A எனது நாட்குறிப்பு: November 2010

Friday, November 12, 2010

கண்கலங்க வைத்தக் கட்டுரை.
"வள்ளியின் பிள்ளை நான்!"


குறப்புத்தி' என்கிறீர்கள். 'குறப்பய மாதிரி முழிக்கிறான்' என குழந்தையைக்


கொஞ்சுகிறீர்கள். 'குறவன் புத்தி சும்மா இருக்குமா?' என்கிறீர்கள். அன்றாட வாழ்வில், குற்ற உணர்ச்சி எதுவும் இன்றி நீங்கள் உதிர்க்கும் சொற்கள் ஒவ்வொன்றும், சமூகத்தின் அடிமட்டத்தில் வாழும் குறவர் இன மக்களைக் குறிவைத்துக் காயப்படுத்துவதை நீங்கள்அறி வீர்களா?"-தீர்க்கமாகக் கேட்கிறார் மணிக்கோ. பன்னீர்செல்வம். குறவர் இனத்தில் இருந்து படித்து, முன்னேறி வந்திருக்கும் வெகு சிலரில் ஒருவர். 'சனங்களின் பாட்டு', 'தொடரும் காலனிய குற்றம்', 'குறவர்-பழங்குடி இன வரைவியல் ஆய்வு' என்ற கவனிக்கப்பட்ட நூல்களை எழுதியவர். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து வரும் பன்னீர்செல்வம், அடிமட்ட சாதியில் பிறந்து, ஆதிக்க சாதிகளின் உலகத்தில் பிரவேசிப்பதன் உளவியல், உலக சிக்கல்களை மையமாகக்கொண்டு நாவல் ஒன்றை எழுதிக்கொண்டு இருக்கிறார்.

"தமிழ்நாட்டில் குறவர் என்றாலே, எல்லோருக்கும் நினைவில் வருவது நரிக்குறவர்கள்தான். அவர்கள் வட இந்தியாவின் ஆரவல்லி மலைத்தொடரில் இருந்தும், குஜராத் பகுதிகளில் இருந்தும் நாடோடிகளாக இடம் பெயர்ந்து வந்தவர்கள். இவர்களைத் தவிர, தமிழ்நாட்டில் 28 வகையான குறவர்கள் இருக்கிறார்கள். கல்குறவர், கறிவேப்பிலை குறவர், கூடைமுறம் கட்டிக் குறவர், உப்புக் குறவர், பூனைக்குத்தி குறவர்... என்ற இவர்கள் அத்தனை பேரும் தமிழ்நாட்டின் பூர்வீகப் பழங்குடிகள். மலைக் காடுகளில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்கள். திருச்செந்தூர் கோயிலில் கையில் மந்திரக்கோல் வைத்துக்கொண்டு சோதிடம் பார்க்கும் பெண்ணிடம் 'நீங்கள் யார்?' எனக் கேளுங்கள், 'நாங்கள் வள்ளிமக்கா' என்பாள். நாங்கள் வள்ளியின் வழி வந்தவர்கள். குறிஞ்சி நிலத்தில், தேனும் தினை மாவும் உண்டு வளர்ந்த ஆதித் தமிழர்கள். எங்களிடம் இருந்து வனம் பிடுங்கப்பட்ட பின்பு, மெள்ள மெள்ள சமவெளிப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தோம்.நான் 'கூடைமுறம் கட்டிக் குறவர்' பிரிவைச் சேர்ந்தவன். சாலை ஓரங்களில் அமர்ந்து கூடைமுறம் கட்டுவதே எங்கள் தொழில். திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டி, சொந்த ஊர். தந்தைக்கு அரசு நிறுவனத்தில் வாட்ச்மேன் வேலை கிடைத்ததால், தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்தோம். புதிய ஊரில் எங்கள் சாதி யாருக்கும் தெரியாது என்பதால், எங்களை 'மதுரைப் பக்கத்தில் இருந்து வந்த பிள்ளைமார்' என்றே நினைத்தார்கள். பிறப்பால் தலித்தாக இருந்துகொண்டு, நடைமுறை வாழ்க்கையில் உயர்சாதியாக நடிக்க ஆரம்பித்தோம். ஆனால், அது பெரிய துயரமானதாக இருந்தது. எந்த நேரமும் சாதி வெளியில் தெரிந்துவிடுமோ என்று பதற்றமாக இருக்கும். யாராவது 'குறப்பய மாதிரி இருக்கான் பாரு!' என்று யாரையேனும் திட்டினால், அப்போது நான் உயர்சாதி மனநிலையில் அதைச் சகித்துக்கொள்ள வேண்டும். ஒருநாள், என் அப்பாயி இறந்துபோன சேதி கேட்டதும், அப்பா வாய்விட்டு அழுதார். பதறிப்போன அம்மா, 'மெதுவா அழுங்க' என அப்பாவைத் தடுத்தார். ஏனெனில், விஷயம் தெரிந்தால் சுற்றி உள்ளவர்களும் துக்கத்துக்கு ஊருக்கு வருவதாகச் சொல்வார்கள். வந்தால் சாதி தெரிந்துவிடும். சாவு தெரிந்தாலும் சாதி தெரியக் கூடாதே!

