A எனது நாட்குறிப்பு: என்கவுண்டரும் என் கொஸ்டினும்..

Thursday, November 11, 2010

என்கவுண்டரும் என் கொஸ்டினும்..

ஒரு பத்து வருசத்தக்கு முன்னால, பாண்டியம்மான்னு ஒரு பொம்பளயக் காணாமுன்னு அந்தம்மா வீட்டுக்காரரு போலீஸ் ஸ்டேசன்ல கம்ப்லெய்ண்டு பண்றாரு. நம்ம எவர் ப்ரக்னண்ட் நெவர் டெலிவரி போலிஸு "எலேய் நல்லாத் தேடி பாருலே, எவிங்கூடயாச்சும் ஓடிகீடி போயிறக்கப்போறா"ன்னு அட்வஸ்வேறக் கொடுக்குது.

போனவாரம், ஸ்கூலுக்கு அனுப்புன பிள்ளைங்களக் காணோமுன்னு பதறிப்போயி, போலீஸ்கிட்ட கம்ப்ளெயிண்ட கொடுத்துட்டு, பாவம் அவங்களும் முடிஞ்சளவுக்குத் தேட்றாங்க. நம்ம தீயணைப்பு வண்டிமாதி, போலிஸும் மெதுவா தொப்பைய தூக்கிகிட்டு கெளம்புது.

பொண்டாட்டிய தேடி அலுத்துப்போன பாண்டியம்மா புருசன், கோர்ட்டுக்குப் போயி " சாமி.. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும், எம் பொண்டாட்டி உசுரோட வேணும்"ன்னு சொல்ல, நீதிபதி அய்யாவும் கெடு கொடுத்து உசுரோடக் கொண்டாங்கய்யான்னு சொல்லிட்டாரு.

பிள்ளைங்களக் கடத்திட்டாங்கங்ற செய்தி, தீயாப் பரவி எதிர்க்கச்சிக்காரங்கெல்லாம் எடக்கு மடக்கா மடக்கவும் தமிழினத் தலைவருக்கும் கோபம் பொத்துகிட்டுவர, "என்ன செய்வீங்களோத் தெரியாது, இன்னக்கிக்குள்ள பிடிச்சாகனுமுன்னு சொல்லிட்டாரு.

ஊரோரமாப் கரிக்கட்டையாய் ஒருப் பொம்பளப் பொணம். பாண்டியம்மாதான்னு போலீஸ் பாண்டியம்மா புருஷங்கிட்ட சொல்லுது. கரியாக் கெடக்கு. ராஜ்கிரன் கணக்கா சாம்பல முகத்துல பூசிகிட்டு அழுதுகுமிக்கிறாரு பாண்டியம்மா புருஷன். யாருமேலெல்லாம் சந்தேகமுன்னு ஒரு லிஸ்ட்ட பாண்டியம்மா புருஷன் சொல்றாரு. தேடிக் கிளம்புது ஸ்காட்லாண்டு போலிஸ்.

அங்கயிங்க தேடி அலுத்துப் போன நேரத்துல, கொழந்தங்க ரெண்டும் ஓட்ற தண்ணியில பொணமா ஒதுங்குது. கோயமுத்தூரே அழுகுது. கோபம் கொப்பளிக்குது. போலிஸு, கடைசியாப்பாத்த பாட்டிகிட்ட க்ளூக் கேக்குது. தொப்பையத் தூக்கிகிட்டு கெளம்புது போலிஸு.

பாண்டியம்மாளக் கொன்னுட்டு அதே ஊர்ல தெனாவெட்டாத் திரிஞ்ச "அந்த" பத்துப் பேர அள்ளிகிட்டு கோர்ட்டுக்குப் போகுது. விசாரனையப்போ, "பாண்டியம்மாளக் கற்பழிச்சதையும், கொலை செஞ்சதையும், எரிச்சதையும்" அப்படியே தத்ரூபமா ஜட்ஜ் முன்னாடி நடிச்சுக்காட்றாங்க. ஜட்ஜ் கண்ணுல நெருப்பு.

