A எனது நாட்குறிப்பு: ஒரு அனானியின் அசத்தல் கமெண்ட்

Friday, April 8, 2011

ஒரு அனானியின் அசத்தல் கமெண்ட்

கீழே நீங்கள் படிக்கப் போவது ஒரு அனானியின் கமெண்ட். ஒரு பதிவில் கண்டது. அதை அவர் பெயரிட்டே பதிந்திருக்கலாம். எனக்குப் பிடித்திருந்தது. உங்கள் பார்வைக்கு.

சீமான்! உங்கள் மீது அதிக மதிப்பு வைத்திருந்தேன். ஆனால் கடந்த சில நாட்களில் நீங்கள் செய்யும் காரியங்கள், என்னை மிக வேதனை படுத்தி விட்டது. நீங்கள் சில விசயங்களை யோசித்து பாருங்கள் :

1. தமிழகத்தில் LTTE கு எவ்வளவு ஆதரவு இருந்தது, அதை ஒழித்து ...கட்டியவள், இன்று நீங்கள் யாருகக வோட்டு கேட்கிறீர்களோ அந்த ஜெயா.

2. திமுக அரசு விடுதலைப்புலிகளுக்கு உதவியதற்காக,ஜெயா சுப்பிரமணி சுவாமியுடன் இணைந்து கலைஞர் அரசைக் கலைத்தார். அதற்கு தமிழக மக்கள் என்ன செய்திருக்க வேண்டும்? கலைஞர் அரசை திரும்பக் கொண்டு வந்தார்களா?

3. ஜெயா நடப்பு அரசியலை மிக மோசமாக்கினார் என்றால் மிகையல்ல.எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது, தமிழகத்தின் பொதுப்பிரச்சினைகளான காவிரி/முல்லை/ஈழம் ஆகியவற்றுக்கு கருணாநிதி ஆதரவே அளித்துள்ளார். ஆனால் ஜெயா அதிகாரத்திற்கு வந்த பிறகு,எந்த ஒரு பொது விசயத்திற்கும் இவர் கருணாநிதியுடன் ஒத்துப்போகவில்லை என்பதை உணர்கிறீரா? அதனால் தமிழகம் ரெண்டு பட்டதுதான் மிச்சம். மேலும் 1989 லிருந்து எந்த ஒரு பொது விடயத்திற்கும் இணைந்து போராடவில்லை. நன்றாக ஞாபகம் இருக்கிறது, விடுதலைப்புலிகளை ஆதரித்து எம்.ஜி.ஆர் நடத்திய பந்துக்கு கருணாநிதி முழு ஆதரவு அளித்தது. ஆனால் இந்த பெண் அனைத்தையும் கெடுத்துவிட்டார். இவரயா நீங்கள் ஆதரிக்கப் போகிறீர்?

4.ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கு, திமுக’வை வெளியேற்றுங்கள் நான் ஆதரவு தருகிறேன் என்று அவர் கூவியது இன்னும் என் காதில் ஒலிக்கிறது. உங்களுக்கு? மேலும் சில நாட்களுக்கு முன் கம்யூனிஸ்ட்டையும்,மற்ற கட்சிகளையும் காக்க வைத்தாரே எதற்கு? காங்கிரஸ் கூட்டணி தனக்கு கிடைக்காதா என்ற தாகத்தில்தானே.

5.இளங்கோவன் விஜயகாந்துக்கு லட்டு ஊட்டுன போது,விஜயகாந்த் முத்துக்குமார் பத்தி நினைத்து இருப்பாரா? அவரும் கடைசிவரை காங்கிரஸ்சுடன் கூட்டு வைக்க தானே துடித்தார். கூட்டணி முடிவகரவரை காங்கிரஸ் ஐ எதிர்த்து எதாவது பேசினாரா? ஈழத்திற்கு ஏதாவது குரல் குடுத்தாரா? அவருக்கு நீங்க சப்போர்ட் பண்ணித்தான் ஆகனுமா?

6. நல்லவர்கள் அரசியலுக்கு வரணும்னு விஜய்க்கு ஜால்ரா அடிச்சிங்களே, இந்த விஜய்
விஜய் ஏன் ராகுலை சந்தித்தார்? சந்திப்புக்கு பிறகு அப்பாவும் மகனும் சேர்ந்து ராகுலை புகழ்ந்து விட்ட அறிக்கைகளுக்கு பதில் என்ன? எல்லோரும் வெறுத்து ஒதுக்கிய அசினை மீண்டும் தன்னுடன் நடிக்க வைத்து வாழ்வு கொடுத்தது ஏன்?
எல்லாவற்றுக்கும் போராட்டம் மற்றும் அறிக்கை தரும் நீங்கள் இவற்றை எதிர்த்து ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. உண்மையில் எனக்கு கடைசியாக உங்கள் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்றைக்கு விஜய்க்கு எல்லாம் சப்போர்ட் பண்ணிகுட்டு. இருப்பதைப் பார்த்தல் யாரையும் நம்ப முடியவில்லை.

7. ஜெயா தான் மீண்டும் வரணுமென்று துடிக்கும், நீங்கள் எல்லாம் மீண்டும் பட்டால்தான் தெரியும். LTTE ஒழிபதற்கு, ltte கு தமிழ்நாட்டில் இருந்த அதரவை அழித்ததற்கு முதல் கரணம் ஜெயா தான். வைகோவை துரத்திய பிறகாவது நீங்கள் நல்ல முடிவு எடுபிர்கள் என்று நம்பினேன். ஆனால் நீங்கள் விஜய் அளவுக்கு இறங்கி போகி விட்டிர்கள்.
இனி வுங்களை நம்பி ஒரு பயனும் இல்லை.

8. உண்மையில் தாமரை உங்களுக்கு கடிதம் எழுதிய போது அவர் மீது கோவ பட்டேன், ஆனால் இப்போது உணர்கிறேன் அவர் சொன்னது தான் சரி என்று.

அந்த அனானி நபரின் கமெண்ட் ஓவர்.

இது ஒரு நண்பரின் பதிவில் அனானி நண்பர் இட்ட கமெண்ட். அவருக்கெல்லாம் நல்ல நல்ல அனானி இருக்கிறார்கள். ஆனால் எனக்கு? ஏதோ எரிச்சலுக்கு என்னிடம் களிம்பு கேட்டு அழுதுகொண்டு இருக்கிறார்.

அனேகமாக இன்றிரவுக்குள் களிம்பு அனுப்பிவிடுவேன் என நம்புகிறேன்.

1 comment:

ஊரான் said...

தொலை நோக்கு அரசியல் பார்வையற்ற உணர்ச்சிக்கு ஆட்படும் ஒரு அரை வேக்காடுதான் சீமான் என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் அவரே நிரூபித்து வருகிறார். ஆத்திரக்காரன் எடுக்கும் முடிவு முட்டாள்தனமாக இருக்கும் என்பதற்கு சீமான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உணர்ச்சிக்கு ஆட்பட்டே பழக்கப்பட்டவர்கள் நமது மக்கள். அதனால்தான் சீமானை ஆதரிக்கவும் ஒரு கூட்டம் உணர்ச்சிப் பிழம்பாய் உடன் செல்கிறது.

பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.