A எனது நாட்குறிப்பு: எந்திரனும் ரசிகனும் கூடவே கொப்பளிக்கும் கோபமும்.

Monday, October 4, 2010

எந்திரனும் ரசிகனும் கூடவே கொப்பளிக்கும் கோபமும்.

வணக்கம்.

எந்திரன் வெளீயீடு ஆரம்பத்திலிருந்தே பிடித்தோ பிடிக்காமலோ ஒரு ஆர்வம் தொத்திக்கொண்டதை விருப்பமில்லாவிட்டாலும் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். அதற்கான காரணத்தை யோசித்தால், சன் பிக்சர்ஸ்? நிச்சயமாக இல்லை. இதென்ன அவர்களின் முதல்படமா?

உலகழகி ஐஸ்வர்யா? இல்லையென்பது எல்லோர்க்கும் தெரியும்.

ஷங்கர்? அதற்கும் சான்ஸ் இல்லை. அவருக்கும் இது 10 வது படம்.

வேறென்ன காரணம். ஒன்லி ரீசன், ரஜினிகாந்த மட்டுமே.

அவரிடம் ஒரு தனி ஈர்ப்பு இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். பலருக்கும் காரணம் பிடிபடாமல் போகவேதான் இன்றும் இந்த 65 வயதிலும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.

நானும் யோசிக்காத தருணங்கள் இல்லை.ஆளும் கருப்பு.அவரைவிட நன்றாக நடிப்போர் பலருண்டு. அப்படி இருக்க, எந்த விசயம் ரசிகனை இந்த பாடுபடுத்துகிறது?

ரஜினி ரசிகர்கள் பலரை பார்த்திருக்கிறேன்.பழகியிருக்கிறேன். நல்ல நட்புடனும் இருக்கின்றேன். மிகப் பெரிய பதவியிலிருக்கிறவர்களும், முதலாளிகளும், மற்றும் அடிநிலையில் இருப்பவர்களும் ஏராளம் உண்டு. அவர்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமை என்னவென்று யோசிக்கும் போது ஒரு சில சங்கதிகள் பிடிபட்டன.இது என் அவதானிப்பு மட்டுமே. கத்தி எடுத்துக்கொண்டு வரவேண்டாம்.

மிக முக்கியமாக, அவர்கள் அனைவருமே....,

1. பொதுநலவாதியாகத்தான் தெரிகிறார்கள்.

நான் பல நாடுகளுக்கு சென்றுவந்திருக்கிறேன். தமிழர்களை ஒருங்கிணைப்பு செய்வதில் ரஜினி ரசிகர்கள் மிக முக்கியமான இடத்திலிருக்கிறார்கள் என்றால் மிகையில்லை. விளையாட்டு, பொங்கல், தீபாவளி, புத்தாண்டு என பலவிசயங்களில் தமிழர்களை, ஏன் சில நாடுகளில் இந்தியர்களையே இணைக்கிறார்களென்றால் இது நிச்சயமாக மிகையில்லை.

அதில் அவர்கள் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.

2. தலைவன் மீதுள்ள பற்று.

எனக்குத் தெரிந்து கட்சிக்காரர்களைவிட, ரஜினி ரசிகர்களின் பற்று அளவிட முடியாது. ரஜினிக்கு ஒரு இகழ்ச்சியென்றால் அந்த நட்பைகூட தூக்கி எறிகிறார்கள். காரணம் கேக்காமலில்லை. கண்டிப்பாக நடிப்புக்காக இல்லை. அவரின் குணத்திற்காக. குணமென்றால் கூட இருந்துப் பார்த்தார்களா? இல்லை பழகினார்களா? பின்னே எப்படி..?

ரஜினியின் குணங்களாக ரசிகர்கள் வரையறுப்பது,

மனசாட்சிக்கு பயந்தவர். மனசறிந்து தவறு செய்யமாட்டார். உதவும் குணமுள்ளவர். வெளி வாழ்க்கையில் நடிக்காதவர். துரோகம் செய்யாதவர். நண்பர்களால்,நண்பர்களுக்காக, வாழ்பவர். மதிக்கத் தெரிந்தவர். நம்மைப் போல அடிமட்டத்திலிருந்து மேலே வந்தவர். மிக முக்கியமாக இறுதியாக சொன்ன காரணம் மட்டுமே எம்ஜியாருக்கு அடுத்து ரஜினியைக் கொண்டு வந்தது என எண்ணத் தோன்றுகிறது.

எம்ஜியாரும் ஏழை. ரஜினியும் ஏழை. உழைப்பால் உயர்ர்ந்தவர்கள்.

3. அனுக எளிதானவர்.

4. மிகப் பெரிய நிலையை அடைந்தும், குடும்ப வாழ்க்கையை சிதைக்காமல் இருப்பவர்கள்.

5. நம்மில் ஒருவரைப்போல தோற்றமளிப்பது.

இதற்க்கெல்லாம் அடுத்துதான் அவரின் நடிப்பு. அதனாலயே அவரின் பெரும்பாலான சாதாரணப்படங்களும் சாதனை படங்களாக மாற, அவரின் போட்டியாளர்களின் போற்றக்கூடியப்பட்ங்களும் பொட்டிக்குள்ளும் போகின்றது என எண்ணத்தோன்றுகிறது.

சரி எந்திரனுக்கு வருவோம்.