கல்லூரிப் படிப்பு முடித்து 'தமிழய்யா'வாக தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே இருக்கும் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தேன். சுற்று வட்டாரத்தில் 'தமிழய்யா' என்று எனக்கு நல்ல பெயர். நான் தஞ்சாவூரில் இருந்து வந்துஇருந்ததால், என்னை 'கள்ளர்' என்று நினைத்துக் கொண்டார்கள். ஒருமுறை என் மாணவன் ஒருவன் யதேச்சையாக என் சான்றிதழில் 'இந்து-குறவன்' என்று எழுதி இருந்ததைப் பார்த்துவிட்டான். கதவை மூடிக்கொண்டு, 'இதை எல்லாம் வெளியில் சொல்லாதடா' என்று கேட்டுக்கொண்டாலும், அவன் பேச்சுவழக்கில் சொல்லிவிட்டான். 'தமிழய்யா ஒரு குறவர்' என்ற விஷயம் மெதுவாகத் தெரிய ஆரம்பித்தது. உடன் தங்கியிருந்த ஆசிரியரின் பணம் திருட்டு போனபோது, 'குறவன் புத்தி சும்மா இருக்குமா?' என்று தொடர்பே இல்லாத என் மீது திருட்டுப் பட்டம் சுமத்தப் பட்டது. இதை எல்லாம் கடந்து, சம்பள உயர்வுக்காக மட்டுமே ஆசிரியர்கள் போராடிய சமயத் தில், மாணவர்களின் உரிமைகளுக்காக நான் போராடினேன். அதனால், சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து விடைபெறும் வரையிலும் மாணவர்கள் என் மீது அன்பாகவே இருந்தார்கள்!" என்கிற பன்னீர்செல்வம்,

ஏற்கெனவே ஒரு பி.ஹெச்டி முடித்தவர். தற்போது, 'தமிழக கறுப்பின இலக்கியப் படைப்புகள் கட்டமைக்கும் அடையாள அரசியல்' என்ற தலைப்பில், இரண்டாவது பி.ஹெச்டி. செய்துகொண்டு இருக்கிறார்.

"இப்போதும் திருடர்கள் பற்றி எச்சரிக்க போலீஸ் கொடுக்கும் அறிவிப்பு என்ன? 'திருடர்கள் எந்த வடிவிலும் வரலாம். பச்சைக் குத்து வதுபோல, அம்மி கொத்துவதுபோல, பூனைக் குத்துவதுபோல, கூடை முடைவதுபோல... எந்த வடிவிலும் வரலாம், ஜாக்கிரதை!' என போலீஸ் எச்சரிப்பது முழுக்க குறவர்களைக் குறிவைத்துதான். இது எல்லாம் சேர்ந்து, மக்கள் மனதில் குறவர்கள் என்றாலே, திருடர்கள் என்ற உளவியலை விதைக்கிறது. ஆனால், உண்மை அதுஅல்ல. என்னைப் போன்ற வெகு சிலரைத் தவிர, இன்னமும் குறவர்கள் அத்தனை பேரும் பன்றி மேய்த்துக்கொண்டும் துப்புரவு வேலைகள் செய்துகொண்டும் விளிம்பு நிலையில்தான் வாழ்கிறார்கள். இப்படியான எனது வாழ்க்கை அனுபவங்களை, ஒரு குறவர் இனத்துக்காரன் உலகத்தை எதிர்கொள்ளும்போது நடக்கும் உண்மைகளை அப்படியே எழுதி இருக்கிறேன். குறிஞ்சி நிலத்தில், தேனும் தினைமாவும் தின்று வளர்ந்த வள்ளியின் பிள்ளைகள், சமவெளியில் சாக்கடையோரம் தள்ளப்பட்ட கதை அது!"


