A எனது நாட்குறிப்பு: சினிமாவைப் பற்றி யார் பேசலாம்?

Thursday, October 21, 2010

சினிமாவைப் பற்றி யார் பேசலாம்?

யாரும் பேசலாம். காசா பணமா? ஆனால் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. சினிமா ஒரு வியாபாரம். ஆமாம் கண்டிப்பா ஒரு வியாபாரம். சைடிஸ்ஸாக பெரும் புகழ்.

சுப்ரமணிய புரம் வரும் வரை சசியை எனக்குத் தெரியாது. இதோ இப்ப எனக்கு மட்டுமா எங்க ஊர்காரன் பாதிபேர்க்கு தெரியும். அதுக்கு அவர் பட்டக் கஷ்டம் என்ன? எத எத வித்து பணம் தேத்துனாரோ? எதுக்கு கலை வளர்க்கவா? பணம் சம்பாதிக்க. பிசினஸுங்க பிஸினஸ். ஒரு வேள ஓடாமப் போயிருந்தா, ஒன்னும் சொல்றதுக்கில்ல. ஆளேக் காணாமப் போயிருக்கலாம். யாரு கண்டா.

சரி இதுல நம்மப் பங்கு என்ன? ஒன்னும் பெருசா கிடையாது. படம் நல்லா இருந்தா கடைசிவரைக்கும் பாக்கப்போறோம். இல்லாட்டி பாதியில வரப்போறோம். நல்லா இருந்தா நாலுபேர்கிட்ட சொல்லப் போறோம். அதுக்காக தெருவுல போறவனை இழுத்து தியேட்டர்க்குள்ள விட்றதில்ல. சசியை நேர்ல பாத்து , சார் நீங்க இன்னும் நிரையப்படம் பண்ணனும், இந்தாங்க என் வாட்ச்சு மோதிரமுன்னு கழட்டி கொடுக்கப்போறதில்ல.

ஆனா ஒரு வேள நல்லா இல்லாட்டி நாம என்னப் பண்ணனும். ஒன்னும் சொல்லத்தேவையில்ல. பாத்து ராசா அடுத்தவாட்டி கேர்ஃபுல்லா பண்ணுப்பா. ஒன்ன நம்பித்தேன் ஒங்குடும்பம் இருக்குன்னு வேணா சொல்லலாம். ஏன்னா இது அவர் ரிஸ்க்கு. தெரிஞ்சும் தெரியாமையும் பல குடும்பங்கள் இன்வால்வ் ஆகுற பிஸ்னஸ். எல்லாரும் வெற்றி பெறனுன்னுதான் படம் எடுக்குறாங்க. யாரும் அடுத்து தெருவுல நின்னு பிச்சை எடுக்கனுமுன்னு நெனச்சு சினிமாவுக்கு வர்றதில்ல. எப்படி 50 பேர் படிக்கிற வகுப்புல பத்து பேர் பெயிலாகுறாங்களோ அப்படிதான் ஒரு தொழிலுன்னு எடுத்துகிட்டா முன்னப்பின்னதான் இருக்கும். சினிமா மட்டும் இல்ல, கண்ண முழிச்சுப்பாருங்க அத்தனை தொழிலும் இதே ஏத்தம் எறக்கந்தான்.

கள்ளச்சாராயம் காச்சுறவன் விக்கிறவன் ரேஞ்சுக்கு சினிமாக்காரனக் கீழ எறக்கி அட்வைஸ் பண்ணனுமுன்னு அவசியமில்ல. அதில கலையை அழிக்கிறானுங்களேங்ற ஆதங்கம் டூ மச்.

இதுல சிலபேர் என்ன செய்யுறாங்க, தாஜ் ஹோட்டல் பார்ல ஒக்காந்து பத்தாயிரத்தக் காலி பண்ணிட்டு, எதாவது ஒரு படத்த போதைக்கு பாத்துட்டு விமர்சனம் எழுதுறது எப்படி இருக்குத் தெரியுமா?

