A எனது நாட்குறிப்பு: வண்டியை விற்கும்போது கவனிக்க வேண்டியவை.

Wednesday, July 14, 2010

வண்டியை விற்கும்போது கவனிக்க வேண்டியவை.

டாட்டா சுமோ வந்த புதுசு. ராஜுக்கும் பிசினஸ் சக்கபோடு போட, ப்ரீமியம் கட்டி புத்தம் புது சுமோ வாங்க்கினார்.மூன்று வருடங்கள்,கலக்கள் கனவுகளாக ஓடிவிட சுமோவும் தொய்வு கண்டது. பழய சுமோவை விற்றுவிட்டு,புதிய வண்டியை வாங்க திட்டமிட்டார். தனது உதவியாளரை நோக்கி " இப்ப இருக்கிற 8191 சுமோவ விக்க ஏற்பாடு பண்ணுப்பா","சரிங்க சார்".

உதவியாளரும் ஓடியாடி, திருநீர்மலையிலிருந்து ஒரு பார்ட்டியைப் பிடித்துவந்தார்."என்னப்பா ரெடி பேமண்ட் தானே"," சார்.., பார்ட்டி பெரிய ஆள், நகராட்சி கமிசனரோட வீட்டுக்காரரு", "அப்படியா, சந்தோசம்"

வித்தால் போதுமென்று அவசரத்தில், ஒரு சில வெத்து தாள்களில் எழுதி வாங்கிவிட்டு, வண்டியைக் கொடுத்துவிட்டு, பணத்தையும் பெற்றுக்கொண்டார்.

விற்ற மூன்றாவது நாள், இரவு பல்லாவரம் ஹோட்டலில் சாப்பிட்டுகொண்டு இருக்கும்போது, ராஜுக்குத் தெரிந்த ட்ரைவர், போதையில் அதே வேளையில் சன்னமாக " யின்னா சார், நீ குட்த்த வண்டியிலதான் தாம்பர குவாரி மேட்டர முடிச்சோம்", சுர்ரென்று இருந்தது அவருக்கு. மூன்று தினங்களுக்கு முன்னால் பேப்பரில் கொட்டை எழுத்தில் " தாம்பரம் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை, கொலையாளியைப் பிடிக்க போலீஸ் தனிப்படை" மின்னல் வெட்டியது. " என்னா சார் பேயரைஞ்ச மாதி கீற", " யோ.., இன்னும் நேம் கூட சேஞ் பண்ணலயா", " அட, நீ ஒன்னு சார், நைட்டே இட்டாந்து, பார்ட் பார்ட்டா கடாசாச்சு சார், நீ ஒன்னிக்கிம் ஒர்ரிப் பண்ணிக்காத".

ராஜுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சுமோவில் வேறு கொட்டை எழுத்தில் ராஜு என்று எழுதியிருக்கும். 8191 சுலபமான எண் வேறு.

அன்று இரவு 11 மணி. குரோம்பேட்டை நியூ காலனி. காம்பவுண்ட் கேட் படபடவென்று தட்டப்பட்ட சத்தம் ஏசியத்தாண்டி ராஜுவின் காதில். மின்னல் வெட்டுகளாக பல நினைவுகள், ராஜுவின் மனதில். சாவித்துவாரத்தின் வழியாக பார்த்தால், முத்து முத்தாக நெற்றியில் வியர்வை. பத்துக்கும் மேற்ப்பட்ட போலிஸ் அதிகாரிகள். எல்லோர் கையிலும் துப்பாக்கி. காலகள் தள்ளாட ஆரம்பித்தது.

உடனிருப்பது அம்மா, தங்ககைகள் இருவரும். அம்மாவை எழுப்பி " அம்மா, வெளிய போலிஸ் நிக்குது, சத்தியமா நா எந்த தப்பும் பண்ணல. ஆனா இப்ப மாட்னா, கண்டிப்பா அடிப் பின்னிடுவாங்க, அதனால பிஸ்னஸ் விசயமா நா வெளியப்போய்ட்டதா சொல்லிடுங்க, லாயர்கிட்ட பேசிட்டு காலையில முடிவெடுத்துக்கலாம்" என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் ராஜ் பதுங்கிக் கொள்ள, அம்மா கதவைத் திறந்தார்.

அம்மா கதவத் தொறக்கவும், ராஜுவின் கையிலிருந்த மொபைல் அலறவும் சரியாய் இருந்தது. என்ன செய்வதென்று ஒன்றும் புரியாமல், கிட்னி கலங்க,ஆறாவது அறிவின் ஆசுவாசத்தில் செகண்டுக்குள் மொபைலைக் கீழே வைத்து, ப்ளாஸ்டிக் வாலியைக் கவுத்து அதன் மேல் ராஜ் உக்கார சத்தம் மட்டுப்பட்டது.