நன்றி: ஆனந்த விகடன்

டிஸ்கி: படித்து முடித்ததும் மனதை பிசைந்ததால் கட் அண்ட் பேஸ்ட், விகடன் படிக்காதவர்களுக்காக.

Thursday, November 11, 2010

என்கவுண்டரும் என் கொஸ்டினும்..

ஒரு பத்து வருசத்தக்கு முன்னால, பாண்டியம்மான்னு ஒரு பொம்பளயக் காணாமுன்னு அந்தம்மா வீட்டுக்காரரு போலீஸ் ஸ்டேசன்ல கம்ப்லெய்ண்டு பண்றாரு. நம்ம எவர் ப்ரக்னண்ட் நெவர் டெலிவரி போலிஸு "எலேய் நல்லாத் தேடி பாருலே, எவிங்கூடயாச்சும் ஓடிகீடி போயிறக்கப்போறா"ன்னு அட்வஸ்வேறக் கொடுக்குது.

போனவாரம், ஸ்கூலுக்கு அனுப்புன பிள்ளைங்களக் காணோமுன்னு பதறிப்போயி, போலீஸ்கிட்ட கம்ப்ளெயிண்ட கொடுத்துட்டு, பாவம் அவங்களும் முடிஞ்சளவுக்குத் தேட்றாங்க. நம்ம தீயணைப்பு வண்டிமாதி, போலிஸும் மெதுவா தொப்பைய தூக்கிகிட்டு கெளம்புது.

பொண்டாட்டிய தேடி அலுத்துப்போன பாண்டியம்மா புருசன், கோர்ட்டுக்குப் போயி " சாமி.. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும், எம் பொண்டாட்டி உசுரோட வேணும்"ன்னு சொல்ல, நீதிபதி அய்யாவும் கெடு கொடுத்து உசுரோடக் கொண்டாங்கய்யான்னு சொல்லிட்டாரு.

பிள்ளைங்களக் கடத்திட்டாங்கங்ற செய்தி, தீயாப் பரவி எதிர்க்கச்சிக்காரங்கெல்லாம் எடக்கு மடக்கா மடக்கவும் தமிழினத் தலைவருக்கும் கோபம் பொத்துகிட்டுவர, "என்ன செய்வீங்களோத் தெரியாது, இன்னக்கிக்குள்ள பிடிச்சாகனுமுன்னு சொல்லிட்டாரு.

ஊரோரமாப் கரிக்கட்டையாய் ஒருப் பொம்பளப் பொணம். பாண்டியம்மாதான்னு போலீஸ் பாண்டியம்மா புருஷங்கிட்ட சொல்லுது. கரியாக் கெடக்கு. ராஜ்கிரன் கணக்கா சாம்பல முகத்துல பூசிகிட்டு அழுதுகுமிக்கிறாரு பாண்டியம்மா புருஷன். யாருமேலெல்லாம் சந்தேகமுன்னு ஒரு லிஸ்ட்ட பாண்டியம்மா புருஷன் சொல்றாரு. தேடிக் கிளம்புது ஸ்காட்லாண்டு போலிஸ்.

அங்கயிங்க தேடி அலுத்துப் போன நேரத்துல, கொழந்தங்க ரெண்டும் ஓட்ற தண்ணியில பொணமா ஒதுங்குது. கோயமுத்தூரே அழுகுது. கோபம் கொப்பளிக்குது. போலிஸு, கடைசியாப்பாத்த பாட்டிகிட்ட க்ளூக் கேக்குது. தொப்பையத் தூக்கிகிட்டு கெளம்புது போலிஸு.

பாண்டியம்மாளக் கொன்னுட்டு அதே ஊர்ல தெனாவெட்டாத் திரிஞ்ச "அந்த" பத்துப் பேர அள்ளிகிட்டு கோர்ட்டுக்குப் போகுது. விசாரனையப்போ, "பாண்டியம்மாளக் கற்பழிச்சதையும், கொலை செஞ்சதையும், எரிச்சதையும்" அப்படியே தத்ரூபமா ஜட்ஜ் முன்னாடி நடிச்சுக்காட்றாங்க. ஜட்ஜ் கண்ணுல நெருப்பு.