அதே விமர்சகன், பணப்பத்தாக் கொறயில தாஜுக்கு பக்கத்துல இருக்குற கையேந்தி பவனுக்குப் போயிட்டு,அந்தக் கடைக்க்காரன்கிட்ட சொன்னானாம் " என்னய்யா கடை நடத்துற, ஒரு சேரில்ல, ஏசியில்ல, செர்வண்ட் இல்ல, ம்யூசிக் இல்ல, லொட்டில்ல லொசுக்கில்ல" ன்னு சொன்னானாம், வேற என்ன நடந்திருக்கும்? அந்த ரோடு முடியறவரைக்கும் தொறத்தி தொறத்தி அடிச்சிருப்பான். ஏன்னா அந்தக் கடைதான் அவன் குடும்பத்த மட்டுமில்ல, பாவம் ஒரு வேள மட்டும் சாப்பிடும் பல குடும்பங்களையும் காப்பாத்துறக் கதை அவனுகெங்க தெரியப்போகுது.

மறுபடியும் சொல்றேன், சினிமா ஒரு வியாபாரம். அதுல பாட்டு இருக்கும். ஃபைட்டு இருக்கும். நகைச்சுவை இருக்கும். நல்லா இருந்தா ஓடும். இல்லாட்டி என்னதான் கூவுனாலும் ஓடாது. பாபாவும், குசேலனும் தெரியும். பாட்சாவும் எந்திரனும் தெரியும்.

அதாகப்பட்டது நடக்கவே முடியாதவன் ஒலிம்பிக்கில ஓடறவனுக்கு கமெண்ட் பண்ணக்கூடாது. கமெண்டினாலும் பரவாயில்லை, அட்வைஸ் பண்ணக்கூடாது. அப்படியே அட்வைஸினாலும் பரவாயில்லை நாந்தேன் கோச்சுன்னு சொல்லப்பிடாது.

6 comments:

VJR said...

தமிழ்மணத்தில் இணைக்க முடிந்தால் நல்லது.

கிரி said...

தமிழிஷ் ஒட்டுப்பட்டையை இணையங்க அப்படியே!

ravikumar said...

very good keep it up

tamil4true said...

ஞானியோட கெட்ட பழக்கம் என்னனா தான் பேசவந்த தலைப்புக்கு வலுசெற்க்கும் யாரும் அறியாத பொய்களை
அள்ளிவிடுவது மாட்டிக்கிட்டா ட்ராக்கை மற்றுவது இதுதான் இவறோட பொழ்ப்பே.
கீழ்கண்ட புத்தகத்தை படித்து எம்ஜீயாரின் வயதை தெரிந்திகொள்.

1.தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு
ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன்
வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986)
2.காலத்தை வென்றவர்
ஆசிரியர் – மணியன்
வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985)
3.புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்
வெளியீடு – மணிமேகலை பிரசுரம் , சென்னை (1983)
இல்லை இது எல்லாம் பொய் என்றால் வேறு எந்த ஆதாரத்தை வைத்து எம்ஜியாருக்கு 62 வயது என்கிறாய். 3கோடிருபாய் கொடு உன்னைய் ஸ்டார் ஆக்குகிறேன் என்று ஏன் அடுத்தவனை கேட்கிறாய்? நீயே அதை போட்டு உன் மகனை ஸ்டார் ஆக்கு. அதுக்கு அப்புறம் வந்து பேசு. ஞானி உன்னிடம் இருந்து வறுவதெல்லாம் சாணி மட்டுமே, நாற்றம் தாங்கலெடா சாமி.

http://urupudaathathu.blogspot.com/ said...

:-)

http://urupudaathathu.blogspot.com/ said...

//VJR said...

தமிழ்மணத்தில் இணைக்க முடிந்தால் நல்லது.//\

Y? Wat happ?

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.