A எனது நாட்குறிப்பு: ஞானிகள் எல்லோரும் ஞானிகளா?

Friday, October 22, 2010

ஞானிகள் எல்லோரும் ஞானிகளா?

திரும்ப திரும்ப தெரிந்தே ஞானியப் பற்றி பேசுவதில் அயற்சி ஏற்ப்பட்டாலும் ஒன்றுமே வெளங்காத சிலர் இதை உண்ணமயென்று எண்ணும் அபத்தம் இருப்பதால் அடைப்புக்குள் ஞானியின் வார்த்தையும் அடைப்புக்கு வெளியே நமது எண்ணத்தையும் சொல்லியுள்ளோம். NDTV-HINDU நடந்தது என்ன என்பதைப் படிக்க க்ளிக்கவும்.


//நண்பர்களே,
நான் எம்.ஜி.ஆரின் அன்றைய அசல் வயதைக் குறிப்பிட்டேன். அதிகாரப்பூர்வமான வயதை அல்ல.//


அசல் வயது என்று எதை எப்படி நிர்ணயிக்கிறார். அதற்கான எதாவது ஆதாரம் கொடுக்க முடியுமா? இல்லை எம்.ஜி.ஆரின் ஊர்க்காரரா அன்றில் அசலை தெரிந்துகொள்ளும் அளவிற்கு நெருங்கிய நண்பரா? நானறியேன் பராபரமே. ஞானியென்றதாலா?

//முத்து படத்தைப் பார்த்துவிட்டு ஜப்பானியர்கள் சென்னை வந்தார்கள் என்பது பற்றி வெளியான முதல் செய்தியில், பழைய பத்திரிகைகளைத்தேடினால் பார்க்கலாம், அவர்கள் நடிகை மீனாவைக் காண்பதற்காக வந்ததாகத்தான் குறிப்பிடப்பட்டது. அதன் பின்னரே ரஜினியைக் காணச் சென்றார்கள். ரஜினிக்காக இயங்கும் மார்க்கெட்டிங் டீம், அதை சிரப்பாக பயன்படுத்திக் கொண்டது. மீனாவுக்கு அப்படிப்பட்ட டீமும் தேவையும் இருக்கவில்லை.//

நீங்கள் தினமும் செய்திதாள் படிப்பவராக இருந்தால், இது எவ்ளோ பெரிய அபத்தமென்று சட்டென ஞாபகத்துக்கு வரும். நமது பிரதமரின் ஜப்பான் பயணத்தின் போது, ஜப்பான் பிரதமர் சொன்னாராம், "எங்கள் மக்களுக்கு ரஜினியைப் பிடிக்கும்" என்று. இதன் அர்த்தம் பச்சைக் குழந்தைக்கும் தெரியும். ஒரு வேளை ஞானக் குழந்தைகளுக்கு தெரியாதோ?


//ரஜினி நல்ல நடிகர்.//

காலம் கடந்த ஞானம். ஒரு வேளை எல்லா ஞானிகளுக்கும் இப்படித்தானோ?

//ஆனால் நடிகரைக் கொன்றுதான் இங்கே ஸ்டார் உருவாக்கப்படுகிறார். இதைப்பற்றிய என் விரிவான கட்டுரை இந்தியா டுடே ரஜினி சிறப்பிதழில் வெளியாகியிருக்கிறது.//

ஒவ்வொரு நடிகனுக்கு ஆரம்பகாலப் படங்கள் பள்ளி படிப்பை போல. அதற்கப்புறம்தான் ஃப்ரொபஷ்னலா இல்ல ஆர்ட்ஸாங்கிறது. ஒரு சிலக் குழந்தைகள் 15 வயதில் IIT யில் படிக்கலாம், ஒருவேளை அவங்க நெஜமாலும் ஞானிகளோ?

//அந்தக் கட்டுரையை ரஜினியும் பாராட்டியிருக்கிறார்.//

எப்பயும் உண்மையான ஞானிங்க, தன்னைக் தவறாக குறை சொல்வர்களையும் மதிப்பார்கள். அப்ப ரஜினி உண்மையான ஞானியோ?

//மார்க்கெட்டிங் இல்லாமல் உலகம் சுற்றும் வாலிபன் பெரும் வெற்றியடைந்தது.( போஸ்டர் கூட கிடையாது. அப்போது டி.வியும் இல்லை.)//

அப்போ சென்னையில ஒரு 10 தியேட்டர். CD இல்ல, DVD இல்ல. ஒருத்தனுக்கு புள்ளப் பொறந்தா ஊருக்கே தெரியும். சினிமான்னா சொல்லவா வேணும். அதுவும் எம்.ஜி.ஆர் அன்றைய ரஜினி.(இதெப்படி இருக்கு) இதெல்லாம் தெரிய பெரிய ஞானியா இருக்கனுமா என்ன?