கொழந்தைகளைக் கொன்னுட்டு தெகிரியமா கோயமுத்தூருக்கே திரும்பி வந்துகிட்டு இருந்த மோகனக் கிருஷ்ணனையும், கூட்டாளியயும் அழகா கோத்துப் பிடிக்கிறாங்க போலிஸு. கெடுத்ததையும், கொலை பண்ணுனதையும் வாக்குமூலமா தர்றான் கொலகாரப்பாவி மோகனக் கிருஷ்ணன். கோவை மக்கள் மட்டுமில்ல தமிழக மக்க எல்லாத்துக்குமே கோவமுன்னா அப்படியொருக் கோவம்.விட்டா சாவடிக்கிற வெறி.

ஜட்ஜ் ஆயுள் தண்டனைக் கொடுத்து பேனா நிப்ப ஒடச்சிக் கெடாசுறாரு. பாண்டியம்மா புருஷன் ஜட்ஜப் பாத்து " யெய்யா நீங்கதேன் எங்க கொல தெய்வம், நீதி பொழச்சிருச்சுய்யா, இன்னக்கிதான் தீபாவளி"ன்னு ஓன்னு கண்ணீர் விட்றாரு.

எதிர்கச்சி ஏடாசி, மக்களோடக் கொந்தளிப்பு "சுட்டுத்தள்ளுய்யா"ன்னு ஆர்டரு. விசாரிக்கப்போன விடிகால அஞ்சு மணிக்கு பொட்டு பொட்டுன்னு மூனு தோட்டா மோகன கிருஷ்ணன் உடம்புல. பொணமானப் போட்டோ. எல்லா மக்களும் ஆனந்தக் கண்ணீரு. நரகாசூரன் செத்தான்யான்னு கோசம். கொழந்தைகளப் பெத்தவங்க " எங்களுக்கு இன்னிக்கிதான் தீபாவளி"ன்னு கண்ணீர்விட. ஒரு நல்லத் தீர்ப்பு!!!?

பாண்டியம்மாளக் கடத்தி கொலை செஞ்சு ஒரு பத்து வருசம் கழிச்சு, பாண்டியம்மா உயிரோட வந்து, "யெய்யா ஜஜ்ஜு, என்ன யாரும் கடத்தல, நாந்தேன் இஷ்டப்பட்டு இதோ.. இந்தாளுகூடப்போயி, மக்கமாறப் பெத்துட்டு உசுரோட இருக்கேன்"ன்னு சொல்லுச்சு. ஸ்காட்லாண்டு தமிழ் போலீஸுக்கு ஒரு மசுரும் வெளங்கல.

அப்போ அந்த எரிஞ்சுப்போண அந்தப் பொம்பளப் பொணம் யாரு?
அவளக் கொண்டத யாரு?
இத்தன வருசமா கொலையே செய்யாம ஆயுள்கைதியா ஜெயிலுல இருந்தாங்களே அவங்களக்கு என்னத்த கொடுத்தா சரியான நஷ்ட ஈடாகும்?
அப்ப நம்ம போலீஸ் நெஜமாலுமே ஸ்காட்லாண்டு போலிஸு இல்லையா ?
வெரும் சிரிப்பு போலிஸா?

அப்படின்னா, இந்த மோகனக்கிருஷ்ணனையும் நாளக்கி யாராவதும் நிரபாதின்னு சொல்லிடுவாங்களா?
ஒரு வேள நெஜமான குத்தவாளிங்க மிடுக்கா வெளியில அலையுறாங்களா?
அய்யய்யோ ஒன்னுமே புரியலயே...

ஏங்க ஒங்களுக்கு எதாச்சும் வெளங்குது...?

Tuesday, November 2, 2010

குழந்தைகள் கடத்தலும் பெற்றோர்களின் கதறலும்.

கடந்த தினங்களில் பொதுவாக எல்லா தினசரிகளிலும் கோவையில் நடந்த குழந்தைக் கடத்தலையும், கொலை செய்ததையும் போட்டு அனைத்துப் பெற்றோர்களின் பி.பி யை எகிறவைத்தது.

