ஞாயிற்றுக்கிழமை NDTV-HINDU வில் எந்திரன் பற்றி ஒரு நிகழ்ச்சி. ரஜினிக்கு ஸ்டார் வேல்யூவுக்கு ஆதரவாக சின்மயி என்றப்பாடகியும், ஸ்ரீதர் என்ற பத்திரிக்கையாளரும் கருத்து சொல்ல, ரஜினியெல்லாம் ஒன்னுமில்ல மார்க்கெட்டிங் வேல்யூதான் மேட்டர் என்று சாநி புகழ் ஞானியும், சுதாங்கன் என்ற அதிமுக அபிமானி பத்திரிக்கையாளரும் பேசினர்.
ஞானியும், சுதாங்கனும் 1947 லிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை என்பது அவர்களின் மொன்னையான ஆர்க்யூமெண்டிலிருந்தே தெரிந்தது.
சின்மயி, ரியலி சூப்பர்ப். பாடுவதைப் போலவே பின்னிப் பெடலெடுக்கிறார். ரஜினியின் ரசிகை என்பதைக் கூறும்போது பெருமிதம்கொள்கிறார். ஸ்ரீதர், அதற்குள் மூன்றுமுறை எந்திரனை வெவ்வேறு தியேட்டரில் வெவ்வேறு தட்டு மக்களுடன் சேர்ந்து ரசித்தாராம்.
ஞானி, முத்து படம் ஓடியதற்கு முக்கியக்காரணம் மீனா என்றும், படையப்பா ஓடியதற்கு ரம்யாகிருஷ்ணன் தான் என்றும் கூறி சிரிக்கவைத்தார். அவர்கள் மட்டுமில்லையென்றால் அவ்விருப்படங்களும் ஓடியிருக்காது என்று அருமையாக விளக்கம் கூறினார். மேலும் முத்து படம் ஜப்பானில் ஓடவும் மீனாவேக் காரணமென்று அடிவயிற்றை பதம்பார்த்தார்.
அதற்கு ஒரு ரஜினி ரசிகர், அடுத்து அதே மீனா நடித்த, அதே ரவிக்குமார் டைரெக்ட் செய்த, மேலும் கமல் நடித்த அவ்வை சண்முகி ஜப்பானில் ஏன் ஓடவில்லை என்று தேவையில்லாமல் கேட்டு ஞானியை சாணி போட வைத்தார்.
போகிற போக்கில், ரஜினி 61 வயதில் சூப்பர் ஹீரோ என்று சொல்லுகிறீர்கள், எம்.ஜி.ஆர் தனது 62 வயதில் உலகம் சுற்றும் வாலிபன் என்ற மெகா ஹிட்டைக் கொடுத்தார் என்று ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டார். பாவம் கூகுள் அண்ணன் அங்கு வரமுடியாதக் காரணத்தால் ஞானி சொன்னால் சரியாத்தான் இருக்குமென்று அனைவரும் கேட்டுக்கொண்டனர். டிவி பார்த்த எனக்கு மட்டும் சுர்ர் என்று கூகுளைக் கிளிக்கியதில், எம்.ஜி.ஆரின் 56 வயதில் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானதைப் போட்டுக்கொடுத்தது. சாணி அடிக்கத்தான் வழியில்லாமல் போய்விட்டது.
சுதாங்கன் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை வெளியிட்ட சூரர்கள் என்று சொன்னாலும் அடிக்கடி ரஜினியை மாஸ் என்று ஒத்துக்கொண்டார்.
கலாநிதி மாறனின் விளம்பரந்தான் எந்திரனின் இத்தனை பரபரப்புக்க் காரணம், ரஜினியின் ஸ்டார் வேல்யூ இல்லை என்ற போது, மத்த நடிகர்களின் படங்களை வெளியிட்ட சன் டிவி ஏன் இந்தளவுக்கு செய்யவில்லை என்றதும், ரஜினியின் ஸ்டார் வேல்யூ மறுப்பதற்கில்லை ஆனாலும் பாகவதருக்கும் எம்ஜியாருக்கும் இருந்தளவுக்கு கிடையாது என்று சொல்லியும் ஆறுதலில்லாமல்,
என்னிடம் 3 கோடி கொடுத்தால், யாரையும் "சூப்பர் ஸ்டார்"ஆக ஆக்க முடியுமென்று சபதமிட்டு முடியை சிலிப்பிக்கொண்டார். சஞ்சை பிண்டோவுக்குதான் என்ன சொல்வது என்று தெரியாமல் அழுவதுபோல் சிரித்துக்கொண்டார்.
