A எனது நாட்குறிப்பு: இறுகிய முகத்துடன் கிளம்பினார் ஜெ.- ஹா ஹா சிப்பு சிப்பா வருது.

Tuesday, March 29, 2011

இறுகிய முகத்துடன் கிளம்பினார் ஜெ.- ஹா ஹா சிப்பு சிப்பா வருது.

திருச்சி, கரூர், பெரம்பலூரில் சுற்றுப்பயணம் ஓவர்:இறுகிய முகத்துடன் கிளம்பினார் ஜெ.,




திருச்சி:திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை முடித்த ஜெயலலிதா, நேற்று இறுகிய முகத்துடன் திருச்சியில் இருந்து புறப்பட்டார்.சட்டசபை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா போட்டியிடுவதையொட்டி, கடந்த 24ம் தேதி தன் தேர்தல் பிரசாரத்தை ஸ்ரீரங்கத்தில் துவங்கினார்.செல்லும் இடமெல்லாம் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து, அவரது முகத்தில் உற்சாகம் குடி கொண்டது. மறுநாள், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
ஒன்றிரண்டு இடங்கள் தவிர மற்ற இடங்களில் மக்கள் கூட்டம் இல்லாததைக் கண்டு உள்ளூர ஜெயலலிதா அதிருப்தி அடைந்தாலும், அவரின் சிரித்த முகம் மட்டும் மாறவே இல்லை.அன்றிரவு விழுந்த, "டோஸ்' காரணமாக, மறுநாள் பிரசார பணிகளை, விடிய, விடிய நிர்வாகிகள் செய்தனர். ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த அந்தநல்லூர் ஒன்றியப் பகுதிகளில் மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர்.நான்காம் நாள் பிரசாரத்துக்கு, ஹெலிகாப்டர் மூலம் அவர் கரூர் சென்றார். அங்கிருந்து முசிறிக்கும், முசிறியில் இருந்து பெரம்பலூருக்கும் சென்றார். இருப்பினும், அப்பகுதிகளில் எதிர்பார்த்ததை விட மக்கள் கூட்டம் வெகுகுறைவாக இருந்தது. இதை கண்டு, ஜெயலலிதா அதிருப்தியடைந்தாலும், ஸ்ரீரங்கம் தொகுதியில் பேசாமல் விட்ட ஐந்து இடங்களில் சென்று பிரசாரம் செய்த பின்னரே, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பினார்.
நேற்று பிற்பகல் 2 மணிக்கு, கந்தர்வக்கோட்டை, தஞ்சை, குடந்தை பகுதிகளில் பிரசாரம் செய்ய, திருச்சி ஓட்டலில் இருந்து ஜெயலலிதா புறப்பட்டார். முதல் நாள் பிரசாரத்துக்கு கிளம்பிய போது இருந்த புன்னகை முகம் மாறி, நேற்று இறுகிய முகத்துடன் காணப்பட்டார்.அவரை பார்த்து கட்சி நிர்வாகிகள், "வருங்கால முதல்வர் வாழ்க' என்று உற்சாகமாக கோஷம் எழுப்பியும், அவரது முகத்தில் சிரிப்பு இல்லை. அவர்கள் பக்கம் திரும்பாமலேயே கும்பிடு போட்டுக் கொண்டே பிரசாரத்துக்கு கிளம்பி சென்றார்.

இது அம்மாவின் ஆசியோடும் அய்யா ராஜபக்சேவின் பேராசியோடும் விளையாடும் தினமலர் செய்திங்கோ.....

6 comments:

சக்தி கல்வி மையம் said...

அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா..

டைம் இருந்தா வாங்க..
http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_29.html

Anonymous said...

enngga Dinamalar link koddungga pappom..

ராஜேஷ், திருச்சி said...

amma gaali.. permanent seat in kodanadu

VJR said...

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=214891,

இதுதான் இந்த செய்தியின் லிங்க்.

நன்றி, நண்பரே.

ராஜரத்தினம் said...

நீங்க தொழிலுக்கு புதுசா? 2001 ல் இதே மாதிரிதான் தினமலர் செய்தி கொடுத்தது. அப்ப ஜெயலலிதா ஜீப்பில் வந்து பிரச்சாரம் செய்ததை கிண்டல் அடித்திருப்பார்கள். அது மட்டுமல்ல. ஒரு இடத்தில் அவர்கள் வேன் மட்டும் தனியாக வருவதையும் (மக்களே இல்லாமல்) போட்டு வைத்திருந்தார்கள். இதை எல்லாம் ஒரு அளவு கோளாக வைத்து சந்தோஷபட்ராதீங்க. இன்னும் நாள் இருக்கு. May 13 க்கு அப்புறம் சந்தோஷப்படுங்க. அதுதான் நிஜமானதாக இருக்கும்.

VJR said...

ராஜரத்தினம் சார், அப்ப தினமலர் திமுக’வுக்கு சப்போர்ட்டர்ன்னு சொல்றீங்க? சூப்பர் கண்டுபிடிப்பு.

வருகைக்கு நன்றி.

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.