A எனது நாட்குறிப்பு: இவர்களை எப்படி அழைக்கலாம்..?

Saturday, October 16, 2010

இவர்களை எப்படி அழைக்கலாம்..?

நீங்கள் அடிக்கடிப் பார்த்தவர்கள்தான். படிக்கும் இடத்தில்,வேலை செய்யும் இடத்தில், வசிக்கும் இடத்தில் இப்படி. அவர்களை உங்களால் அனுசரித்து செல்லவும் முடியாது. அதே சமயம் ஒதுக்கவும் முடியாது. எந்தவொருக் கட்டமைப்பு வைத்தாலும் அவர்கள் ஊடுருவிக்கொண்டே இருப்பார்கள். யாரப்பற்றி சொல்கிறேன் என்று புரியாதவர்களுக்கு "எட்டப்ப வகயறாக்கள்" என நினைவுபடுத்துகிறேன்.

இந்த எட்டப்ப வகையறாக்களால் நம்மால் வரையறுக்கமுடியா பல துன்பங்கள் மனிதன் தோன்றியக் காலம் தொட்டே வருவது கண்கூடு. ஒருவேளை இவர்கள் மட்டும் இல்லாமல் போனால் மனித குலமே ஒரு பிடிப்பில்லாமல் சப்பென செல்லக்கூடும். ஆம் அவர்கள்தான் இந்த மனித குலத்தையே இயக்குபவர்கள்.

இவர்கள் வரலாற்றில் இருந்து வலைப்பூக்கள்வரை விரவி இருக்கிறார்கள். வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு எட்டப்பன் இல்லையென்றால் "வீரபாண்டியக் கட்டபொம்மன்" தடையமில்லா வரலாற்றில் ஒழிந்து இருக்கலாம்.

ஆங்கிலேயா ஏகாதிபத்தியத்தில் எண்ணற்ற எட்டப்பர்கள் இருக்கவேதான் எத்தனை போராட்டங்கள், எத்தனை இழப்புகள். அதுவே அழியா வரலாறாகவும் மாறியிருக்கிறது. அந்த எட்டப்பர்கள் மட்டும் இல்லையென்றால், அந்த வெள்ளைக்கார நாய்களுக்கு பணிவிடை செய்ய குமாஸ்தா நாய்கள் இல்லாமல் போயிருக்கலாம், மொழிபெயர்க்க பல இந்திய நாய்கள் கிடைக்காமல் போயிருக்கலாம், அவர்களைப் பாதுகாக்க பல இந்திய ராணுவ நாய்கள் கிடைக்காமல் போயிருக்கலாம், இப்படி அந்த வெள்ளைக்காரர்களுக்கு அனைத்து வேலைகளையும் செய்தது நம் இந்திய நாய்கள்தான். அப்படிமட்டும் செய்யாமல் இருந்திருந்தால், "மேதகு எலிசபத் ராணியே, இந்தியர்கள் யாரும் எங்கள் பேச்சைக் கேட்பதில்லை,வெறும் அம்பதாயிரம் பேர்களால் ஒரு முடியும் புடுங்க முடியவில்லை" என்று பின்னங்கால்கள் பிடனியில் பட ஓடியிருப்பார்கள்.நமக்கும் இந்த அரிய வரலாறும் மகாத்மாவும்,மாமாவும் கிடைக்காமல் போயிருக்ககூடும். அப்படியெல்லாம் இருந்தால் சுவாரஷ்யம் இல்லைதானே.

நேற்று ஈழத்தில் நடந்தது என்ன? விடிவெள்ளி கருணா. பிரபாகரனுடனே இருந்தார். போராடினார். பேசித்தீர்க்கும் பிணக்குகள். வெளியேறினார். போராடவா? இல்லை, காட்டிக் கொடுக்க.

காட்டிக்கொடுப்பவர்கள் இல்லாதவரைதான் ஒரு போராட்டம் போராட்டமாக இருக்கும். கூடவே இருந்தவன் அல்லது இருப்பவன் காட்டிக்கொடுக்க ஆரம்பித்தால், முடிந்தது கதை. அது நாடாக இருக்கட்டும்,ஒரு சமூகமாக இருக்கட்டும் இல்லை ஒரு தனிமனிதனாக இருக்கட்டும்.

ஆனால் எட்டப்பர்கள் இல்லாத ஒரு இடம் சாத்தியமா? சாத்தியம் என்று நினைத்தால் நீங்கள் அப்பாவி. ஆப்பிலேயே அமர்ந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இதில் பல எட்டப்பர்களுக்கு தாங்கள் எட்டப்பர்கள் என்பது தெரியமலேப் போவது துரதிஷ்டம்.
அதிலும் அந்த எட்டப்பர், அதே சமூகமாகிப்போனால் அந்த சமூகத்தின் கதி அதோகதிதான்.புரியும்படியாக சொல்வதென்றால், "பெண்களுக்கு 33 சதவிகிதம் ஒதுக்கீடு" என்ற ஒரு கோரிக்கை வலுப்பெரும்போது, பெரும்பணக்காரகளின் மனைவிமார்களின் ஏதோ ஒரு சங்கம், அதற்கெதிரா ஒரு வழக்கு போட்டால், அதுவும் பெண்களே பெண்களுக்கு எதிராகப்போட்டால் என்னாகும்? நீர்த்துப் போகும்தானே.

அதுவரை சப்போர்ட்டாக இருந்த ஆண்களுக்கும் தலைசுத்துவது வாஸ்தவம்தான். அதிலும் விவரம் புரியாதவர்களுக்கு ஒன்னும் விளக்கததேவையில்லை. வீட்லயே ஒன்னும் புடுங்க முடியலயாம், இதுல நாட்டுலெவலுல எடம் கேக்குதாம் என எள்ளி நகையாடாமல் முடியாது.