//எந்திரன் சன் குரூப்பின் மார்க்கெட்டிங் இல்லாவிட்டால் சாதாரண படமாகவே ஓடியிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.//

ஆமா, சொல்லிகிட்டாங்க. குசேலன யாருக்கும் தெரியாம நைட்டோட நைட்டா ரிலீஸ் பண்ணிட்டாங்க. அதனாலதான் ஃபெயிலியர். இல்லன்னா பிண்ணி பெடலெடுத்த்ருக்கும். சை ஞானியை ஒரு வார்த்தை கேக்காமப் போயிடாங்களே. பாலசந்தர் ஞானி இல்லையோ?


//உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக எதையும் அணுகுவதே நமக்கு நல்லது. அப்புறம் உங்கள் விருப்பம். என்னைத்திட்டுவதால் உண்மைகள் மாறிவிடாது.//

ரஜினி விசயத்துக்கு மட்டுமா, இல்லை ஈழப்பிரச்சினைக்கும் சேர்த்தா? இதுக்கெல்லாம் ஞானம் கடையில் கிடைக்குமா?

//ஒரு கூடுதல் தகவல்: ரசிகர் மன்றங்கள் எல்லாமே எம்.ஜிஆர் காலத்திலிருந்தே, நடிகரும் தயாரிப்பாளரும் கொடுக்கும் பணத்தில்தான் இயங்குகின்றன என்பது மீடியாவில் உள்ளவர்கள் எல்லாரும் அறிந்த உண்மை. மன முதிர்ச்சி எற்படாத பருவத்தில் ஒரு சிலர் மட்டுமே சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்வார்கள். நடிகர்கள் பலரும் வருமானவரிக்கு தரும் கணக்கில் ரசிகர் மன்ரத்துக்கு கொடுத்த பணத்தை பிரமோஷன் செலவுக் கணக்கில் காட்டுகிறார்கள். பழவேற்காடு பகுதியில் ஒரு நடிகர் படப்பிடிப்புக்குச் சென்ரபோது அவரை அசத்த விரும்பிய தயாரிப்பாளர் அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டரை வைத்தே ரசிகர் மன்ற போர்டுகளை முன்னிரவே வழி நெடுக அமைத்து கூட்டத்தைத் திரட்டிய கதை எல்லாம் பத்திரிகைகளில் வெளிவராது. ஆனால் சினிமா , மீடியா துரையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத் தெரிந்தவை.//

அப்படியென்றால் எம்.ஜி. ஆரை தூக்கிவைத்துப் பேசக் காரணம் என்ன? அன்று எம்.ஜி.ஆர் தங்களுக்கு கொடுத்த பணம் இன்னும் பேலன்ஸ் இருக்கிறதா? அப்போ இன்னும் கொஞ்ச நாட்களில் அண்ணன் ரித்தீஸ் சூப்பர் ஸ்டார். சில விஷயங்கள் புரிய ஞானியாக இருக்க வேண்டுமோ?


//இந்தியாவின் குறிப்பாக தமிழ் வர்த்தக சினிமாவில் ஸ்டார் என்பவன் வேறு. நடிகன் என்பவன் வேறு. இரண்டுமாக ஒருவரே இருக்க முயற்சிப்பது மிகக் கடினம் என்பதுதான் சினிமா உலகத்தின் வியாபார விதி.//

எங்களைப் பொருத்து, பிடித்த மாதிரி படங்கள் கொடுத்தால் படம் ஓடும். அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ஓடினால் அதிக படம் கிடைக்கும். அதிகப் படம் ஓடினாலே தானாகவே ரசிகர் வட்டம் கூடும். ரசிகர் கூட்டம் கூடக்கூட ஸ்டார் வேல்யூ கூடும், சம்பளம் கூடும். ராமராஜனையே தூ.......க்கி வெச்சு தொபக்கடீர்னு போட்டவங்க நாங்க.இது ஞானிகளுக்கு மட்டும் தெரியாதோ?

