A எனது நாட்குறிப்பு

Thursday, April 7, 2011

ஜெயாவின் அறிக்கை, பதிவர்களுக்கு இலவச இண்டெர்நெட்.

அன்புள்ள பதிவுலக குஞ்சா மணிகளே
பித்தத்தின் பித்தங்களே...

பெங்களூரிலிருந்து வரும்போதே என் தாய் சொன்னார், இந்த தமிழர்கள் செலக்டிவ் அம்னீசியாவால் பீடிக்கப்பட்டவர்கள்,தமிழ்நாட்டுக்காரனைத் தவிர வேறு யார் சொன்னாலும் என்ன சொன்னாலும் நம்புவார்கள்,கொஞ்சம் லட்சனமாக இருந்துவிட்டால் நாக்கை தொங்கப்போட்டு அலைவார்கள், இருக்குற எல்லாத்தையும் நமக்கு கொடுத்துவிடுவார்கள், அவ்வளவு ஏமாளிகள் என்றார். நான் நம்பவில்லை. அப்போ சின்ன வயது. அறியா வயது. மன்னித்துக்கொள்ளுங்கள்.

ஆனால் இன்று, ஒரு சாதாரண நடிகையாய், நடனக்காரியாய் இருந்தவளை இந்தளவுக்கு ஏற்றிவைத்தீர்களென்றால் என் தாய் சொன்னது உண்மை. சத்தியம்.

சும்மா கிடந்தவளை கொ.ப.செ’வாக ஆக்கி அழகு பார்த்த அந்த தானைத் தலைவனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் ராஜீவ் காந்திக்கு எழுதி அசிங்கப் படுத்தியும், பித்தத்தின் பித்தமே அனைத்தையும் மறந்து தலைமை ஏற்க சொன்னதை எப்படி மறப்பேன்?

சவ ஊர்வலத்தில் கூட சேர்க்கவிடாக் கூட்டத்திலே, அத்தனை எதிர்ப்பையும் மீறி கட்சியை உடைத்து தலைமையேற்க்க வைத்த திருநாவுக்கரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்,எஸ்.டி.எஸ் இப்படி எல்லோரையும் விரட்டி வேட்டையாடியும் என் மேல் தீராத அன்பு வைத்திருக்கிற என் குருட்டு தமிழ் சமுதாயமே..என்ன செய்வேன்?

திடமான தலைமையானதும் ஒவ்வொரு மூத்தக்குடி தமிழனையும் காலில் விழ வைத்து நோகடித்ததையும் அழகென்று சொல்லும் என் தமிழ் மூச்சே.. அய்யகோ என்ன செய்வேன்?

ஈழம் ஈழம் என்று கூக்குரலிடும் என் பித்தத்தின் பித்தமே,”போரென்றால் பொது மக்களும் சாவத்தான் செய்வார்கெளென்று” என்று நான் சொன்னதை அழகாக மறந்தாயடா என் மடச் செல்லமே,

கூட்டணி ஆரம்பிக்கும் முன்னரேகூட நான் கூட்டணிக்காக காங்கிரசைக் கெஞ்சிக் கதறினதை மறந்து, என்னை நல்லவளென்று சொல்வதை எப்படியடா சொல்வது...?

அதுமட்டுமா, ஒரு வேளை நான் ஜெயித்துவிட்டால் மறுபடியும் காங்கிரசிடம் போகமாட்டேன் என்று திடமாக நம்புகிறாயே என் முட்டா பித்தத்தின் பித்தமே, நீதாண்டா என் வெல்லம்.

இதற்கு முன் நான் பத்து வருடம் ஆண்டதையும் அதில் காவிரி பிரச்சினையும் முடிக்கவில்லை, பெரியார் பிரச்சினையும் முடிக்கவில்லை என்பதையும் மறந்து இனிமேல் முடிப்பேன் என்பதை நம்புகிறாயே என் எலும்பின் எலும்பே.. எப்படியடா உன்னை மறப்பது?

வாஜ்பாயி,வைகோ என நம்பி வந்தவங்களை நட்டாற்றில் விடுவதில் வரலாறு படைத்த என்னை இன்னும் நம்புகிறாயே என் தமிழ் சாம்பிராணியே, நீதாண்டா என் பலம்.

அடுத்த பலி விஜயகாந்தா,பாண்டியானா, ராமகிருஷ்ணனா எனக்கெப்படிடா தெரியும், சசிகலாவல்லவா என் ரிமோட் கண்ட்ரோலர்.

சோ அட்வைஸ் எனக்கிருக்க இன்னும் மத ஒற்றுமை காப்பேன் என்று நம்புகிறாயே என் பித்தத்தின் பித்தமே, அதுதாண்டா என் பலம்.

என்னோட தகிடத்தத்தங்கள் எதையும் வெளியிடாமல் எப்போதும் கருணாநிதியின் வில்லங்கத்தை நோண்டுவதிலிருந்து தினமலர்,தினமணி,ஹிண்டு,விகடன்,ரிப்போர்ட்டர் ஆரிஜின் தெரியாமல் என் காலுல கெடக்கும் மூதேவி தமிழனே உன்னை எப்படிடா மறப்பேன்?

சுடுகாட்டிலிரிந்து டான்ஸி வரைக்கும் ஊழலித்த என்னை ஊழலை ஒழிக்க அழைக்கிற மதி தமிழனைத் தவிர வேறு யாருக்குடா உண்டு?

தமிழ்நாட்டில் இருக்கும் லட்சம் சொச்சம் கிராமங்களில் இருக்கும் தீண்டாமயில் மிதிபடும் தமிழனை மறந்து உலகையே ரட்சிக்க என்னை அழைக்கும் அறிவு உன்னைவிட்டால் யாருக்குடா உண்டு?

என் தாய், படிக்காதவர்கள் தெயவத்துக்கு ஒப்பானவர்கள், மன்னிப்பார்கள் மறப்பார்கள் என்றார். இல்லை தாயே, படித்த பதிவர்களும் மறக்கும் தெய்வங்கள்..

நான் ஜெயித்தால் 24 மணி நேரமும் இலவச இணைய இணைப்பு கொடுப்போம் பதிவர்களே, இப்போது போல் அப்போது அம்னீசியாவிலே இருங்கள்.

அடுத்து மகாமகத்தில் இறப்போர் எண்ணிக்கை 48 லிருந்து 96 ஆக உயர்த்தப்படும்.

கட்டிய பாலம் இடிக்கப்படும்.

புது மசூதிகள் இடிக்க ஒத்துழைக்கப்படும்.

மதமாற்றம் நடப்பது ஏனென்று ஆராயாமல் தடுக்கப்படும்.

ஜாதிக் கலவரங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.

வருடம் ஒரு முறை வளர்ப்பு மகன்,அப்பா, அம்மா எல்லாம் நடை முறை படுத்தப்படும்.

வாழ்க ரத்ததின் ரத்தம்
வளர்க பித்தத்தின் பித்தம்

பதிவுலக குஞ்சாமணிகளும் வகைகளும்

தேர்தல் நெருங்க நெருங்க பல வகை குஞ்சாமணிகள் பதிவுலகில் காணக்கிடைக்கின்றனர். ஏதோ நம்மால் முடிஞ்ச வகையில் அவர்களை வகைப்படுத்தியதில்...

அனானி குஞ்சாமணிகள்: இவர்கள் நல்லவர்கள் கெட்டவர்கள் என இரு வகைப்படுவர். நல்லவர்கள் எப்பொழுதும் பதிவைப் படித்துவிட்டு நல்லவிதமான கருத்துகளை நோகாமல் பேரில்லாமல் சொல்லிவிட்டு ஓடிவிடுவார்கள். அடுத்து கெட்டவர்கள், மகா கேவலமானவர்கள். அனேகர் பதிவர்களாகவும் இருக்கக்கூடும். மிக கேவலமான டாஸ்மாக் பாசையிலே பேசிவிட்டு ஓடிவிடுவார்கள். இயற்கையில் இவர்கள் பயங்கர தொடைநடுங்கிகள். கேள்வி கேட்டாலே உச்சாப் போய்விடுவார்கள்.

ப்ளாக்மட்டும் குஞ்சாமணிகள்: இவர்கள் ஒரு சிலரைத்தவிர கண்ட இடத்தில் வாந்தி எடுப்பவர்கள். ப்ளாக் மட்டும் இருக்கும். இடுகை இருக்காது, பேர் இருக்கும் ஆனால் பொய்யாக இருக்கும். ஃபாலோ மட்டும் செய்ய்வார்கள்.முட்டு சந்தில் உச்சா போகும் வீரர்கள்.ஆச்சர்யமாக சில நல்லவர்களும் இதில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலும் கவனம் பெருவதில்லை.

நடுநிலை குஞ்சாமணிகள்:எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்களே நிஜமான நடுநிலயாளர்கள். மற்றவர்கள் போலிகள். முதலில் போலிகள் பற்றி.நாலே பேர் இருந்தாலும் பிரமாண்டமாக நினைத்துக்கொள்வார்கள். செலக்டிவ் அம்னீசியாவில் பாதிக்கப்பட்டவர்கள்.தேர்தலுக்கு ஒரு முறை முழிப்பவர்கள். தேர்தல் முடியும்வரை உளறிவிட்டு ஓடிவிடுவார்கள். தமிழ் பற்றி எழுதுவார்கள். ஆனால் தமிழனாய் வாழமாட்டார்கள். ஈழம் பற்றி பேசுவார்கள். ஆனால் ஒரு துரும்பைகூட அசைக்கமாட்டார்கள். உள்ளூர் ஏழைகளை மிதிப்பார்கள், உலக ஏழைகளுக்கு வக்காலத்து வாங்குவார்கள். உள்ளூர் ஜாதி பிரச்சினையை ரசிப்பார்கள், உலக தமிழனுக்கு அழுவார்கள். நல்ல நடிகர்கள். பத்தே பேர் படிக்கும் பதிவுலகம்தாம் உலகமென்று சத்தியமாய் நம்புபவர்கள். உள்ளூர் ரெட்டை டம்ளர் தேனிகடையில் ஒரு பொழுதும் காரித்துப்பாத இந்த போலிகள் உலக சமமின்மைய காரித்துப்புவார்கள்.நாம் பார்க்காத நடிகர் திலகங்களின் கூடாரமே இங்குதான்.

கட்சிசார்பு குஞ்சாமணிகள்: ஒவ்வொருக் கட்சிக்கும் ஒவ்வொரு குஞ்சாமணிகள், என்னைப்போல. எப்பொழுதும் தன் கட்சியையே தூக்கிப்பிடிப்பவர்கள்.

ஜாதி/மத சார்பு குஞ்சாமணிகள்: இவர்கள் விஷ ஜந்துக்கள். பச்சோந்திகள் போல தனக்கேற்ற இடுகையில் நுழைந்து மற்றவர்களுக்கு இம்சை கொடுத்துக்கொண்டு இருப்பார்கள். அட நம்மாளோ என்று நினைக்கும்பொழுது இன்னொரு ஒவ்வாத இடுகையில் வீராவேசம் காட்டிக்கொண்டு இருப்பார். கூட்டிக் கழித்துப்பார்த்தால் மதமோ ஜாதியோ இணைத்திருக்கும்.

கம்யூனிஸ்ட்டு குஞ்சாமணிகள்: இதிலும் உண்மை போலியுண்டு. ஆனால் உண்மைகளை கண்டுபிடித்தால் தமிழ்நாட்டை எழுதிவைக்கலாம். முடிந்தளவு உண்மையாக நடிப்பதிலேயே காலம் கடந்துவிடும்.

தெய்வக் குஞ்சாமணிகள்: உண்மையிலேயே இவர்கள் தெய்வப்பிறவிகள். சமையல்,டூர் என யாரையும் பாதிக்காமல் எழுதக்கூடியவர்கள்.ஒரு போதும் விவாதத்தில் இறங்கமாட்டார்கள். அப்படி இறங்கிவிட்டால் இம்சைபடுத்தாமல் விடமாட்டார்கள்.

இப்படி பலக் குஞ்சாமணிகள் இந்த பதிவுலைப் பாடாய் படுத்துகிறார்கள். இதிலே மோசமான நிலையில் இருப்பவர்கள், போலி நடுநிலைக்குஞ்சாமணிகள்தான். வயதுக்கு வந்ததிலிருந்து ஒரு நல்லவிசயமும் செய்யாத இந்த போலிகள் அடிக்கடி நாட்டாமையாக முயற்சிக்கும் தருணங்கள் அழகே அழகு.

அதற்கு ஒத்தூதும் பிள்ளைப்பூச்சிகள் மிகவும் தமாசானவர்கள். தினமும் ரசிக்கலாம்.

Wednesday, April 6, 2011

விஜயகாந்த் வீட்டில்...

விஜயகாந்த் வீட்டில் அப்படி என்னதான் பேசிக்கொ(ல்)கிறார்கள் என்று ஒட்டுக் கேட்டதில்...

சுதீஸ்:(ஹ(வி)ஸ்கி வாய்ஸில்)யெக்கா மாமாகிட்ட மலையேறிட்டு பிரச்சாரம் செய்யக்கூடாதுன்னு செப்புக்கா.

பிரேமலதா: யேய் நா எப்படிடா செப்பேது.

விஜயகாந்த்: நாக்கத் துருத்திக்கொண்டு “யே அங்க என்ன தனியா பேச்சு?”

பிரேமலதா: ஆமா அதுக்கொன்னும் கொரச்ச லேது. நாம இப்ப அதிமுக’கூட கூட்டணி. தெலுசுகாது.

விஜயகாந்த்: ஆங்ங்.. தெலுசு தெலுசு.

பிரேமலதா: பெறகு எதுக்கு அதிமுக கொள்கை ஜெயிலுலன்னு சொன்னீங்க?

விஜயகாந்த்: ஒரு ப்ளோவ்ல வந்துடுச்சு, இப்ப என்ன அதுக்கு?

சுதீஸ்: மா....மா. இப்ப என்ன அதுக்கா? அவன் அவன் காரித் துப்புறான். உசாரா பேசுங்க. கொஞ்ச நஞ்சம் ஓட்டுப் போட நெனச்சவனும் இப்ப தலை தெறிக்க ஓட்றானுங்க.

விஜயகாந்த்: யேமிரா செப்பேவு? வெளியப்போனா வடிவேலு ஏசுறான், ஊட்டுக்கு வந்தா நீங்க ஏசுறீங்க. இப்படி இருந்தா எக்கட்றா போயேது?

பிரேமலதா: எங்கயும் போக வேணாம். எலக்சன் முடியறவரைக்கு தண்ணியடிக்க வேண்டாம்.

விஜயகாந்த்: எப்படிம்மா? எப்படிங்றேன்? முடியுமா? முடியாது. ஒடம்பு நடுங்கிடும். பயம் எல்லாருக்கும் தெரிஞ்சுரும்.

பிரேமலதா: மண்ணாங்கட்டி. பயம் தெலுசுனா தெலுசிட்டு போகுது. இப்ப மூளையில்லன்னு தெரிஞ்சு போகுது.

விஜய்காந்த்: எதை வெச்சு சொல்ற?

சுதீஸ்: பின்ன? ஒரு மொற அடிச்சா மவராஜாய்டுவாங்றே. அப்புறம் அடிக்கவே இல்லேங்ற. இப்படியே போனா கட்சி காணாமப் போய்டும். இப்ப என்னா வேணும் உங்களுக்கு?

விஜயகாந்த்: நான் சி.எம் ஆவனும். ஆயி பாகிஸ்தான் பார்டர்ல போயி சண்ட போடனும், ரம் அடிக்கனும், ரம்மி பிடிக்கனும். இன்னும்....

சுதீஸ்: இன்னும்மா...? யெக்கா..... நீ தெய்வப் பிறவிக்கா. எப்படிக்கா? அட எட்டக்கா?

ராரா... பிரச்சாரத்துக்கு ராரா
போரா... பிந்தக்கு போரா...

Monday, April 4, 2011

சிரிச்சு வயிறு வலி வந்தா கம்பெனி பொருப்பல்ல..

அதிமுகவின் கொள்கைகள் சிறையில் உள்ளன-விஜயகாந்த் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி.

பனகுடி: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து பிரசாரம் செய்த தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த், திமுக கொள்கைகள் சிறையில் உள்ளன என்று கூறுவதற்குப் பதில் அதிமுக கொள்கைகள் சிறையில் உள்ளன என்று கூறியதால் கூடியிருந்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.


விஜயகாந்த்தின் பேச்சுக்கள், செயல்பாடுகள் நாளுக்கு நாள் குழப்பமாகி வருகின்றன. தர்மபுரியில் தனது கட்சி வேட்பாளரையே போட்டு அடித்தார். தற்போது தவறுதலாக பேசி மீண்டும் சிக்கலில் மாட்டியுள்ளார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார் விஜயகாந்த். அப்போது அவர் பேசுகையில், திமுக கொள்கைகள் இன்று சிறையில் உள்ளன, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜா சிறையில் உள்ளார் என்று கூறுவதற்குப் பதிலாக, அதிமுக கொள்கைகள் சிறையில் உள்ளன, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜா சிறையில் உள்ளார் என்று கூறினார்.

இதனால் அதிமுக தொண்டர்கள் பெரும் குழப்பமும், அதிருப்தியும் அடைந்தனர். இந்த நிலையில் வேனுக்குள் இருந்த யாரோ, கீழே இருந்தபடி விஜயகாந்த்தை அழைத்து அவர் தவறாகப் பேசியதை சுட்டிக் காட்டினர்.(என்னா ஒரு தைரியம், பாத்து அடி பின்னி பெடலெடுக்கப் போகிறார்)

இதையடுத்து சற்று நேரம் பேச்சை நிறுத்திய விஜயகாந்த், நான் தப்புத் தப்பாக பேசுகிறேன் என்று நினைக்கிறேன். இதற்கு காரணம், இந்த சத்தம்தான் என்று கூறியபடி அங்கு கூடியிருந்த கூட்டத்தினரைப் பார்த்து நாக்கை துறுத்தியபடி கண்டித்தார். பின்னர் அவர் தொடர்ந்து பேசினார்.

'கத்தாதீங்க நான் குழம்பிடுவேன்' (ஹா ஹா.. போதை ஏறிடுச்சுன்னு சொல்ல வேண்டியதுதானே)

இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த பிரசாரத்தின்போது தொண்டர்களைப் பார்த்து, கத்தாதீங்க, நான் குழம்பிடுவேன் என்று விஜயகாந்த் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்டத்தில் போட்டியிடும் தேமுதிக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் நேற்று பிரசாரம் செய்தார். குலசேகரத்தில் இருந்து அவர் பிரசாரத்தை துவங்கினார்.

