A எனது நாட்குறிப்பு: அம்மாவின் அரசியல் அதகளம்.

Thursday, March 31, 2011

அம்மாவின் அரசியல் அதகளம்.

இவர் திரையில் ஒரு முன்னாள் நடிகை, அரசியலில் இன்னாள் நடிகை. ஏதோ கூடாப் பழக்கத்தின் காரணமாக தலைவரே இவரை அரசியலில் இழுத்துவிட்டார். வேறெதுவும் உலகை காக்கும் காரணிகள் இல்லை.

தலைவருக்கு முதுமையின் காரணமாகவும், தீராத விளையாட்டின் காரணமாகவும் உறுப்புகள் பழுதாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல, கிட்டத்தட்ட எல்லாத் தொண்டர்களும் அழுது புரள இந்த அம்மனி மட்டும், மத்தியத் தலைவருக்கு மிக உருக்கமாக “ காந்தியின் பூந்தியே, எங்க ஆளுக்கு பார்ட்ஸ் எதுமே வேலை செய்யல,அத்துமில்லாமல் ஸ்பேர் பார்ட்ஸ்சும் ஸ்டாக் இல்ல, இன்னிமே இந்தாளுனால ஒன்னியும் ஆவாது, அத்தால என்னயே தலிவராக்கனும்”ன்னு ஒரு கடிதம் எழுதுகிறார். இதை மறுக்கும் பித்தத்தின் பித்தங்களுக்கு விந்தியாவின் முத்தங்கள் பரிசு.

ஒரு வழியாக ஏதோ தேறி தலைவர் வருகிறார். இருந்தார். இறந்தார். ஆனால் ஒன்று பாருங்கள், இந்த தமிழர்கள் எப்பொழுதும் வெள்ளையாக இருந்தால்தான் நம்புவார்கள். “இவ வெள்ளையா இருக்கா, அதனால பொய் சொல்ல மாட்டா” என்று பித்துவம் பேசுவர். அதேதான் இங்கும் நடந்தது. இரண்டாகப் பிரிந்தது. இந்த புத்திகெட்ட கூமுட்டைகள் உண்மையை ஒதுக்கிவிட்டு பொய்யான மினுக்கியை ’தூக்கி’வைத்து ஆடினார்கள்,ஆட்டினார்கள்.

ஆனால் நடந்தது என்ன? பாவம் நேற்று பெய்த மழையில் பிறந்த காளான்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆசைப்பட்டால் விவரமானவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

வயதாகிவிட்டால் ஆட்டம் காட்ட தெம்மு இருக்காது என்று நினைத்தோ என்னவோ,தலைவருக்கு நெருக்கமாக இருந்த அத்தனை சீனியர்களுக்கும் கம்பல்சரி ரிட்டயர்மெண்ட் கொடுக்கப்பட்டு சிக்ஸ் பேக் நாட்டாமைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

அதுவும் சில காலந்தான், ரொம்ப பெரிதாக இருந்தால் உத்திரத்துக்கு உதவாது என்பது போல தூக்கியும் எரியப்பட்டது.

பாவம் அந்த கூமுட்டை சீனியர்கள், கூன் விழுந்த காலத்தில் ஃபுட்போர்டு அடித்தும் அசைந்து கொடுக்கவில்லை. எப்பொழுதும் ரெண்டாம் தாரத்துக்கு மூத்த தாரத்து பிள்ளைகள் ஆகாமல்தானே போகும். ஆமாம் போனது.

இப்படியாக தலைவரின் அத்தனை தொண்டர்களையும் புதைத்துவிட்டு, ஒரு வீட்டுத்தொண்டர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது, அலங்கார அம்புஜம்.

யாருக்கும் யோகம் எப்படி வருமென்று தெரியாது. அப்படித்தான் வந்தது. பூந்தியின் பூலோக வாழ்கையின் முடிவில் அம்புஜத்தின் கிராப் கிர்ரடிக்குமென்று யாருக்குத் தெரியும். சும்மா சொல்லக்கூடாது, எம்மக்கள் பின் வாசலில் வருபவர்களை வரவேற்பதில் கில்லாடிகள். ஒன்னில்ல ரெண்டில்ல, அஞ்சு வருசம். நரக வாசம். ஆனாலும் சிரிச்சு சிரிச்சே அபாயமா ஓடிப்போச்சு.பின்ன என்னதான் செய்யுறது?

ஏழு கழுத வயசான ஒன்ன, பெக்காத புள்ளன்னு சொன்னா, மப்பும் மந்தாரமா இருந்தா சிரிச்சு தொலைக்கலாம். பசியும் பட்டினியுமா இருந்தா என்ன செய்யலாம்? கரிச்சுக் கொட்டினோம் கருமத்த. அதைவிட கல்யாணம் செஞ்சு வெச்சக் கொடுமைய பாக்காத வாலிபர்கள் புன்னியவான்கள். எம் கெட்ட நேரம், பார்த்து தொலைத்துவிட்டது.

