A எனது நாட்குறிப்பு: குழந்தைகள் கடத்தலும் பெற்றோர்களின் கதறலும்.

Tuesday, November 2, 2010

குழந்தைகள் கடத்தலும் பெற்றோர்களின் கதறலும்.

கடந்த தினங்களில் பொதுவாக எல்லா தினசரிகளிலும் கோவையில் நடந்த குழந்தைக் கடத்தலையும், கொலை செய்ததையும் போட்டு அனைத்துப் பெற்றோர்களின் பி.பி யை எகிறவைத்தது.

படிக்கும்போதே மனது கனத்துவிடுகிறது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பாவிகளுக்கு பணம்தான் தேவையென்றால் திருடியாவதும் சாதித்துக்கொள்ளலாம். அதைவிடுத்து ஒன்னுமே அறியாத அந்த பச்சை மண்ணுகளை பலவிதங்களில் துன்புறுத்தி தண்ணீரில் தள்ளிவிட்டுள்ளனர். மேலும் அந்தப் பெண்னை அவர்கள் பலாத்காரம்படுத்தியிருக்கலாம் என்று கேள்விப்படும்போது அந்த பாதகனின் "அதை" வெட்டி எறிந்தால்தான் என்ன என்று இருக்கிறது.

பாவம் அந்தப் பெற்றோர்களுக்கு இனி ஒவ்வொரு நாளும் நரகமே. இருந்த இரண்டு குழந்தைகளையும் அள்ளிக்கொடுத்துவிட்டார்கள். இனி எப்படிதான் அந்த நரகத்திலிருந்து அந்த பெற்றோர்கள் வெளியே வரப்போகிறார்களோ? யாரு என்ன ஆறுதல் சொன்னாலும் அதெல்லாம் ஈடாகிவிடுமா?

இது முதல் சம்பவமும் இல்லை. விட்டுவிட்டு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பெற்றோர்களும் அரக்கப்பறக்க ஓடும் வாழ்க்கையில் நிதானம் தவறுகின்றனர். இனி அரசாங்க எந்திரத்தை நம்பி எந்த ப்ரோயோஜனமும் இல்லை. நாமே நம்மைக் காத்துகொண்டால்தான் உண்டு. என்ன செய்யலாம்?

எக்காரணம்கொண்டும் குழ்ந்தைகளை ஓட்டுனரை நம்பியோ ஆயாக்களை நம்பியோ அனுப்பாதீர்கள். குழ்ந்தைகளுக்காகத்தான் நாம் இத்தனை இன்னல்களிலும் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். எனவே அவர்களுக்காக நாம் மெனக்கெட்டே ஆகவேண்டும். மேலும் ஓட்டுனர்களும்,ஆயாக்களும் சாதாரண மனிதர்களே. அவர்கள் அடுத்தவரிடம் வேலை செய்யும் நிலையை நோக்கினாலே அவர்களின் பொருளாதாரத்தின் நிலமை புரியும். அவர்களுக்கும் கடன்சுமை, பிக்கல் பிடுங்கல் நெஞ்சை அழுத்தும். அது என்றாவது ஒரு நாள் பொல்லாத சிந்தனையில் தள்ளி, நமக்கும் நரகமாக மாறலாம். எனவே ஓட்டுனரையோ, ஆயாக்களையோ ஆழ்ந்து கவனித்துகொள்வது நலம்.

குழந்தைகளை தனிக்காரிலோ அல்லது தனி ஆட்டோவிலோ பள்ளிக்கனுப்புவதைவிட பள்ளிப்பேருந்தில் எல்லாக் குழந்தைகளுடன் அனுப்புவது சிறந்தது.அதுவும் நம் கண்முன்னே ஏற்றிவிடுதல் நலம்.

குழந்தைகளுக்கு எதாவது தேவைப்படும்பொழுது தனியாக ஓட்டுனருடனோ அல்லது ஆயாக்களுடனோ அனுப்பி பழக்கக்கூடாது. ஏனென்றால் அவர்கள் கூலிக்கு வேலை செய்பவர்கள். என்றாவது ஒரு நாள் அவர்கள் வேறு வேலைக்கோ அல்லது வேறு வீட்டுக்கோ செல்லலாம். அப்பொழுது நீங்கள் செய்த எதோ ஒரு விசயம் அவர்களுக்கு உங்களை எதிரியாக்கலாம். அது குழந்தைகளுக்கு வினையாக முடியலாம்.

என்னதான் ஆயாவோ ஓட்டுனரோ குழந்தைகளை நன்றாகக் கவனித்தாலும் என்றைக்கும் அது பெற்றோர்களுக்கு ஈடாகாது. நமது வேலையை எளிதாக்க பொதுவாக எல்லாப் பெற்றோர்களும் ஓட்டுனரை நம்பி குழந்தைகளை ஒப்படைப்பதை பரவலாக காண்கிறோம். வேண்டாமே, அந்த தேவையில்லாதப் பழக்கத்தை ஒழித்துவிட்டு நாமே கவனித்துகொள்வோம்.

மேலும் நண்பர்கள், நண்பிகள் மற்றும் அலுவலக நட்புகள் என்று நமது குழந்தைகளை எல்லோர்க்கும் அங்கிள் ஆண்டி என்று பழக்கிவிடுவோம். ஆனால் எல்லோரும் எப்போதும் ஒரே மாதிரி இல்லைதானே. இந்த கலிகாலத்தில் சின்ன சின்ன விசயங்களுக்குக்கூட மிகப்பெரியதாக சிந்தித்து நம்மை நரகத்தில் தள்ளக்கூடிய வாய்ப்புகள் அதிகம்தானே.


எனவே பெற்றோர்களே வரும் முன் காப்போம். ஈடில்லா இழப்பை தவிர்ப்போம்.

2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//பாவம் அந்தப் பெற்றோர்களுக்கு இனி ஒவ்வொரு நாளும் நரகமே. இருந்த இரண்டு குழந்தைகளையும் அள்ளிக்கொடுத்துவிட்டார்கள். இனி எப்படிதான் அந்த நரகத்திலிருந்து அந்த பெற்றோர்கள் வெளியே வரப்போகிறார்களோ? யாரு என்ன ஆறுதல் சொன்னாலும் அதெல்லாம் ஈடாகிவிடுமா?//

கேள்விப்பட்டதில் இருந்து இதுவே என் கவலையும்; பாவிகள் இப்பெற்றோரை சாகும்வரை கலங்க வைத்துவிட்டார்களே!

Chitra said...

யாரை நம்புவது.... யாரை நம்பகூடாது என்பதை அறிய முடியவில்லையே! என்ன கொடுமை சார், இது!

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.