மக்கள், தொண்டர்கள் விரும்பியதால் அதி்முகவுடன் கூட்டணி வைத்தேன். எனது மானசீக குரு எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியுடன்தான் கூட்டணி வைத்திருக்கிறேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என கூட்டணி வைத்துள்ளேன். அதிமுக கூட்டணிக்கு நீங்கள் வெற்றியைத் தேடி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தக்கலையில் கூச்சல், குழப்பம்!

தக்கலையில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது தொண்டர்கள் கூச்சல் போட்டனர். அப்போது ஆத்திரமடைந்த விஜயகாந்த் கத்தாதீங்க, நான் குழம்பிடுவேன். கொடியை இறக்கிக் காட்டுங்கள் என்றார்.

வடசேரி அண்ணா சிலை அருகே பேசுகையில், நான் பேசுவதை கேட்கத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். நீங்க போடுற சத்தத்தை கேட்க நான் வரவில்லை. சத்தம் போட்டீர்கள் என்றால் வேனில் இருந்து நான்கீழே இறங்கிடுவேன். நீங்க எல்லோரும் வேனுக்கு வந்து பேசுங்கள் என்றார்.

ஹோஓஓஓஓஓஓ ஹாஆஆஆஆ ஹாஹா, நல்லா சிரிக்க வெக்கிறீய ராசா, யார் பெத்த புள்ளயோ இப்படியெல்லாம் பேசி என்ன சந்தோசப்படுத்துது.


நன்னி;தட்ஸ்தமிழ்

Thursday, March 31, 2011

அம்மாவின் அரசியல் அதகளம்.

இவர் திரையில் ஒரு முன்னாள் நடிகை, அரசியலில் இன்னாள் நடிகை. ஏதோ கூடாப் பழக்கத்தின் காரணமாக தலைவரே இவரை அரசியலில் இழுத்துவிட்டார். வேறெதுவும் உலகை காக்கும் காரணிகள் இல்லை.

தலைவருக்கு முதுமையின் காரணமாகவும், தீராத விளையாட்டின் காரணமாகவும் உறுப்புகள் பழுதாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல, கிட்டத்தட்ட எல்லாத் தொண்டர்களும் அழுது புரள இந்த அம்மனி மட்டும், மத்தியத் தலைவருக்கு மிக உருக்கமாக “ காந்தியின் பூந்தியே, எங்க ஆளுக்கு பார்ட்ஸ் எதுமே வேலை செய்யல,அத்துமில்லாமல் ஸ்பேர் பார்ட்ஸ்சும் ஸ்டாக் இல்ல, இன்னிமே இந்தாளுனால ஒன்னியும் ஆவாது, அத்தால என்னயே தலிவராக்கனும்”ன்னு ஒரு கடிதம் எழுதுகிறார். இதை மறுக்கும் பித்தத்தின் பித்தங்களுக்கு விந்தியாவின் முத்தங்கள் பரிசு.

ஒரு வழியாக ஏதோ தேறி தலைவர் வருகிறார். இருந்தார். இறந்தார். ஆனால் ஒன்று பாருங்கள், இந்த தமிழர்கள் எப்பொழுதும் வெள்ளையாக இருந்தால்தான் நம்புவார்கள். “இவ வெள்ளையா இருக்கா, அதனால பொய் சொல்ல மாட்டா” என்று பித்துவம் பேசுவர். அதேதான் இங்கும் நடந்தது. இரண்டாகப் பிரிந்தது. இந்த புத்திகெட்ட கூமுட்டைகள் உண்மையை ஒதுக்கிவிட்டு பொய்யான மினுக்கியை ’தூக்கி’வைத்து ஆடினார்கள்,ஆட்டினார்கள்.

ஆனால் நடந்தது என்ன? பாவம் நேற்று பெய்த மழையில் பிறந்த காளான்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆசைப்பட்டால் விவரமானவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

வயதாகிவிட்டால் ஆட்டம் காட்ட தெம்மு இருக்காது என்று நினைத்தோ என்னவோ,தலைவருக்கு நெருக்கமாக இருந்த அத்தனை சீனியர்களுக்கும் கம்பல்சரி ரிட்டயர்மெண்ட் கொடுக்கப்பட்டு சிக்ஸ் பேக் நாட்டாமைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

அதுவும் சில காலந்தான், ரொம்ப பெரிதாக இருந்தால் உத்திரத்துக்கு உதவாது என்பது போல தூக்கியும் எரியப்பட்டது.

பாவம் அந்த கூமுட்டை சீனியர்கள், கூன் விழுந்த காலத்தில் ஃபுட்போர்டு அடித்தும் அசைந்து கொடுக்கவில்லை. எப்பொழுதும் ரெண்டாம் தாரத்துக்கு மூத்த தாரத்து பிள்ளைகள் ஆகாமல்தானே போகும். ஆமாம் போனது.

இப்படியாக தலைவரின் அத்தனை தொண்டர்களையும் புதைத்துவிட்டு, ஒரு வீட்டுத்தொண்டர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது, அலங்கார அம்புஜம்.

யாருக்கும் யோகம் எப்படி வருமென்று தெரியாது. அப்படித்தான் வந்தது. பூந்தியின் பூலோக வாழ்கையின் முடிவில் அம்புஜத்தின் கிராப் கிர்ரடிக்குமென்று யாருக்குத் தெரியும். சும்மா சொல்லக்கூடாது, எம்மக்கள் பின் வாசலில் வருபவர்களை வரவேற்பதில் கில்லாடிகள். ஒன்னில்ல ரெண்டில்ல, அஞ்சு வருசம். நரக வாசம். ஆனாலும் சிரிச்சு சிரிச்சே அபாயமா ஓடிப்போச்சு.பின்ன என்னதான் செய்யுறது?

ஏழு கழுத வயசான ஒன்ன, பெக்காத புள்ளன்னு சொன்னா, மப்பும் மந்தாரமா இருந்தா சிரிச்சு தொலைக்கலாம். பசியும் பட்டினியுமா இருந்தா என்ன செய்யலாம்? கரிச்சுக் கொட்டினோம் கருமத்த. அதைவிட கல்யாணம் செஞ்சு வெச்சக் கொடுமைய பாக்காத வாலிபர்கள் புன்னியவான்கள். எம் கெட்ட நேரம், பார்த்து தொலைத்துவிட்டது.

விட்டதா சனியன், அதே கழுதை வயசான குழந்தைக்கு கஞ்சாவும் கொடுத்தாச்சு.

அரசியலுல அநாகரிக அரசியலுன்னு ஒன்னு இருக்குன்னு அந்த அஞ்சு வருசத்துலதான் எனக்கு தெரியவந்ததே. கலெக்டர் மூஞ்சியில ஆசிட் வீச்சு, ஏர்ப்போர்ட்ல மகளிரின் கரகாட்டம்,எதிரணி வக்கீலுக்கு வலைகாப்பு..,

நகைக்கடைக்காரர் பலி,இசையமைப்பாளர் வீடு பறிமுதல்,பத்திரிக்கைகாரர்களின் தலக்கரி, இப்படி வரிசைமுடியா வில்லங்கம்.

டப்புக்குள்ள யானை குளிச்சு பார்த்தது உண்டா? நான் கண்டதுண்டு. ஒன்றல்ல, இரண்டு யானை. கும்பகோணம். மகாமகம். பாவம் பல பிணங்கள். பரிகாராம்?

மக்களுக்கு வெருப்பென்றால், இப்படி அப்படி அல்ல. பல பகுதிகளில் உள்ளயே நுழைய முடியவில்லை. விரட்டப்பட்டனர். எனக்குத் தெரிந்து பல மந்திரிகளை மக்களே சிறையிட்டதை பழையப் பத்திரிக்கைகள் கிடைத்தால் படிக்கலாம்.

இன்னொன்று, அப்பொழுதும் இப்பொழுது இருக்கும் அத்தனைப் பிரச்சினைகளும் இருந்தது. காவிரியிலிருந்து,ஈழம் வரை அத்தனையும்.

என்னைப் பொருத்து, இதுதான் நம் இருண்ட காலம்.

இதில் எனக்கு பிடித்த விசயம் என்னவென்றால், பொட்டிக்கடை ஆத்துக்காரரை அந்தரத்தில் விட்டுவிட்டு, பொட்டிக்கடையை கக்கத்தில் வைத்துகொண்டதைத்தான்.

தொடரும்...

விஜயகாந்த்துக்கு வடிவேலு 'ஐடியா'!

ஏற்கனவே விஜயகாந்த,”கண்ணா லட்டு தின்ன ஆசையா”ன்னு கேட்டுகிட்டு இருந்த வடிவேலுக்கு, “கண்ணா இப்ப ரெண்டு லட்டு தின்ன ஆசையா”ன்னு கேக்க வெச்சுட்டார் க்வாட்டர் விஜயகாந்த். ஓவர் டூ தட்ஸ்தமிழ்.


சென்னை: நீ அடிச்சா மகாராஜா ஆகிடுவாங்கன்னு சொல்றியே, பேசாம உன்னோட கல்யாண மண்டபத்து உன் கட்சிக்காரங்கள வரிசையில நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து நங்கு நங்குன்னு குத்தி, எல்லோரையும் மகாராஜா ஆக்க வேண்டியதுதானே. அதுக்கு எதுக்குடா எலக்ஷன் என்று விஜயகாந்த்தை காட்டமாக கேட்டுள்ளார் நடிகர் வடிவேலு.


சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜே.அன்பழகனை ஆதரித்து வடிவேலு பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், பொது இடத்தில வச்சு தன்னோட தப்பை சுட்டிக் காட்டிய வேட்பாளரை நங்கு நங்குன்னு குத்துறியே. கேட்டா, என்கிட்ட குத்து வாங்கினா மகாராஜா ஆகிடுவான்னு சொல்ற. நான் சொல்றேன், பேசாம உன் கட்சிக்காரங்களை உன்னோட கல்யாண மண்டபத்துக்கு வர வச்சு வரிசையா நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து குத்து. எல்லாத்தையும் மகாராஜா ஆக்கி விட்டுப் போ.

அப்புறம் எதுக்குடா எலக்ஷனு. பேசாம கூட்டணிய கலைச்சுடு. பொது இடத்துல வச்சு நாலு பேரு பாக்கற மாதிரி நங்கு நங்குன்னு குத்துறான். இதை இந்த தேர்தல் அதிகாரிங்க பார்த்துக்கிட்டு என்ன செய்றாங்க. அந்தாளை கைது செய்ய வேண்டாமா.

இஸ்லாமியப் பெருமக்களை தனது படங்களில் தீவிரவாதிகளாகத்தான் காட்டுவார் விஜயகாந்த். தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்வார். இஸ்லாமியர்கள் மீது பாசமாக இருப்பது போல காட்டிக் கொள்ளும் அவர் தேர்தலில் மட்டும் ஏன் உரிய வகையில் சீட் கொடுக்கவில்லை.

தன்னோட கட்சி சார்பா போட்டியிடும் 41 வேட்பாளர்கள் பெயரையும், ஒரு பெயர் விடாம சரியா சொல்லட்டும் விஜயகாந்த். நான் இந்த பிரசாரத்தை விட்டே போய்டுறேங்க என்றார் வடிவேலு.

மறுபடியும் நான்,

ஹாஹா இதென்னமோ எனக்கும் சந்தேகமா இருக்கு.சரக்குக்கு ரொம்ப அடிமையாயிட்டாரோன்னு வருத்தமா இருக்கு. 40 நிமிடத்துக்கொரு முறை கட்டிங் போடனுமாமே? ஏதோ நல்லா இருந்தா சரி.

விஜயகாந்த்,அனேகமா தன்னோட மாமனார் வீட்டு கம்பல்சன்ல கட்சி ஆரம்பிச்சமாதி தெரியுது.இல்லன்னா இவ்ளோ நிதானம் தவற வாய்ப்பில்லை.பிரச்சாரத்தின் போது, விஜயகாந்தின் கையையும் காலையும் வேனுடன் கட்டிவிடும் யோசனையில் பிரேமலதாவும்,சுதீசும் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்வது நம்பும்படியாகவே இருக்கிறது.

மேலும் விசாரிக்கையில், வீட்டிலே பேச வேண்டியதை பிரேமலாதா முன்னிலையில் பதிவு செய்து, பிரச்சாரத்தின் போது அதை ஓடவிட்டு, விஜயகாந்த் வாயை மட்டும் அசைத்தால் என்ன? என்று யோசிப்பதாகவும் நம்பப்படுகிறது. வடிவேல் வாய் ரோலிங்கில் கண்டுபிடிப்பதில் கில்லாடி என்பதால் அதிலும் சிக்கலாகத்தான் உள்ளது.

இப்படியொரு இக்கட்டான நிலமை விஜயகாந்துக்கு, தர்மபுரி ரிலீஸின்போதுகூட இல்லை என்று நெருங்கிய வட்டாரம் காதைக் கடிக்கிறது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த எலக்சன் ரொம்ப தமாசாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.

Tuesday, March 29, 2011

வடிவேலு பிரச்சாரம்... வாக்காளர்களிடம் ஏக ரெஸ்பான்ஸ்!!

விஜயகாந்த் பேச்சு பல சமயம் மிக தடிப்பாகவே இருக்கும். இன்றுகூட ராமதாஸை ரத்தம் குடிக்கும் ஓநாய் என்று விளித்திருக்கிறார். இது ராமதாஸுக்கு பொருத்தமா? அல்லது இல்லையா? என்பது விடயமில்லை. ஆனால் ஒரு மோசமான அரசியலுக்கு இது அடிகோலும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. சரி விசயத்துக்கு வருகிறேன். விஜயகாந்துக்கு ஏற்ற வடிவேலு பற்றிய செய்தி உங்களுக்காக. நன்றி:thatstamil

இதுவரை எத்தனையோ நடிகர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்குப் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத உச்ச அந்தஸ்து, ஒருவருக்கு கிடைத்திருக்கிறது. அவர்தான் வடிவேலு!


திருவாரூரில் கலைஞர் முன்னிலையில் விஜயகாந்தை தாக்கி அவர் பிரச்சாரத்தை ஆரம்பித்தபோது, 'இதென்ன ஏகத்துக்கும் தனிப்பட்ட தாக்குதல் நடத்துகிறாரே' என சற்று முகம் சுளிக்கத்தான் செய்தார்கள். ஆனால் அடுத்தடுத்த ஊர்களில் அவர் பிரச்சாரம் செய்த விதம், மக்களை நகரவிடாமல் கட்டிப்போட்டது. வடிவேலு அடுத்துப் பேசும் இடம் எங்கே என விசாரிக்கும் அளவுக்கு ஆர்வமாகிவிட்டனர் மக்கள்.

சினிமாவில் ஹீரோவாக 'லெக்' பைட் போட்டுக் கொண்டிருந்த விஜயகாந்தை, அரசியலில் 'காமெடியன்' எனும் அளவுக்கு வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் வடிவேலு.

துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில், வடிவேலு பேச்சுக்கு ஏக வரவேற்பு. மருதமலை, கிரி போன்ற படங்களில் அவர் பேசிய சில நகைச்சுவை பஞ்ச்களை விஜயகாந்தைக் குறிவைத்து டைமிங்காக அவர் அடிக்க, மக்கள் சிரித்தனர்.

"எதையாவது திங்கணும்னு ஆசையாயிருந்தா கடைக்கு போய் ஒரு வடைய வாங்கித் திண்ணு, பன்னை வாங்கித் திண்ணு.." என்று மருதமலை படத்தில் அவர் பேசும் காட்சி ரொம்பப் பிரபலம். இன்றைய பிரச்சாரத்தில், ஒரு இடத்தில் விஜயகாந்தின் முதல்வர் பதவி கனவை விமர்சித்த வடிவேலு, "விஜயகாந்துக்கு முதல்வராகனும்னு ஆசை இருந்தா எங்கிட்டாவது ஒரு அஞ்சு கோடி பத்து கோடி கொத்து சினிமா எடுக்கச் சொல்லி அந்த வேசத்தை போட்டுக்கலாம்... அதை விட்டுப்புட்டு முதல்வராகராம்... இது நல்லாவா இருக்கு!" என்ற மருதமலை பாணியிலேயே பேச, கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் கைதட்டிச் சிரித்தனர் மக்கள்.

திமுக, அதிமுக என்ற பேதமில்லாமல், அனைவருமே வடிவேலுவைப் பார்க்க வருகிறார்கள். அவர் பேச்சை ரசித்துக் கேட்கிறார்கள். 'யத்தா... நம்ம ஸ்டாலின் அய்யா மேல ஒரு மாசு மருவு சொல்ல முடியுமா... எவ்வளவு தங்கமான மனுசன். நீங்க போனாலும் வாசலுக்கு வந்து வரவேற்பாரு... அப்படி ஒரு மனுசன் ஜெயிச்சி ஆட்சிக்கு வந்தா நாடும் நல்லாருக்கும், உங்க தொகுதியும் நல்லாருக்கும். குடிகாரங்ககிட்ட நாட்ட கொடுத்துடாதீங்க, சொல்லிட்டேன்", என பெண்களிடம் அவர் பேசும் விதம் நன்றாகவே ஒர்க் அவுட்டாகிறது.

நடிகர்களின் பிரச்சாரத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போதும், வடிவேலுவுக்குதான் முதலிடம் தருகிறது கலைஞர் தொலைக்காட்சி. வடிவேலு பேச்சை முழுவதுமாக காட்டிவிட்டுத்தான், மற்றவர்களின் பேச்சைக் காட்டுகிறார்கள்.

சினிமாவில் நம்பர் ஒன் காமெடியன்... அரசியலில் நம்பர் ஒன் பிரச்சாரகர் என்ற பெயரை குறுகிய காலத்தில் பெற்றுவிட்டார் வடிவேலு!

ஹா ஹா, சரியானப் போட்டி.

இறுகிய முகத்துடன் கிளம்பினார் ஜெ.- ஹா ஹா சிப்பு சிப்பா வருது.