அதற்கு ரஜினி ரசிகர் ஒருவர், கஞ்சாக் கருப்புகிட்ட 3 கோடி இருக்காதா என்றுக் கேக்காமல், இப்பொழுதுகூட ரஜினியின் மாஸுக்காகதான் இந்த ப்ரோகிராமையே NDTV-HINDU நடத்துகிறது என்று போட்டு உடைக்க, நிகழ்ச்சி நடத்திய சஞ்ஜை பிண்டோ கொஞ்சமும் சங்கோஜமில்லாமல் ஒத்துக்கொண்டதுமில்லாமல், TRP ரேட்டிங் கூடவே ரஜினி நிகழ்ச்சி செய்கிறோம் என்றபோது, அவர் நேர்மை பிடித்திருந்தது.
மேலும் ரஜினியேப் பணம் கொடுத்து கட்டவுட்டிற்கு பாலூத்த சொல்வதாக சொன்னதும், ரசிகர் ஒருவர் வாயால் சிரிக்காமல், இதுவரை ரஜினியிடம் ஒரு நயாப்பைசா வாங்காமல் இலவசக் கல்யாண மண்டபம் அதுவும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாகா நடத்துவதை சொல்லி வாயடைத்தார்.
சரி விசயத்துக்கு வருவோம்,
ஞானியும் சுவாரஸ்யத்துக்காக பொய் சொல்லும் ஒரு சராசரி சாநியே, அதனால் அவர் அதை சொன்னார் இதை சொன்னார் என்று ஓடாதீர்கள். நமக்கே திரும்பினாலும் திரும்பும்.
20 comments:
100% correct well said
நான் எம்.ஜி.ஆரின் அன்றைய அசல் வயதைக் குறிப்பிட்டேன். அதிகாரப்பூர்வமான வயதையல்ல.கூகிளில் வருவன எல்லாம் உண்மையுமல்ல. நிறைய உண்மைகளும் நிறைய பொய்களும் கல்ந்தே உள்ளன.விசிறி மனப்பான்மை கண்ணை மறைக்கும்போது உண்மைகள் தெரியாது.
அன்புடன்
ஞாநி
ஞானி சார் எம்.ஜி.ஆரின் அசல் வயது தெரியும் என்கிறார். இருக்கலாம். ஏன் இப்படி இந்த கூகுள் என் கழுத்தை அறுக்கிறது என்று தெரியவில்லை. யாராவதும் தெளிவடையவைத்தால் மிக்க நன்றி.
ஞானி சார், தங்கள் வருகைக்கும் பதிலுக்கும் மிக்க நன்றி.
ஞானின்னா யாருங்கண்ணா???
புதசெவி!!!
super yani sir . age is not important here rajini is a mass,even in low project .pl agree with this sir ,.
அட... இதெல்லாம் ஒரு சப்ப மேட்டரு...!! ஆனா.. நா இங்க ஞானியருக்குத்தான் ஓட்டு....! ரஜினி ஒரு சாதாரண நடிகர்தான்... ! ஆஹா .. ஓஹோ. .. என்று தம்பட்டம் அடிக்குமளவிற்கு ஒன்றும் பெரிய நடிகரல்ல....! என்னை பொறுத்தவரை... நடிப்பு என்பது... விரலை சுத்துவதோ... தலையை வாருவதோ அல்ல.... நடிக்கக்கூடிய அந்த கதாபாத்திரத்தின் இயல்பை வெளிப்படுத்துவதுதான்...( ஓவர் ஆக்ட் இங்க எடுபடாது)...!
மருமக உடைச்சா பொன்குடம்... மாமியார் உடைச்சா மண்குடம்..
உலகம் இவ்வளவுதான்.
// அணிமா said...
ஞானின்னா யாருங்கண்ணா???
புதசெவி!!! //
ஹலோ.. எப்படியிருக்கீங்க... இன்னமும் வலைப்பூவில் இருக்கீங்களா? ஓடிட்டதா சொன்னாங்க..
மீண்டும், மீண்ட அணிமா அவர்களை வருக வருக என அன்புடன் அழைக்கிறேன்..
@@ அணிமா..
பின்னூட்டம் போட்டீங்க சரி... ஓட்டு போட்டீங்களா? ஐ மீ தமிழ்மணத்தில் ஓட்டு போட்டீங்களான்னு கேட்டேன்..
வலைப்பூவில் ரஜினி பற்றி எழுதினால் எத்தனை பேர் எட்டி பார்ப்பார்கள் எனும் கணக்கு என்னிடம் இருக்கிறது ;)
உங்களிடமும் இனி இருக்கும்.
ஞானிகள் உண்மை பேசியதாக சரித்திரமே கிடையாது. ;)
// லவ்டேல் மேடி said...
