேன். அவரும் கண்டிச்சார். பஞ்சவர்ணத்துகிட்ட வம்பு பண்ணுவான்னு நினைச்சேன். ஆனா, அந்தப் பாவி எம் புள்ளய...'' என்று மேலே சொல்ல முடியாமல் மயங்கினார். அவரை ஆறுதல்படுத்திவிட்டுத் தொடர்ந்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேவகோட்டை ஒன்றிய துணைச் செயலாளர் ரத்தினம்.



''அன்னிக்கு ஸ்கூல் விட்டு வந்ததும், அப்பத்தாவுக்கு ராத்திரி சோறு குடுக்குறதுக்காக செங்கல் சூளையில இருந்து கௌம்பி இருக்கா செல்வ பிரியா. தூக்குச் சட்டியோட கிளம்புன புள்ள, மறுபடியும் செங்கல் சூளைக்குப் போய்ச் சேரலை. கண்ணன் தேடிப் போயிருக்கார். எங்க தேடியும் புள்ளையைக் காணோம். என்னாச்சோ... ஏதாச்சோன்னு ராத்திரியில் இருந்து தேடி இருக்காங்க. பொழுது விடிஞ்சப்ப, சூளைக்குப் பக்கத்துல இருக்​கிற கண்மாய்க்குள்ள செல்வ ​பிரியா பொணமாக் கிடந்ததைப் பார்த்தாங்க. பீர் பாட்டிலை உடைச்சு சங்கை அறுத்த பாவிங்க, அதுக்கு முந்தி அந்தப் பச்ச மண்ணை கண்மாய் கரையில போட்டு நாசம் பண்ணி இருக்காங்க. தப்பிக்கிறதுக்காக கண்மாய்க் கரையில இருந்த புல்லை எல்லாம் பிடிச்சுப் பிறாண்டி இருக்கு அந்தப் புள்ள. கொலையைப் பண்ணிட்டு பொணத்தை கண்மாய் சகதிக்குள்ள அமுக்கிவெச்சுட்​டாங்க.

புள்ளையைக் காணோம்னு கண்ணன் தேடுனப்ப, வேலுச்சாமியும் ராஜேந்திரனும் சேர்ந்து தேடுற மாதிரி நடிச்சிருக்காங்க. உடம்பு கிடைச்சப்பவும் பரிதாபமா நின்னுக்கிட்டு இருந்தாங்க. போலீஸ் மோப்ப நாய் விறுவிறுன்னு ஓடிப் போயி வேலுச்சாமி வீட்டுல படுத்துக்கிச்சு. உடனே வேலுச்சாமி, ராஜேந்திரன், பிரபாகர்னு மூணு பேரை போலீஸ் தூக்கிட்டுப் போயிட்டாங்க...'' என்றார் வேதனையாக.

தொடர்ந்து பேசிய ஏ.ஐ.ஒய்.எஃப்-பின் முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.கே.பாண்டியன், ''சாப்​பாடு குடுத்துட்டுப் போன செல்வபிரியா, ராஜேந்தி​ரனோட சைக்கிளில் போனதைப் பார்த்து இருக்​காங்க. ஆக, இவங்க ரெண்டு பேரும்தான் கூட்டுச் சேர்ந்து அந்தப் புள்ளய நாசம் பண்ணிக் கொன்னு இருக்காங்க. இவங்களுக்கு உடந்தையா பிரபாகரன்கிற பையனும் இருந்திருக்கான். ஆனா, வேலுச்சாமியை மட்டும் வழக்கில் சேர்க்கப் பாக்குறாங்க. எங்களுக்கு சரியான நியாயம் கிடைக்​கணும்!'' என்றார்.

வேலுச்சாமியின் உறவி​னரான போஸ், ''வேலுச்சாமி தப்புச் செஞ்சிருந்தா, அவனை தூக்கில் போட்டாலும் எங்களுக்கு சம்மதம். ஆனா, கொலை செய்யுற அளவுக்கு அவனுக்குத் தைரியம் பத்தாது. அதனால உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கணும்!'' என்றார்.

தேவகோட்டை டி.எஸ்.பி-யான கணேசன், ''பத்து நாளைக்கு முந்தியே அந்தப் பொண்ணைத் தனியா கூட்டிட்டுப் போயி சில்மிஷம் பண்ணி இருக்கான். அந்தச் சின்னப் பொண்ணுக்கு விஷயம் தெரிலை பாவம்! நேத்திக்கும் கண்மாய் கரையில வெச்சு எல்லை மீறவும் அலறிக்கிட்டு ஓடி வந்துருக்கா. விஷயத்தை வெளியில் சொல்லிடுவாங்கிற பயத்துல அவளை மடக்கிப் பிடிச்சு பீர் பாட்டிலை ஒடைச்சு சங்கை அறுத்துட்டான். இதுதான் நடந்திருக்கு. சந்தேகத்தின் பேரில் இன்னும் சிலரை விசாரித்தோம். ஆனா, அவங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு தெரிய வந்ததால், அவங்களை ரிலீஸ் பண்ணிட்டோம். கொலை, கற்பழிப்பு, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை உள்ளிட்ட செக்ஷன்களில் வழக்கு பதிவு செய்து இருக்கிறோம்...'' என்றார்.

''இங்கதான் புள்ளையப் பொதைச்சோம்!'' என்று காலனி மக்கள் காட்டிய இடத்தில், செவ்வந்தி மாலை கசங்காமல் கிடந்தது. அவள் மட்டும் மண்ணுக்குள்!

ஜூவியில் வந்தது. நானும் ஜூவி படித்தேன். எனக்கென்னமோ இந்த செய்தி செவுளில் அடித்தது. வடநாட்டுக்காரன திருத்தனும் அடுத்த நாட்டுக்காரனத் திருத்தனுமுங்றதுவிட்டுட்டு தமிழ்நாட்டுகாரனுங்களத் திருத்தத்தான் நிரையத் தேவைப்படுதில்லையா?

மேலவளவு கீழவளவு பத்தி எழுத ஆளில்லை.
உத்தப்புரம் பிரமிடு பத்தி எழுத ஆளில்லை.
கீரிப்பட்டி,பாப்பாபட்டி சமத்துவம் பத்தி எழுத ஆளில்லை.
வெண்ணைங்க பாலிடிக்ஸ் பத்திமட்டும் எழுதவந்துட்டானுங்க, கொடி பிடிக்க.

அறிவுகெட்ட உள்ளூர்காரனும், வெளியூர்க்காரனும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.