விட்டதா சனியன், அதே கழுதை வயசான குழந்தைக்கு கஞ்சாவும் கொடுத்தாச்சு.

அரசியலுல அநாகரிக அரசியலுன்னு ஒன்னு இருக்குன்னு அந்த அஞ்சு வருசத்துலதான் எனக்கு தெரியவந்ததே. கலெக்டர் மூஞ்சியில ஆசிட் வீச்சு, ஏர்ப்போர்ட்ல மகளிரின் கரகாட்டம்,எதிரணி வக்கீலுக்கு வலைகாப்பு..,

நகைக்கடைக்காரர் பலி,இசையமைப்பாளர் வீடு பறிமுதல்,பத்திரிக்கைகாரர்களின் தலக்கரி, இப்படி வரிசைமுடியா வில்லங்கம்.

டப்புக்குள்ள யானை குளிச்சு பார்த்தது உண்டா? நான் கண்டதுண்டு. ஒன்றல்ல, இரண்டு யானை. கும்பகோணம். மகாமகம். பாவம் பல பிணங்கள். பரிகாராம்?

மக்களுக்கு வெருப்பென்றால், இப்படி அப்படி அல்ல. பல பகுதிகளில் உள்ளயே நுழைய முடியவில்லை. விரட்டப்பட்டனர். எனக்குத் தெரிந்து பல மந்திரிகளை மக்களே சிறையிட்டதை பழையப் பத்திரிக்கைகள் கிடைத்தால் படிக்கலாம்.

இன்னொன்று, அப்பொழுதும் இப்பொழுது இருக்கும் அத்தனைப் பிரச்சினைகளும் இருந்தது. காவிரியிலிருந்து,ஈழம் வரை அத்தனையும்.

என்னைப் பொருத்து, இதுதான் நம் இருண்ட காலம்.

இதில் எனக்கு பிடித்த விசயம் என்னவென்றால், பொட்டிக்கடை ஆத்துக்காரரை அந்தரத்தில் விட்டுவிட்டு, பொட்டிக்கடையை கக்கத்தில் வைத்துகொண்டதைத்தான்.

தொடரும்...

5 comments:

வருண் said...

எனக்குத்தான் செயாவைப் பிடிக்காதுனு நெனச்சேன். நீங்க என்னைவிடமோசம் போல இருக்கு

எம் ஜி ஆர் இங்கே (யு எஸ் ல) இருந்தபோது, அவருக்கு சிகிச்சை செய்த டாக்டர் நண்பர் ஒருவரிடம் பேசினேன். அப்போ அம்மணிதான் அருகிலேயே இருந்தாங்களாம். எம் ஜி ஆருக்கு (அந்த நிலையில்) அம்மனி அன்புதான் ரொம்பப்பிடிக்குமாம்!

டயபட்டிஸ் இருக்குனு சுகர் சேர்க்கக்கூடாதுனு டாக்டர் ஹெக்டே சொல்ல, அம்மணி ஹெடேயை மூடிக்கிட்டுப்போனு சொல்லிட்டு, எம் ஜி ஆருக்கு ஐஸ்க்ரீம் ஊட்டிவிட்டுச்சாம்.. (சீக்கிரம் அனுப்ப)

சொல்றாங்கப்பா

VJR said...

வாங்க வருண். பாவம் விசயம் தெரியாத சில பதிவர்கள் ஜெயாவை நம்புவது ஜெயாவுக்கே பயங்கர ஆச்சர்யம்.

saarvaakan said...

எல்லாம் ஞாபகம் வைத்து இருப்பது தமிழ்நாட்டில் நீங்கள் மட்டும்தான் என நினைக்கிறேன்.அப்ப்டியே டார்டாய்ஸ் கொசு வர்த்தி மாதிரி வளையம் சுத்தி ஃப்ளாஷ் பேக் காமிச்சுட்டீங்க.
I like it.

Anonymous said...

பாப்பாத்தியைக் கைப்பொம்மையாய்
ஆட்டிவைக்கும் "சோ" மாரிகள்
பாப்பாத்தி காலில் விழும்
மானங்கெட்டத் தமிழ்ப் பொம்மைகள்
நடிகரின் படுக்கையறை இன்று
நாட்டையே கழிவறை யாக்க
வாக்களிங்கள் என்று பல்லிளிக்கின்றது
அதுவும் பார்ப்பனக் கோட்டையிலே
பட்டை நாமத் திமிருடனே !
போடுங்கள் நாமத்தை
போகட்டும் கொட நாடு !

VJR said...

saarvaakan, இன்னும் எத்தனை எத்தனை, தெரிந்தவன் எத்தனென்றாலும் இந்த மினுக்கியை நம்பமாட்டான்.

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.