அட... இதெல்லாம் ஒரு சப்ப மேட்டரு...!! ஆனா.. நா இங்க ஞானியருக்குத்தான் ஓட்டு....! ரஜினி ஒரு சாதாரண நடிகர்தான்... ! ஆஹா .. ஓஹோ. .. என்று தம்பட்டம் அடிக்குமளவிற்கு ஒன்றும் பெரிய நடிகரல்ல....! என்னை பொறுத்தவரை... நடிப்பு என்பது... விரலை சுத்துவதோ... தலையை வாருவதோ அல்ல.... நடிக்கக்கூடிய அந்த கதாபாத்திரத்தின் இயல்பை வெளிப்படுத்துவதுதான்...( ஓவர் ஆக்ட் இங்க எடுபடாது)...! //
ஆக முத்தும், படையப்பாவும் ரஜினிக்காக ஓடவில்லை? உலகம் சுற்றும் வாலிபன் ரிலீசின் போது எம்.ஜி.ஆரின் வயது 56 பொய்?
நம்பிட்டோம்.
நான் ரஜினி ரசிகன் இல்லை, ரஜினி என்ற மனிதரின் மேல் எனக்கு கடுமையான விமர்சனம் உண்டு.
ரஜினி இல்லாவிட்டால் எந்திரன் மூனு நாள் கூட ஓடாது.
எந்திரன் ரஜினி என்ற குதிரையின் மேல் கட்டப்பட்ட பந்தயம், பந்தயந்தில் வெற்றியும் பெற்றார்கள். முழுக்காரணம் ரஜினி மட்டுமே.
ராகவன் சார் என்னக்கி நீங்க கானோ வர்றீங்க? குடும்பத்தோட வாங்க. வீக்கெண்ட் வந்தா நல்லா இருக்கும்.
இப்போதைக்கு இல்லை... வரும்போது நிச்சயம் சொல்லுகின்றேன்..
நீங்க எப்ப அபுஜா வர போறீங்க..
i saw that debate in rajinifans.com..in my opinion that was a useless debate one can have on this earth. I have two questions for Mr. Gani:
1. He argued that we talk about corruption and that does not mean that corruption is good...
my argument: Corruption is something which affects the society as a whole..here you are talking about an individual in a debate ..that itself makes a person a phenomenon. Also, for all the questions put forth your answer came buy using the word "simple". No one would believe that Rajini became famous in Japan because of Meena... infact Rajini was a vehicle for meena to deveop a fan base there (if at all she has one there). Hence we all accept that it is not necessary for every one to accept thalaivar for what he is..at lease do not intend to gain popularity by just saying few unqualified reasons for not liking him.
பாஸ், வயது குறித்து திரு.ஞாநி சொல்வதில் சில உளவியல் உண்மைகள் இருக்கின்றன.
வயது ஏற ஏற, எம் ஜி ஆர், தன் படங்களில் தன் காட்சிகள் எந்தக் கோணத்தில் அமைய வேண்டும் என்பதில் மிகக் கறாராக இருந்தார் என்று சொல்வார்கள். பேசுவது கிளியா என்ற பாடலில் எம் ஜி ஆரின் பக்கவாட்டு முகம் நீண்ட நேரம் இடம்பெறும். அப்பொழுது நெருக்கமானவர்கள் சொன்ன விமர்சனத்தை ஏற்று, அதன்பிறகு பக்கவாட்டில் தன் முகம் தெரிவதை தவிர்த்தாராம்.
உலகம் சுற்றும் வாலிபன் 56ஆகவே இருக்கட்டும். ஆனால் ஒரு இடத்தில் கூட வயதான தோற்றம் உணரமுடியாது. சயிண்ட்டிஸ்ட் எம் ஜி ஆர் வரும் காட்சிகள் பெரும்பாலும் லாங் ஷாட்கள். டாப் ஆங்கிள் இருப்பது வெகு அரிது. ஜூம் ஷாட் செய்யவே விடமாட்டார்.
ஆனால் எந்திரனில் ஐஸ்வர்யாவிடம் ரஜினி முத்தம் கேட்டு சிணுங்கும் காட்சியில் கேமரா ரஜினியின் முதிர்ந்த கன்னத்தை அவ்வளவு க்ளோஷப்பில் காட்டியது கொஞ்சம் பின்னடைவே.
ஆனாலும், ஞாநி புகழ்ந்த ஹீரோயிஸம், மதுரை மீட்ட சுந்தர பாண்டியனில் அடிபட்டுப் போனது.
