நான் அலுவலகம் வருவதற்கு முன்பாகவே, இத்தாலியச் சேர்ந்த ஒருவரும், ஸ்பெயினைச் சேர்ந்த இருவரும் எனக்காக் காத்துக்கொண்டு இருந்தனர்.அவர்கள் என் நண்பர்களும் கூட. நாங்கள் சேர்ந்தாலே அலுவலகம் அரட்டைக்கூடமாகிவிடும்.நேற்றும் அதுபோலவே.
பேச்சு பலவாக்கில் சுற்றி கடைசியாக மொழியப்பற்றி வந்தது. நான், தமிழ் 3000(!?) வருடங்களுக்கு முந்தைய இலக்கண சுத்தமான மொழியென்றேன்.அதற்கு ஸ்பெயின்காரர், ஸ்பானிஸ், இத்தாலி, ஃபிரென்ச் லத்தின் வழி மொழியென்றும், லத்தினுக்கான வயது சரியாகத் தெரியாது என்றும் ஆனால் மற்றைய மொழிகள் சுமார் 1000 வருடங்களுக்கான வரலாறு கொண்டது எனக்கூறினார்.
ஆகமொத்தம் நாங்கள் அனைவருமே அரைகுடமென்பது தெளிவாகத் தெரிந்தது.
அதன் பிறகு பேச்சு ஆங்கில மோகத்தைப் பற்றியும் அதன் ஊடுருவல் பற்றியும் திரும்பியது.
எங்கள் நாட்டில் அதுவும் தென்னிந்தியாவில் ஆங்கிலம் பேசுவதென்பது பெரிமைக்குரிய விசயமாக மக்கள் நினக்கிறார்கள்,அவர்களைப் பெரிய அறிவாளியாகப் பார்ப்பதுமுண்டு என்றேன்.அப்படியா? ஃப்ரான்ஸில் ஆங்கிலத்தில் பேசுவதை அசிங்கமாக நினைப்பார்கள், ஸ்பெயினிலும், இத்தாலியிலும் கண்டுகொள்ளமாட்டார்கள், ஜெர்மனியில் திட்டினாலும் திட்டுவார்கள் என்றனர். ஆச்சரியமா இருந்தது.
இங்கிலாந்துக்காரன் கத்திக்கூப்பிட்டால் கேக்கும் தூரத்தில் இருக்கும் இந்த நாடுகளே கண்டுகொள்ளாத ஆங்கிலத்தை எதற்காக நாம் கட்டிக்கொண்டு அழுகிறோம் என்பது எனக்குப் பிடிபடவில்லை.
உங்களுக்கு....?
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.