A எனது நாட்குறிப்பு: பதிவுலக குஞ்சாமணிகளும் வகைகளும்

Thursday, April 7, 2011

பதிவுலக குஞ்சாமணிகளும் வகைகளும்

தேர்தல் நெருங்க நெருங்க பல வகை குஞ்சாமணிகள் பதிவுலகில் காணக்கிடைக்கின்றனர். ஏதோ நம்மால் முடிஞ்ச வகையில் அவர்களை வகைப்படுத்தியதில்...

அனானி குஞ்சாமணிகள்: இவர்கள் நல்லவர்கள் கெட்டவர்கள் என இரு வகைப்படுவர். நல்லவர்கள் எப்பொழுதும் பதிவைப் படித்துவிட்டு நல்லவிதமான கருத்துகளை நோகாமல் பேரில்லாமல் சொல்லிவிட்டு ஓடிவிடுவார்கள். அடுத்து கெட்டவர்கள், மகா கேவலமானவர்கள். அனேகர் பதிவர்களாகவும் இருக்கக்கூடும். மிக கேவலமான டாஸ்மாக் பாசையிலே பேசிவிட்டு ஓடிவிடுவார்கள். இயற்கையில் இவர்கள் பயங்கர தொடைநடுங்கிகள். கேள்வி கேட்டாலே உச்சாப் போய்விடுவார்கள்.

ப்ளாக்மட்டும் குஞ்சாமணிகள்: இவர்கள் ஒரு சிலரைத்தவிர கண்ட இடத்தில் வாந்தி எடுப்பவர்கள். ப்ளாக் மட்டும் இருக்கும். இடுகை இருக்காது, பேர் இருக்கும் ஆனால் பொய்யாக இருக்கும். ஃபாலோ மட்டும் செய்ய்வார்கள்.முட்டு சந்தில் உச்சா போகும் வீரர்கள்.ஆச்சர்யமாக சில நல்லவர்களும் இதில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலும் கவனம் பெருவதில்லை.

நடுநிலை குஞ்சாமணிகள்:எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்களே நிஜமான நடுநிலயாளர்கள். மற்றவர்கள் போலிகள். முதலில் போலிகள் பற்றி.நாலே பேர் இருந்தாலும் பிரமாண்டமாக நினைத்துக்கொள்வார்கள். செலக்டிவ் அம்னீசியாவில் பாதிக்கப்பட்டவர்கள்.தேர்தலுக்கு ஒரு முறை முழிப்பவர்கள். தேர்தல் முடியும்வரை உளறிவிட்டு ஓடிவிடுவார்கள். தமிழ் பற்றி எழுதுவார்கள். ஆனால் தமிழனாய் வாழமாட்டார்கள். ஈழம் பற்றி பேசுவார்கள். ஆனால் ஒரு துரும்பைகூட அசைக்கமாட்டார்கள். உள்ளூர் ஏழைகளை மிதிப்பார்கள், உலக ஏழைகளுக்கு வக்காலத்து வாங்குவார்கள். உள்ளூர் ஜாதி பிரச்சினையை ரசிப்பார்கள், உலக தமிழனுக்கு அழுவார்கள். நல்ல நடிகர்கள். பத்தே பேர் படிக்கும் பதிவுலகம்தாம் உலகமென்று சத்தியமாய் நம்புபவர்கள். உள்ளூர் ரெட்டை டம்ளர் தேனிகடையில் ஒரு பொழுதும் காரித்துப்பாத இந்த போலிகள் உலக சமமின்மைய காரித்துப்புவார்கள்.நாம் பார்க்காத நடிகர் திலகங்களின் கூடாரமே இங்குதான்.

கட்சிசார்பு குஞ்சாமணிகள்: ஒவ்வொருக் கட்சிக்கும் ஒவ்வொரு குஞ்சாமணிகள், என்னைப்போல. எப்பொழுதும் தன் கட்சியையே தூக்கிப்பிடிப்பவர்கள்.

ஜாதி/மத சார்பு குஞ்சாமணிகள்: இவர்கள் விஷ ஜந்துக்கள். பச்சோந்திகள் போல தனக்கேற்ற இடுகையில் நுழைந்து மற்றவர்களுக்கு இம்சை கொடுத்துக்கொண்டு இருப்பார்கள். அட நம்மாளோ என்று நினைக்கும்பொழுது இன்னொரு ஒவ்வாத இடுகையில் வீராவேசம் காட்டிக்கொண்டு இருப்பார். கூட்டிக் கழித்துப்பார்த்தால் மதமோ ஜாதியோ இணைத்திருக்கும்.

கம்யூனிஸ்ட்டு குஞ்சாமணிகள்: இதிலும் உண்மை போலியுண்டு. ஆனால் உண்மைகளை கண்டுபிடித்தால் தமிழ்நாட்டை எழுதிவைக்கலாம். முடிந்தளவு உண்மையாக நடிப்பதிலேயே காலம் கடந்துவிடும்.

தெய்வக் குஞ்சாமணிகள்: உண்மையிலேயே இவர்கள் தெய்வப்பிறவிகள். சமையல்,டூர் என யாரையும் பாதிக்காமல் எழுதக்கூடியவர்கள்.ஒரு போதும் விவாதத்தில் இறங்கமாட்டார்கள். அப்படி இறங்கிவிட்டால் இம்சைபடுத்தாமல் விடமாட்டார்கள்.

இப்படி பலக் குஞ்சாமணிகள் இந்த பதிவுலைப் பாடாய் படுத்துகிறார்கள். இதிலே மோசமான நிலையில் இருப்பவர்கள், போலி நடுநிலைக்குஞ்சாமணிகள்தான். வயதுக்கு வந்ததிலிருந்து ஒரு நல்லவிசயமும் செய்யாத இந்த போலிகள் அடிக்கடி நாட்டாமையாக முயற்சிக்கும் தருணங்கள் அழகே அழகு.

அதற்கு ஒத்தூதும் பிள்ளைப்பூச்சிகள் மிகவும் தமாசானவர்கள். தினமும் ரசிக்கலாம்.

6 comments:

அணிமா said...

நான் இப்போ எந்த கேட்டகரியில் இருக்கேன்??

VJR said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வர்ற கேங்கோ?

அபி அப்பா said...

என்ன இன்னிக்கு ஒரே குஞ்சாமணிகள் பதிவா இருக்குது:-))))))))))நடத்துங்க!

Anonymous said...

கிழிச்சிட்டிங்க ...................... !!!??? எதையா .............பலரின் முகத்திரையைத் தானுங்க

VJR said...

வாங்க இக்பால் செல்வன். இங்க ஒரே தமாசா இருக்குங்க. ஓசியாக் கிடைக்குதுன்னு கொஞ்சம்கூட நாசுக்கில்லாமல் எழுதி அழிச்சாட்டியம் பண்றது ஃபேசனாப் போச்சு.

அதான்...

VJR said...

அபி அப்பா, இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.