திருச்சி, கரூர், பெரம்பலூரில் சுற்றுப்பயணம் ஓவர்:இறுகிய முகத்துடன் கிளம்பினார் ஜெ.,




திருச்சி:திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை முடித்த ஜெயலலிதா, நேற்று இறுகிய முகத்துடன் திருச்சியில் இருந்து புறப்பட்டார்.சட்டசபை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா போட்டியிடுவதையொட்டி, கடந்த 24ம் தேதி தன் தேர்தல் பிரசாரத்தை ஸ்ரீரங்கத்தில் துவங்கினார்.செல்லும் இடமெல்லாம் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து, அவரது முகத்தில் உற்சாகம் குடி கொண்டது. மறுநாள், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
ஒன்றிரண்டு இடங்கள் தவிர மற்ற இடங்களில் மக்கள் கூட்டம் இல்லாததைக் கண்டு உள்ளூர ஜெயலலிதா அதிருப்தி அடைந்தாலும், அவரின் சிரித்த முகம் மட்டும் மாறவே இல்லை.அன்றிரவு விழுந்த, "டோஸ்' காரணமாக, மறுநாள் பிரசார பணிகளை, விடிய, விடிய நிர்வாகிகள் செய்தனர். ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த அந்தநல்லூர் ஒன்றியப் பகுதிகளில் மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர்.நான்காம் நாள் பிரசாரத்துக்கு, ஹெலிகாப்டர் மூலம் அவர் கரூர் சென்றார். அங்கிருந்து முசிறிக்கும், முசிறியில் இருந்து பெரம்பலூருக்கும் சென்றார். இருப்பினும், அப்பகுதிகளில் எதிர்பார்த்ததை விட மக்கள் கூட்டம் வெகுகுறைவாக இருந்தது. இதை கண்டு, ஜெயலலிதா அதிருப்தியடைந்தாலும், ஸ்ரீரங்கம் தொகுதியில் பேசாமல் விட்ட ஐந்து இடங்களில் சென்று பிரசாரம் செய்த பின்னரே, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பினார்.
நேற்று பிற்பகல் 2 மணிக்கு, கந்தர்வக்கோட்டை, தஞ்சை, குடந்தை பகுதிகளில் பிரசாரம் செய்ய, திருச்சி ஓட்டலில் இருந்து ஜெயலலிதா புறப்பட்டார். முதல் நாள் பிரசாரத்துக்கு கிளம்பிய போது இருந்த புன்னகை முகம் மாறி, நேற்று இறுகிய முகத்துடன் காணப்பட்டார்.அவரை பார்த்து கட்சி நிர்வாகிகள், "வருங்கால முதல்வர் வாழ்க' என்று உற்சாகமாக கோஷம் எழுப்பியும், அவரது முகத்தில் சிரிப்பு இல்லை. அவர்கள் பக்கம் திரும்பாமலேயே கும்பிடு போட்டுக் கொண்டே பிரசாரத்துக்கு கிளம்பி சென்றார்.

இது அம்மாவின் ஆசியோடும் அய்யா ராஜபக்சேவின் பேராசியோடும் விளையாடும் தினமலர் செய்திங்கோ.....

தினமலர் கருத்து கணிப்பு, திமுக கூட்டனி-174, அதிமுக கூட்டனி-60

தலைகீழ் விகிதங்கள்: கிராமப்புறங்களில் தி.மு.க.,; நகர்புறங்களில் அ.தி.மு.க., முன்னணி



தமிழகத்தில், காலம் காலமாக அரசியல் கட்சிகளுக்கு இருந்த ஓட்டு வங்கி, தற்போது தலைகீழாக மாறியுள்ளது. தி.மு.க.,வின் ஓட்டு வங்கியாக கிராமப்புறங்களும், அ.தி.மு.க., வின் நம்பிக்கைக் களங்களாக நகர்புறங்களும் மாறிவிட்டன.



அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கியது முதல், தமிழகத்தில் கிராமப்புறங்களிலும், குடிசைப் பகுதிகளிலும் அக்கட்சிக்கு ஓட்டுகள் மொத்த மொத்தமாக கிடைத்து வந்தன. எம்.ஜி.ஆர்., இருந்த போதே, நகர்பகுதிகளிலும், படித்த மற்றும் நடுத்தர மக்களிடமும், தி.மு.க.,வுக்கு ஆதரவு இருந்தது. குறிப்பாக, தலைநகரான சென்னை, எப்போதும் தி.மு.க.,வின் கோட்டையாகவே திகழ்ந்தது. மூன்று தேர்தல்களில் தொடர்ந்து வென்ற எம்.ஜி.ஆரால் கூட இதை மாற்ற முடியவில்லை.



எம்.ஜி.ஆருக்கு பிறகும், கிராமப்புறங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தொடர்ந்து நீடித்தது. எத்தனையோ பிளவுகள், இழப்புகளை சந்தித்தபோதும், "இரட்டை இலை' சின்னத்துக்கான ஓட்டு வங்கியை மாற்ற முடியவில்லை. அதே நேரத்தில் அரசு ஊழியர்கள், படித்தவர்கள், நடுத்தர மக்கள் போன்றோரின் ஆதரவு தி.மு.க.,வுக்குத் தொடர்ந்தது. 1991ல் ராஜிவ் கொலை என்ற அலை வீசியதால், சென்னையில் கூட தி.மு.க., தோல்வியைத் தழுவியது. ஆனாலும், தன் ஓட்டு வங்கியை தி.மு.க., தக்கவைத்துக் கொண்டது.



கடந்த, 2006 சட்டசபை தேர்தலுக்குப் பின், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கி நிலை தலைகீழாக மாறிவிட்டது. அந்த தேர்தலில், தி.மு.க.,வின் கோட்டையாகக் கருதப்பட்ட சென்னையில், மொத்தம் இருந்த 14 தொகுதிகளில், அ.தி.மு.க., ஏழு தொகுதிகளில் வென்றது. கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி போன்றோர் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதேபோல, கோவை, மதுரை போன்ற படித்த மக்கள் அதிகம் வாழும் நகர்பகுதிகளிலும் அ.தி.மு.க.,வே அதிக இடங்களில் வென்றது. இதன் பின் நடந்த இடைத்தேர்தல்களில் மதுரை மத்தி, மேற்கு தவிர மற்ற அனைத்துமே கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதிகளாக இருந்தன. இதனால், வாக்காளர்களை ஆளுங்கட்சி கவர்வதற்கு எளிதாக இருந்தது. ஆளுங்கட்சியும் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தது.



தற்போதைய நிலையில், கிராமப்புறங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில், தி.மு.க., அணிக்கு அதிக ஆதரவும், நடுத்தர மக்கள், படித்தவர்கள் மத்தியில் அ.தி.மு.க.,வுக்கு அதிக ஆதரவும் என, நிலைமை மாறியுள்ளது. இதை அறிந்துள்ள ஆளுங்கட்சியும், கிராமப்புற தொகுதிகளை நோக்கி படையெடுத்துள்ளது. தலைநகர் சென்னையில் ஐந்து தொகுதிகளை காங்கிரசுக்கும், பா.ம.க., மற்றும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு தலா ஒரு தொகுதியையும் தி.மு.க., விட்டுக்கொடுத்துள்ளது. முதல்வர், துணை முதல்வர், நிதியமைச்சர் போன்றவர்களே தொகுதி மாறியுள்ளனர். அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தேர்தல் களத்தில் இருந்தே ஒதுங்கிவிட்டார். அதேபோல, கிராமப்புற தொகுதியான ஆண்டிபட்டியில் போட்டியிட்ட ஜெயலலிதா, இம்முறை ஸ்ரீரங்கத்துக்கு மாறியிருப்பதும், படித்தவர்கள் மற்றும் மேல் ஜாதியினர் அதிகமுள்ள தொகுதி என்பதால் தான். இவ்வளவு ஆண்டுகளாக இருந்த ஓட்டு வங்கி, தலைகீழாக மாறியதற்கு, சில காரணங்கள் உள்ளன.



தி.மு.க., ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, பொங்கல் பரிசு, இலவச வேட்டி, சேலை, குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள், இலவச காஸ், ஊரக வேலை உறுதித் திட்டம், இலவச "டிவி' போன்ற திட்டங்களின் பயனை ஏழைகளும், கிராமப்புறத்தினரும் அதிகம் அனுபவித்துள்ளனர். அதனால், அவர்களின் ஆதரவு தி.மு.க., பக்கம் இருக்கிறது. இவர்கள் யாரும், ஸ்பெக்ட்ரம் ஊழல், குடும்ப அரசியல், லஞ்ச விவகாரம் போன்றவை பற்றி கவலைப்படவில்லை. அதேநேரத்தில், படித்தவர்கள், நடுத்தர மக்கள், "ஸ்பெக்ட்ரம்' விவகாரம் பற்றி நன்கு அறிந்துள்ளனர். விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்களது பார்வை, எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பக்கம் சென்றுள்ளது. இந்த தலைகீழ் மாற்றம், எந்த கூட்டணிக்கு சாதகமாக அமைகிறது என்பது, மே 13ல் தெரியும்.



எவ்வளவு தொகுதிகள்? : சென்னையில் 16, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, ஆலந்தூர், தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், ஸ்ரீரங்கம், பாளையங்கோட்டை, கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், ராஜபாளையம், கும்பகோணம் மற்றும் ஓசூர் உட்பட நகர்புற தொகுதிகள் மொத்தம், 60 இருக்கின்றன. மற்ற தொகுதிகள் அனைத்தும், பெரும்பான்மை கிராமப்புறங்களைக் கொண்டதாக இருக்கின்றன.

அதிமுக மற்றும் ராஜபக்சேவின் தீவிர ஆதரவு பத்திரிக்கையான தினமலரே இப்படி சொல்வதால் இதனை நிச்சயமாக நம்பலாம்.

ஜெயலலிதாவை தோற்கடிக்க வேறு யாரும் தேவையிலை, ஜெயலலிதாவே போதும்.

Monday, March 28, 2011

சாதனைகளைச் சொல்லிவிட்டேன், நன்றியை எதிர்பார்த்து நிற்கிறேன்:கலைஞர்.

சென்னை: நாடு நலம்பெற செய்துளள் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அவர்கள் காட்டப்போகும் நன்றியை எதிர்பார்த்து நிற்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெயலலிதா தனது பிரசாரக் கூட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும், எந்த நன்மையும் செய்யப்படவில்லை என்றும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கருணாநிதி என்ன செய்தார் என்றும் கேட்டதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. எனவே, திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்ககு என்ன செய்தது என்றும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை மேற்கொண்டது என்றும் விளக்கி்க் கூறுகிறேன்.

ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வீதம் மாதம் 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இதனால் மாதந்தோறும் ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்கள் பயனடைகின்றன. குறைந்த விலையில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா கோதுமை வழங்கப்படுகிறதே, இது மக்களுக்கு செய்யப்பட்ட நன்மை இல்லையா? விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நிறைவேற்றிய திட்டம் இல்லையா? மானிய விலையில் மளிகைப் பொருள்கள் என 50 ரூபாய்க்கு 10 சமையல் பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகின்றன.

22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி கடந்த ஐந்தாண்டு காலத்தில் செய்யப் பட்டிருக்கிறதே, ஜெயலலிதாவுக்கு இது மக்களுக்கு செய்யப்பட்ட நன்மையாகத் தெரியவில்லையா? 35 லட்சத்து 54 ஆயிரத்து 721 விவசாயிகளுக்கு 8 ஆயிரத்து 477 கோடியே 56 லட்சம் ரூபாய் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவைகள் எல்லாம் கடந்த ஐந்தாண்டு காலத்தில் கழக அரசில் செய்யப்பட்ட நன்மைகளா இல்லையா?

2005 2006ல் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு விலை ரூபாய் 600; 2010 2011ல் சாதா ரக நெல் விலை 1050 ரூபாய்; சன்ன ரக நெல் விலை 1100 ரூபாய்; உழவர்களும், வாங்குவோரும் பயனடைய மீண்டும் புதுப்பொலிவுடன் 117 உழவர் சந்தைகள்; மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு; பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2006ல் 50 சதவீத காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாக வழங்கி, ஊக்கப்படுத்தியதால் 2005 2006ல் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்த நிலையில்; 2009 2010 ம் ஆண்டில் 9 லட்சத்து ஓராயிரத்து 643 விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்றுப் பயிர்க் காப்பீடு செய்தனர். இதுவரை 9 லட்சத்து ஆயிரத்து 643 விவசாயிகளுக்கு 974 கோடி ரூபாய் இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டுள்ளது; இது மக்களுக்குச் செய்யப்பட்ட சாதனையா இல்லையா? கரும்பு விவசாயிகளுக்கு 2005 2006ல் டன் ஒன்றுக்கு வழங்கப்பட்ட விலை ரூ.1014; தற்போது டன் ஒன்றுக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது.

மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகரமான திட்டத்தின்கீழ் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம்; 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்புத் திட்டம்; விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளால் உணவு தானிய உற்பத்தி உயர்வு. விவசாயிகளைச் சுயஉதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து சுழல்நிதி வழங்கும் திட்டத்தின்கீழ் 27 ஆயிரத்து 294 குழுக்கள் அமைக்கப்பட்டு, 27 கோடியே 29 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சுழல்நிதியாக வழங்கப்பட்டு, 32 ஆயிரத்து 940 குழுக்களுக்கு 402 கோடியே 56 லட்சம் ரூபாய் பயிர்க் கடனாகவும் அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு இவைகள் எல்லாம் கடந்த ஐந்தாண்டு காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளாகத் தோன்றவில்லையா?

ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 494 கைத்தறி நெசவாளர்களுக்கும், 90 ஆயிரத்து 547 விசைத்தறி நெசவாளர்களுக்கும், சிறப்புத் தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற 2 லட்சத்து 39 ஆயிரத்து 511 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம்; மேலும், 2 லட்சம் பம்ப் செட்களுக்கும் இலவச மின்சார இணைப்பு படிப்படியாக வழங்கிட ஆணையிடப்பட்டு வழங்கப்படுகிறது.

3742 கோடியே 42 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு கோடியே 72 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை ஒரு கோடியே 62 லட்சத்து 59 ஆயிரத்து 526 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 661 கோடி ரூபாய் செலவில் 29 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன;

ஒரு லட்சத்து 79 ஆயிரம் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 995 ஏக்கர் இலவச நிலம்; 8 லட்சத்து 29 ஆயிரத்து 236 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா.

காமராஜர் பிறந்த நாளில் "கல்வி வளர்ச்சி நாள்'' என பள்ளிகளில், கல்வி விழா; 2 வயது முதல் 15 வயது வரை உள்ள 73 லட்சம் குழந்தைகள், மாணவ மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 5 நாட்களும் முட்டைகள்; முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப் பழங்கள்; தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 11 லட்சம் மாணவ, மாணவியருக்கு 10, 12 ம் வகுப்புகளின் அரசுத் தேர்வுக் கட்டணங்களும் ரத்து.

பட்டப்படிப்பு பயிலும் 3 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியரின் படிப்புக் கட்டணங்கள் ரத்து; 2010 2011 முதல் எம்.ஏ., எம்.எஸ்ஸி. வகுப்புகளுக்கும் படிப்புக் கட்டணங்கள் ரத்து. படிப்பைத் தொடர இயலாமல் இடையில் நிறுத்திய ஏழை மாணவர்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புகளுக்கேற்ற தொழிற் பயிற்சிகளைச் சமுதாயக் கல்லூரிகள் மூலம் பெற, ஒரு கோடி ரூபாய் செலவில் திறந்த நிலைப் பல்கலைக் கழகம் மூலம் தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை; ஆண்டுதோறும் 24 லட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 4 லட்சத்து 35 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்; ஏழை மகளிர்க்கு பட்டப்படிப்பு வரை வழங்கப்பட்ட இலவசக் கல்வி, முதுகலைப் பட்டப் படிப்பு வரை நீட்டிப்பு.

தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து. பட்டதாரிகள் இல்லாக் குடும்பங்களிலிருந்து தொழிற் கல்லூரிகளில் சேரும் முதல் மாணவர் அல்லது முதல் மாணவிக்கு கல்விக் கட்டணம் 20 ஆயிரம் ரூபாய் ரத்து; "மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி'' கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்; அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லா திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள். நூறாண்டு கனவை நனவாக்கிச் "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்'' சென்னையில் அமைப்பு.

நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிதியுதவி மாதம் 500 ரூபாய் என்பது 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. 2006க்குப்பின் புதிதாக 2500 நலிந்த கலைஞர்களுக்குத் தலா ஆயிரம் ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டு இதுவரை 9 ஆயிரத்து 563 கலைஞர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன் பெற்றுள்ளனர்.

4724 திருக்கோவில்களில் 523 கோடி ரூபாய் செவில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன;

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம் உட்பட அனைத்துத் திருமண உதவித் திட்டங்களின் நிதியுதவி 10 ஆயிரம் ரூபாய் என்பது 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு; 4 லட்சத்து 67 ஆயிரத்து 419 ஏழைப் பெண்களுக்கு 882 கோடியே 6 லட்சம் ரூபாய் நிதியுதவி; ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தலா 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டத்தின்கீழ் 25 லட்சத்து 76 ஆயிரத்து 612 ஏழை மகளிர்க்கு மொத்தம் 1389 கோடியே 42 லட்சம் ரூபாய் நிதியுதவி; 50 வயது கடந்து திருமணமாகாமல் வறுமையில் வாடும் 12 ஆயிரத்து 904 ஏழைப் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை; "வருமுன் காப்போம் திட்டம்'' மீண்டும் செயல் படுத்தப்பட்டு 18 ஆயிரத்து 742 மருத்துவ முகாம்களில் ஒரு கோடியே 77 லட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் ஏழை எளியோர் பயன்;

தமிழகத்தில் உள்ள 1,421 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்; புதிதாக உருவாக்கப்பட்ட 116 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலா மூன்று செவிலியர்களைப் பணியமர்த்தி 24 மணிநேரமும் மருத்துவ சேவை அளிப்பதால், அங்கு 2005 2006ல் நடைபெற்ற மகப்பேறுகளின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 532 என்பது, 2009 2010ல் 2 லட்சத்து 98 ஆயிரத்து 853 ஆக, மூன்று மடங்கு உயர்ந்து கிராமப்புற மகளிர் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே, அது ஐந்தாண்டு கால சாதனையாக அம்மையாருக்குத் தெரியவில்லையா?

குழந்தைகள் உயிர் காத்திட மூடிய அறுவை சிகிச்சைக்கு 20 ஆயிரம் ரூபாய்; சாதாரண திறந்த அறுவை சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாய்; கடினமான திறந்த அறுவை சிகிச்சைக்கு ஒரு லட்சம் ரூபாய் என அரசு நிதி உதவி வழங்கப்படுகிறது. 21.11.2007ல் தொடங்கப்பட்ட இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம், 3.6.2008ல் தொடங்கப் பட்ட பள்ளிச் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களின்கீழ் 3264 சிறார்க்கு 17 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் புகழ்வாய்ந்த 28 தனியார் மருத்துவ மனைகளின் மூலம் இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, குழந்தைச் செல்வங்களின் அரிய உயிர்கள் பாதுகாக்கப் பட்டுள்ளன.

கிராமப்புற ஏழைகளுக்கும் உடனடி மருத்துவ வசதி கிடைக்கச் செய்திட 445 ஊர்திகளுடன் கூடிய அதிநவீன "அவசர கால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டம்''தமிழகம் முழுவதும் நடை முறை; 8 லட்சத்து 8 ஆயிரத்து 907 பேர் பயன்; அரசு ஊழியர்களுக்கு புதிய "மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்''; "உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்''; இதுவரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 744 ஏழை மக்களுக்கு 667 கோடி ரூபாய் செலவில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன.

