A எனது நாட்குறிப்பு: தமிழ் ப்ளாக்கன் தொடர் - விமர்சனம்

Friday, October 15, 2010

தமிழ் ப்ளாக்கன் தொடர் - விமர்சனம்

தமிழ் ப்ளாக்கன் என்னும் வலைப்படம் வலையை விரித்து நூத்து சொச்சம் பதிவர்களையும், ஆயிரத்து சொச்சம் படிப்பவர்களையும் தினமும் ஒரு ஃபைட் தினமும் ஒரு அட்வைஸ் எனப் பட்டையைக் கிளப்பிக்கொண்டு இருக்கிறது.

இதில் ஒரு சில பதிவர்கள் செய்யும் ஓவர் ஆக்டிங்கால், நன்றாக செய்யும் பதிவர்களின் நடிப்பும் கேலிக்கையாய் போய்விட்டது வருத்தமே தருகிறது. என்ன செய்ய. சட்டியில் இருந்தாதானே அகப்பையில் வரும்.

கடந்த தொடரில் பல திடீர் கதாநாயகர்ள் நாய்போல் கத்தி நடித்தது மிக அருமை. படிக்காதவர்கள் பாவப்பட்டவர்கள். இதில் ஒருப்பிரச்சனை என்னவென்றால் படித்துவிட்டு கை தட்றதா, தலையி குட்றதா இல்லை எஸ்கேப்பாகிறதான்னு முழிக்கும் முழிக்கு வாசகர்களுக்கு ஆஸ்கார் கிடைத்தாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை.

இதில் முக்கியமான ஒருக் காட்சி, பல வாசகர்கள், பதிவர் கம் வாசகர்கள் பின்னூட்டப்பெட்டியில் நுழைந்து மணிக்கணக்கில் டைப்படித்து, அழித்து மாற்றம் செய்து,சொந்த ஐடியில் நுழைந்து அனானியாகி, பின்னர் அடப்போங்கய்யா என்று எந்தப் பின்னூட்டமும் இடாமல் கணிணியை விட்டும் வெளியேறும் காட்சி சிரிப்பை வரவழைத்தாலும் நடிப்புக்கு அது ஒரு இலக்கணம்.

பலக்காட்சிகளில் வாசகர்கள் நடிப்பில் பதிவர்களை லீட் செய்வதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

பதிவர்களின் நடிப்புக்கும் ஆஸ்கார் தூரமில்லை. அப்படியொரு அன்னோன்யம். உதாரணத்திற்கு விமசர்னம் பதிவர்கள், விமர்சனம் எழுதுவதைக் காணக் கண்கோடி வேண்டும். அவர்கள் அப்படியே ஒரு 100 படம் இயக்கி களைப்படைந்த மனநிலையை அடைவது நடிப்பின் உச்சக்கட்டம். இசையை பற்றி எழுதும் போழுது, ஆகா எப்படி சொல்வது, குரல் கழுதை ஒத்தாலும், கட்டைப் பிரித்து விமர்சனம் செய்யும் போது நம் கண்ணில் ஆனந்தக் கண்ணீர். இதில் சிலபதிவர்கள் விமர்சம் எழுதிவிட்டு மூச்சு வாங்க முன்னேப் பின்னே நடந்து, ஆவேசமாக " டேய் ஒனக்கெதுக்கு சினிமா, டைரக்சன், ப்ளீஸ் எங்களை வாழவிடு, இனிமேல் டைரக்சன் செய்யாதே" என்று அரட்டும் இடத்தை தயவு செய்து மிஸ் செய்துவிடாதீர்கள். அப்படியொரு நடிப்பு, உண்மையாகவே பலவருடமாக சினிமாவில் உழைத்தக் களைப்பில் அனல் தெரிக்கிறது. முக்கியமாக அடுத்த நாளே குடும்பத்தோடு அதேப்படத்தை ரசிச்சு பார்த்த பார்வை பிரமாதம்.

இன்னும் சிலர், ஆனானாப்பட்ட ஆஸ்காரையே" டெக்னிக்கல் குப்பை" என்றுவிட்டு திரும்ப திரும்ப அதேப்பாடலை ரசித்துக் கேக்கும் காட்சி அன்பிளீவப்ள் சீன்.