//இந்த விதியின்படி தனக்குள் இருந்த நடிகனைக் கொன்று ஸ்டாரானதுதான் சிவாஜிராவ் என்கிற ரஜினிகாந்த்தின் 32 வருட சினிமா வாழ்க்கைக் கதையின் ஒன் லைன்.//

நல்ல கதை. தயாரிப்பாளர்கள் கிடைப்பார்களா பார்ப்போம். ஒரு பெரிய புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தால், ஞானிகள் மட்டும் முதல் பக்கமும் இறுதிப் பக்கமும் மட்டும் படிப்பார்களோ?

//பள்ளிப் படிப்பைத் தாண்டாமல், ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக வாழ்க்கையைத் தொடங்கியவர் இன்று இந்தியாவிலேயே அதிகமான சம்பளம் வாங்கும் நடிகராக ஆனது முதல் பார்வையில் பிரமிப்பூட்டுவதாக இருக்கலாம். ஆனால் ஆழ்ந்து யோசித்தால், வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், எல்லா சினிமா ஸ்டார்களும் அப்படிப்பட்டவர்கள்தான். ரஜினியை விட ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர்கள் எம்.ஜி.ஆரும் சிவாஜியும். உலக அளவில் சார்லி சாப்ளின் முதல் இந்தியாவின் பிருத்விராஜ் கபூர், எம்.ஆர்.ராதா, கமல்ஹாசன் வரை ஸ்கூல் டிராப் அவுட்டுகள்தான்.கலை உலகத்தின் வலிமையே அது முறையான கல்வியை விட அனுபவத்தில் உருவான செழுமைப்படுத்தப்பட்ட திறமைக்கே அதிக முக்கியத்துவமும் வாய்ப்பும் தருவதுதான். முறையான படிப்பாளிகள் இன்றைய வணிக சினிமா இயந்திரத்தின் வீல் பெல்ட், நட்டு, போல்ட்டுகளாக மட்டுமே இருக்க முடியும். மெஷின் ஆபரேட்டர் ஆகிறவர்கள் குறைவு//

நல்ல கண்டுபிடிப்பு. அடுத்து முதலைமைச்சர் பதிவியையும் விட்டுவிட்டார். படிக்காதவர்கள் மாவட்ட கலெக்டர் ஆகமுடியாது என்பது தெரிந்ததால் முயற்சி செய்யவில்லை. படிக்காதவனுக்கு எல்லாமே ஆப்சன்.தோல்வி பொருட்டல்ல. முயற்சி செய்யலாம். வெற்றி பெறாத படிகாதவர்கள் எத்தனை எத்தனை பேர்கள் கோடம்பாக்காத்தில்.ஆனால் நல்லாப் படிச்சவனுக்கு அது ஒன்னுதான் ஆப்சன். அதனால்தான் ஒரே நேர்கோடு. இது பெரிய சப்ஜெக்ட். வாய்ப்புக் கிடைத்தால் தனிப்பதிவாக ஞானிக்கு டெடிகேட் பண்ணலாமோ?


//ரஜினி 1975ல் நடிக்க வந்த போது சென்னையில் ஒரு பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படித்தார். ஆனால் அது அடையாறில் இருக்கும் அரசின் திரைப்படக் கல்லூரி போல பாரம்பரியமும், கல்வி முறைமையும் கொண்டதல்ல. திரைப்பட வர்த்தக சபையின் ஆதரவில் நடத்தப்பட்டு சில வருடங்களிலேயே மூடப்பட்டுவிட்டது. ரஜினி நடிக்கக் கற்றுக் கொண்டதில் அதன் பங்கு கணிசமானது என்று நிச்சயம் சொல்ல முடியாது. அவர் பெங்களூரின் பஸ்களிலும் சினிமா கொட்டகைகளிலும் படித்ததுதான் கூடுதலாக இருக்க முடியும்.//

உண்மையிலேயே ஞானிதான்.


//முதல் சில வருடங்களில் ரஜினி வில்லன் பாத்திரங்களில் நடித்தபோதும், குணச்சித்திர பாத்திரங்களில் ( ஹீரோவும் அல்ல வில்லனும் அல்ல ) நடித்தபோதும்தான் அவருடைய நடிப்பு ஆற்றல் வெளிப்பட்டது.//

கேரக்டருக்கு என்ன தேவையோ அது செய்யப்பட்டது. கார் ட்ரைவரை ஃபைலட்டாக காட்ட முடியாது. ஞானிகளுக்கு இதெல்லாம் டூ மச்.

