A எனது நாட்குறிப்பு: ஜெயலலிதாவை தோற்கடிக்க பலக் காரணங்கள்.

Tuesday, April 12, 2011

ஜெயலலிதாவை தோற்கடிக்க பலக் காரணங்கள்.

வாங்க டுயூட்ஸ். என்னப் பொருத்து யார் வேணாலும் ஜெயிக்கலாம். ஆனால் ஜெயலலிதா மட்டும் ஜெயிக்கக் கூடாது. தமிழ்,தமிழன்,தமிழ்நாடு என அனைத்துக்கும் விரோதி இவர். சே.. சே.. அப்படியெல்லாம் இல்லேன்னு சொல்றவங்க ச்சோ.. ச்சோன்னுட்டு சோ’கிட்டயோ இல்ல சுப்ரமணிய சுவாமிகிட்டயோ கேட்டு டவுட்ட க்ளியர் செஞ்சுக்குங்க.

நீங்க பதிவுலகல இருந்து தெரிஞ்சுக்கனுமுன்னா ”எங்கே பிரா’மணன்” எழுதிய கில்லிதாண்டக் கேட்டுக்கங்க.

சரி.. காரணங்களுக்குப் போகலாமா?

1. என் மரியாதைக்கும் மட்டுக்கும் உரிய வைகோ,சீமான் போன்ற நிஜ தமிழ் உணர்வாளர்களையும், இணையவெளியில் மட்டும் வாள் சுழற்றும் கிஞ்சுத்தும் களப்பணியாற்றாத மாதிரி தமிழ் உணர்வாளர்களையும் பொடா’விலோ,தடா’விலோ வேலுருக்கு அனுப்பக் கூடாது என்ற நல்லெண்ணத்தால் ஜெயா தோற்கடிக்கப் பட வேண்டும்.

2. பட்டினிச் சாவு என்ற ஒன்றை மறந்திருக்கும் என் தொப்புள் கொடி உறவு தமிழ்நாட்டு மக்களுக்கு மறுபடியும் எலிக்கறியும், கஞ்சித் தொட்டியும் கொண்டு வரக் காரணாமாயிடக்கூடாது என்பதற்காகவும் ஜெயாவும் அவரின் குடும்ப அங்கமான சசியும் தோற்க்கடிக்கப்பட வேண்டும்.

3. சகோதரி சகோதரி என்று ஒரு பக்கம் பாசமும், மறுபக்கம் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து களப்பணியாற்றிய நேசமும் கொண்ட ஒரே சிங்கத் தமிழனை, கேவலம் ஆயிரம் கோடி ரூபாய்க்காகவும் ராஜபக்சேவின் கைக் கூலிகளான இந்து ராம்,தினமலர்,தினமணி, மற்றும் அறிவிளி சோவுக்காகவும் தூக்கி எறிந்த நம்பிக்கை துரோகத்துக்காகவும் ஜெயாவும் அவர் குடும்பமும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

4.ஆசிட் வீசும் கலாச்சாரம் ஒழிந்து போக ஜெயாவும் அவரின் குடும்ப உறுப்பினர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

5. அரசு ஊழியர்களை ஒடுக்க எஸ்மா,டெஸ்மா மீண்டும் வராமல் தடுக்க ஜெயாவும் அவர் குடும்பமும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

6. மிகவும் கீழ்தரமாக வயசான கவர்னர் சென்னாரெட்டி மீது தவறாக நடக்கப் பார்த்தார் என்று எந்தக் கூச்ச நாச்சமில்லாமல் சொன்னவர் எதையும் செய்வார் என்பதால் ஜெயாவும் அவரின் அருமை சசியும் தோற்க்கடிக்கப்பட வென்ண்டும்.

7.தன் மேல் கூறப்படும் எதிர்ப்புகளை சமாளிக்க திராணியில்லாமல் விமான நிலையத்தில் வைத்தே அதுவும் பெண்களைக் கொண்டே மட்டமான செய்கைகளால் பரபரப்பாகிய ஜெயாவும் சசியும் தோற்க்கடிக்கப்பட வேண்டும்.

8.தமிழ் நாட்டின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு எந்த ஒரு திட்டமும் தீட்டாமல், எந்த ஒரு தொழில் வளர்ச்சிக்கும் வித்திடாமல் அனைவரையும் காலில் விழவைத்து தமிழனை தலைகுனிய வைத்த ஜெயாவும் சசியும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

9.கோயில்களுக்கு யானை வழங்கி தமிழனை கி.மு’க்கு அழைத்து செல்லும் இந்த ஜெயாவும், சசியும் மண்ணை கவ்வச் செய்ய வேண்டும்.

10. கடந்த 5 வருடம் ஒரு ஆக்கம் சிறந்த எதிர்க் கட்சியாக இல்லாமல் கொட நாட்டில் ஓய்வெடுத்த ஜெயாவும் சசியும் தமிழ்நாட்டை விட்டே விரட்டப்பட வேண்டும்.

11.இனியொரு வளர்ப்பு மகன் திருமணத்தைக் காணும் தெம்பு இல்லாததால் ஜெயாவும் சசியும் தோற்க்கடிக்கப்பட வேண்டும்.

12. மறந்து போன கஞ்சா கேசு மறுபடியும் அறங்கேறாமல் இருக்க ஜெயாவும் சசியும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

13.முக்கியமாக ஒரு தமிழனை தமிழனே ஆளவாவதும் ஜெயாவும் சசியும் தோற்க்கடிப்பட வேண்டும்.

14. கலைஞர் கொண்டுவந்த நல்ல திட்டங்கள் தொடர்ந்து செயல்பட ஜெயாவும் சசியும் தோற்க்கடிக்கப்பட வேண்டும்.

15. மிக முக்கியமாக குறுக்குப்பட்டை கூட்டணியான இந்து ராம்,தினமலர்,தினமணி,சோ தோற்கடிக்கப்பட்டால்தான் தமிழனுக்கு அங்கீகாரம் கிடைக்க போராட முடியும். மேலே சொன்ன சனியன்கள் சேர்ந்தால் எந்த காலத்திலும் தமிழின விரோதிகளை வீழ்த்தமுழியாது. அதற்காகவாவதும் இந்த ஜெயாவும்,சசியும் தோற்கடிக்கப்பட வேண்டும்.


சிந்தியுங்கள் மக்களே.
மீண்டும் மூனுசதவீத
மினுக்கிகள் ஆள வேண்டுமா?

ஒத்த ரூவா அரிசியும்
ஓடி வரும் நூத்தியெட்டும்
கலைஞர் காப்பீடும்
கடன் தீர்ந்த விவசாயிம்
காரைவீட்டு கோவிந்தனும்
ரெண்டு ஏக்கர் கரிசலும்
காப்பாத்தும் கலைஞரை.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.