ஆங் மறந்துட்டனே. ஒரு பதிவர் குடும்பத்துடன் படத்தை ரசித்துவிட்டு, சந்தோசத்திலிருந்து முகத்தை கோபமாக மாற்றி சீரியக் காட்சியில் அன்னியன் விக்ரமென்றால் மிகையில்லை. அதிலும் நல்லவேலை "நா அந்த டைரக்டர்கிட்ட அசிஸ்டெண்டா சேர்லாம்ன்னு இருந்தேன், நல்லவேலை தப்பிச்சேன்" என்று மனைவியிடம் சொல்ல, மனைவி "யாரு டைரக்டரா"ன்னு கேக்குமிடம் வயிரைப் பதம் பாக்கிறது.

அடுத்து,சண்டைப் பதிவர்கள். சும்மா சொல்லக்கூடாது. மிக நல்ல ஓப்பனிங். நல்ல வசூல். அதிக இடங்களில் திரையிட்டு வாசகர்களை கலகலப்பாகுகிறார்கள். பல புதிய வாசகர்களுக்கு வாலெது தலயெது எனப் புரியாமல் "ஞே"ன்னு முழிப்பதில் பின்னி பெடலெடுக்கிறார்கள். அப்படியும் விடாப்பிடியாக தங்களது கருத்துயென கக்காப் போவதில் கைத்தட்டல் சத்தத்தில் காது பஞ்சராகிறது.

நன்றாக சென்று கொண்டிருக்கும் சண்டைப்பதிவு திடீரென பல ட்விஸ்ட்டுகளை கடக்கும்போது யாரு ஹீரோ யாரு ஹீரோயின் என்பதில் வாசகர்கள் குழம்பாமல் இருந்தால் அவர்தான் ஹீரோ. இதில் ஒரு நொடி கண்ணசந்தால் வாசகர் ஜீரோவாவதை எந்த பதிவராலும் தடுக்க முடியாது.

அடிக்கடி மன்னிப்பு, சொம்பு போன்ற வசனங்கள் அதிகமாக வருவது கொஞ்சம் அயற்சியத் தந்தாலும்,நல்ல நடிப்பில் தெரிவதில்லை.

இடையிடையே வரும் காமெடிக்காட்சிகளுக்கும் பஞ்சம் இல்லை. பெரிய பெரிய தலைவர்களை, லெஜெண்டுகளையெல்லாம் கிழிப்பதாக நினைத்து கிழிந்துபோன சில பதிவர்கள், சக பதிவர்கள் காட்டும் கிச்சலுக்கு, கூனிக்குறுகி இனிமேல் நான் பதிவுலகில் இல்லையென கண்ணீருடன் கதறும்காட்சியில் கண்ணீர்வர சிரிப்பதற்கு உத்திரவாதம். ஒரு சில பதிவர்கள் பிடிக்காத ஒரு பதிவரை கலாய்க்க உள்ளே போனால், மிக நல்ல பதிவு. "நாராயணா அதுக்கா நாம இருக்கோம்,நல்லதாவது கெட்டதாவது, பிரிச்சு மேயனும், மேஞ்சாதான் தமிழ் பிளாக்கி(கன்)"யென்றுவிட்டு ஒரு நல்லப்பதிவை கைம்மாவாக்குமிடத்தில் கைத்தட்டல் அதிர்கிறது. அங்கே வாசகர்காட்டும் பலமுக தோரணை தாசாவதாரம் ஒரு படத்தில் 10 ஆக்டிங், இங்கு ஒரேக்காட்சியில் 100 ஆக்டிங்.அதில் ஒரு கழுதையயும் நடிக்க வைத்திருப்பது நல்ல அனுகுமுறை.

அடுத்து .... அட்வைஸ் பதிவர்களின் பரிணாமமும், தோழர்களின் தோன்றலும்...

இனிமேதான் கதையே இருக்கு வசீகரா.....

4 comments:

எஸ்.கே said...

தொடரட்டும்...

எண்ணங்கள் 13189034291840215795 said...

பெரிய பெரிய தலைவர்களை, லெஜெண்டுகளையெல்லாம் கிழிப்பதாக நினைத்து கிழிந்துபோன சில பதிவர்கள்,

------------

சரியே

ராம்ஜி_யாஹூ said...

oho

http://urupudaathathu.blogspot.com/ said...

வெளியே இருந்து எட்டி மட்டும் பார்த்துக்கிறேன்!!

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.