//ஆனால் தமிழ் வணிக சினிமாவின் வியாபாரிகள் நடிகர்களை வளர்ப்பதை விட, அவர்களை ஸ்டார்களாக உருமாற்றுவதிலேயே முனைப்பாக இருப்பவர்கள். நடிகராக பலவகைப் பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த கமல்ஹாசனை ஸ்டாராக்குவதற்கு ஒரு சகலகலா வல்லவன். ரஜினிக்கு ஒரு முரட்டுக்காளை. சேது, காசி போன்ற படங்களில் நடித்த விக்ரமுக்கு ஒரு ஜெமினி.//

கலியும் கூலும் உடம்புக்கு நல்லதுதான். அதற்காக ஹோட்டல் நடத்துபவர் அதையே முழு மெனுவாக வைத்தால் கூலி வேலை செய்யும் நபர்கூட அந்த ஹோட்டலுக்கு செல்லமாட்டார். தோசையும், பரோட்டாவும், பிரியாணியும் வந்தால்தான் ஆகும். ஒருவரை ஸ்டாராக மாற்ற அவர்களுக்கென்ன வேண்டுதலா? எந்த குதிரையில் பணம் கட்டினால் ஜெயிப்போம் என்று தெரிந்த வியாபாரிகள் அவர்கள். சொந்த பணத்தில் ஸ்டாராக நினைத்து வந்து போன ப்ரேமையும் தெரியும். இன்றும் அப்போ அப்போ சீன் காட்டும் சிலரையும் தெரியும். எந்தெந்த நடிகரில் எதைஎதை எதிர்பார்ப்பது என்பது ரசிகனுக்கு மட்டும்தான் தெரியுமா? ஞானிகளுக்கு தெரியாதா?

//தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைக்கும் வல்லமை இருந்த நடிகர்களாக எழுபதுகளின் இறுதியில், எண்பதுகளின் தொடக்கத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள் ரஜினியும் கமலும். அதே போல அடுத்த தலைமுறையில் விக்ரமும் சூர்யாவும். ஆனால் எல்லாரையும் ஸ்டார்களாக்கும் சினிமா ஃபேக்டரி இவர்களையும் ஸ்டார்களாக்கி தமிழ் சினிமாவின் தடத்தை மாற விடாமல் தடுத்துக்கொண்டே தான் இருக்கிறது.//

பாவமாக இருக்கிறது. நல்ல படங்கள் ரசிகனால் கவனிக்கப்படாமல் போனது ஏராளம். அதனால் மக்களுக்கு அதாவது ரசிகனுக்கு எது தேவையோ அதைக் கொடுக்கிறார்கள். இருப்பதைக் கொடுக்கிறார்கள். பிடிப்பதைப் பார்க்கிறார்கள். காரணம் சிம்பிள். தன்னால் எது முடியாதோ அதை தந்து ஆதர்சக் கதாநாயகன் செய்ய வேண்டுமென்கிறான். காற்றில் பறந்து பறந்து அராஜகத்து ஒழிக்க சொல்கிறான். காதாலில் உருக சொல்கிறான். செய்தால் பார்க்கிறான். அழுது வடிந்தால்." ச்சை இதத்தான் எழவு வீட்ல பாக்குறோம், சினிமாவும்லயா" என்று கேட்கிறான். ஹோட்டலில் கூலுக் கதைதான் இங்கும். எனக்கு ஞானம் பத்தலயோ?

//முள்ளும் மலரும், மூன்று முடிச்சு, பதினாறு வயதினிலே, புவனா ஒரு கேள்விக்குறி, அவர்கள் போன்ற படங்கள் எல்லாம் ரஜினியைத் திறமையான நடிகராக ஆரம்ப ஆண்டுகளிலேயே அடையாளம் காட்டியவை. ஆனால் அவை அவரை ஸ்டாராக்கவில்லை. முரட்டுக் காளைக்குப் பிறகுதான் அவர் ஸ்டார் நிலையை நோக்கிப் பயணம் செய்தார்.//

ஸ்டார் என்பது உச்ச நிலை. அடிப்படிக்கட்டுகளில் தேடப்படாது. தேடினால் ஞான சூனயமென்று சொல்வார்களோ?

//ஸ்டாரானபிறகு படங்களுக்கிடையே பெரும் வித்யாசம் இல்லை. காரணம் ஸ்டாருக்கென்றே இருக்கும் கதைப்பின்னல் ஃபார்முலாதான். சிவாஜி வரை அதே ஸ்டார் ஃபார்முலாதான் தொடர்கிறது.//

வியாபாரம் நல்லாப் போச்சா. அதான் முக்கியம். கலை வளர்க்க யாராவது இருந்தாக் ஞானிகளை அனுகவும்.