ஏறத்தாழ 2 லட்சத்து 35 ஆயிரத்து 464 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 62 ஆயிரத்து 349 கோடி ரூபாய் முதலீட்டிலான 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்; 24 அரசாணைகள் மூலம் 51 புதிய தொழிற்சாலைகள் அமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவரை 12 தொழிற் சாலைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. 4 லட்சத்து ஓராயிரத்து 704 படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 284 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது; ஏறத்தாழ 5 லட்சத்து 5 ஆயிரத்து 314 இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன;

ஆதரவற்ற முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 1.9.2006ல் 400 ரூபாய் எனவும், 24.11.2010 முதல் 500 ரூபாய் என மேலும் உயர்த்தப்பட்டு, மொத்தம் 23 லட்சத்து 71 ஆயிரத்து 370 பேர் மாதம் 500 ரூபாய் வீதம் உதவித்தொகை பெறுகின்றனர். இந்த உதவித் தொகை மாதம் 750 ரூபாயாக உயர்த்தப்படும் என தற்போது தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்குப் பராமரிப்பு உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 500 ரூபாய் என உயர்த்தப்பட்டு, 2006 முதல் ஆண்டுதோறும் 10 ஆயிரம் கடும் மாற்றுத் திறனாளிகள் பயன்;

1989ல் தர்மபுரி மாவட்டத்தில் கழக அரசு தொடங்கிய மகளிர் திட்டத்தின் மூலம் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை 5,54,538. இக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன் 9 ஆயிரத்து 32 கோடி ரூபாய். 2006க்குப்பின் 26 லட்சத்து 94 ஆயிரம் மகளிர் உறுப்பினரைக் கொண்ட ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 493 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு; 1068 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. 2,81,883 மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுழல் நிதி 281 கோடியே 88 லட்சம் ரூபாய்.

மகளிர் சுய உதவிக் குழுக்களைப் போலவே 2006க்குப்பின் 19 ஆயிரத்து 885 இளைஞர் சுயஉதவிக் குழுக்களும், 30 ஆயிரம் நகர்ப்புற சுயஉதவிக் குழுக்களும், 11 ஆயிரத்து 155 விவசாயிகள் கூட்டுப் பொறுப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டு நிதியுதவிகள் வழங்கப் படுகின்றன.

நிதிநிலையில் நலிந்த 30 நகராட்சிகளிலும் தலா 75 லட்சம் ரூபாய் செலவில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன; மாநகராட்சி, நகராட்சிகளின் நிதிநிலை மேம்பட்டு மக்களுக்கு வசதிகள் செய்திட அவை அரசுக்கு செலுத்த வேண்டிய 793 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி;

12 ஆயிரத்து 94 கோடி ரூபாய்ச் செலவில் 57 ஆயிரத்து 787 கிலோ மீட்டர் நீளச் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகளும் பராமரிப்புப் பணிகளும் நிறைவேற்றப் பட்டன; 4 ஆயிரத்து 730கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் இருவழித் தடங்களாக அகலப் படுத்தப்பட்டுள்ளன; தமிழகத்தில் உள்ள சாலைகளில் 1046 பாலங்கள் மற்றும் 3800 மிகச் சிறுபாலங்கள் 881 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப் பட்டுள்ளன; தமிழகத்தில் உள்ள 4,676 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளில் 3,226 கி.மீ நீளச் சாலைகள் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளன;

தலவரி, தலமேல்வரி, தண்ணீர்த் தீர்வை அனைத்தும் ரத்து; நிலவரி, ஏக்கர் ஒன்றுக்குப் புன்செய் நிலங்களுக்கு 15 ரூபாய் என்பது 2 ரூபாய் என்றும், நன்செய் நிலங்களுக்கு 50 ரூபாய் என்பது 5 ரூபாய் என்றும் பெயர் அளவிற்கு மட்டுமே வசூலிக்க அரசு ஆணை;

ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன. அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்கள் உதயம்;

இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு; அருந்ததியர் சமூகத்தின் அவலம் தீர 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு; சமத்துவ சமுதாயம் காணும்நோக்கில் அனைத்துச் சாதியாரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு சாதிகளையும் சார்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கனவே உருவாக்கப் பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் மேலும் 95 சமத்துவ புரங்கள் அமைத்து 240 சமத்துவபுரங்களையும் தந்தை பெரியார் திருவுருவச் சிலைகளுடன் நிர்மாணிக்கும் திட்டம் நடைமுறை; 95 சமத்துவ புரங்களில் இதுவரை 65 சமத்துவபுரங்கள் திறப்பு; 30 சமத்துவபுரங்கள் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்திலான 181 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான "அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்'' திறப்பு; ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச்செயலக வளாகம் திறந்து சாதனை; 100 கோடி ரூபாய் செலவில் அடையாறு தொல்காப்பியர் பூங்கா திட்டம்; சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் 8 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்திலான "செம்மொழிப் பூங்கா''திறப்பு;

சென்னை குடிநீர் பற்றாக்குறையை தீர்த்திட, வட சென்னை மீஞ்சூரில் "கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்'' நிறைவேற்றப்பட்டு திறப்பு; மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி ரூபாய் நிதியுதவியுடன் தென் சென்னையில் நெம்மேலியில் "கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்;'' ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதி உதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "மெட்ரோ ரெயில் திட்ட'' அமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன; 1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில், "ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;''630 கோடி ரூபாய்ச் செலவில், "ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றம்;''

சென்னைத் துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை 1,655 கோடி ரூபாய் மதிப்பீட்டில், "பறக்கும் சாலைத் திட்டம்;'' வேகமாக உருவாகி வருகிறது. மத சுதந்திரம் பேண "கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து;'' "மூன்றாவது காவல் ஆணையம்'' மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு, அது வழங்கிய 444 பரிந்துரைகளில் இதுவரை 278 பரிந்துரைகள் நடைமுறை; 2 லட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம்; ஓய்வூதியம்;

டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகளைகள் மீண்டும் வழங்கப்பட்டு, 1.1.2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் 6வது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன்காரணமாக, 11 ஆயிரத்து 93 கோடி ரூபாய் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையாக அனுமதிக்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 2 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பயன்பெறும்வகையில் 200 கோடி ரூபாய் கூடுதல் செலவில் ஒரு நபர் குழு பரிந்துரை நடைமுறை; ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்கி 163 கோடி ரூபாய்ச் செலவில் கூடுதல் சலுகைகள்; 2.73 லட்சம் ஆசிரியர்கள் பயன். அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊர்திப்படி 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட ஆணை;

21 லட்சம் குடிசை வீடுகளை 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்'' என்னும் புரட்சிகரமான திட்டம். நடப்பாண்டில் ஒரு வீட்டிற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம் 2,250 கோடி ரூபாய்ச் செலவில் 3 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டு, பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்குரிய பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின்கீழ் முதல் வீடு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தில் 9.10.2010 அன்று பயனாளிக்கு வழங்கப்பட்டது. இதுவரை 75 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 31.3.2011க்குள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கான்கிரீட் வீடுகளும், 15.4.2011க்குள் 2 லட்சம் கான்கிரீட் வீடுகளும் கட்டி முடிக்கப்படும். இதுவரை இத்திட்டத்திற்கு 1082 கோடி ரூபாய் அரசு செலவிட்டுள்ளது.

மேலும் 12 லட்சம் பயனாளிகளுக்கு தகுதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக மேலும் 3 லட்சம் குடிசைகள் இத்திட்டத்தின்கீழ் கான்கிரீட் வீடுகளாகக் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு 2011 பிப்ரவரியில் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கான அரசு மானியம் 75 ஆயிரம் ரூபாய் என்பது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப் பட்டுள்ளது.

இன்னும் துறைவாயிலாக கழக அரசின் ஐந்தாண்டு காலச் சாதனைகளையும் பட்டியலிடுவதென்றால் இடம் போதாது என்பதால் அந்தப் பட்டியலை நிறுத்தி விட்டேன். தற்போது கடந்த ஐந்தாண்டுகளில் எந்தச் சாதனையும் செய்யப்படவில்லை என்று தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசப்படுவதால் ஒட்டுமொத்த சாதனைகள் சிலவற்றை அவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஞாபகப்படுத்துவதற்காக இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

கடந்த 5 ஆண்டுகளில் என்ன சாதனைகள் புரிந்தோம் என்பதை எடுத்துச் சொல்லிவிட்டேன். இதையெல்லாம் அனுபவிக்கும் தமிழ்நாட்டு மக்கள் காட்டப்போகும் நன்றியினை எதிர்பார்த்து நிற்கின்றேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி:thatstamil

Vikatan Poll
வாக்குகளாக மாறக் கூடிய தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருப்பது...
திமுக. 54.83 %
அதிமுக. 45.17 %

இது கொசுறு.

Wednesday, January 12, 2011

ஏழை வாக்காளனும் ஸ்பெக்ட்ரமும்

எலெக்சன் வந்துகொண்டே இருக்கிறது. தினசரிகளும், வாராந்தரிகளும் எல்லாம் தெரிந்த கடவுள்களாக கதைவிட்டு காசு பார்க்கின்றனர். நிரம்பப் படித்தவர்கள் செய்திகளுக்குள் தலையைவிட்டுக்கொண்டு கருத்து சொல்லவும் காசு கேட்கிறார்கள். கொஞ்சம் நஞ்சம் படித்தவர்கள் தெரியாததையும் தெரிந்தது போல கெட்டுகெதரில் பேசிக்கொண்டோ, இணையத்தில் அரட்டிக்கொண்டோ இருக்கிறார்கள். வெளிநாட்டில் வேலை செய்யும் வீரதீர இளைஞர்களோ சுட்டும் சுடாமலும் மேதாவித்தனமாக தனிராஜ்யமாக கருத்துகளை அள்ளித்தெளிக்கிறார்கள். விசயம் தெரிந்த சில வேகமான இளைஞர்களோ அவனும் கொள்ளையன், இவனும் கொள்ளையன், அதோ அவளும் கொள்ளைக்கார்யென அனைவரையும் முச்சந்தியில் நிறுத்த முனையச் செய்து, எந்த ஒரு யோக்கியவானையும் காட்ட மறுக்கிறார்கள்.

மேலே சொன்ன இவர்களுக்கும் எலக்சனுக்கும் என்ன சம்மந்தம். ஒரு மண்ணும் இல்லை. மண் சாலையில் வாகனம் போகும்பொழுது புறப்படும் தூசு போன்றவர்கள். வாகனம் சென்றதும் அடங்கிவிடும். அதாவது, இவர்கள் மாடு ஒன்னுக்குப்போவது போல் பேசிக்கொண்டு இருப்பார்களேயொழிய ஓட்டுப்போட போகமாட்டார்கள்.

ஆனால் இந்த ஏழை வாக்காளன் இருக்கானே அதாங்க, எங்கும் நிறைந்து இருக்கும் தினக்கூலிகள், அவர்களுக்கு ஸ்பெக்ட்ரமும் தெரியாது ஃபோர்பர்சும் தெரியாது.

ஆனாக் கண்டிப்பா ஓட்டு மட்டும் போட்றுவாங்க. யாருக்கு? அதான் இப்போதைய முக்கியக் கேள்வி. பதிரிக்கைகள் ஆயிரம் கணித்தாலும், அதையெல்லாம் மண்ணாக்கிவிட்டு மகுடம் ஏற்ற வைக்கப்போவது இந்த ஏழை வாக்காளந்தான். விழும் ஓட்டில் 90 சதவீதம் படிக்காத, இல்லை படித்த ஆனால் பத்திரிக்கை படிக்காத ஏழை வாக்காளனுடையது.

அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும்? ஒரு மண்ணும் இல்லை. இன்று வேலைக்கு சென்றால் மூன்று வேலை சாப்பாடு. அது மட்டும்ந்தான். அதுவும் அந்த ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாயில் வாங்கி, ஓசி ஸ்டவ்வில், ஈசி கேசில் சமைத்துவிட்டு, ஆறமர்ந்து 14 இஞ்ச் கலர் டிவியில் மானாட மயிலாட பாக்கும்போது கடவுளே கருணாநிதின்னு சொல்லாம இருப்பாங்களான்னு தெரியல. கண்டிப்பா சொல்லுவாங்க. ஆமாம், பசி அவ்வளவு வலிமையானது. அந்த வலி பெரியளவுக்கு குறைஞ்சு இருக்கிறத, கிராமங்களப் பாக்கும்போது தெளிவாத் தெரியுது.

நான் சிறுவனாக இருந்தபோது இருந்த ஏழைத்தோற்றம் இப்பொழுது இல்லை. கோவனத்துடன் ஒரு ஏழையப் பார்ப்பது அருகிவிட்டது. கிட்டத்தட்ட எல்லோரும் நல்லுடை உடுத்தி, மூவேளை உண்டு, மொபைலோடு வலம் வருவது கண்ணுக்கு குளிர்ச்சி. தானா உருவான வளர்ச்சின்னு சொன்னாலும், கடவுள் கருணாநிதி கொடுத்தார்ன்னு ஒருவேள சொல்லிக்கொள்ளலாம்.அது ஓட்டாவும் மாறலாம்.

கொஞ்சம் நஞ்சம் ஏழை விவசாயிகள் இன்னும் கடனவுடன வாங்கி, இன்னும் விவசாயம் செய்யுறான்னா, கண்டிப்பா போனமுறை போல இம்முறையும் கலைஞர் தள்ளுபடி செய்வாருன்னு நம்பிக்கையா இருக்கலாம்.அதுபோக பயிர் இன்ஸ்சூரன்ஸ் கொடுத்து விளையாமப் போனாலும் காசுடான்னு சொல்ல வெச்ச கலஞருன்னு நினைக்கலாம். ஆக, விவசாயும் கலைஞருக்கு ஓட்டு போடலாம்.

இதுவரைக்கும் செருப்பு தச்சுகிட்டு எம்ஜியார் பின்னாடி ஓடிகிட்டு இருந்த அருந்ததியருக்கு உள் ஒதுக்கீட்ல ஒளியேத்தி, செருப்பு பிஞ்சா தூக்கிதான் போடனுமுன்னு நிலமைக்கு கொண்டுவந்த கலைஞருக்கு அவங்களும் ஓட்ட ஓங்கிப்போடலாம்.

காய்ச்சல் வந்தாலும், ஹார்ட் அட்டாக் வந்தாலும் கிராமத்து அனுபவ வைத்தியர்கிட்ட போனது நின்னு, தூக்குடா அப்பல்லோவுக்கு, கலைஞர் காப்பீடு இருக்குன்னு சொல்லவெச்ச கலைஞருக்கு ஏழைபாளைகள் ஓட்டுப்போடலாம்.

கூப்பிட்ட உடனே ஓடோடிவர்ற 108, மத்ய சர்க்காரு தந்ததாதா, இல்ல மாநில சர்க்கார் தந்ததான்னு யோசிக்க எல்லாம் நேரமில்லாம, கடவுள் கருணாநிதிதான் அனுப்பிச்சாருன்னு ஓட்டப்போடலாம்.

ரெண்டு ஏக்கர் நெலம் எல்லாருக்கும் கெடச்சதாங்றது முக்கியமில்ல, அதில இருக்கிற ஊழலும் முக்கியமில்ல. கெடச்சதா? ஆமா கெடச்சது. அப்ப கலைஞருக்கு ஓங்கிக் குத்துன்னு சொல்லலாம்.

கூரைவீடெல்லாம் காரை வீடாச்சு. இன்னும் ஆகும். கெடச்சவங்க கலைஞருக்கு ஓட்டப்போடலாம். அதுல கவுன்சிலருக்கு கொடுத்த முவ்வாயிரத்தப்பத்திக் கவலையில்லை.

வீட்ல சும்மா இருந்த பெண்களுக்கு குழுமம் அமைச்சு, உதவித் தொகை கொடுத்து பாக்குற கிராமங்களெல்லாம் பெண்கள் சுய உதவிக்குழுன்னு சொல்ல வெச்சதுக்கு தாய்க்குலங்களும் ஓட்டுகள அள்ளி வீசலாம்.

இந்த ஏழை வாக்காளனத் தவிர, அரசாங்க ஊழியர் கதையை சொல்லவும் செய்யனுமா? அவங்களுக்கு எப்பவுமே கலைஞர்தான் தோஸ்த். போக்குவரத்து சங்கத் தேர்தல பார்த்தது ஞாபகம் இல்லன்னா, கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்.

இப்படி இண்டு இடுக்கு இல்லாம கலைஞர் நுழைஞ்சுட்டார்ன்னுதான் தோனுது.

இந்த கண்டிப்பா ஓட்டுப்போடும் ஏழைகளுக்கு, ஸ்பெக்ட்ரமும் தேவையில்ல. ஈழமும் தேவையில்ல. ஓட்டுக்கு கொடுக்கப்படும் பணத்தின் வரலாறும் தேவையில்லை.

ஆனா ஓட்டு மட்டும் போட நிச்சயமா வரிசையில நிப்பான்.

ஆனால் அதுல ஊழல், இதுல ஊழல்ன்னு மாஞ்சு மாஞ்சு பேசியும் எழுதியும் திரியும் மேதாவிகளுக்கு, தேர்தல் தினம் ஒரு அரசாங்க விடுமுறை,அவ்வளவே.

கூட்டணி இப்படியென்றால்...

தி.மு.க + காங் + பா.ம.க = 174 இடங்கள்

அ.தி.மு.க + தே.மு.தி.க + ம.தி.மு.க + கம்யூனிஸ்ட் = 60

ஒருவேளை காங்கிரஸ் இடம் மாறினால், தி.மு.க வுக்கு 10 இடங்கள் மட்டுமே இழப்பு. பா.மா.கா வும் தடமாறினால் இன்னொரு 10 இடங்கள் இழப்பு. நிச்சயமாக கலைஞருக்கு இன்னொரு முறையும் மகுடம் தவறப்போவதில்லை இந்த ஏழை வாக்காளனால். இல்லை இல்லை இந்த படித்த ஓட்டுப் போடாத வாக்காளனால்.

Friday, November 12, 2010

கண்கலங்க வைத்தக் கட்டுரை.




"வள்ளியின் பிள்ளை நான்!"