சும்மா சொல்லக்கூடாது. ரசிகர்களின் சந்தோசம் எனக்கும் ஒட்டிக்கொள்கிறது.எனக்கு ஒட்டிக்கொள்ளும் இந்த சந்தோசம் மற்ற சிலருக்கு கோபமாகிறது. ஏனென்றால் ரசிப்புக்கும், ரசிகனுக்கும் உள்ள கட்டமைப்பு புரியவில்லை. ஏதோ இப்படி ரசிகனாக இருப்பவர்கள் குடும்பத்தையும் நாட்டையும் குட்டிச்சுவராக்கிவிடுவார்கள் என்று புலம்புவார்கள்.அத்தோடு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த ரசனையயும், ரசிகர்களையும் முட்டாக் கூ* என்றிட்டு நாகரீகமா திட்டுவார்கள்.

ஆனால் மிக தீவிரமான ரசிகர்கள் தன் குடும்பத்தையும், நிர்வாகத்தையும் மிகத்திறம்பட, அதுவும் மிக நல்லவர்களாக, நாகரிகமானவர்களாக நடிப்பவர்களைவிட நடத்துவதை கண்கூடாக காண்கின்றேன்.

அப்போ, எல்லா ரஜினி ரசிகர்களும் திறமையானவர்களா? எப்படி எந்த ஒரு ரசிகர் மன்ற ஈடுபாட்டில் இல்லாத அனைவரும் வெற்றியாளர்களில்லையோ அதைப் போலவே ரஜினி ரசிகர்களும். அதாவது ரசிப்பதும் ரசிகனாக இருப்பதும் ஒருபோதும் அவனின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிப்பதில்லை.

அதனால் அவனுக்கு நாம் அறிவுரை சொல்லும்முன், நாம் எங்கிருக்கிறோம், என்ன சாதனை செய்திருக்கிறோம், தெருவில் இறங்கி நடந்தால் இவர் சுரேஷ்கண்ணனா, இல்லை கருந்தேள் கணாயிரமா என்று அறியும் அள்விற்கு இருக்கிறோமா என்பதை யோசிப்பது சாலச்சிறந்தது. அதனிலும், பொத்தாம் பொதுவாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் முட்டாக் கூ* என்று எளிதுபடுத்திவிடும் தகுதி நமக்கு உள்ளதா என்பதையும் யோசிப்பது நல்லது.

ஏனென்றால் அந்த ரசிகர்களில், 2000 மாணவர்களை தன் சொந்த செலவில் படிக்க வைக்கும் கல்ராமனும், கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்த முரளிதரனும் இருக்கக் கூடும். எனவே நாவடக்கம் முக்கியம்.

150 கோடி. இது மிகப் பெரிய உருத்தல். சென்னையின் மூத்திரச் சந்து தெரியவில்லையா என்றொரு கேள்வி.

நண்பர்களே, சினிமா ஒரு வியாபாரம். அரசியல் அல்ல. அதில் நடக்கும் ஒவ்வொன்றும் விளம்பரமே தவிற வயிரெறிய ஒன்றுமில்லை.

பிடித்தவர்கள், பார்க்கலாம். பிடிக்காதவர்கள் தவிர்க்கலம். தண்டனையில்லை.

ஆனால் ஒருபோதும் பிடித்தவர்களை அசிங்கமான சொற்களால் பேசக்கூடாது. அந்த தகுதி யாருக்கும் கொடுத்துவிடவில்லை. அப்படித் தெரிந்தோ தெரியாமலோ பொதுப்படுத்தி ரஜினி ரசிகர்களெல்லாம் முட்டாக் கூ* என்று சொல்ல ஒரு தகுதி வேண்டும்.

ஆம், என் கூடப் பிறந்த சகோதரனென்றால் என்னால் பொருமை காக்கமுடியும், இல்லையேல் உன்னைவிட மிகக் கேவலமாக பேச முடியுமென்று என்னிடம் கூறிய ரஜினி ரசிகரிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

5 comments:

http://urupudaathathu.blogspot.com/ said...

நச்சுன்னு இருக்கு!!!!

Tariq Mohamed said...

Mr Ganesh Murugan,
I understand your debate, the truth is not all the fans are like you and will know how to differentiate arts (Entertainment) and reality. Fact is, why Indians(us) like to celebrate the Idol ship. Is it due to the strong roots that Dravidian like to idol ship, Milk bath... There is a history that this all superstitious pass it Dravidian by Aryans? Lets forget about roots come back to Marketing Strategy, Whats wrong with Suresh's comments about gimmicking Indian poor into watching this bloody movie for more and more(thanks for business owners like Kalanidhi). If you watch once it's okay.. more and more.. and you keep saying they are not "முட்டாக் கூ*" I kindly iterate you to delete this blog and don't make the people to down and down more with this kind of blogs.

VJR said...

dear tariq, thanks for ur comment.

no one have rights to abuse like anything for their attitude unless if they disturb others privacy.

again and again i am insisting only one thing, say whatever u like, but never try to use bad words in common form.

the word i wrote is totally used by karnthel kannayiram.

i hope, i make u understand.

Baby ஆனந்தன் said...

நண்பரே, நானும் ஒரு தீவிர ரஜினி ரசிகன் என்கிற வகையில் உங்கள் ஆதங்கம் எனக்கு நன்றாகப் புரிகிறது. நாம் மிகவும் நேசிக்கும் ஒருவரை தவறாகப் பேசினாலே நமக்குக் கோபம் வரும். அதிலும் நேசிக்கும் நம்மையும் சேர்த்து இகழ்ந்து பேசினால் கடுங்கோபம் வரத்தான் செய்யும். எனது தளத்தில் கருந்தேள் எழுதிய அந்த கமெண்ட்டை அழித்து விட்டேன். இனி இது சம்பந்தமாக எந்த பதிவுவோ, பின்னூட்டமோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

VJR said...

நல்லது ஆனந்தன். நானும் தேனியைச் சேர்ந்தவந்தான். வாய்ப்பிருந்தால் சந்திக்கலாம்.

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.