//தமிழ் சினிமாவின் அத்தனை கோளாறுகளாலும் லாபம் நஷ்டம் இரண்டையும் அடைந்தவர் ரஜினி என்று சொல்லலாம். மசாலா பட ஸ்டார் என்பதால் வாழ்க்கையில் யாரும் எளிதில் அடையமுடியாத பொருளாதார உச்சத்தை அவ்ர் அடைந்தார். அதே சமயம் ஆரம்ப ஆண்டுகளில் அவரை வைத்து வசூலைக் குவிக்க துடித்த தயாரிப்பாளர்களின் நிர்ப்பந்தத்தால், ஒரு காலத்தில் நாகேஷுக்கு ஏற்பட்ட அதே சிக்கல் ரஜினிக்கும் ஏற்பட்டது.//

எல்லாரும் மனுசப் பயலுகதானே. இன்னும் நம்ம நாட்டு மக்கள் பணம் பணமுன்னு சொல்லி ஓவர் டைம்ல ஒழச்சு ஓடாத் தேயுறான். இன்னும் ஞானம் பெறக்கலயோ என்னவோ?

//தூங்கவும் சிந்திக்கவும் நேரம் இல்லாமல் மூன்று ஷிப்டுகள் வேலை செய்த நாகேஷ் ஒரே ஆறுதலாக மதுவில் மூழ்கி சாவின் விளிம்பைத் தொட்டுத் திரும்பினார். மருத்துவமனையில் இருந்த அவர் இன்று இரவைக் கடப்பது கஷ்டம் என்று தினசரி மாலைப் பத்திரிகைகள் சுமார் முப்பதாண்டுகள் முன்பு அவரது மரணத்துக்கு நேரம் குறித்துக் கொண்டிருந்தன. அதே போல வேலை பளுவில் நசுக்கப்பட்ட ரஜினி கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி, பத்திரிகையாளர்களை அடிப்பது முதல் மிதமிஞ்சிக் குடிப்பது வரை பல சிக்கல்களுக்கு தன்னைத் தானே உள்ளாக்கிக் கொண்டார்.//

இது எல்லாத் தொழிலிலும் சகஜம்தான். கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இதெற்கெல்லாம் பெரியளவுக்கு ஞானம் தேவையில்லைதானே?

//அதிலிருந்து மீண்டு வந்தபின், நடிகனாக, கலைஞனாக தனக்கென்று ஏதேனும் ஆசைகள் இருந்தால், அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, பூரணமாக மசாலா சினிமாவுக்கு தன்னை சரணாகதி செய்துகொண்டார்.//

ஒரு தொழிலேயே பல நிலைகள் இருக்கும். சிலர் அழுது வடிய. சிலர் சிரிக்கச் செய்ய. சிலர் சண்டைக்கா. இது ரஜினிக்காக.அதை ரசிப்பவர்களுக்காக. கண்டிப்பாக ஞானிகளுக்காக அல்ல.

//இந்த ஃபார்முலாவுக்குள் அவர் வித்யாசமாக செய்து பார்த்து வெற்றியடையும் அம்சம் என்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் காமெடி. பாலச்சந்தரின் தில்லுமுல்லுவில் முழுமையாக அதை சாதித்துக் காட்டிய ரஜினிதான்,இன்றும் தமிழ் சினிமாவில் காமெடி கலந்த ஒரே சூப்பர்மேன் ஹீரோ.//

செய்து பார்க்கவில்லை. பாலச்சந்தர் எடுத்தார். இவர் நடித்தார்.ரசித்தார்கள். ஓடியது. தொடர்ந்தது. ஒன்றும் அல்ஜீப்ரா ஃபார்முலா இல்லை. மதி முத்தினால் ஞானியோ?

//ரஜினியின் அண்மை ஆண்டுகளில் சினிமாவுக்கு வெளியே அவர் செய்த காமெடியாக அவரது அரசியலைக் குறிப்பிடலாம்.//

வெறுமனே சம்பளத்துக்கு, கவனிக்க பொதுநலம் என்று ஏமாந்தால் கம்பெனி பொருப்பல்ல, எழுதுபவர்களே அரசியலில் அங்காலாய்க்கும்போது 35 வருட சினிமா வாழ்க்கை, பட்டிதொட்டியெல்லாம் தெரிந்தவர் சொன்னால் தப்பா? அது அவர் கருத்து. ஞானிகள் விளக்கி தெரிந்துகொள்ளும் நிலமியிலா இருக்கிறோம்?