குறப்புத்தி' என்கிறீர்கள். 'குறப்பய மாதிரி முழிக்கிறான்' என குழந்தையைக்


கொஞ்சுகிறீர்கள். 'குறவன் புத்தி சும்மா இருக்குமா?' என்கிறீர்கள். அன்றாட வாழ்வில், குற்ற உணர்ச்சி எதுவும் இன்றி நீங்கள் உதிர்க்கும் சொற்கள் ஒவ்வொன்றும், சமூகத்தின் அடிமட்டத்தில் வாழும் குறவர் இன மக்களைக் குறிவைத்துக் காயப்படுத்துவதை நீங்கள்அறி வீர்களா?"-தீர்க்கமாகக் கேட்கிறார் மணிக்கோ. பன்னீர்செல்வம். குறவர் இனத்தில் இருந்து படித்து, முன்னேறி வந்திருக்கும் வெகு சிலரில் ஒருவர். 'சனங்களின் பாட்டு', 'தொடரும் காலனிய குற்றம்', 'குறவர்-பழங்குடி இன வரைவியல் ஆய்வு' என்ற கவனிக்கப்பட்ட நூல்களை எழுதியவர். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து வரும் பன்னீர்செல்வம், அடிமட்ட சாதியில் பிறந்து, ஆதிக்க சாதிகளின் உலகத்தில் பிரவேசிப்பதன் உளவியல், உலக சிக்கல்களை மையமாகக்கொண்டு நாவல் ஒன்றை எழுதிக்கொண்டு இருக்கிறார்.

"தமிழ்நாட்டில் குறவர் என்றாலே, எல்லோருக்கும் நினைவில் வருவது நரிக்குறவர்கள்தான். அவர்கள் வட இந்தியாவின் ஆரவல்லி மலைத்தொடரில் இருந்தும், குஜராத் பகுதிகளில் இருந்தும் நாடோடிகளாக இடம் பெயர்ந்து வந்தவர்கள். இவர்களைத் தவிர, தமிழ்நாட்டில் 28 வகையான குறவர்கள் இருக்கிறார்கள். கல்குறவர், கறிவேப்பிலை குறவர், கூடைமுறம் கட்டிக் குறவர், உப்புக் குறவர், பூனைக்குத்தி குறவர்... என்ற இவர்கள் அத்தனை பேரும் தமிழ்நாட்டின் பூர்வீகப் பழங்குடிகள். மலைக் காடுகளில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்கள். திருச்செந்தூர் கோயிலில் கையில் மந்திரக்கோல் வைத்துக்கொண்டு சோதிடம் பார்க்கும் பெண்ணிடம் 'நீங்கள் யார்?' எனக் கேளுங்கள், 'நாங்கள் வள்ளிமக்கா' என்பாள். நாங்கள் வள்ளியின் வழி வந்தவர்கள். குறிஞ்சி நிலத்தில், தேனும் தினை மாவும் உண்டு வளர்ந்த ஆதித் தமிழர்கள். எங்களிடம் இருந்து வனம் பிடுங்கப்பட்ட பின்பு, மெள்ள மெள்ள சமவெளிப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தோம்.



நான் 'கூடைமுறம் கட்டிக் குறவர்' பிரிவைச் சேர்ந்தவன். சாலை ஓரங்களில் அமர்ந்து கூடைமுறம் கட்டுவதே எங்கள் தொழில். திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டி, சொந்த ஊர். தந்தைக்கு அரசு நிறுவனத்தில் வாட்ச்மேன் வேலை கிடைத்ததால், தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்தோம். புதிய ஊரில் எங்கள் சாதி யாருக்கும் தெரியாது என்பதால், எங்களை 'மதுரைப் பக்கத்தில் இருந்து வந்த பிள்ளைமார்' என்றே நினைத்தார்கள். பிறப்பால் தலித்தாக இருந்துகொண்டு, நடைமுறை வாழ்க்கையில் உயர்சாதியாக நடிக்க ஆரம்பித்தோம். ஆனால், அது பெரிய துயரமானதாக இருந்தது. எந்த நேரமும் சாதி வெளியில் தெரிந்துவிடுமோ என்று பதற்றமாக இருக்கும். யாராவது 'குறப்பய மாதிரி இருக்கான் பாரு!' என்று யாரையேனும் திட்டினால், அப்போது நான் உயர்சாதி மனநிலையில் அதைச் சகித்துக்கொள்ள வேண்டும். ஒருநாள், என் அப்பாயி இறந்துபோன சேதி கேட்டதும், அப்பா வாய்விட்டு அழுதார். பதறிப்போன அம்மா, 'மெதுவா அழுங்க' என அப்பாவைத் தடுத்தார். ஏனெனில், விஷயம் தெரிந்தால் சுற்றி உள்ளவர்களும் துக்கத்துக்கு ஊருக்கு வருவதாகச் சொல்வார்கள். வந்தால் சாதி தெரிந்துவிடும். சாவு தெரிந்தாலும் சாதி தெரியக் கூடாதே!

கல்லூரிப் படிப்பு முடித்து 'தமிழய்யா'வாக தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே இருக்கும் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தேன். சுற்று வட்டாரத்தில் 'தமிழய்யா' என்று எனக்கு நல்ல பெயர். நான் தஞ்சாவூரில் இருந்து வந்துஇருந்ததால், என்னை 'கள்ளர்' என்று நினைத்துக் கொண்டார்கள். ஒருமுறை என் மாணவன் ஒருவன் யதேச்சையாக என் சான்றிதழில் 'இந்து-குறவன்' என்று எழுதி இருந்ததைப் பார்த்துவிட்டான். கதவை மூடிக்கொண்டு, 'இதை எல்லாம் வெளியில் சொல்லாதடா' என்று கேட்டுக்கொண்டாலும், அவன் பேச்சுவழக்கில் சொல்லிவிட்டான். 'தமிழய்யா ஒரு குறவர்' என்ற விஷயம் மெதுவாகத் தெரிய ஆரம்பித்தது. உடன் தங்கியிருந்த ஆசிரியரின் பணம் திருட்டு போனபோது, 'குறவன் புத்தி சும்மா இருக்குமா?' என்று தொடர்பே இல்லாத என் மீது திருட்டுப் பட்டம் சுமத்தப் பட்டது. இதை எல்லாம் கடந்து, சம்பள உயர்வுக்காக மட்டுமே ஆசிரியர்கள் போராடிய சமயத் தில், மாணவர்களின் உரிமைகளுக்காக நான் போராடினேன். அதனால், சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து விடைபெறும் வரையிலும் மாணவர்கள் என் மீது அன்பாகவே இருந்தார்கள்!" என்கிற பன்னீர்செல்வம்,

ஏற்கெனவே ஒரு பி.ஹெச்டி முடித்தவர். தற்போது, 'தமிழக கறுப்பின இலக்கியப் படைப்புகள் கட்டமைக்கும் அடையாள அரசியல்' என்ற தலைப்பில், இரண்டாவது பி.ஹெச்டி. செய்துகொண்டு இருக்கிறார்.

"இப்போதும் திருடர்கள் பற்றி எச்சரிக்க போலீஸ் கொடுக்கும் அறிவிப்பு என்ன? 'திருடர்கள் எந்த வடிவிலும் வரலாம். பச்சைக் குத்து வதுபோல, அம்மி கொத்துவதுபோல, பூனைக் குத்துவதுபோல, கூடை முடைவதுபோல... எந்த வடிவிலும் வரலாம், ஜாக்கிரதை!' என போலீஸ் எச்சரிப்பது முழுக்க குறவர்களைக் குறிவைத்துதான். இது எல்லாம் சேர்ந்து, மக்கள் மனதில் குறவர்கள் என்றாலே, திருடர்கள் என்ற உளவியலை விதைக்கிறது. ஆனால், உண்மை அதுஅல்ல. என்னைப் போன்ற வெகு சிலரைத் தவிர, இன்னமும் குறவர்கள் அத்தனை பேரும் பன்றி மேய்த்துக்கொண்டும் துப்புரவு வேலைகள் செய்துகொண்டும் விளிம்பு நிலையில்தான் வாழ்கிறார்கள். இப்படியான எனது வாழ்க்கை அனுபவங்களை, ஒரு குறவர் இனத்துக்காரன் உலகத்தை எதிர்கொள்ளும்போது நடக்கும் உண்மைகளை அப்படியே எழுதி இருக்கிறேன். குறிஞ்சி நிலத்தில், தேனும் தினைமாவும் தின்று வளர்ந்த வள்ளியின் பிள்ளைகள், சமவெளியில் சாக்கடையோரம் தள்ளப்பட்ட கதை அது!"


நன்றி: ஆனந்த விகடன்

டிஸ்கி: படித்து முடித்ததும் மனதை பிசைந்ததால் கட் அண்ட் பேஸ்ட், விகடன் படிக்காதவர்களுக்காக.

Thursday, November 11, 2010

என்கவுண்டரும் என் கொஸ்டினும்..

ஒரு பத்து வருசத்தக்கு முன்னால, பாண்டியம்மான்னு ஒரு பொம்பளயக் காணாமுன்னு அந்தம்மா வீட்டுக்காரரு போலீஸ் ஸ்டேசன்ல கம்ப்லெய்ண்டு பண்றாரு. நம்ம எவர் ப்ரக்னண்ட் நெவர் டெலிவரி போலிஸு "எலேய் நல்லாத் தேடி பாருலே, எவிங்கூடயாச்சும் ஓடிகீடி போயிறக்கப்போறா"ன்னு அட்வஸ்வேறக் கொடுக்குது.

போனவாரம், ஸ்கூலுக்கு அனுப்புன பிள்ளைங்களக் காணோமுன்னு பதறிப்போயி, போலீஸ்கிட்ட கம்ப்ளெயிண்ட கொடுத்துட்டு, பாவம் அவங்களும் முடிஞ்சளவுக்குத் தேட்றாங்க. நம்ம தீயணைப்பு வண்டிமாதி, போலிஸும் மெதுவா தொப்பைய தூக்கிகிட்டு கெளம்புது.

பொண்டாட்டிய தேடி அலுத்துப்போன பாண்டியம்மா புருசன், கோர்ட்டுக்குப் போயி " சாமி.. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும், எம் பொண்டாட்டி உசுரோட வேணும்"ன்னு சொல்ல, நீதிபதி அய்யாவும் கெடு கொடுத்து உசுரோடக் கொண்டாங்கய்யான்னு சொல்லிட்டாரு.

பிள்ளைங்களக் கடத்திட்டாங்கங்ற செய்தி, தீயாப் பரவி எதிர்க்கச்சிக்காரங்கெல்லாம் எடக்கு மடக்கா மடக்கவும் தமிழினத் தலைவருக்கும் கோபம் பொத்துகிட்டுவர, "என்ன செய்வீங்களோத் தெரியாது, இன்னக்கிக்குள்ள பிடிச்சாகனுமுன்னு சொல்லிட்டாரு.

ஊரோரமாப் கரிக்கட்டையாய் ஒருப் பொம்பளப் பொணம். பாண்டியம்மாதான்னு போலீஸ் பாண்டியம்மா புருஷங்கிட்ட சொல்லுது. கரியாக் கெடக்கு. ராஜ்கிரன் கணக்கா சாம்பல முகத்துல பூசிகிட்டு அழுதுகுமிக்கிறாரு பாண்டியம்மா புருஷன். யாருமேலெல்லாம் சந்தேகமுன்னு ஒரு லிஸ்ட்ட பாண்டியம்மா புருஷன் சொல்றாரு. தேடிக் கிளம்புது ஸ்காட்லாண்டு போலிஸ்.

அங்கயிங்க தேடி அலுத்துப் போன நேரத்துல, கொழந்தங்க ரெண்டும் ஓட்ற தண்ணியில பொணமா ஒதுங்குது. கோயமுத்தூரே அழுகுது. கோபம் கொப்பளிக்குது. போலிஸு, கடைசியாப்பாத்த பாட்டிகிட்ட க்ளூக் கேக்குது. தொப்பையத் தூக்கிகிட்டு கெளம்புது போலிஸு.

பாண்டியம்மாளக் கொன்னுட்டு அதே ஊர்ல தெனாவெட்டாத் திரிஞ்ச "அந்த" பத்துப் பேர அள்ளிகிட்டு கோர்ட்டுக்குப் போகுது. விசாரனையப்போ, "பாண்டியம்மாளக் கற்பழிச்சதையும், கொலை செஞ்சதையும், எரிச்சதையும்" அப்படியே தத்ரூபமா ஜட்ஜ் முன்னாடி நடிச்சுக்காட்றாங்க. ஜட்ஜ் கண்ணுல நெருப்பு.

கொழந்தைகளைக் கொன்னுட்டு தெகிரியமா கோயமுத்தூருக்கே திரும்பி வந்துகிட்டு இருந்த மோகனக் கிருஷ்ணனையும், கூட்டாளியயும் அழகா கோத்துப் பிடிக்கிறாங்க போலிஸு. கெடுத்ததையும், கொலை பண்ணுனதையும் வாக்குமூலமா தர்றான் கொலகாரப்பாவி மோகனக் கிருஷ்ணன். கோவை மக்கள் மட்டுமில்ல தமிழக மக்க எல்லாத்துக்குமே கோவமுன்னா அப்படியொருக் கோவம்.விட்டா சாவடிக்கிற வெறி.

ஜட்ஜ் ஆயுள் தண்டனைக் கொடுத்து பேனா நிப்ப ஒடச்சிக் கெடாசுறாரு. பாண்டியம்மா புருஷன் ஜட்ஜப் பாத்து " யெய்யா நீங்கதேன் எங்க கொல தெய்வம், நீதி பொழச்சிருச்சுய்யா, இன்னக்கிதான் தீபாவளி"ன்னு ஓன்னு கண்ணீர் விட்றாரு.

எதிர்கச்சி ஏடாசி, மக்களோடக் கொந்தளிப்பு "சுட்டுத்தள்ளுய்யா"ன்னு ஆர்டரு. விசாரிக்கப்போன விடிகால அஞ்சு மணிக்கு பொட்டு பொட்டுன்னு மூனு தோட்டா மோகன கிருஷ்ணன் உடம்புல. பொணமானப் போட்டோ. எல்லா மக்களும் ஆனந்தக் கண்ணீரு. நரகாசூரன் செத்தான்யான்னு கோசம். கொழந்தைகளப் பெத்தவங்க " எங்களுக்கு இன்னிக்கிதான் தீபாவளி"ன்னு கண்ணீர்விட. ஒரு நல்லத் தீர்ப்பு!!!?

பாண்டியம்மாளக் கடத்தி கொலை செஞ்சு ஒரு பத்து வருசம் கழிச்சு, பாண்டியம்மா உயிரோட வந்து, "யெய்யா ஜஜ்ஜு, என்ன யாரும் கடத்தல, நாந்தேன் இஷ்டப்பட்டு இதோ.. இந்தாளுகூடப்போயி, மக்கமாறப் பெத்துட்டு உசுரோட இருக்கேன்"ன்னு சொல்லுச்சு. ஸ்காட்லாண்டு தமிழ் போலீஸுக்கு ஒரு மசுரும் வெளங்கல.

அப்போ அந்த எரிஞ்சுப்போண அந்தப் பொம்பளப் பொணம் யாரு?
அவளக் கொண்டத யாரு?
இத்தன வருசமா கொலையே செய்யாம ஆயுள்கைதியா ஜெயிலுல இருந்தாங்களே அவங்களக்கு என்னத்த கொடுத்தா சரியான நஷ்ட ஈடாகும்?
அப்ப நம்ம போலீஸ் நெஜமாலுமே ஸ்காட்லாண்டு போலிஸு இல்லையா ?
வெரும் சிரிப்பு போலிஸா?

அப்படின்னா, இந்த மோகனக்கிருஷ்ணனையும் நாளக்கி யாராவதும் நிரபாதின்னு சொல்லிடுவாங்களா?
ஒரு வேள நெஜமான குத்தவாளிங்க மிடுக்கா வெளியில அலையுறாங்களா?
அய்யய்யோ ஒன்னுமே புரியலயே...

ஏங்க ஒங்களுக்கு எதாச்சும் வெளங்குது...?

Tuesday, November 2, 2010

குழந்தைகள் கடத்தலும் பெற்றோர்களின் கதறலும்.

கடந்த தினங்களில் பொதுவாக எல்லா தினசரிகளிலும் கோவையில் நடந்த குழந்தைக் கடத்தலையும், கொலை செய்ததையும் போட்டு அனைத்துப் பெற்றோர்களின் பி.பி யை எகிறவைத்தது.

படிக்கும்போதே மனது கனத்துவிடுகிறது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பாவிகளுக்கு பணம்தான் தேவையென்றால் திருடியாவதும் சாதித்துக்கொள்ளலாம். அதைவிடுத்து ஒன்னுமே அறியாத அந்த பச்சை மண்ணுகளை பலவிதங்களில் துன்புறுத்தி தண்ணீரில் தள்ளிவிட்டுள்ளனர். மேலும் அந்தப் பெண்னை அவர்கள் பலாத்காரம்படுத்தியிருக்கலாம் என்று கேள்விப்படும்போது அந்த பாதகனின் "அதை" வெட்டி எறிந்தால்தான் என்ன என்று இருக்கிறது.

பாவம் அந்தப் பெற்றோர்களுக்கு இனி ஒவ்வொரு நாளும் நரகமே. இருந்த இரண்டு குழந்தைகளையும் அள்ளிக்கொடுத்துவிட்டார்கள். இனி எப்படிதான் அந்த நரகத்திலிருந்து அந்த பெற்றோர்கள் வெளியே வரப்போகிறார்களோ? யாரு என்ன ஆறுதல் சொன்னாலும் அதெல்லாம் ஈடாகிவிடுமா?

இது முதல் சம்பவமும் இல்லை. விட்டுவிட்டு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பெற்றோர்களும் அரக்கப்பறக்க ஓடும் வாழ்க்கையில் நிதானம் தவறுகின்றனர். இனி அரசாங்க எந்திரத்தை நம்பி எந்த ப்ரோயோஜனமும் இல்லை. நாமே நம்மைக் காத்துகொண்டால்தான் உண்டு. என்ன செய்யலாம்?

எக்காரணம்கொண்டும் குழ்ந்தைகளை ஓட்டுனரை நம்பியோ ஆயாக்களை நம்பியோ அனுப்பாதீர்கள். குழ்ந்தைகளுக்காகத்தான் நாம் இத்தனை இன்னல்களிலும் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். எனவே அவர்களுக்காக நாம் மெனக்கெட்டே ஆகவேண்டும். மேலும் ஓட்டுனர்களும்,ஆயாக்களும் சாதாரண மனிதர்களே. அவர்கள் அடுத்தவரிடம் வேலை செய்யும் நிலையை நோக்கினாலே அவர்களின் பொருளாதாரத்தின் நிலமை புரியும். அவர்களுக்கும் கடன்சுமை, பிக்கல் பிடுங்கல் நெஞ்சை அழுத்தும். அது என்றாவது ஒரு நாள் பொல்லாத சிந்தனையில் தள்ளி, நமக்கும் நரகமாக மாறலாம். எனவே ஓட்டுனரையோ, ஆயாக்களையோ ஆழ்ந்து கவனித்துகொள்வது நலம்.