இந்த ட்ரெண்டுக்குப் பேர்தான் நம்ம விரலால நம்ம கண்ண குத்துறது. நாமலே நம்மல செருப்பால அடிச்சுக்கிறது.ராஜபக்சே ஒரு கிரிமினல்'ன்னு ஐநா சொல்லும்போது "நான் தமிழர்களை கொலை செய்யல"ன்னு ராஜபக்சே சொல்றதுக்கும், ஒரு தமிழனே, " ச்சே ச்சே இட்ஸ் டூ மச், ராஜபக்சே தமிழனக்கு உதவியாய் இருக்கிறார், தமிழர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள்"ன்னு சொல்றதுக்கும் உள்ள வித்தியாசம்.

இந்தமாதி ஸ்டேட்மெண்ட ஒரு தமிழனோ, தமிழ் அரசியல்வாதியோ விட்டால் டோட்டலா நமக்குதான் டேமேஜ்.

இந்தக் கேடுகெட்ட வேலைய பலர் தெரியாமலே செய்வதுதான் கொடூரம்.

ஒரு நிகழ்ச்சி. அவர்களுக்கு அது புரட்சித் திருமணம். ஆம் சாதி மதத்தில் உருண்டு சேராகிக் கிடந்தவர்களுக்கு நடுவே வெவ்வேறு சாதியும் வெவ்வேறு மதத்தையும் சேர்ந்த இருவருக்குமிடையே நடந்த ஒரு திருமணம். சிலருக்கு புரட்சியாகத் தெரியலாம். சிலருக்கு அப்படி இருக்க அவசியமில்லை. ஆனால் கண்டிப்பாக அதை நக்கல் செய்யவேண்டிய அவசியம் இல்லை.

ஒரு வேளை அந்த நிகழ்வை விவரித்தவர் மட்டமானவராகவே இருந்தாலும் கூட. பாராட்டியாகவேண்டியக் கட்டாயமில்லை. ஆனால் கண்டிப்பாக மட்டம்தட்டுவது அருவருப்பானது.

மட்டம்தட்டியது அந்த மனிதரையா? அந்த திருமணத்தையா? இல்லை அந்த இணந்த உள்ளங்களையா?

யோசிக்க வேண்டிய விசயம். இது நமக்கு புதிதல்ல. நாம் தமிழேண்டா. நம்மை ஆள்பவர்கள் எவ்வழியோ நாம் அவ்வழி.கருணாநிதி ஜெயலலிதாவ புகழ்ந்தும்,ஜெயலலிதா கருணாநிதியப் புகழ்ந்தும் கேட்டிருக்கீங்க? இது உதாரணத்துக்காக.

ஒரு நல்ல விசயத்துக்கு உண்ணாவிரதமிருந்த போது, அதன் எதிரிலேயே உண்ணும் விரதம் இருந்தவர்கள்.

அடுத்து நமது பெண்களுக்கான சுதந்திரத்தை கிணற்றுத்தவளையாக கணித்தல். வெளியில் வரவேண்டும்.உலகம் பெரியது. இதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. இதில் தெரிந்தோ தெரியாமலோ அடக்கியோ அடங்கியோ இருக்கிறார்கள். ஒரு தனி மனிதனால் தீர்க்ககூடியது அல்ல. ஊர்கூடி இழுக்கும் தேர்போல. நாமும் இழுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் எதிர்புறமாக தள்ளுவது அபத்தமானது.

பலர் அது தெரியாமலயே எதிர்வினை புரிகிறோம். நேர்வினை புரிபவரின் நம்பிக்கையில் ஐயப்பாடு காரணமாக இருக்கலாம். அதுக்கு அவர்களைப் பிண்ணிப் பெடலெடுத்தால் பாராட்டக்கூடியது அதுவும் சரியானக் காரணங்களுடன். அது சரியானதா என்பதை சிந்திக்க வேண்டும்.

சில சுதந்திரம் போராட்டத்திலும் சில சுதந்திரம் புரிதலிலும் சில சுதந்திரம் விட்டுக்கொடுத்தலிலும் உள்ளது.

பெண் சுதந்திரமென்பது புரிதலில் மட்டுமே உள்ளது என்பது என் அபிப்ராயம். பெண் சுதந்திரம் என்பது ஆண் செய்யும் அத்துமீறல்கள் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆக பெண் சுதந்திரம்மென்பது கருவியாகமட்டுமில்லாமல் இயக்கியாகவும் இருத்தலே. இதில் அனைத்தும் அடங்கும்.

உடனே சில வில்லப் பெண்கள் உங்கள் ஞாபகத்தில் வந்து உங்களைக் குதறினால், உலகில் நடக்கும் க்ரைம்கள் 95 சதவிகிதம் ஆண்களாலே நடந்தது, நடக்கிறது என்பதை நினைவில் கொண்டால் கொஞ்சம் கோபம் மட்டுப்படலாம்.

இருட்டில் இருந்துகொண்டு இருட்டென்று சொல்லாதவர்கள் ஒரு நாள் இருட்டென்று உணருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பது சகஜம், ஆனால் இருட்டை வெளிச்சமென்று சொல்பவர்களுக்கு நாம் நல்ல முறையில் சொல்வது கடமை. ஏனென்றால் அவர்களும் நம் சகோதரர்(ரி)களே...!

டிஸ்கி: இது யாரைப் பற்றியும் அல்ல.

2 comments:

அணிமா said...

///டிஸ்கி: இது யாரைப் பற்றியும் அல்ல. ////


நம்பிட்டேன்!!!

Thekkikattan|தெகா said...

நல்ல அலசல்! ‘எட்டப்பயங்களுக்கு’ குட்டை மண்டை - கற்றது கைமண்ணளவு -

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.