கொழந்தைகளைக் கொன்னுட்டு தெகிரியமா கோயமுத்தூருக்கே திரும்பி வந்துகிட்டு இருந்த மோகனக் கிருஷ்ணனையும், கூட்டாளியயும் அழகா கோத்துப் பிடிக்கிறாங்க போலிஸு. கெடுத்ததையும், கொலை பண்ணுனதையும் வாக்குமூலமா தர்றான் கொலகாரப்பாவி மோகனக் கிருஷ்ணன். கோவை மக்கள் மட்டுமில்ல தமிழக மக்க எல்லாத்துக்குமே கோவமுன்னா அப்படியொருக் கோவம்.விட்டா சாவடிக்கிற வெறி.

ஜட்ஜ் ஆயுள் தண்டனைக் கொடுத்து பேனா நிப்ப ஒடச்சிக் கெடாசுறாரு. பாண்டியம்மா புருஷன் ஜட்ஜப் பாத்து " யெய்யா நீங்கதேன் எங்க கொல தெய்வம், நீதி பொழச்சிருச்சுய்யா, இன்னக்கிதான் தீபாவளி"ன்னு ஓன்னு கண்ணீர் விட்றாரு.

எதிர்கச்சி ஏடாசி, மக்களோடக் கொந்தளிப்பு "சுட்டுத்தள்ளுய்யா"ன்னு ஆர்டரு. விசாரிக்கப்போன விடிகால அஞ்சு மணிக்கு பொட்டு பொட்டுன்னு மூனு தோட்டா மோகன கிருஷ்ணன் உடம்புல. பொணமானப் போட்டோ. எல்லா மக்களும் ஆனந்தக் கண்ணீரு. நரகாசூரன் செத்தான்யான்னு கோசம். கொழந்தைகளப் பெத்தவங்க " எங்களுக்கு இன்னிக்கிதான் தீபாவளி"ன்னு கண்ணீர்விட. ஒரு நல்லத் தீர்ப்பு!!!?

பாண்டியம்மாளக் கடத்தி கொலை செஞ்சு ஒரு பத்து வருசம் கழிச்சு, பாண்டியம்மா உயிரோட வந்து, "யெய்யா ஜஜ்ஜு, என்ன யாரும் கடத்தல, நாந்தேன் இஷ்டப்பட்டு இதோ.. இந்தாளுகூடப்போயி, மக்கமாறப் பெத்துட்டு உசுரோட இருக்கேன்"ன்னு சொல்லுச்சு. ஸ்காட்லாண்டு தமிழ் போலீஸுக்கு ஒரு மசுரும் வெளங்கல.

அப்போ அந்த எரிஞ்சுப்போண அந்தப் பொம்பளப் பொணம் யாரு?
அவளக் கொண்டத யாரு?
இத்தன வருசமா கொலையே செய்யாம ஆயுள்கைதியா ஜெயிலுல இருந்தாங்களே அவங்களக்கு என்னத்த கொடுத்தா சரியான நஷ்ட ஈடாகும்?
அப்ப நம்ம போலீஸ் நெஜமாலுமே ஸ்காட்லாண்டு போலிஸு இல்லையா ?
வெரும் சிரிப்பு போலிஸா?

அப்படின்னா, இந்த மோகனக்கிருஷ்ணனையும் நாளக்கி யாராவதும் நிரபாதின்னு சொல்லிடுவாங்களா?
ஒரு வேள நெஜமான குத்தவாளிங்க மிடுக்கா வெளியில அலையுறாங்களா?
அய்யய்யோ ஒன்னுமே புரியலயே...

ஏங்க ஒங்களுக்கு எதாச்சும் வெளங்குது...?

2 comments:

எண்ணங்கள் 13189034291840215795 said...

:))

நல்லா வெளக்கிட்டீக போங்க..

RAVI said...

காவல் நிலையங்களிலும்,கோர்ட்டுகளிலும் பல உண்மைகள் சாகடிக்கப்படுவதுதான் நமது சட்டங்களின் நிலை.

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.