A எனது நாட்குறிப்பு: விஜயகாந்த்துக்கு வடிவேலு 'ஐடியா'!

Thursday, March 31, 2011

விஜயகாந்த்துக்கு வடிவேலு 'ஐடியா'!

ஏற்கனவே விஜயகாந்த,”கண்ணா லட்டு தின்ன ஆசையா”ன்னு கேட்டுகிட்டு இருந்த வடிவேலுக்கு, “கண்ணா இப்ப ரெண்டு லட்டு தின்ன ஆசையா”ன்னு கேக்க வெச்சுட்டார் க்வாட்டர் விஜயகாந்த். ஓவர் டூ தட்ஸ்தமிழ்.


சென்னை: நீ அடிச்சா மகாராஜா ஆகிடுவாங்கன்னு சொல்றியே, பேசாம உன்னோட கல்யாண மண்டபத்து உன் கட்சிக்காரங்கள வரிசையில நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து நங்கு நங்குன்னு குத்தி, எல்லோரையும் மகாராஜா ஆக்க வேண்டியதுதானே. அதுக்கு எதுக்குடா எலக்ஷன் என்று விஜயகாந்த்தை காட்டமாக கேட்டுள்ளார் நடிகர் வடிவேலு.


சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜே.அன்பழகனை ஆதரித்து வடிவேலு பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், பொது இடத்தில வச்சு தன்னோட தப்பை சுட்டிக் காட்டிய வேட்பாளரை நங்கு நங்குன்னு குத்துறியே. கேட்டா, என்கிட்ட குத்து வாங்கினா மகாராஜா ஆகிடுவான்னு சொல்ற. நான் சொல்றேன், பேசாம உன் கட்சிக்காரங்களை உன்னோட கல்யாண மண்டபத்துக்கு வர வச்சு வரிசையா நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து குத்து. எல்லாத்தையும் மகாராஜா ஆக்கி விட்டுப் போ.

அப்புறம் எதுக்குடா எலக்ஷனு. பேசாம கூட்டணிய கலைச்சுடு. பொது இடத்துல வச்சு நாலு பேரு பாக்கற மாதிரி நங்கு நங்குன்னு குத்துறான். இதை இந்த தேர்தல் அதிகாரிங்க பார்த்துக்கிட்டு என்ன செய்றாங்க. அந்தாளை கைது செய்ய வேண்டாமா.

இஸ்லாமியப் பெருமக்களை தனது படங்களில் தீவிரவாதிகளாகத்தான் காட்டுவார் விஜயகாந்த். தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்வார். இஸ்லாமியர்கள் மீது பாசமாக இருப்பது போல காட்டிக் கொள்ளும் அவர் தேர்தலில் மட்டும் ஏன் உரிய வகையில் சீட் கொடுக்கவில்லை.

தன்னோட கட்சி சார்பா போட்டியிடும் 41 வேட்பாளர்கள் பெயரையும், ஒரு பெயர் விடாம சரியா சொல்லட்டும் விஜயகாந்த். நான் இந்த பிரசாரத்தை விட்டே போய்டுறேங்க என்றார் வடிவேலு.

மறுபடியும் நான்,

ஹாஹா இதென்னமோ எனக்கும் சந்தேகமா இருக்கு.சரக்குக்கு ரொம்ப அடிமையாயிட்டாரோன்னு வருத்தமா இருக்கு. 40 நிமிடத்துக்கொரு முறை கட்டிங் போடனுமாமே? ஏதோ நல்லா இருந்தா சரி.

விஜயகாந்த்,அனேகமா தன்னோட மாமனார் வீட்டு கம்பல்சன்ல கட்சி ஆரம்பிச்சமாதி தெரியுது.இல்லன்னா இவ்ளோ நிதானம் தவற வாய்ப்பில்லை.பிரச்சாரத்தின் போது, விஜயகாந்தின் கையையும் காலையும் வேனுடன் கட்டிவிடும் யோசனையில் பிரேமலதாவும்,சுதீசும் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்வது நம்பும்படியாகவே இருக்கிறது.

மேலும் விசாரிக்கையில், வீட்டிலே பேச வேண்டியதை பிரேமலாதா முன்னிலையில் பதிவு செய்து, பிரச்சாரத்தின் போது அதை ஓடவிட்டு, விஜயகாந்த் வாயை மட்டும் அசைத்தால் என்ன? என்று யோசிப்பதாகவும் நம்பப்படுகிறது. வடிவேல் வாய் ரோலிங்கில் கண்டுபிடிப்பதில் கில்லாடி என்பதால் அதிலும் சிக்கலாகத்தான் உள்ளது.

இப்படியொரு இக்கட்டான நிலமை விஜயகாந்துக்கு, தர்மபுரி ரிலீஸின்போதுகூட இல்லை என்று நெருங்கிய வட்டாரம் காதைக் கடிக்கிறது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த எலக்சன் ரொம்ப தமாசாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.

6 comments:

பொ.முருகன் said...

அண்ணே,நீங்களும் வரிசைல போய் நில்லுங்க,உங்கள மகராசனா பாக்கனும்னு நாங்க ரொம்பப் ப்ரியப்படுறோம்.

VJR said...

தம்பி முருகன், நீங்க சொல்றது என்னையவா இல்ல வடிவேலவா?

ஏன்.... இந்த கொலவெறி?

இருந்தாலும் வந்ததுக்கு நன்றி தம்பி.

Anonymous said...

தேர்தல் முடிஞ்சதும் உனக்கும் உன் தலைவனுக்கும் இருக்குடி குத்து .....அதுவரைக்கும் மூச்சிரைக்க பேசிக்க்..இனிமேல் நீயும் உன் தலைவனும் பேசவே முடியாது

Anonymous said...

தம்பி முருகன், நீங்க சொல்றது என்னையவா இல்ல வடிவேலவா?

ஏன்.... இந்த கொலவெறி?//
ஓ..அண்ணன் இந்த கமெண்டுக்கே ரொம்ப பயப்படுறாரு..அண்ணன் ரொம்ப பயந்த சுபாவி போல...

Anonymous said...

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த எலக்சன் ரொம்ப தமாசாகத்தான் இருக்கும் போலிருக்கிறது//
பபூனை நம்பி தி.மு.க இருப்பதால் தமாசாகத்தான் இருக்கும்

VJR said...

சதீஷ், வடிவேலு கேட்டதுக்கு பதிலக் காணோம்.

அப்புறம் எலக்சன் ராசிபலன் என்ன சொல்லுது? விஜயகாந்து போதைக்கு பரிகாரம் இருக்கா?

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.