// 1996ல் மக்கள் ஏற்கனவே ஜெயலலிதா எதிர்ப்பில் இருந்த மன நிலையில் அதை ரஜினி எதிரொலித்ததுதான் இன்று வரை அவருடைய மிகப் பெரிய அரசியல் சாதனையாக தவறாக சொல்லப்பட்டுவருகிறது.மக்கள் ஜெயலலிதாவுக்கு எதிர் மன நிலையில் இருக்கையில், ரஜினி ‘பரவாயில்லை ஒரு முறை அவரை மன்னிப்போம். மீன்டும் வாய்ப்பு தருவோம் ’ என்று சொல்லி அதைக் கேட்டு மக்கள் ஜெவை ஆதரித்திருந்தால்தான், ரஜினியின் வாய்சுக்கு நிஜமாகவே செல்வாக்கு இருப்பதாகக் கருத முடியும்.அரசியலில் ரஜினியின் வாய்சுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்பது அடுத்த சில வருடங்களில் வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. ரஜினியை வைத்து காங்கிரசை வளர்த்துக் கொண்டு ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற கனவில் மூப்பனாரும் சிதம்பரமும் ஒரு பக்கமும், பி.ஜே.பி தமிழகத்தில் வளர ரஜினி பயன்படுவார் என்ற கணக்கில் சோ மறுபுறமுமாக செயல்பட்டார்களே தவிர, ரஜினியிடம் எந்த அரசியல் பார்வையும் தெளிவாக இல்லை//

அது, சிலர் ஞானிகளாக நினைத்துக்கொண்டு பத்திரிக்கைகளில் எழுதுபவர்களின் கணிப்பு. இன்னும் சில சம்பளக்கூலி எழுத்தாளர்கள் ரஜினி ரசிகனென்று மல்லாக்கப் படுத்துக்கொண்டு காரித்துப்பிவிட்டு, அடுத்தவாரமே "எந்திரா........" என்று வியாபாரம் செய்த வியாபரிகளின் எழுத்து. ரஜினி சொன்னாரா? நான் சொன்னேன், நீ ஜெயிச்சேன்னு. மூப்பனாரேக் கூப்பிட்டும் கையெடுத்துக் கும்பிட்டவர் ரஜினி.அது கிடக்கட்டும். உங்கள் தெளிவான அரசியல் பார்வை என்ன? ஞானியென்றால் விளக்க வேண்டும்தானே?


//ரஜினி அரசியலை தன் சினிமாவை ஓடவைக்கப் பயன்படுத்தினார் என்று வேண்டுமானால் சொல்லலாம். தி.மு.க, அ.தி.மு,க ஆகியவற்றின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்திகள், எப்போதுமே எங்கேயோ இருந்து ஒரு அவதார புருஷன் வந்து நம்மை உய்விப்பான் என்ற மயக்க நிலை ஆகியவற்றை தன் சினிமாவுக்கு ரஜினி பயன்படுத்திக் கொண்டார்.//

இந்த இடைப்பட்டக் காலங்களில் தான் தோல்விப் படங்களையும் ரஜினி தந்தார் என்பதை ஞானிகளுக்கு மறப்பது எப்படி?

//ரஜினியின் அண்மைக்கால சினிமா வெற்றிகளில் அவ்ருக்கு பயன்பட்ட இன்னொரு அம்சம் & பலமான பெண் பாத்திரங்கள். விஜயசாந்தி, மீனா, ரம்யா கிருஷ்ணன், ஜோதிகா ஆகிய திறமையான நடிகைகள் ஏற்ற பாத்திரங்களின் உதவியால் அந்தப் படங்களில் ரஜினியும் ஜொலிக்க முடிந்தது. அப்படிப்பட்ட பாத்திரங்கள் இல்லாத அவருடைய படங்கள் & பாபா போன்றவை & அடி வாங்கியிருக்கின்றன.//

இதைப்படிச்சுட்டு வாயாலதான் சிரிக்கனும். என்ன ஒரு அவதானிப்பய்யா? ஞானியா இல்லை ஞான...? சரி விடுவோம். சவுந்தர்யா, நக்மா நடிச்சப் படத்தோட சிடிய எல்லா ஞானிகளுக்கு அனுப்பலாமா?