பத்துக்கும் மேற்ப்பட்ட போலீஸ் ஆபிஸர்கள்.அவர்கள் தனிப்படையாம். அதாவது ஒரு DSP யின் கீழ் 10 சப் இன்ஸ்பெக்டர்கள்.நல்லவேளையாக ராஜுவின் நண்பரும் தாம்பரம் எஸ்.ஐ. ரூபனும் அதிலிருந்தது. "ராஜ் எங்கம்மா? தாம்பரம் கொலையில் அவர் இருக்கறத கன்பர்ம் ஆய்டுச்சு. அரெஸ்ட் செய்ய சொல்லிருக்காங்க","சார், எம்பையன் அப்படிப்பட்டவனில்ல,எங்கயோ தப்பு நடந்திருக்கு","வண்டி நம்பரப் பாத்தவங்க கன்பர்ம் செஞ்சுட்டாங்க, கார் பாஸ்புக்ல ஒங்க பையன் ஃபோட்டோ இருக்கு, அட்ரெஸ் இருக்கு, தப்ப முடியாதும்மா","அவன் கார வித்து 3 நாளாச்சே","யாருக்கு வித்தாருன்னு தெரியுமா","தெரியலீங்களே".

ஒரு வழியாக, ராஜுவின் உதவியாளருக்கு ஃபோன் போட்டு சில விவரங்களை வாங்கிக்கொண்டு,"CM அம்மா, ஹைதராபாத்லிருந்து நாளக்கி வர்றாங்க,அதுக்குள்ள அக்யூஸ்டப் பிடிக்கனுமுன்னு ஆர்டர். அதான் நாலு டீமாப் போட்டு தேடிகிட்டு இருக்கோம். ராஜுவ எனக்கு நல்லாத் தெரியும், இருந்தாலும் வந்தவுடனே எனக்கு ஃபோன் போடச் சொல்லுங்க"ன்னு ரூபன் சொல்ல, ராஜுவின் அம்மா தலையசைத்தார்.

இதற்கிடையில் ராஜுக்கு இன்னொரு ஃபோன் வர, ஒரே ரிங்கில் அட்டென் செய்து காதில் வைக்க,"சார், நம்ம ஆபீஸுக்கு போலிஸ் வந்து ஒங்களக் கேட்டு பிண்ணி எடுத்துட்டாங்க", "சரி சரி, இங்கயும் போலிஸிருக்கு,இனிமே ஃபோன் செய்யாத", "சரி சார்".

ஆக மொத்தம்,ஒரே நேரத்தில் ராஜுவத்தேடி எல்லா இடத்திலும் போலீஸ். நினைக்கவே ராஜுக்கு திக் திக்கென்று இருந்தது.

காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து, இரண்டு தங்கைகளையும் இரண்டு தெருவை கண்கானிக்க சொல்லிவிட்டு,குரோம்பேட்டை இரயில்வே ஸ்டேசனுக்கு திக்திகுடன் நடந்தார்.அங்கிருந்து திரிசூலம் ஸ்டேசனில் இறங்கி,ஏர்போர்ட்டிற்கும் ரயிவேசன் ஸ்டேசனிற்கும் இடையே இருக்கும் பாதாள நடைபாதையில் காலை 4.30 மணியிலிருந்து 9 மணிவரை நடந்து கொண்டு இருந்தார்.

சரியாக 9 மணிக்கு, தாம்பரம் எஸ்.ஐ. ரூபனை போனில் அழைக்க,"ராஜ், டோண்ட் வொர்ரி, ட்ரைவரப் புடிச்சிட்டோம், எல்லாத்தையும் கக்கிட்டான். இருந்தாலும் ஒரு ரெண்டு நாளைக்கி வீட்ல இருக்க வேண்டாம்,இதுல மொத்தம் 4 டீம் வேலை செய்யுது. யார் வேணாலும் ஒங்களப்பிடிக்க வரலாம்,க்ளியராகுறவரைக்கும் மறைஞ்சே இருங்க","தேங்ஸ் சார்".

ஓகே மக்கள்ஸ், வண்டிய விக்கிம்போது தயவுசெஞ்சு நேம் ட்ரேன்ஸ்பெர் செய்ய மறக்காதீங்க.

4 comments:

நிகழ்காலத்தில்... said...

வண்டிய எக்சேஞ்ச் பண்ணி புது வண்டி வாங்கும்போது, அந்த பழய வண்டி எப்ப
விற்பாங்கன்னு தெரியாதே, அப்ப என்ன பண்றது??

cheena (சீனா) said...

ம்ம்ம்ம் இப்படியும் நடக்குமா ...... சாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும் ப்போல

நல்வாழ்த்துகள் விஜேஆர்
நட்புடன் சீனா

VJR said...

//நிகழ்காலத்தில்... said...
வண்டிய எக்சேஞ்ச் பண்ணி புது வண்டி வாங்கும்போது, அந்த பழய வண்டி எப்ப
விற்பாங்கன்னு தெரியாதே, அப்ப என்ன பண்றது??//

போலிஸ் ஸ்டேசன்ல, அய்யா என் வண்டிய வித்துட்டேன் வித்துட்டேன்னு கூவுறது நல்லதோ?

என்னமோ சார், உசாரா இருக்குறது நல்லதுதானே.

VJR said...

//cheena (சீனா) said...
ம்ம்ம்ம் இப்படியும் நடக்குமா ...... சாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும் ப்போல

நல்வாழ்த்துகள் விஜேஆர்
நட்புடன் சீனா//

வணக்கம் ஐயா.
உங்களின் மேலான ஊக்கத்திற்கு நன்றி.

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.