குழந்தைகளை தனிக்காரிலோ அல்லது தனி ஆட்டோவிலோ பள்ளிக்கனுப்புவதைவிட பள்ளிப்பேருந்தில் எல்லாக் குழந்தைகளுடன் அனுப்புவது சிறந்தது.அதுவும் நம் கண்முன்னே ஏற்றிவிடுதல் நலம்.

குழந்தைகளுக்கு எதாவது தேவைப்படும்பொழுது தனியாக ஓட்டுனருடனோ அல்லது ஆயாக்களுடனோ அனுப்பி பழக்கக்கூடாது. ஏனென்றால் அவர்கள் கூலிக்கு வேலை செய்பவர்கள். என்றாவது ஒரு நாள் அவர்கள் வேறு வேலைக்கோ அல்லது வேறு வீட்டுக்கோ செல்லலாம். அப்பொழுது நீங்கள் செய்த எதோ ஒரு விசயம் அவர்களுக்கு உங்களை எதிரியாக்கலாம். அது குழந்தைகளுக்கு வினையாக முடியலாம்.

என்னதான் ஆயாவோ ஓட்டுனரோ குழந்தைகளை நன்றாகக் கவனித்தாலும் என்றைக்கும் அது பெற்றோர்களுக்கு ஈடாகாது. நமது வேலையை எளிதாக்க பொதுவாக எல்லாப் பெற்றோர்களும் ஓட்டுனரை நம்பி குழந்தைகளை ஒப்படைப்பதை பரவலாக காண்கிறோம். வேண்டாமே, அந்த தேவையில்லாதப் பழக்கத்தை ஒழித்துவிட்டு நாமே கவனித்துகொள்வோம்.

மேலும் நண்பர்கள், நண்பிகள் மற்றும் அலுவலக நட்புகள் என்று நமது குழந்தைகளை எல்லோர்க்கும் அங்கிள் ஆண்டி என்று பழக்கிவிடுவோம். ஆனால் எல்லோரும் எப்போதும் ஒரே மாதிரி இல்லைதானே. இந்த கலிகாலத்தில் சின்ன சின்ன விசயங்களுக்குக்கூட மிகப்பெரியதாக சிந்தித்து நம்மை நரகத்தில் தள்ளக்கூடிய வாய்ப்புகள் அதிகம்தானே.


எனவே பெற்றோர்களே வரும் முன் காப்போம். ஈடில்லா இழப்பை தவிர்ப்போம்.

Monday, November 1, 2010

கத்தி போயி வாலு வந்தது டும் டும் டும்..

பதிவர் ராஜனுக்கு திருமண வாழ்த்துக்கள். மிகத் தாமதமாகிவிட்டது. நம்மக்கும் வேலையிருக்கும்தானே. அதனால என்ன, லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்லிடுவோம்.

பதிவர் ராஜன் புரட்சிகரக் கருத்துக்களை யாருக்கும் பயப்படாமல் சொல்பவர் என்ற ஒரு எண்ணங்கள் பலருக்கும் உண்டு. ஆனால் எனக்கென்னமோ அவ்வளவாக ஈர்த்ததில்லை. தெளிவில்லா டாஸ்மாக் வார்ததையாகவே இருக்கும். அதிலும் நடுநிலை போல காட்டிக்கொண்டாலும் ஒரு பக்கம் மட்டும் சறுக்குவது தெளிவாகவே இருக்கும். அதிலும் தெரிந்தே ஜாதியை கையிலெடுத்து ஆடுபவர்க்கு வக்காலத்து வாங்கவில்லையென்றாலும் கேள்வி கேட்க வாய்ப்பிருந்தும் நழுவிய நேரம் பல.

அதே போல, பார்வதி அம்மாளின் மருத்துவ அனுமதி மறுப்புக்கு திருவாளர் சந்தோசம் காட்டும்போதும் தலையோ வாலோ ஆடவில்லை என்பதும் தெளிவு. கேட்டால் எல்லோரும் சொல்லும் விசய்த்தில் சொல்ல என்ன இருக்கிறது என பதிலாக வந்திருக்கலாம்.

இப்பொழுது ராஜன் திருமணம் நல்லதாக நடந்தேறியது.வாழ்த்துக்கள். ஆனால் அதில் சில கேள்விகள். ஆனா ஊனா என்றால் பகுத்தறிவு பகலவனாக காட்டும்போது வகைதொகையில்லா கேள்விகள் கேட்டதை நானே கண்டதுண்டு. ஆனால் இப்பொழுது அந்த பகுத்தறிவை தூக்கி பரணில் போட்டுவிட்டு, வினாயகர் போட்டோ, தாலி, நல்ல நேரம்,மந்திரம் ஓதுதல் என அத்துனையும் கடைபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இருக்கட்டும். மனைவியின் நம்பிக்கைக்கு மரியாதை கொடுப்பதை வரவேற்போம். மேலும் மாமனாரின் மனதை புண்படாதவாறு நடந்துகொண்ட ராஜனுக்கு வாழ்த்துக்கள்.

இப்பொழுது என் கேள்விகள்.

மனது என்பது உங்கள் உறவுகளுக்கு மட்டும்ந்தான் பட்டா போட்டிருக்கிறதா? அப்படியில்லை என்றால் கீழே இருக்கும் தங்கள் பதிவில் இருக்கும் வார்த்தைக்கு என்ன அர்த்தம்?

பிறைபார்த்தல் என்னும் பிற்ப்போக்குதனம் என்பதை பக்கம் பக்கமாக எழுதினார். ஏன் அந்த மார்க்கத்தை சேர்ந்தோர்க்கு மனமில்லையா? வலி இருக்காதா? நேற்று உங்கள் சொந்தங்களுக்காகப் பொறுத்துகொண்ட நீங்கள் மற்றவர்களுக்கு அனுசரித்துபோக வலிக்குமா?

என்னமோப் போங்க, மனுசனால எப்பயும் ஒரே மாதி இருக்கமுடியாதுதானே? மனுசப் பயலுகளே வேசத்துக்கு வேசம்போட்றவங்கெதானே.

Friday, October 22, 2010

ஞானிகள் எல்லோரும் ஞானிகளா?

திரும்ப திரும்ப தெரிந்தே ஞானியப் பற்றி பேசுவதில் அயற்சி ஏற்ப்பட்டாலும் ஒன்றுமே வெளங்காத சிலர் இதை உண்ணமயென்று எண்ணும் அபத்தம் இருப்பதால் அடைப்புக்குள் ஞானியின் வார்த்தையும் அடைப்புக்கு வெளியே நமது எண்ணத்தையும் சொல்லியுள்ளோம். NDTV-HINDU நடந்தது என்ன என்பதைப் படிக்க க்ளிக்கவும்.


//நண்பர்களே,
நான் எம்.ஜி.ஆரின் அன்றைய அசல் வயதைக் குறிப்பிட்டேன். அதிகாரப்பூர்வமான வயதை அல்ல.//


அசல் வயது என்று எதை எப்படி நிர்ணயிக்கிறார். அதற்கான எதாவது ஆதாரம் கொடுக்க முடியுமா? இல்லை எம்.ஜி.ஆரின் ஊர்க்காரரா அன்றில் அசலை தெரிந்துகொள்ளும் அளவிற்கு நெருங்கிய நண்பரா? நானறியேன் பராபரமே. ஞானியென்றதாலா?

//முத்து படத்தைப் பார்த்துவிட்டு ஜப்பானியர்கள் சென்னை வந்தார்கள் என்பது பற்றி வெளியான முதல் செய்தியில், பழைய பத்திரிகைகளைத்தேடினால் பார்க்கலாம், அவர்கள் நடிகை மீனாவைக் காண்பதற்காக வந்ததாகத்தான் குறிப்பிடப்பட்டது. அதன் பின்னரே ரஜினியைக் காணச் சென்றார்கள். ரஜினிக்காக இயங்கும் மார்க்கெட்டிங் டீம், அதை சிரப்பாக பயன்படுத்திக் கொண்டது. மீனாவுக்கு அப்படிப்பட்ட டீமும் தேவையும் இருக்கவில்லை.//

நீங்கள் தினமும் செய்திதாள் படிப்பவராக இருந்தால், இது எவ்ளோ பெரிய அபத்தமென்று சட்டென ஞாபகத்துக்கு வரும். நமது பிரதமரின் ஜப்பான் பயணத்தின் போது, ஜப்பான் பிரதமர் சொன்னாராம், "எங்கள் மக்களுக்கு ரஜினியைப் பிடிக்கும்" என்று. இதன் அர்த்தம் பச்சைக் குழந்தைக்கும் தெரியும். ஒரு வேளை ஞானக் குழந்தைகளுக்கு தெரியாதோ?


//ரஜினி நல்ல நடிகர்.//

காலம் கடந்த ஞானம். ஒரு வேளை எல்லா ஞானிகளுக்கும் இப்படித்தானோ?

//ஆனால் நடிகரைக் கொன்றுதான் இங்கே ஸ்டார் உருவாக்கப்படுகிறார். இதைப்பற்றிய என் விரிவான கட்டுரை இந்தியா டுடே ரஜினி சிறப்பிதழில் வெளியாகியிருக்கிறது.//

ஒவ்வொரு நடிகனுக்கு ஆரம்பகாலப் படங்கள் பள்ளி படிப்பை போல. அதற்கப்புறம்தான் ஃப்ரொபஷ்னலா இல்ல ஆர்ட்ஸாங்கிறது. ஒரு சிலக் குழந்தைகள் 15 வயதில் IIT யில் படிக்கலாம், ஒருவேளை அவங்க நெஜமாலும் ஞானிகளோ?

//அந்தக் கட்டுரையை ரஜினியும் பாராட்டியிருக்கிறார்.//

எப்பயும் உண்மையான ஞானிங்க, தன்னைக் தவறாக குறை சொல்வர்களையும் மதிப்பார்கள். அப்ப ரஜினி உண்மையான ஞானியோ?

//மார்க்கெட்டிங் இல்லாமல் உலகம் சுற்றும் வாலிபன் பெரும் வெற்றியடைந்தது.( போஸ்டர் கூட கிடையாது. அப்போது டி.வியும் இல்லை.)//

அப்போ சென்னையில ஒரு 10 தியேட்டர். CD இல்ல, DVD இல்ல. ஒருத்தனுக்கு புள்ளப் பொறந்தா ஊருக்கே தெரியும். சினிமான்னா சொல்லவா வேணும். அதுவும் எம்.ஜி.ஆர் அன்றைய ரஜினி.(இதெப்படி இருக்கு) இதெல்லாம் தெரிய பெரிய ஞானியா இருக்கனுமா என்ன?


//எந்திரன் சன் குரூப்பின் மார்க்கெட்டிங் இல்லாவிட்டால் சாதாரண படமாகவே ஓடியிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.//

ஆமா, சொல்லிகிட்டாங்க. குசேலன யாருக்கும் தெரியாம நைட்டோட நைட்டா ரிலீஸ் பண்ணிட்டாங்க. அதனாலதான் ஃபெயிலியர். இல்லன்னா பிண்ணி பெடலெடுத்த்ருக்கும். சை ஞானியை ஒரு வார்த்தை கேக்காமப் போயிடாங்களே. பாலசந்தர் ஞானி இல்லையோ?


//உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக எதையும் அணுகுவதே நமக்கு நல்லது. அப்புறம் உங்கள் விருப்பம். என்னைத்திட்டுவதால் உண்மைகள் மாறிவிடாது.//

ரஜினி விசயத்துக்கு மட்டுமா, இல்லை ஈழப்பிரச்சினைக்கும் சேர்த்தா? இதுக்கெல்லாம் ஞானம் கடையில் கிடைக்குமா?

//ஒரு கூடுதல் தகவல்: ரசிகர் மன்றங்கள் எல்லாமே எம்.ஜிஆர் காலத்திலிருந்தே, நடிகரும் தயாரிப்பாளரும் கொடுக்கும் பணத்தில்தான் இயங்குகின்றன என்பது மீடியாவில் உள்ளவர்கள் எல்லாரும் அறிந்த உண்மை. மன முதிர்ச்சி எற்படாத பருவத்தில் ஒரு சிலர் மட்டுமே சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்வார்கள். நடிகர்கள் பலரும் வருமானவரிக்கு தரும் கணக்கில் ரசிகர் மன்ரத்துக்கு கொடுத்த பணத்தை பிரமோஷன் செலவுக் கணக்கில் காட்டுகிறார்கள். பழவேற்காடு பகுதியில் ஒரு நடிகர் படப்பிடிப்புக்குச் சென்ரபோது அவரை அசத்த விரும்பிய தயாரிப்பாளர் அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டரை வைத்தே ரசிகர் மன்ற போர்டுகளை முன்னிரவே வழி நெடுக அமைத்து கூட்டத்தைத் திரட்டிய கதை எல்லாம் பத்திரிகைகளில் வெளிவராது. ஆனால் சினிமா , மீடியா துரையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத் தெரிந்தவை.//

அப்படியென்றால் எம்.ஜி. ஆரை தூக்கிவைத்துப் பேசக் காரணம் என்ன? அன்று எம்.ஜி.ஆர் தங்களுக்கு கொடுத்த பணம் இன்னும் பேலன்ஸ் இருக்கிறதா? அப்போ இன்னும் கொஞ்ச நாட்களில் அண்ணன் ரித்தீஸ் சூப்பர் ஸ்டார். சில விஷயங்கள் புரிய ஞானியாக இருக்க வேண்டுமோ?


//இந்தியாவின் குறிப்பாக தமிழ் வர்த்தக சினிமாவில் ஸ்டார் என்பவன் வேறு. நடிகன் என்பவன் வேறு. இரண்டுமாக ஒருவரே இருக்க முயற்சிப்பது மிகக் கடினம் என்பதுதான் சினிமா உலகத்தின் வியாபார விதி.//

எங்களைப் பொருத்து, பிடித்த மாதிரி படங்கள் கொடுத்தால் படம் ஓடும். அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ஓடினால் அதிக படம் கிடைக்கும். அதிகப் படம் ஓடினாலே தானாகவே ரசிகர் வட்டம் கூடும். ரசிகர் கூட்டம் கூடக்கூட ஸ்டார் வேல்யூ கூடும், சம்பளம் கூடும். ராமராஜனையே தூ.......க்கி வெச்சு தொபக்கடீர்னு போட்டவங்க நாங்க.இது ஞானிகளுக்கு மட்டும் தெரியாதோ?

//இந்த விதியின்படி தனக்குள் இருந்த நடிகனைக் கொன்று ஸ்டாரானதுதான் சிவாஜிராவ் என்கிற ரஜினிகாந்த்தின் 32 வருட சினிமா வாழ்க்கைக் கதையின் ஒன் லைன்.//

நல்ல கதை. தயாரிப்பாளர்கள் கிடைப்பார்களா பார்ப்போம். ஒரு பெரிய புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தால், ஞானிகள் மட்டும் முதல் பக்கமும் இறுதிப் பக்கமும் மட்டும் படிப்பார்களோ?

//பள்ளிப் படிப்பைத் தாண்டாமல், ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக வாழ்க்கையைத் தொடங்கியவர் இன்று இந்தியாவிலேயே அதிகமான சம்பளம் வாங்கும் நடிகராக ஆனது முதல் பார்வையில் பிரமிப்பூட்டுவதாக இருக்கலாம். ஆனால் ஆழ்ந்து யோசித்தால், வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், எல்லா சினிமா ஸ்டார்களும் அப்படிப்பட்டவர்கள்தான். ரஜினியை விட ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர்கள் எம்.ஜி.ஆரும் சிவாஜியும். உலக அளவில் சார்லி சாப்ளின் முதல் இந்தியாவின் பிருத்விராஜ் கபூர், எம்.ஆர்.ராதா, கமல்ஹாசன் வரை ஸ்கூல் டிராப் அவுட்டுகள்தான்.கலை உலகத்தின் வலிமையே அது முறையான கல்வியை விட அனுபவத்தில் உருவான செழுமைப்படுத்தப்பட்ட திறமைக்கே அதிக முக்கியத்துவமும் வாய்ப்பும் தருவதுதான். முறையான படிப்பாளிகள் இன்றைய வணிக சினிமா இயந்திரத்தின் வீல் பெல்ட், நட்டு, போல்ட்டுகளாக மட்டுமே இருக்க முடியும். மெஷின் ஆபரேட்டர் ஆகிறவர்கள் குறைவு//

நல்ல கண்டுபிடிப்பு. அடுத்து முதலைமைச்சர் பதிவியையும் விட்டுவிட்டார். படிக்காதவர்கள் மாவட்ட கலெக்டர் ஆகமுடியாது என்பது தெரிந்ததால் முயற்சி செய்யவில்லை. படிக்காதவனுக்கு எல்லாமே ஆப்சன்.தோல்வி பொருட்டல்ல. முயற்சி செய்யலாம். வெற்றி பெறாத படிகாதவர்கள் எத்தனை எத்தனை பேர்கள் கோடம்பாக்காத்தில்.ஆனால் நல்லாப் படிச்சவனுக்கு அது ஒன்னுதான் ஆப்சன். அதனால்தான் ஒரே நேர்கோடு. இது பெரிய சப்ஜெக்ட். வாய்ப்புக் கிடைத்தால் தனிப்பதிவாக ஞானிக்கு டெடிகேட் பண்ணலாமோ?


//ரஜினி 1975ல் நடிக்க வந்த போது சென்னையில் ஒரு பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படித்தார். ஆனால் அது அடையாறில் இருக்கும் அரசின் திரைப்படக் கல்லூரி போல பாரம்பரியமும், கல்வி முறைமையும் கொண்டதல்ல. திரைப்பட வர்த்தக சபையின் ஆதரவில் நடத்தப்பட்டு சில வருடங்களிலேயே மூடப்பட்டுவிட்டது. ரஜினி நடிக்கக் கற்றுக் கொண்டதில் அதன் பங்கு கணிசமானது என்று நிச்சயம் சொல்ல முடியாது. அவர் பெங்களூரின் பஸ்களிலும் சினிமா கொட்டகைகளிலும் படித்ததுதான் கூடுதலாக இருக்க முடியும்.//

உண்மையிலேயே ஞானிதான்.


//முதல் சில வருடங்களில் ரஜினி வில்லன் பாத்திரங்களில் நடித்தபோதும், குணச்சித்திர பாத்திரங்களில் ( ஹீரோவும் அல்ல வில்லனும் அல்ல ) நடித்தபோதும்தான் அவருடைய நடிப்பு ஆற்றல் வெளிப்பட்டது.//

கேரக்டருக்கு என்ன தேவையோ அது செய்யப்பட்டது. கார் ட்ரைவரை ஃபைலட்டாக காட்ட முடியாது. ஞானிகளுக்கு இதெல்லாம் டூ மச்.

