A எனது நாட்குறிப்பு: சிரிச்சு வயிறு வலி வந்தா கம்பெனி பொருப்பல்ல..

Monday, April 4, 2011

சிரிச்சு வயிறு வலி வந்தா கம்பெனி பொருப்பல்ல..

அதிமுகவின் கொள்கைகள் சிறையில் உள்ளன-விஜயகாந்த் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி.

பனகுடி: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து பிரசாரம் செய்த தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த், திமுக கொள்கைகள் சிறையில் உள்ளன என்று கூறுவதற்குப் பதில் அதிமுக கொள்கைகள் சிறையில் உள்ளன என்று கூறியதால் கூடியிருந்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.


விஜயகாந்த்தின் பேச்சுக்கள், செயல்பாடுகள் நாளுக்கு நாள் குழப்பமாகி வருகின்றன. தர்மபுரியில் தனது கட்சி வேட்பாளரையே போட்டு அடித்தார். தற்போது தவறுதலாக பேசி மீண்டும் சிக்கலில் மாட்டியுள்ளார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார் விஜயகாந்த். அப்போது அவர் பேசுகையில், திமுக கொள்கைகள் இன்று சிறையில் உள்ளன, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜா சிறையில் உள்ளார் என்று கூறுவதற்குப் பதிலாக, அதிமுக கொள்கைகள் சிறையில் உள்ளன, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜா சிறையில் உள்ளார் என்று கூறினார்.

இதனால் அதிமுக தொண்டர்கள் பெரும் குழப்பமும், அதிருப்தியும் அடைந்தனர். இந்த நிலையில் வேனுக்குள் இருந்த யாரோ, கீழே இருந்தபடி விஜயகாந்த்தை அழைத்து அவர் தவறாகப் பேசியதை சுட்டிக் காட்டினர்.(என்னா ஒரு தைரியம், பாத்து அடி பின்னி பெடலெடுக்கப் போகிறார்)

இதையடுத்து சற்று நேரம் பேச்சை நிறுத்திய விஜயகாந்த், நான் தப்புத் தப்பாக பேசுகிறேன் என்று நினைக்கிறேன். இதற்கு காரணம், இந்த சத்தம்தான் என்று கூறியபடி அங்கு கூடியிருந்த கூட்டத்தினரைப் பார்த்து நாக்கை துறுத்தியபடி கண்டித்தார். பின்னர் அவர் தொடர்ந்து பேசினார்.

'கத்தாதீங்க நான் குழம்பிடுவேன்' (ஹா ஹா.. போதை ஏறிடுச்சுன்னு சொல்ல வேண்டியதுதானே)

இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த பிரசாரத்தின்போது தொண்டர்களைப் பார்த்து, கத்தாதீங்க, நான் குழம்பிடுவேன் என்று விஜயகாந்த் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்டத்தில் போட்டியிடும் தேமுதிக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் நேற்று பிரசாரம் செய்தார். குலசேகரத்தில் இருந்து அவர் பிரசாரத்தை துவங்கினார்.

மக்கள், தொண்டர்கள் விரும்பியதால் அதி்முகவுடன் கூட்டணி வைத்தேன். எனது மானசீக குரு எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியுடன்தான் கூட்டணி வைத்திருக்கிறேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என கூட்டணி வைத்துள்ளேன். அதிமுக கூட்டணிக்கு நீங்கள் வெற்றியைத் தேடி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தக்கலையில் கூச்சல், குழப்பம்!

தக்கலையில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது தொண்டர்கள் கூச்சல் போட்டனர். அப்போது ஆத்திரமடைந்த விஜயகாந்த் கத்தாதீங்க, நான் குழம்பிடுவேன். கொடியை இறக்கிக் காட்டுங்கள் என்றார்.

வடசேரி அண்ணா சிலை அருகே பேசுகையில், நான் பேசுவதை கேட்கத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். நீங்க போடுற சத்தத்தை கேட்க நான் வரவில்லை. சத்தம் போட்டீர்கள் என்றால் வேனில் இருந்து நான்கீழே இறங்கிடுவேன். நீங்க எல்லோரும் வேனுக்கு வந்து பேசுங்கள் என்றார்.

ஹோஓஓஓஓஓஓ ஹாஆஆஆஆ ஹாஹா, நல்லா சிரிக்க வெக்கிறீய ராசா, யார் பெத்த புள்ளயோ இப்படியெல்லாம் பேசி என்ன சந்தோசப்படுத்துது.


நன்னி;தட்ஸ்தமிழ்

3 comments:

பொ.முருகன் said...

விஜயகாந்த் பேச்சில சரக்குயிருக்கோ இல்லையோ,நடவடிக்கையில சரக்கு நல்லா தெரியுது.விஜயகாந்த் மைக்க புடிச்சா நெப்போலியன் தான் மொதவர்ரார்.

Chitra said...

வடசேரி அண்ணா சிலை அருகே பேசுகையில், நான் பேசுவதை கேட்கத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். நீங்க போடுற சத்தத்தை கேட்க நான் வரவில்லை. சத்தம் போட்டீர்கள் என்றால் வேனில் இருந்து நான்கீழே இறங்கிடுவேன். நீங்க எல்லோரும் வேனுக்கு வந்து பேசுங்கள் என்றார்.



....... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ...... முடியல....

ஊரான் said...

நன்று. வாழ்த்துக்கள்!

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.