A எனது நாட்குறிப்பு: வடிவேலு பிரச்சாரம்... வாக்காளர்களிடம் ஏக ரெஸ்பான்ஸ்!!

Tuesday, March 29, 2011

வடிவேலு பிரச்சாரம்... வாக்காளர்களிடம் ஏக ரெஸ்பான்ஸ்!!

விஜயகாந்த் பேச்சு பல சமயம் மிக தடிப்பாகவே இருக்கும். இன்றுகூட ராமதாஸை ரத்தம் குடிக்கும் ஓநாய் என்று விளித்திருக்கிறார். இது ராமதாஸுக்கு பொருத்தமா? அல்லது இல்லையா? என்பது விடயமில்லை. ஆனால் ஒரு மோசமான அரசியலுக்கு இது அடிகோலும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. சரி விசயத்துக்கு வருகிறேன். விஜயகாந்துக்கு ஏற்ற வடிவேலு பற்றிய செய்தி உங்களுக்காக. நன்றி:thatstamil

இதுவரை எத்தனையோ நடிகர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்குப் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத உச்ச அந்தஸ்து, ஒருவருக்கு கிடைத்திருக்கிறது. அவர்தான் வடிவேலு!


திருவாரூரில் கலைஞர் முன்னிலையில் விஜயகாந்தை தாக்கி அவர் பிரச்சாரத்தை ஆரம்பித்தபோது, 'இதென்ன ஏகத்துக்கும் தனிப்பட்ட தாக்குதல் நடத்துகிறாரே' என சற்று முகம் சுளிக்கத்தான் செய்தார்கள். ஆனால் அடுத்தடுத்த ஊர்களில் அவர் பிரச்சாரம் செய்த விதம், மக்களை நகரவிடாமல் கட்டிப்போட்டது. வடிவேலு அடுத்துப் பேசும் இடம் எங்கே என விசாரிக்கும் அளவுக்கு ஆர்வமாகிவிட்டனர் மக்கள்.

சினிமாவில் ஹீரோவாக 'லெக்' பைட் போட்டுக் கொண்டிருந்த விஜயகாந்தை, அரசியலில் 'காமெடியன்' எனும் அளவுக்கு வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் வடிவேலு.

துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில், வடிவேலு பேச்சுக்கு ஏக வரவேற்பு. மருதமலை, கிரி போன்ற படங்களில் அவர் பேசிய சில நகைச்சுவை பஞ்ச்களை விஜயகாந்தைக் குறிவைத்து டைமிங்காக அவர் அடிக்க, மக்கள் சிரித்தனர்.

"எதையாவது திங்கணும்னு ஆசையாயிருந்தா கடைக்கு போய் ஒரு வடைய வாங்கித் திண்ணு, பன்னை வாங்கித் திண்ணு.." என்று மருதமலை படத்தில் அவர் பேசும் காட்சி ரொம்பப் பிரபலம். இன்றைய பிரச்சாரத்தில், ஒரு இடத்தில் விஜயகாந்தின் முதல்வர் பதவி கனவை விமர்சித்த வடிவேலு, "விஜயகாந்துக்கு முதல்வராகனும்னு ஆசை இருந்தா எங்கிட்டாவது ஒரு அஞ்சு கோடி பத்து கோடி கொத்து சினிமா எடுக்கச் சொல்லி அந்த வேசத்தை போட்டுக்கலாம்... அதை விட்டுப்புட்டு முதல்வராகராம்... இது நல்லாவா இருக்கு!" என்ற மருதமலை பாணியிலேயே பேச, கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் கைதட்டிச் சிரித்தனர் மக்கள்.

திமுக, அதிமுக என்ற பேதமில்லாமல், அனைவருமே வடிவேலுவைப் பார்க்க வருகிறார்கள். அவர் பேச்சை ரசித்துக் கேட்கிறார்கள். 'யத்தா... நம்ம ஸ்டாலின் அய்யா மேல ஒரு மாசு மருவு சொல்ல முடியுமா... எவ்வளவு தங்கமான மனுசன். நீங்க போனாலும் வாசலுக்கு வந்து வரவேற்பாரு... அப்படி ஒரு மனுசன் ஜெயிச்சி ஆட்சிக்கு வந்தா நாடும் நல்லாருக்கும், உங்க தொகுதியும் நல்லாருக்கும். குடிகாரங்ககிட்ட நாட்ட கொடுத்துடாதீங்க, சொல்லிட்டேன்", என பெண்களிடம் அவர் பேசும் விதம் நன்றாகவே ஒர்க் அவுட்டாகிறது.

நடிகர்களின் பிரச்சாரத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போதும், வடிவேலுவுக்குதான் முதலிடம் தருகிறது கலைஞர் தொலைக்காட்சி. வடிவேலு பேச்சை முழுவதுமாக காட்டிவிட்டுத்தான், மற்றவர்களின் பேச்சைக் காட்டுகிறார்கள்.

சினிமாவில் நம்பர் ஒன் காமெடியன்... அரசியலில் நம்பர் ஒன் பிரச்சாரகர் என்ற பெயரை குறுகிய காலத்தில் பெற்றுவிட்டார் வடிவேலு!

ஹா ஹா, சரியானப் போட்டி.

7 comments:

MANO நாஞ்சில் மனோ said...

//சினிமாவில் நம்பர் ஒன் காமெடியன்... அரசியலில் நம்பர் ஒன் பிரச்சாரகர் என்ற பெயரை குறுகிய காலத்தில் பெற்றுவிட்டார் வடிவேலு//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்பிடியா.....

ஜீவன்சிவம் said...

காமெடி பீசுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது கடைக்கு போய் செருப்பு வாங்கிற மாதிரி. அந்த ஒரு நாள் தான் அதுக்கு மௌசு. அப்பறம் சனியன் வெளிய தான் கிடக்கும்

Anonymous said...

you copied this from thatstamil.com or thatstamil.com copied your post?

படித்துறை பாண்டி said...

விஜயகாந்தை துரத்திய அண்ணாவின் ஆவி!

VJR said...

dear friend anonymous, its the news from thatstamil, check my starting paragraph, clearly i mentioned it.

anyway thanks for coming.

VJR said...

ஜீவன்சிவம் சார், விஜயகாந்துக்கு வடிவேலு எவ்ளவோ பெட்டர்.

அபி அப்பா said...

சூப்பர்!

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.