//ரஜினியின் அரசியலைப் போலவே குழப்பமானது அவருடைய ஆன்மிகம். ஹரே கிருஷ்ணா இயக்கம், பாபா, ராகவேந்திரர் என்று வெவ்வேறு வகையான பக்தி மார்க்கங்களை முன்வைத்து வரும் ரஜினி நடைமுறையில் பின்பற்றுவது ரஜினீஷின் சில கோட்பாடுகளைத்தான். ஆனால் ரஜினீஷைப் போல உல்லாச வாழ்க்கையிலேயே உன்னதத்தைக் காணலாம் என்ற கோட்பாடும் அவருக்கு இல்லை. ஒரு பக்கம் வாழ்க்கையின் உல்லாசங்களை கைவிடாதிருப்பது, மறுபக்கம் இவற்றை நிராகரிக்கும் ஆன்மிகவாதிகளைப் போற்றுவது என்ற முரண்பாடு நிறைந்தது ரஜினியின் ஆன்மிகம். அரசியலில் மதவெறியை ஊக்குவிக்கும் அத்வானி, தயானந்த சரஸ்வதி போன்றோர்தான் ரஜினியின் ஆதர்சங்கள் என்பது இத்துடன் சேர்த்து கவனிக்க வேண்டியதாகும்.//

ரொம்ப ஞானம் வந்தாலே இந்த கதிதான். இந்தப் பத்திரிக்கைக் காரங்க இருக்காங்களே இவங்க இப்படிதான் எஜமான், இந்தா நேத்து ஒரு தமிழன் அதுவும் மதுரைக்காரர் உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழனை ஆக்க ஓட்டுப்போடுங்கன்னு சொல்லி எழுதமாட்டாங்க இந்த நடிகையை இந்த நடிகர் வெச்சிக்கிட்டார் என்பதை மட்டும் முழுப்பக்கத்தில் போடுவாங்க. அப்படிப்பட்ட ஒரு ஃபீல்டுல இருந்து அங்க ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாம இங்க வந்துட்டார். தலைக்கு வெளியே வெளிச்சம் வந்தா ஞானமா?

//ரஜினியின் குடும்ப வாழ்க்கை எல்லா சராசரி மனிதர்களின் வாழ்க்கையைப் போன்றதாகவே தோன்றுகிறது. விரும்பிய பெண்களை மணம் செய்ய முடியாமல் போகும்போது கிட்டிய பெண்ணை ஏற்றுக் கொண்டு சமாதான சகவாழ்வு வாழும் சராசரி மன நிலையே அது. ‘வாழு. வாழவிடு. தலையிடாதே. தலையிட மாட்டேன்’ என்பதுதான் ரஜினியின் வாழ்க்கைத்தத்துவம் போல் தோன்றுகிறது.//


மத்தவங்களுக்கு எப்படியோ, எனக்கு ரஜினிகிட்ட பிடிச்ச விசயம் இது. நாலு பேப்பர்ல எழுதினதுனாலயே பொண்டாட்டிய தொறத்திவிட்ற இந்த காலத்து இந்த மனுசன் எப்படி இப்படி இருக்கார்ன்னு என் ஞானத்துக்கு எட்டவே இல்லை?

//அதே சமயம் ரஜினியின் படத்தில் வரும் பெண் பாத்திரங்கள் பெண்களை பழைய நிலையிலேயே வைத்திருப்பதை ஊக்குவிக்கும் பாத்திரங்கள்தான். இதுதான் மசாலா சினிமாவின் பொதுத்தன்மை என்றாலும், அத்துடன் இயைந்துபோவதில் ரஜினிக்கு சிரமம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.//

அதெல்லாம் ரஜினி வேலை செஞ்சப் படமுங்கோ. ரஜினி வேலைவாங்குனப் படம் வள்ளி. தமாசு. ஞானமின்னு சொன்னா மட்டும் ஞானமில்லைங்கோ?

//பணம், புகழ், அதிகாரம், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் என்று ஒரு சராசரி மனதில் அதிகபட்ச உச்சமான ஆசைகளை எல்லாம் அடைந்துவிட்ட ரஜினி இனி என்ன செய்யப் போகிறார் ? என்ன செய்ய முடியும் ? என்ன செய்ய வேண்டும் ?//

கண்டிப்பா ஞானிகளிட்ட கேட்றாதீங்க தலைவா. கவுத்துருவாங்க. தலையிருந்தா மட்டும் ஞானமில்ல?