//ஆனால் தமிழ் வணிக சினிமாவின் வியாபாரிகள் நடிகர்களை வளர்ப்பதை விட, அவர்களை ஸ்டார்களாக உருமாற்றுவதிலேயே முனைப்பாக இருப்பவர்கள். நடிகராக பலவகைப் பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த கமல்ஹாசனை ஸ்டாராக்குவதற்கு ஒரு சகலகலா வல்லவன். ரஜினிக்கு ஒரு முரட்டுக்காளை. சேது, காசி போன்ற படங்களில் நடித்த விக்ரமுக்கு ஒரு ஜெமினி.//

கலியும் கூலும் உடம்புக்கு நல்லதுதான். அதற்காக ஹோட்டல் நடத்துபவர் அதையே முழு மெனுவாக வைத்தால் கூலி வேலை செய்யும் நபர்கூட அந்த ஹோட்டலுக்கு செல்லமாட்டார். தோசையும், பரோட்டாவும், பிரியாணியும் வந்தால்தான் ஆகும். ஒருவரை ஸ்டாராக மாற்ற அவர்களுக்கென்ன வேண்டுதலா? எந்த குதிரையில் பணம் கட்டினால் ஜெயிப்போம் என்று தெரிந்த வியாபாரிகள் அவர்கள். சொந்த பணத்தில் ஸ்டாராக நினைத்து வந்து போன ப்ரேமையும் தெரியும். இன்றும் அப்போ அப்போ சீன் காட்டும் சிலரையும் தெரியும். எந்தெந்த நடிகரில் எதைஎதை எதிர்பார்ப்பது என்பது ரசிகனுக்கு மட்டும்தான் தெரியுமா? ஞானிகளுக்கு தெரியாதா?

//தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைக்கும் வல்லமை இருந்த நடிகர்களாக எழுபதுகளின் இறுதியில், எண்பதுகளின் தொடக்கத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள் ரஜினியும் கமலும். அதே போல அடுத்த தலைமுறையில் விக்ரமும் சூர்யாவும். ஆனால் எல்லாரையும் ஸ்டார்களாக்கும் சினிமா ஃபேக்டரி இவர்களையும் ஸ்டார்களாக்கி தமிழ் சினிமாவின் தடத்தை மாற விடாமல் தடுத்துக்கொண்டே தான் இருக்கிறது.//

பாவமாக இருக்கிறது. நல்ல படங்கள் ரசிகனால் கவனிக்கப்படாமல் போனது ஏராளம். அதனால் மக்களுக்கு அதாவது ரசிகனுக்கு எது தேவையோ அதைக் கொடுக்கிறார்கள். இருப்பதைக் கொடுக்கிறார்கள். பிடிப்பதைப் பார்க்கிறார்கள். காரணம் சிம்பிள். தன்னால் எது முடியாதோ அதை தந்து ஆதர்சக் கதாநாயகன் செய்ய வேண்டுமென்கிறான். காற்றில் பறந்து பறந்து அராஜகத்து ஒழிக்க சொல்கிறான். காதாலில் உருக சொல்கிறான். செய்தால் பார்க்கிறான். அழுது வடிந்தால்." ச்சை இதத்தான் எழவு வீட்ல பாக்குறோம், சினிமாவும்லயா" என்று கேட்கிறான். ஹோட்டலில் கூலுக் கதைதான் இங்கும். எனக்கு ஞானம் பத்தலயோ?

//முள்ளும் மலரும், மூன்று முடிச்சு, பதினாறு வயதினிலே, புவனா ஒரு கேள்விக்குறி, அவர்கள் போன்ற படங்கள் எல்லாம் ரஜினியைத் திறமையான நடிகராக ஆரம்ப ஆண்டுகளிலேயே அடையாளம் காட்டியவை. ஆனால் அவை அவரை ஸ்டாராக்கவில்லை. முரட்டுக் காளைக்குப் பிறகுதான் அவர் ஸ்டார் நிலையை நோக்கிப் பயணம் செய்தார்.//

ஸ்டார் என்பது உச்ச நிலை. அடிப்படிக்கட்டுகளில் தேடப்படாது. தேடினால் ஞான சூனயமென்று சொல்வார்களோ?

//ஸ்டாரானபிறகு படங்களுக்கிடையே பெரும் வித்யாசம் இல்லை. காரணம் ஸ்டாருக்கென்றே இருக்கும் கதைப்பின்னல் ஃபார்முலாதான். சிவாஜி வரை அதே ஸ்டார் ஃபார்முலாதான் தொடர்கிறது.//

வியாபாரம் நல்லாப் போச்சா. அதான் முக்கியம். கலை வளர்க்க யாராவது இருந்தாக் ஞானிகளை அனுகவும்.

//தமிழ் சினிமாவின் அத்தனை கோளாறுகளாலும் லாபம் நஷ்டம் இரண்டையும் அடைந்தவர் ரஜினி என்று சொல்லலாம். மசாலா பட ஸ்டார் என்பதால் வாழ்க்கையில் யாரும் எளிதில் அடையமுடியாத பொருளாதார உச்சத்தை அவ்ர் அடைந்தார். அதே சமயம் ஆரம்ப ஆண்டுகளில் அவரை வைத்து வசூலைக் குவிக்க துடித்த தயாரிப்பாளர்களின் நிர்ப்பந்தத்தால், ஒரு காலத்தில் நாகேஷுக்கு ஏற்பட்ட அதே சிக்கல் ரஜினிக்கும் ஏற்பட்டது.//

எல்லாரும் மனுசப் பயலுகதானே. இன்னும் நம்ம நாட்டு மக்கள் பணம் பணமுன்னு சொல்லி ஓவர் டைம்ல ஒழச்சு ஓடாத் தேயுறான். இன்னும் ஞானம் பெறக்கலயோ என்னவோ?

//தூங்கவும் சிந்திக்கவும் நேரம் இல்லாமல் மூன்று ஷிப்டுகள் வேலை செய்த நாகேஷ் ஒரே ஆறுதலாக மதுவில் மூழ்கி சாவின் விளிம்பைத் தொட்டுத் திரும்பினார். மருத்துவமனையில் இருந்த அவர் இன்று இரவைக் கடப்பது கஷ்டம் என்று தினசரி மாலைப் பத்திரிகைகள் சுமார் முப்பதாண்டுகள் முன்பு அவரது மரணத்துக்கு நேரம் குறித்துக் கொண்டிருந்தன. அதே போல வேலை பளுவில் நசுக்கப்பட்ட ரஜினி கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி, பத்திரிகையாளர்களை அடிப்பது முதல் மிதமிஞ்சிக் குடிப்பது வரை பல சிக்கல்களுக்கு தன்னைத் தானே உள்ளாக்கிக் கொண்டார்.//

இது எல்லாத் தொழிலிலும் சகஜம்தான். கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இதெற்கெல்லாம் பெரியளவுக்கு ஞானம் தேவையில்லைதானே?

//அதிலிருந்து மீண்டு வந்தபின், நடிகனாக, கலைஞனாக தனக்கென்று ஏதேனும் ஆசைகள் இருந்தால், அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, பூரணமாக மசாலா சினிமாவுக்கு தன்னை சரணாகதி செய்துகொண்டார்.//

ஒரு தொழிலேயே பல நிலைகள் இருக்கும். சிலர் அழுது வடிய. சிலர் சிரிக்கச் செய்ய. சிலர் சண்டைக்கா. இது ரஜினிக்காக.அதை ரசிப்பவர்களுக்காக. கண்டிப்பாக ஞானிகளுக்காக அல்ல.

//இந்த ஃபார்முலாவுக்குள் அவர் வித்யாசமாக செய்து பார்த்து வெற்றியடையும் அம்சம் என்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் காமெடி. பாலச்சந்தரின் தில்லுமுல்லுவில் முழுமையாக அதை சாதித்துக் காட்டிய ரஜினிதான்,இன்றும் தமிழ் சினிமாவில் காமெடி கலந்த ஒரே சூப்பர்மேன் ஹீரோ.//

செய்து பார்க்கவில்லை. பாலச்சந்தர் எடுத்தார். இவர் நடித்தார்.ரசித்தார்கள். ஓடியது. தொடர்ந்தது. ஒன்றும் அல்ஜீப்ரா ஃபார்முலா இல்லை. மதி முத்தினால் ஞானியோ?

//ரஜினியின் அண்மை ஆண்டுகளில் சினிமாவுக்கு வெளியே அவர் செய்த காமெடியாக அவரது அரசியலைக் குறிப்பிடலாம்.//

வெறுமனே சம்பளத்துக்கு, கவனிக்க பொதுநலம் என்று ஏமாந்தால் கம்பெனி பொருப்பல்ல, எழுதுபவர்களே அரசியலில் அங்காலாய்க்கும்போது 35 வருட சினிமா வாழ்க்கை, பட்டிதொட்டியெல்லாம் தெரிந்தவர் சொன்னால் தப்பா? அது அவர் கருத்து. ஞானிகள் விளக்கி தெரிந்துகொள்ளும் நிலமியிலா இருக்கிறோம்?

// 1996ல் மக்கள் ஏற்கனவே ஜெயலலிதா எதிர்ப்பில் இருந்த மன நிலையில் அதை ரஜினி எதிரொலித்ததுதான் இன்று வரை அவருடைய மிகப் பெரிய அரசியல் சாதனையாக தவறாக சொல்லப்பட்டுவருகிறது.மக்கள் ஜெயலலிதாவுக்கு எதிர் மன நிலையில் இருக்கையில், ரஜினி ‘பரவாயில்லை ஒரு முறை அவரை மன்னிப்போம். மீன்டும் வாய்ப்பு தருவோம் ’ என்று சொல்லி அதைக் கேட்டு மக்கள் ஜெவை ஆதரித்திருந்தால்தான், ரஜினியின் வாய்சுக்கு நிஜமாகவே செல்வாக்கு இருப்பதாகக் கருத முடியும்.அரசியலில் ரஜினியின் வாய்சுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்பது அடுத்த சில வருடங்களில் வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. ரஜினியை வைத்து காங்கிரசை வளர்த்துக் கொண்டு ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற கனவில் மூப்பனாரும் சிதம்பரமும் ஒரு பக்கமும், பி.ஜே.பி தமிழகத்தில் வளர ரஜினி பயன்படுவார் என்ற கணக்கில் சோ மறுபுறமுமாக செயல்பட்டார்களே தவிர, ரஜினியிடம் எந்த அரசியல் பார்வையும் தெளிவாக இல்லை//

அது, சிலர் ஞானிகளாக நினைத்துக்கொண்டு பத்திரிக்கைகளில் எழுதுபவர்களின் கணிப்பு. இன்னும் சில சம்பளக்கூலி எழுத்தாளர்கள் ரஜினி ரசிகனென்று மல்லாக்கப் படுத்துக்கொண்டு காரித்துப்பிவிட்டு, அடுத்தவாரமே "எந்திரா........" என்று வியாபாரம் செய்த வியாபரிகளின் எழுத்து. ரஜினி சொன்னாரா? நான் சொன்னேன், நீ ஜெயிச்சேன்னு. மூப்பனாரேக் கூப்பிட்டும் கையெடுத்துக் கும்பிட்டவர் ரஜினி.அது கிடக்கட்டும். உங்கள் தெளிவான அரசியல் பார்வை என்ன? ஞானியென்றால் விளக்க வேண்டும்தானே?


//ரஜினி அரசியலை தன் சினிமாவை ஓடவைக்கப் பயன்படுத்தினார் என்று வேண்டுமானால் சொல்லலாம். தி.மு.க, அ.தி.மு,க ஆகியவற்றின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்திகள், எப்போதுமே எங்கேயோ இருந்து ஒரு அவதார புருஷன் வந்து நம்மை உய்விப்பான் என்ற மயக்க நிலை ஆகியவற்றை தன் சினிமாவுக்கு ரஜினி பயன்படுத்திக் கொண்டார்.//

இந்த இடைப்பட்டக் காலங்களில் தான் தோல்விப் படங்களையும் ரஜினி தந்தார் என்பதை ஞானிகளுக்கு மறப்பது எப்படி?

//ரஜினியின் அண்மைக்கால சினிமா வெற்றிகளில் அவ்ருக்கு பயன்பட்ட இன்னொரு அம்சம் & பலமான பெண் பாத்திரங்கள். விஜயசாந்தி, மீனா, ரம்யா கிருஷ்ணன், ஜோதிகா ஆகிய திறமையான நடிகைகள் ஏற்ற பாத்திரங்களின் உதவியால் அந்தப் படங்களில் ரஜினியும் ஜொலிக்க முடிந்தது. அப்படிப்பட்ட பாத்திரங்கள் இல்லாத அவருடைய படங்கள் & பாபா போன்றவை & அடி வாங்கியிருக்கின்றன.//

இதைப்படிச்சுட்டு வாயாலதான் சிரிக்கனும். என்ன ஒரு அவதானிப்பய்யா? ஞானியா இல்லை ஞான...? சரி விடுவோம். சவுந்தர்யா, நக்மா நடிச்சப் படத்தோட சிடிய எல்லா ஞானிகளுக்கு அனுப்பலாமா?

//ரஜினியின் அரசியலைப் போலவே குழப்பமானது அவருடைய ஆன்மிகம். ஹரே கிருஷ்ணா இயக்கம், பாபா, ராகவேந்திரர் என்று வெவ்வேறு வகையான பக்தி மார்க்கங்களை முன்வைத்து வரும் ரஜினி நடைமுறையில் பின்பற்றுவது ரஜினீஷின் சில கோட்பாடுகளைத்தான். ஆனால் ரஜினீஷைப் போல உல்லாச வாழ்க்கையிலேயே உன்னதத்தைக் காணலாம் என்ற கோட்பாடும் அவருக்கு இல்லை. ஒரு பக்கம் வாழ்க்கையின் உல்லாசங்களை கைவிடாதிருப்பது, மறுபக்கம் இவற்றை நிராகரிக்கும் ஆன்மிகவாதிகளைப் போற்றுவது என்ற முரண்பாடு நிறைந்தது ரஜினியின் ஆன்மிகம். அரசியலில் மதவெறியை ஊக்குவிக்கும் அத்வானி, தயானந்த சரஸ்வதி போன்றோர்தான் ரஜினியின் ஆதர்சங்கள் என்பது இத்துடன் சேர்த்து கவனிக்க வேண்டியதாகும்.//

ரொம்ப ஞானம் வந்தாலே இந்த கதிதான். இந்தப் பத்திரிக்கைக் காரங்க இருக்காங்களே இவங்க இப்படிதான் எஜமான், இந்தா நேத்து ஒரு தமிழன் அதுவும் மதுரைக்காரர் உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழனை ஆக்க ஓட்டுப்போடுங்கன்னு சொல்லி எழுதமாட்டாங்க இந்த நடிகையை இந்த நடிகர் வெச்சிக்கிட்டார் என்பதை மட்டும் முழுப்பக்கத்தில் போடுவாங்க. அப்படிப்பட்ட ஒரு ஃபீல்டுல இருந்து அங்க ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாம இங்க வந்துட்டார். தலைக்கு வெளியே வெளிச்சம் வந்தா ஞானமா?

//ரஜினியின் குடும்ப வாழ்க்கை எல்லா சராசரி மனிதர்களின் வாழ்க்கையைப் போன்றதாகவே தோன்றுகிறது. விரும்பிய பெண்களை மணம் செய்ய முடியாமல் போகும்போது கிட்டிய பெண்ணை ஏற்றுக் கொண்டு சமாதான சகவாழ்வு வாழும் சராசரி மன நிலையே அது. ‘வாழு. வாழவிடு. தலையிடாதே. தலையிட மாட்டேன்’ என்பதுதான் ரஜினியின் வாழ்க்கைத்தத்துவம் போல் தோன்றுகிறது.//


மத்தவங்களுக்கு எப்படியோ, எனக்கு ரஜினிகிட்ட பிடிச்ச விசயம் இது. நாலு பேப்பர்ல எழுதினதுனாலயே பொண்டாட்டிய தொறத்திவிட்ற இந்த காலத்து இந்த மனுசன் எப்படி இப்படி இருக்கார்ன்னு என் ஞானத்துக்கு எட்டவே இல்லை?

//அதே சமயம் ரஜினியின் படத்தில் வரும் பெண் பாத்திரங்கள் பெண்களை பழைய நிலையிலேயே வைத்திருப்பதை ஊக்குவிக்கும் பாத்திரங்கள்தான். இதுதான் மசாலா சினிமாவின் பொதுத்தன்மை என்றாலும், அத்துடன் இயைந்துபோவதில் ரஜினிக்கு சிரமம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.//

அதெல்லாம் ரஜினி வேலை செஞ்சப் படமுங்கோ. ரஜினி வேலைவாங்குனப் படம் வள்ளி. தமாசு. ஞானமின்னு சொன்னா மட்டும் ஞானமில்லைங்கோ?

//பணம், புகழ், அதிகாரம், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் என்று ஒரு சராசரி மனதில் அதிகபட்ச உச்சமான ஆசைகளை எல்லாம் அடைந்துவிட்ட ரஜினி இனி என்ன செய்யப் போகிறார் ? என்ன செய்ய முடியும் ? என்ன செய்ய வேண்டும் ?//

கண்டிப்பா ஞானிகளிட்ட கேட்றாதீங்க தலைவா. கவுத்துருவாங்க. தலையிருந்தா மட்டும் ஞானமில்ல?

//அவரை இந்த நிலைக்குக் கொண்டு சென்ற தமிழ் சினிமாவுக்கு அவர் பதிலுக்கு ஏதாவது செய்யலாம்.//

இதுவரை வந்த பல நடிகர்களை அழித்துவிட்டு,தமிழ் சினிமா ஒரு எம்.ஜி.ஆர், ஒரு சிவாஜி, ஒரு கமல், ஒரு ரஜினியை மட்டும் தந்தது. அடப்போங்கப்பா. பத்திரிக்கை நடத்துறவங்க எல்லோரும் பத்திருக்கையிலயேப் பணத்தப் போட்டுட்டாங்க. சொல்றாரு டீட்டெய்லு. ஞானம் வெளஞ்ச பூமின்னாங்களே?

//ஹிந்தியில் ரஜினியின் வயதை ஒத்தவரான அமிதாப் பச்சன் வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்று நடித்து மேலும் புகழ் சம்பாதித்து வருவது போல, ரஜினியும் தன் ஸ்டார் முகமூடியை தூக்கி எறிந்துவிட்டு, உள்ளுக்குள் உறங்கும் (?) கலைஞனுக்கு இன்னொரு உயிர் கொடுக்கலாம்.//

ரஜினி என்றாவதும் ஞானியை "கண்ணா உனக்கும் எழுத்துக்கு ரொம்ப தூரம் இனிமேல் எழுதாதே" என்று சொன்னால் ஒரு வேளை யோசிக்கலாம்.