படிக்கும்போதே மனது கனத்துவிடுகிறது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பாவிகளுக்கு பணம்தான் தேவையென்றால் திருடியாவதும் சாதித்துக்கொள்ளலாம். அதைவிடுத்து ஒன்னுமே அறியாத அந்த பச்சை மண்ணுகளை பலவிதங்களில் துன்புறுத்தி தண்ணீரில் தள்ளிவிட்டுள்ளனர். மேலும் அந்தப் பெண்னை அவர்கள் பலாத்காரம்படுத்தியிருக்கலாம் என்று கேள்விப்படும்போது அந்த பாதகனின் "அதை" வெட்டி எறிந்தால்தான் என்ன என்று இருக்கிறது.

பாவம் அந்தப் பெற்றோர்களுக்கு இனி ஒவ்வொரு நாளும் நரகமே. இருந்த இரண்டு குழந்தைகளையும் அள்ளிக்கொடுத்துவிட்டார்கள். இனி எப்படிதான் அந்த நரகத்திலிருந்து அந்த பெற்றோர்கள் வெளியே வரப்போகிறார்களோ? யாரு என்ன ஆறுதல் சொன்னாலும் அதெல்லாம் ஈடாகிவிடுமா?

இது முதல் சம்பவமும் இல்லை. விட்டுவிட்டு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பெற்றோர்களும் அரக்கப்பறக்க ஓடும் வாழ்க்கையில் நிதானம் தவறுகின்றனர். இனி அரசாங்க எந்திரத்தை நம்பி எந்த ப்ரோயோஜனமும் இல்லை. நாமே நம்மைக் காத்துகொண்டால்தான் உண்டு. என்ன செய்யலாம்?

எக்காரணம்கொண்டும் குழ்ந்தைகளை ஓட்டுனரை நம்பியோ ஆயாக்களை நம்பியோ அனுப்பாதீர்கள். குழ்ந்தைகளுக்காகத்தான் நாம் இத்தனை இன்னல்களிலும் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். எனவே அவர்களுக்காக நாம் மெனக்கெட்டே ஆகவேண்டும். மேலும் ஓட்டுனர்களும்,ஆயாக்களும் சாதாரண மனிதர்களே. அவர்கள் அடுத்தவரிடம் வேலை செய்யும் நிலையை நோக்கினாலே அவர்களின் பொருளாதாரத்தின் நிலமை புரியும். அவர்களுக்கும் கடன்சுமை, பிக்கல் பிடுங்கல் நெஞ்சை அழுத்தும். அது என்றாவது ஒரு நாள் பொல்லாத சிந்தனையில் தள்ளி, நமக்கும் நரகமாக மாறலாம். எனவே ஓட்டுனரையோ, ஆயாக்களையோ ஆழ்ந்து கவனித்துகொள்வது நலம்.

குழந்தைகளை தனிக்காரிலோ அல்லது தனி ஆட்டோவிலோ பள்ளிக்கனுப்புவதைவிட பள்ளிப்பேருந்தில் எல்லாக் குழந்தைகளுடன் அனுப்புவது சிறந்தது.அதுவும் நம் கண்முன்னே ஏற்றிவிடுதல் நலம்.

குழந்தைகளுக்கு எதாவது தேவைப்படும்பொழுது தனியாக ஓட்டுனருடனோ அல்லது ஆயாக்களுடனோ அனுப்பி பழக்கக்கூடாது. ஏனென்றால் அவர்கள் கூலிக்கு வேலை செய்பவர்கள். என்றாவது ஒரு நாள் அவர்கள் வேறு வேலைக்கோ அல்லது வேறு வீட்டுக்கோ செல்லலாம். அப்பொழுது நீங்கள் செய்த எதோ ஒரு விசயம் அவர்களுக்கு உங்களை எதிரியாக்கலாம். அது குழந்தைகளுக்கு வினையாக முடியலாம்.

என்னதான் ஆயாவோ ஓட்டுனரோ குழந்தைகளை நன்றாகக் கவனித்தாலும் என்றைக்கும் அது பெற்றோர்களுக்கு ஈடாகாது. நமது வேலையை எளிதாக்க பொதுவாக எல்லாப் பெற்றோர்களும் ஓட்டுனரை நம்பி குழந்தைகளை ஒப்படைப்பதை பரவலாக காண்கிறோம். வேண்டாமே, அந்த தேவையில்லாதப் பழக்கத்தை ஒழித்துவிட்டு நாமே கவனித்துகொள்வோம்.

