A எனது நாட்குறிப்பு: தினமலர் கருத்து கணிப்பு, திமுக கூட்டனி-174, அதிமுக கூட்டனி-60

Tuesday, March 29, 2011

தினமலர் கருத்து கணிப்பு, திமுக கூட்டனி-174, அதிமுக கூட்டனி-60

தலைகீழ் விகிதங்கள்: கிராமப்புறங்களில் தி.மு.க.,; நகர்புறங்களில் அ.தி.மு.க., முன்னணிதமிழகத்தில், காலம் காலமாக அரசியல் கட்சிகளுக்கு இருந்த ஓட்டு வங்கி, தற்போது தலைகீழாக மாறியுள்ளது. தி.மு.க.,வின் ஓட்டு வங்கியாக கிராமப்புறங்களும், அ.தி.மு.க., வின் நம்பிக்கைக் களங்களாக நகர்புறங்களும் மாறிவிட்டன.அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கியது முதல், தமிழகத்தில் கிராமப்புறங்களிலும், குடிசைப் பகுதிகளிலும் அக்கட்சிக்கு ஓட்டுகள் மொத்த மொத்தமாக கிடைத்து வந்தன. எம்.ஜி.ஆர்., இருந்த போதே, நகர்பகுதிகளிலும், படித்த மற்றும் நடுத்தர மக்களிடமும், தி.மு.க.,வுக்கு ஆதரவு இருந்தது. குறிப்பாக, தலைநகரான சென்னை, எப்போதும் தி.மு.க.,வின் கோட்டையாகவே திகழ்ந்தது. மூன்று தேர்தல்களில் தொடர்ந்து வென்ற எம்.ஜி.ஆரால் கூட இதை மாற்ற முடியவில்லை.எம்.ஜி.ஆருக்கு பிறகும், கிராமப்புறங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தொடர்ந்து நீடித்தது. எத்தனையோ பிளவுகள், இழப்புகளை சந்தித்தபோதும், "இரட்டை இலை' சின்னத்துக்கான ஓட்டு வங்கியை மாற்ற முடியவில்லை. அதே நேரத்தில் அரசு ஊழியர்கள், படித்தவர்கள், நடுத்தர மக்கள் போன்றோரின் ஆதரவு தி.மு.க.,வுக்குத் தொடர்ந்தது. 1991ல் ராஜிவ் கொலை என்ற அலை வீசியதால், சென்னையில் கூட தி.மு.க., தோல்வியைத் தழுவியது. ஆனாலும், தன் ஓட்டு வங்கியை தி.மு.க., தக்கவைத்துக் கொண்டது.கடந்த, 2006 சட்டசபை தேர்தலுக்குப் பின், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கி நிலை தலைகீழாக மாறிவிட்டது. அந்த தேர்தலில், தி.மு.க.,வின் கோட்டையாகக் கருதப்பட்ட சென்னையில், மொத்தம் இருந்த 14 தொகுதிகளில், அ.தி.மு.க., ஏழு தொகுதிகளில் வென்றது. கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி போன்றோர் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதேபோல, கோவை, மதுரை போன்ற படித்த மக்கள் அதிகம் வாழும் நகர்பகுதிகளிலும் அ.தி.மு.க.,வே அதிக இடங்களில் வென்றது. இதன் பின் நடந்த இடைத்தேர்தல்களில் மதுரை மத்தி, மேற்கு தவிர மற்ற அனைத்துமே கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதிகளாக இருந்தன. இதனால், வாக்காளர்களை ஆளுங்கட்சி கவர்வதற்கு எளிதாக இருந்தது. ஆளுங்கட்சியும் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தது.தற்போதைய நிலையில், கிராமப்புறங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில், தி.மு.க., அணிக்கு அதிக ஆதரவும், நடுத்தர மக்கள், படித்தவர்கள் மத்தியில் அ.தி.மு.க.,வுக்கு அதிக ஆதரவும் என, நிலைமை மாறியுள்ளது. இதை அறிந்துள்ள ஆளுங்கட்சியும், கிராமப்புற தொகுதிகளை நோக்கி படையெடுத்துள்ளது. தலைநகர் சென்னையில் ஐந்து தொகுதிகளை காங்கிரசுக்கும், பா.ம.க., மற்றும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு தலா ஒரு தொகுதியையும் தி.மு.க., விட்டுக்கொடுத்துள்ளது. முதல்வர், துணை முதல்வர், நிதியமைச்சர் போன்றவர்களே தொகுதி மாறியுள்ளனர். அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தேர்தல் களத்தில் இருந்தே ஒதுங்கிவிட்டார். அதேபோல, கிராமப்புற தொகுதியான ஆண்டிபட்டியில் போட்டியிட்ட ஜெயலலிதா, இம்முறை ஸ்ரீரங்கத்துக்கு மாறியிருப்பதும், படித்தவர்கள் மற்றும் மேல் ஜாதியினர் அதிகமுள்ள தொகுதி என்பதால் தான். இவ்வளவு ஆண்டுகளாக இருந்த ஓட்டு வங்கி, தலைகீழாக மாறியதற்கு, சில காரணங்கள் உள்ளன.தி.மு.க., ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, பொங்கல் பரிசு, இலவச வேட்டி, சேலை, குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள், இலவச காஸ், ஊரக வேலை உறுதித் திட்டம், இலவச "டிவி' போன்ற திட்டங்களின் பயனை ஏழைகளும், கிராமப்புறத்தினரும் அதிகம் அனுபவித்துள்ளனர். அதனால், அவர்களின் ஆதரவு தி.மு.க., பக்கம் இருக்கிறது. இவர்கள் யாரும், ஸ்பெக்ட்ரம் ஊழல், குடும்ப அரசியல், லஞ்ச விவகாரம் போன்றவை பற்றி கவலைப்படவில்லை. அதேநேரத்தில், படித்தவர்கள், நடுத்தர மக்கள், "ஸ்பெக்ட்ரம்' விவகாரம் பற்றி நன்கு அறிந்துள்ளனர். விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்களது பார்வை, எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பக்கம் சென்றுள்ளது. இந்த தலைகீழ் மாற்றம், எந்த கூட்டணிக்கு சாதகமாக அமைகிறது என்பது, மே 13ல் தெரியும்.எவ்வளவு தொகுதிகள்? : சென்னையில் 16, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, ஆலந்தூர், தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், ஸ்ரீரங்கம், பாளையங்கோட்டை, கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், ராஜபாளையம், கும்பகோணம் மற்றும் ஓசூர் உட்பட நகர்புற தொகுதிகள் மொத்தம், 60 இருக்கின்றன. மற்ற தொகுதிகள் அனைத்தும், பெரும்பான்மை கிராமப்புறங்களைக் கொண்டதாக இருக்கின்றன.

அதிமுக மற்றும் ராஜபக்சேவின் தீவிர ஆதரவு பத்திரிக்கையான தினமலரே இப்படி சொல்வதால் இதனை நிச்சயமாக நம்பலாம்.

ஜெயலலிதாவை தோற்கடிக்க வேறு யாரும் தேவையிலை, ஜெயலலிதாவே போதும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.