//அவரை இந்த நிலைக்குக் கொண்டு சென்ற தமிழ் சினிமாவுக்கு அவர் பதிலுக்கு ஏதாவது செய்யலாம்.//

இதுவரை வந்த பல நடிகர்களை அழித்துவிட்டு,தமிழ் சினிமா ஒரு எம்.ஜி.ஆர், ஒரு சிவாஜி, ஒரு கமல், ஒரு ரஜினியை மட்டும் தந்தது. அடப்போங்கப்பா. பத்திரிக்கை நடத்துறவங்க எல்லோரும் பத்திருக்கையிலயேப் பணத்தப் போட்டுட்டாங்க. சொல்றாரு டீட்டெய்லு. ஞானம் வெளஞ்ச பூமின்னாங்களே?

//ஹிந்தியில் ரஜினியின் வயதை ஒத்தவரான அமிதாப் பச்சன் வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்று நடித்து மேலும் புகழ் சம்பாதித்து வருவது போல, ரஜினியும் தன் ஸ்டார் முகமூடியை தூக்கி எறிந்துவிட்டு, உள்ளுக்குள் உறங்கும் (?) கலைஞனுக்கு இன்னொரு உயிர் கொடுக்கலாம்.//

ரஜினி என்றாவதும் ஞானியை "கண்ணா உனக்கும் எழுத்துக்கு ரொம்ப தூரம் இனிமேல் எழுதாதே" என்று சொன்னால் ஒரு வேளை யோசிக்கலாம்.

//புதிய கருத்துக்கள், புதிய சிந்தனையுடன் வரும் பல இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதத்தில் ரஜினி வருடத்துக்கு நான்கு லோ பட்ஜெட் படங்களைத் தயாரிப்பாளரக இருந்து தயாரிக்கலாம்.//

இவரும் இவரைப்போல சில ஞானிகளும் சேர்ந்து சில பதிவர்களை அட நம்மளத்தாம்பா பத்திரிக்கை ஆரம்பிக்க உதவினால் பார்ப்போம்.

//எல்லாவற்றுக்கும் மேலாக ‘ நான் நிச்சயம் அரசியலுக்கு வரப் போவதில்லை’ என்று அறிவித்துவிடலாம்.//

ஞானிகள் உண்மையை மட்டும் பேசும்போது முடிவெடுக்கலாம்.

// இவை எல்லாமே அவரால் செய்ய முடிந்தவைதான். செய்வாரா ? செய்தால் நான் ரஜினியைப் பாராட்ட மூன்றாவது விஷயம் எனக்குக் கிடைக்கும். ஓ....முதல் இரண்டு விஷயங்களை இன்னும் சொல்லவில்லையோ ?//

நான் சொன்னவைகளை ஞானி செய்தால் எனக்கும் பாராட்ட மூன்றாவது விசயம் கிடைக்கும். ஓ முதல் இரண்டு விசய்ங்களா..?

//தன் படங்களில் ஜாதிப் பெருமையை முன்வைத்து மக்களிடையே வெறி ஏற்றும் பாத்திரங்களில் அவர் நடிக்காதது முதல் விஷயம்.//

ஞானி,சொல்வது பொய்யே ஆனாலும் கடைசிவரை தாக்குப்பிடிப்பது.

// படத்தில் காட்டும் இளமை இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல், நேரில் வரும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அசல் வழுக்கை மண்டை நரை முடி தோற்றத்துடன் அவர் வருவதுதான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்த இரண்டாவது விஷயம்.//

ஞானமே இல்லாமல் ஞானியென்று அழைத்துக்கொள்வது.

//(இந்தியா டுடே 14.7.2007 ரஜினி சிறப்பு மலர்)//

இந்தியா டுடே 14.7.2007 ஞானி சிறப்பு மலரும் இல்லை, ரஜினி எழுதவுமில்லை. இந்தியா டுடே என்ன கேணையா?

//ஞாநி உண்மையாக எழுதியிருக்கிறார் என்று அடுத்த இந்தியா டுடே இதழில் ரஜினியின் கருத்து வெளியிடப்பட்டது.//

எப்படி அடிச்சாலும் தாங்குறதுக்கு ஞானம் வேணும்,ஞானம் வேணும், ஞானம் வேணுண்டோய்....

டிஸ்கி: இன்னும் சிறிது நேரத்தில் அனைத்து ஆதாரத்துடன் போட்டோக்கள் இணைக்கப்படும்.

3 comments:

VJR said...

ராசா அணிமா, யாரோ சூன்யம் வெச்சுட்டாங்கன்னு நினைக்கிறேன், தமிழ்மணத்தில் இணைக்க முடியல.

அணிமா said...

அது நான் இல்லை!!!!
எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லீங்கோ!!!

subra said...

மிகவும் அருமையான வாதங்கள் .வாழ்த்துக்கள்

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.