மேலும் நண்பர்கள், நண்பிகள் மற்றும் அலுவலக நட்புகள் என்று நமது குழந்தைகளை எல்லோர்க்கும் அங்கிள் ஆண்டி என்று பழக்கிவிடுவோம். ஆனால் எல்லோரும் எப்போதும் ஒரே மாதிரி இல்லைதானே. இந்த கலிகாலத்தில் சின்ன சின்ன விசயங்களுக்குக்கூட மிகப்பெரியதாக சிந்தித்து நம்மை நரகத்தில் தள்ளக்கூடிய வாய்ப்புகள் அதிகம்தானே.


எனவே பெற்றோர்களே வரும் முன் காப்போம். ஈடில்லா இழப்பை தவிர்ப்போம்.

Monday, November 1, 2010

கத்தி போயி வாலு வந்தது டும் டும் டும்..

பதிவர் ராஜனுக்கு திருமண வாழ்த்துக்கள். மிகத் தாமதமாகிவிட்டது. நம்மக்கும் வேலையிருக்கும்தானே. அதனால என்ன, லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்லிடுவோம்.

பதிவர் ராஜன் புரட்சிகரக் கருத்துக்களை யாருக்கும் பயப்படாமல் சொல்பவர் என்ற ஒரு எண்ணங்கள் பலருக்கும் உண்டு. ஆனால் எனக்கென்னமோ அவ்வளவாக ஈர்த்ததில்லை. தெளிவில்லா டாஸ்மாக் வார்ததையாகவே இருக்கும். அதிலும் நடுநிலை போல காட்டிக்கொண்டாலும் ஒரு பக்கம் மட்டும் சறுக்குவது தெளிவாகவே இருக்கும். அதிலும் தெரிந்தே ஜாதியை கையிலெடுத்து ஆடுபவர்க்கு வக்காலத்து வாங்கவில்லையென்றாலும் கேள்வி கேட்க வாய்ப்பிருந்தும் நழுவிய நேரம் பல.

அதே போல, பார்வதி அம்மாளின் மருத்துவ அனுமதி மறுப்புக்கு திருவாளர் சந்தோசம் காட்டும்போதும் தலையோ வாலோ ஆடவில்லை என்பதும் தெளிவு. கேட்டால் எல்லோரும் சொல்லும் விசய்த்தில் சொல்ல என்ன இருக்கிறது என பதிலாக வந்திருக்கலாம்.

இப்பொழுது ராஜன் திருமணம் நல்லதாக நடந்தேறியது.வாழ்த்துக்கள். ஆனால் அதில் சில கேள்விகள். ஆனா ஊனா என்றால் பகுத்தறிவு பகலவனாக காட்டும்போது வகைதொகையில்லா கேள்விகள் கேட்டதை நானே கண்டதுண்டு. ஆனால் இப்பொழுது அந்த பகுத்தறிவை தூக்கி பரணில் போட்டுவிட்டு, வினாயகர் போட்டோ, தாலி, நல்ல நேரம்,மந்திரம் ஓதுதல் என அத்துனையும் கடைபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இருக்கட்டும். மனைவியின் நம்பிக்கைக்கு மரியாதை கொடுப்பதை வரவேற்போம். மேலும் மாமனாரின் மனதை புண்படாதவாறு நடந்துகொண்ட ராஜனுக்கு வாழ்த்துக்கள்.

இப்பொழுது என் கேள்விகள்.

மனது என்பது உங்கள் உறவுகளுக்கு மட்டும்ந்தான் பட்டா போட்டிருக்கிறதா? அப்படியில்லை என்றால் கீழே இருக்கும் தங்கள் பதிவில் இருக்கும் வார்த்தைக்கு என்ன அர்த்தம்?

பிறைபார்த்தல் என்னும் பிற்ப்போக்குதனம் என்பதை பக்கம் பக்கமாக எழுதினார். ஏன் அந்த மார்க்கத்தை சேர்ந்தோர்க்கு மனமில்லையா? வலி இருக்காதா? நேற்று உங்கள் சொந்தங்களுக்காகப் பொறுத்துகொண்ட நீங்கள் மற்றவர்களுக்கு அனுசரித்துபோக வலிக்குமா?

என்னமோப் போங்க, மனுசனால எப்பயும் ஒரே மாதி இருக்கமுடியாதுதானே? மனுசப் பயலுகளே வேசத்துக்கு வேசம்போட்றவங்கெதானே.