**
என் ஆதங்கம், அமிதாப்பை விட வசீகரமானவர் ரஜினி. (அமிதாப் வழுக்கைத் தலையர் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? ஆனாலும் அவர் இமேஜ் காக்கிறார்.) ரஜினியின் இயல்பிலேயே வசீகரம் இருக்கிறது.
ரஜினி மட்டும் ஒரு முடிவெடுத்து, தன் வயதுக்கேற்ற வில்லன், குணச்சித்திர கேரக்டர்களில் நடிக்கத் துவங்கினால் துவம்சம் செய்துவிடுவார்(நெற்றிக்கண் அப்பா வேடம் ஒரு உதாரணம்)
ஆனால் இங்குள்ள தயாரிப்பாளர்கள் விடமாட்டார்கள். ஓடும் குதிரையின் முதுகில் ஒட்டிக்கொள்வதில் சுகம் கண்டவர்கள்.
அன்பு நர்சிம், எனக்கு எம்.ஜி.ஆரையும் மிகவும் பிடிக்கும். ஆனால் அன்று ஞானி எழுப்பிய சில கேள்விகள் எனக்கு விதண்டாவாதமாகவேப் பட்டது.
சுருக்கமாக, படையப்பா,முத்து வெற்றிக்கு ரஜினி காரணமில்லை, ரஜினி 61 வயதில் கண்ட வெற்றியை எம்.ஜி.ஆர் 62 வயதிலும் பெற்றார் அதாவது 6 வயதை கூட்டி சொல்லியாவதும் ரஜினியை கீழிழுக்கும் தோற்றம், ரஜினியே பாலுக்கு பணம் தருகிறார் என்ற அனுமானம் இப்படி எல்லாமே விதண்டாவாதமாகவே தருகிறார். ரஜினியைப் புகழ வேண்டாம், 3 கோடி கொடுத்தால் யாரையும் சூப்பர் ஸ்டார் ஆக்குவேன் என்றாரே, இதில் நமக்கு எதை உணர்த்த ஆசைப்படுகிறார்?
அதனால்தான் இப்படி எழுத நேர்ந்தது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நர்சிம்ஜி.
வெளுத்துட்டீங்க போங்க! :-)
நெத்தி அடி. ஞாநிக்கு தெரிந்த்து பிரதமருக்கு தெரியாமல் போய் விட்டது. ஜப்பான் பார்லிமென்டில் ஜப்பானியர்களுக்கு மீனா பிடிக்கும் என சொல்லாமல் ரஜினி பிடிக்கும் என சொல்லி விட்டார் இந்திய பிரதமர். நல்ல வேளை காந்திமதிக்காக ஓடியதுனு சொல்லாமல் விட்ட வரிக்கும் நன்றி.
"gnani said...
நான் எம்.ஜி.ஆரின் அன்றைய அசல் வயதைக் குறிப்பிட்டேன். அதிகாரப்பூர்வமான வயதையல்ல.கூகிளில் வருவன எல்லாம் உண்மையுமல்ல. நிறைய உண்மைகளும் நிறைய பொய்களும் கல்ந்தே உள்ளன.விசிறி மனப்பான்மை கண்ணை மறைக்கும்போது உண்மைகள் தெரியாது."
ஞானியோட கெட்ட பழக்கம் என்னனா தான் பேசவந்த தலைப்புக்கு வலுசெற்க்கும் யாரும் அறியாத பொய்களை
அள்ளிவிடுவது மாட்டிக்கிட்டா ட்ராக்கை மற்றுவது இதுதான் இவறோட பொழ்ப்பே.
கீழ்கண்ட புத்தகத்தை படித்து எம்ஜீயாரின் வயதை தெரிந்திகொள்.
1. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்
வெளியீடு – மணிமேகலை பிரசுரம் , சென்னை (1983)
2.காலத்தை வென்றவர்
ஆசிரியர் – மணியன்
வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985)
3.நினைவுகளின் ஊர்வலம்
ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன்
வெளியீடு – திருமகள் நிலையம் , சென்னை (1986)
இல்லை இது எல்லாம் பொய் என்றால் வேறு எந்த ஆதாரத்தை வைத்து எம்ஜியாருக்கு 62 வயது என்கிறாய். 3கோடிருபாய் கொடு உன்னைய் ஸ்டார் ஆக்குகிறேன் என்று ஏன் அடுத்தவனை கேட்கிறாய்? நீயே அதை போட்டு உன் மகனை ஸ்டார் ஆக்கு. அதுக்கு அப்புறம் வந்து பேசு. ஞானி உன்னிடம் இருந்து வருவதெல்லாம் சாணி மட்டுமே, நாற்றம் தாங்கலெடா சாமி.
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.