//புதிய கருத்துக்கள், புதிய சிந்தனையுடன் வரும் பல இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதத்தில் ரஜினி வருடத்துக்கு நான்கு லோ பட்ஜெட் படங்களைத் தயாரிப்பாளரக இருந்து தயாரிக்கலாம்.//

இவரும் இவரைப்போல சில ஞானிகளும் சேர்ந்து சில பதிவர்களை அட நம்மளத்தாம்பா பத்திரிக்கை ஆரம்பிக்க உதவினால் பார்ப்போம்.

//எல்லாவற்றுக்கும் மேலாக ‘ நான் நிச்சயம் அரசியலுக்கு வரப் போவதில்லை’ என்று அறிவித்துவிடலாம்.//

ஞானிகள் உண்மையை மட்டும் பேசும்போது முடிவெடுக்கலாம்.

// இவை எல்லாமே அவரால் செய்ய முடிந்தவைதான். செய்வாரா ? செய்தால் நான் ரஜினியைப் பாராட்ட மூன்றாவது விஷயம் எனக்குக் கிடைக்கும். ஓ....முதல் இரண்டு விஷயங்களை இன்னும் சொல்லவில்லையோ ?//

நான் சொன்னவைகளை ஞானி செய்தால் எனக்கும் பாராட்ட மூன்றாவது விசயம் கிடைக்கும். ஓ முதல் இரண்டு விசய்ங்களா..?

//தன் படங்களில் ஜாதிப் பெருமையை முன்வைத்து மக்களிடையே வெறி ஏற்றும் பாத்திரங்களில் அவர் நடிக்காதது முதல் விஷயம்.//

ஞானி,சொல்வது பொய்யே ஆனாலும் கடைசிவரை தாக்குப்பிடிப்பது.

// படத்தில் காட்டும் இளமை இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல், நேரில் வரும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அசல் வழுக்கை மண்டை நரை முடி தோற்றத்துடன் அவர் வருவதுதான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்த இரண்டாவது விஷயம்.//

ஞானமே இல்லாமல் ஞானியென்று அழைத்துக்கொள்வது.

//(இந்தியா டுடே 14.7.2007 ரஜினி சிறப்பு மலர்)//

இந்தியா டுடே 14.7.2007 ஞானி சிறப்பு மலரும் இல்லை, ரஜினி எழுதவுமில்லை. இந்தியா டுடே என்ன கேணையா?

//ஞாநி உண்மையாக எழுதியிருக்கிறார் என்று அடுத்த இந்தியா டுடே இதழில் ரஜினியின் கருத்து வெளியிடப்பட்டது.//

எப்படி அடிச்சாலும் தாங்குறதுக்கு ஞானம் வேணும்,ஞானம் வேணும், ஞானம் வேணுண்டோய்....

டிஸ்கி: இன்னும் சிறிது நேரத்தில் அனைத்து ஆதாரத்துடன் போட்டோக்கள் இணைக்கப்படும்.

Thursday, October 21, 2010

சினிமாவைப் பற்றி யார் பேசலாம்?

யாரும் பேசலாம். காசா பணமா? ஆனால் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. சினிமா ஒரு வியாபாரம். ஆமாம் கண்டிப்பா ஒரு வியாபாரம். சைடிஸ்ஸாக பெரும் புகழ்.

சுப்ரமணிய புரம் வரும் வரை சசியை எனக்குத் தெரியாது. இதோ இப்ப எனக்கு மட்டுமா எங்க ஊர்காரன் பாதிபேர்க்கு தெரியும். அதுக்கு அவர் பட்டக் கஷ்டம் என்ன? எத எத வித்து பணம் தேத்துனாரோ? எதுக்கு கலை வளர்க்கவா? பணம் சம்பாதிக்க. பிசினஸுங்க பிஸினஸ். ஒரு வேள ஓடாமப் போயிருந்தா, ஒன்னும் சொல்றதுக்கில்ல. ஆளேக் காணாமப் போயிருக்கலாம். யாரு கண்டா.

சரி இதுல நம்மப் பங்கு என்ன? ஒன்னும் பெருசா கிடையாது. படம் நல்லா இருந்தா கடைசிவரைக்கும் பாக்கப்போறோம். இல்லாட்டி பாதியில வரப்போறோம். நல்லா இருந்தா நாலுபேர்கிட்ட சொல்லப் போறோம். அதுக்காக தெருவுல போறவனை இழுத்து தியேட்டர்க்குள்ள விட்றதில்ல. சசியை நேர்ல பாத்து , சார் நீங்க இன்னும் நிரையப்படம் பண்ணனும், இந்தாங்க என் வாட்ச்சு மோதிரமுன்னு கழட்டி கொடுக்கப்போறதில்ல.

ஆனா ஒரு வேள நல்லா இல்லாட்டி நாம என்னப் பண்ணனும். ஒன்னும் சொல்லத்தேவையில்ல. பாத்து ராசா அடுத்தவாட்டி கேர்ஃபுல்லா பண்ணுப்பா. ஒன்ன நம்பித்தேன் ஒங்குடும்பம் இருக்குன்னு வேணா சொல்லலாம். ஏன்னா இது அவர் ரிஸ்க்கு. தெரிஞ்சும் தெரியாமையும் பல குடும்பங்கள் இன்வால்வ் ஆகுற பிஸ்னஸ். எல்லாரும் வெற்றி பெறனுன்னுதான் படம் எடுக்குறாங்க. யாரும் அடுத்து தெருவுல நின்னு பிச்சை எடுக்கனுமுன்னு நெனச்சு சினிமாவுக்கு வர்றதில்ல. எப்படி 50 பேர் படிக்கிற வகுப்புல பத்து பேர் பெயிலாகுறாங்களோ அப்படிதான் ஒரு தொழிலுன்னு எடுத்துகிட்டா முன்னப்பின்னதான் இருக்கும். சினிமா மட்டும் இல்ல, கண்ண முழிச்சுப்பாருங்க அத்தனை தொழிலும் இதே ஏத்தம் எறக்கந்தான்.

கள்ளச்சாராயம் காச்சுறவன் விக்கிறவன் ரேஞ்சுக்கு சினிமாக்காரனக் கீழ எறக்கி அட்வைஸ் பண்ணனுமுன்னு அவசியமில்ல. அதில கலையை அழிக்கிறானுங்களேங்ற ஆதங்கம் டூ மச்.

இதுல சிலபேர் என்ன செய்யுறாங்க, தாஜ் ஹோட்டல் பார்ல ஒக்காந்து பத்தாயிரத்தக் காலி பண்ணிட்டு, எதாவது ஒரு படத்த போதைக்கு பாத்துட்டு விமர்சனம் எழுதுறது எப்படி இருக்குத் தெரியுமா?

அதே விமர்சகன், பணப்பத்தாக் கொறயில தாஜுக்கு பக்கத்துல இருக்குற கையேந்தி பவனுக்குப் போயிட்டு,அந்தக் கடைக்க்காரன்கிட்ட சொன்னானாம் " என்னய்யா கடை நடத்துற, ஒரு சேரில்ல, ஏசியில்ல, செர்வண்ட் இல்ல, ம்யூசிக் இல்ல, லொட்டில்ல லொசுக்கில்ல" ன்னு சொன்னானாம், வேற என்ன நடந்திருக்கும்? அந்த ரோடு முடியறவரைக்கும் தொறத்தி தொறத்தி அடிச்சிருப்பான். ஏன்னா அந்தக் கடைதான் அவன் குடும்பத்த மட்டுமில்ல, பாவம் ஒரு வேள மட்டும் சாப்பிடும் பல குடும்பங்களையும் காப்பாத்துறக் கதை அவனுகெங்க தெரியப்போகுது.

மறுபடியும் சொல்றேன், சினிமா ஒரு வியாபாரம். அதுல பாட்டு இருக்கும். ஃபைட்டு இருக்கும். நகைச்சுவை இருக்கும். நல்லா இருந்தா ஓடும். இல்லாட்டி என்னதான் கூவுனாலும் ஓடாது. பாபாவும், குசேலனும் தெரியும். பாட்சாவும் எந்திரனும் தெரியும்.

அதாகப்பட்டது நடக்கவே முடியாதவன் ஒலிம்பிக்கில ஓடறவனுக்கு கமெண்ட் பண்ணக்கூடாது. கமெண்டினாலும் பரவாயில்லை, அட்வைஸ் பண்ணக்கூடாது. அப்படியே அட்வைஸினாலும் பரவாயில்லை நாந்தேன் கோச்சுன்னு சொல்லப்பிடாது.

Tuesday, October 19, 2010

ஞானியும் அவர் அடித்துவிடும் பொய்யும்

ஞாயிற்றுக்கிழமை NDTV-HINDU வில் எந்திரன் பற்றி ஒரு நிகழ்ச்சி. ரஜினிக்கு ஸ்டார் வேல்யூவுக்கு ஆதரவாக சின்மயி என்றப்பாடகியும், ஸ்ரீதர் என்ற பத்திரிக்கையாளரும் கருத்து சொல்ல, ரஜினியெல்லாம் ஒன்னுமில்ல மார்க்கெட்டிங் வேல்யூதான் மேட்டர் என்று சாநி புகழ் ஞானியும், சுதாங்கன் என்ற அதிமுக அபிமானி பத்திரிக்கையாளரும் பேசினர்.

ஞானியும், சுதாங்கனும் 1947 லிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை என்பது அவர்களின் மொன்னையான ஆர்க்யூமெண்டிலிருந்தே தெரிந்தது.

சின்மயி, ரியலி சூப்பர்ப். பாடுவதைப் போலவே பின்னிப் பெடலெடுக்கிறார். ரஜினியின் ரசிகை என்பதைக் கூறும்போது பெருமிதம்கொள்கிறார். ஸ்ரீதர், அதற்குள் மூன்றுமுறை எந்திரனை வெவ்வேறு தியேட்டரில் வெவ்வேறு தட்டு மக்களுடன் சேர்ந்து ரசித்தாராம்.

ஞானி, முத்து படம் ஓடியதற்கு முக்கியக்காரணம் மீனா என்றும், படையப்பா ஓடியதற்கு ரம்யாகிருஷ்ணன் தான் என்றும் கூறி சிரிக்கவைத்தார். அவர்கள் மட்டுமில்லையென்றால் அவ்விருப்படங்களும் ஓடியிருக்காது என்று அருமையாக விளக்கம் கூறினார். மேலும் முத்து படம் ஜப்பானில் ஓடவும் மீனாவேக் காரணமென்று அடிவயிற்றை பதம்பார்த்தார்.

அதற்கு ஒரு ரஜினி ரசிகர், அடுத்து அதே மீனா நடித்த, அதே ரவிக்குமார் டைரெக்ட் செய்த, மேலும் கமல் நடித்த அவ்வை சண்முகி ஜப்பானில் ஏன் ஓடவில்லை என்று தேவையில்லாமல் கேட்டு ஞானியை சாணி போட வைத்தார்.

போகிற போக்கில், ரஜினி 61 வயதில் சூப்பர் ஹீரோ என்று சொல்லுகிறீர்கள், எம்.ஜி.ஆர் தனது 62 வயதில் உலகம் சுற்றும் வாலிபன் என்ற மெகா ஹிட்டைக் கொடுத்தார் என்று ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டார். பாவம் கூகுள் அண்ணன் அங்கு வரமுடியாதக் காரணத்தால் ஞானி சொன்னால் சரியாத்தான் இருக்குமென்று அனைவரும் கேட்டுக்கொண்டனர். டிவி பார்த்த எனக்கு மட்டும் சுர்ர் என்று கூகுளைக் கிளிக்கியதில், எம்.ஜி.ஆரின் 56 வயதில் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானதைப் போட்டுக்கொடுத்தது. சாணி அடிக்கத்தான் வழியில்லாமல் போய்விட்டது.

சுதாங்கன் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை வெளியிட்ட சூரர்கள் என்று சொன்னாலும் அடிக்கடி ரஜினியை மாஸ் என்று ஒத்துக்கொண்டார்.

கலாநிதி மாறனின் விளம்பரந்தான் எந்திரனின் இத்தனை பரபரப்புக்க் காரணம், ரஜினியின் ஸ்டார் வேல்யூ இல்லை என்ற போது, மத்த நடிகர்களின் படங்களை வெளியிட்ட சன் டிவி ஏன் இந்தளவுக்கு செய்யவில்லை என்றதும், ரஜினியின் ஸ்டார் வேல்யூ மறுப்பதற்கில்லை ஆனாலும் பாகவதருக்கும் எம்ஜியாருக்கும் இருந்தளவுக்கு கிடையாது என்று சொல்லியும் ஆறுதலில்லாமல்,

என்னிடம் 3 கோடி கொடுத்தால், யாரையும் "சூப்பர் ஸ்டார்"ஆக ஆக்க முடியுமென்று சபதமிட்டு முடியை சிலிப்பிக்கொண்டார். சஞ்சை பிண்டோவுக்குதான் என்ன சொல்வது என்று தெரியாமல் அழுவதுபோல் சிரித்துக்கொண்டார்.


அதற்கு ரஜினி ரசிகர் ஒருவர், கஞ்சாக் கருப்புகிட்ட 3 கோடி இருக்காதா என்றுக் கேக்காமல், இப்பொழுதுகூட ரஜினியின் மாஸுக்காகதான் இந்த ப்ரோகிராமையே NDTV-HINDU நடத்துகிறது என்று போட்டு உடைக்க, நிகழ்ச்சி நடத்திய சஞ்ஜை பிண்டோ கொஞ்சமும் சங்கோஜமில்லாமல் ஒத்துக்கொண்டதுமில்லாமல், TRP ரேட்டிங் கூடவே ரஜினி நிகழ்ச்சி செய்கிறோம் என்றபோது, அவர் நேர்மை பிடித்திருந்தது.

மேலும் ரஜினியேப் பணம் கொடுத்து கட்டவுட்டிற்கு பாலூத்த சொல்வதாக சொன்னதும், ரசிகர் ஒருவர் வாயால் சிரிக்காமல், இதுவரை ரஜினியிடம் ஒரு நயாப்பைசா வாங்காமல் இலவசக் கல்யாண மண்டபம் அதுவும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாகா நடத்துவதை சொல்லி வாயடைத்தார்.

சரி விசயத்துக்கு வருவோம்,

ஞானியும் சுவாரஸ்யத்துக்காக பொய் சொல்லும் ஒரு சராசரி சாநியே, அதனால் அவர் அதை சொன்னார் இதை சொன்னார் என்று ஓடாதீர்கள். நமக்கே திரும்பினாலும் திரும்பும்.

Monday, October 18, 2010

நண்பேன்'டா

வாங்க சார். இது ஒரு மொன்ன சுய சொரிதல், வேற வேலையில்லன்னா மேலப் படிங்க. சும்மா என்னோட ஃபிரண்ட்ஸுங்க ஞாபகம் வந்திடுச்சு. நண்பன்'ங்ற பதத்தின் வேல்யூ எனக்கு எட்டு வயசிலயே அதுவும் கிராமத்துல படிக்கும்போது ஆரம்பிச்சிடுச்சு. படிப்பு,விளையாட்டுன்னு ஆரம்பிச்சு, பாதினோரு வயசுல சென்னைக்கு வந்தபிறகு கிராமத்து நண்பர்கள் என்னைக் கண்டால் நட்பாக சிரிப்பது மட்டுந்தான். பேச்சு முன்னைப்போல் இல்லை.ஏதோ ஒருக் கூச்சந்தான் என்னைவிட்டு அவர்களை விளக்கியது.

அடுத்து காலேஜில் புது நட்புகள் கிடைத்தாலும் பள்ளிகால நட்பைப்போல வெள்ளந்தியாக இல்லை. உள்குத்துப் பேச்சும்,படாடோபமும் சாதாரணமாக இருந்தது. அதையும் மீறிப் பூக்கும் நட்பகளும் சின்ன சின்ன விசயத்துக்கும் வெடித்து சிதறும் நிலயிலயே இருந்தது.


பின்னர், வேலை சேர்ந்த இடத்திலும், கல்யாணத்துக்குப்பின்னும் ஏற்படும் நட்புகளும் என்னதான் விரும்பியதாக இருந்தாலும் ஒரு செயற்கைத்தனம் இருக்கத்தான் செய்கிறது. மொத்தத்தில் சட்டென நினைக்கும் போது " நான் நல்ல நண்பனாக இருந்திருக்கேன்,இருக்கின்றேன், ஆனால் அவர்கள் எனக்கு நல்ல நண்பர்களா என்று எனக்குத் தெரியாது".

அப்படி இதுவரை என்னைக் கடந்த சில நட்புகளும் அவர்கள் விட்டுச்சென்ற தடயங்களும்...

கல்லூரி முடிந்து வேலைக்கு சேர்ந்த பிறகு என் ஜூனியராக வேலைக்கு சேர்ந்தார். அவர் வெளியூர் என்பதால் என் வீட்டிலிருந்தே அவருக்கும் சாப்பாடு எடுத்து செல்வேன். அந்தளவுக்கு நெருக்கம். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள், என் வீட்டுக்கு அவரும் அவர் வீட்டுக்கும் நானும் உரிமையாய் செல்லும் அளவுக்கு நட்பு வளர்ந்திருந்தது.அப்படி இருக்கையில், என் திருமண் விடுப்பு முடிந்து திரும்பி வந்தால், அலுவலகத்தில் என்னென்ன மாறுதல்கள் செய்ய வேண்டுமோ எல்லாம் செய்துவிட்டு, மேலாளரிடமும் சில தேவையில்லா வார்த்தைகளையும் சொல்லிவிட்டார். மேலாளர் என்னை அழைத்து அவர் சொன்ன அத்தனை விசயத்தையும் என்னிடம் சொல்ல, வருத்தமாக இருந்தாலும் "அவருக்கு தன்னை முன்னிருத்த ஆசை இருக்கும்தானே சார்" என்று சொல்லிவிட எனக்கும் மேலாளருக்கும் இன்னும் நெருக்கம் அதிகமானது.

அதன்பின் மேலும் 3 வருடங்கள் ஒன்றாக வேலை செய்தோம். ஆனால் நட்பு மட்டும் விலகவில்லை.

வெளிநாடு வந்ததும், அதே நண்பர் திரும்ப திரும்ப வேண்டுகோள் வைத்ததால், 3 மாதத்தில் அழைத்துக் கொண்டேன். நிலமை என்னவென்றால், இங்கும் அவர் ஜூனியர். அடுத்த 3 மாதந்தான் அவரால் பொறுத்துகொள்ள முடிந்தது, நான்காவது மாதத்தில் தனக்கு தனியா பொறுப்பு தந்தால்தான் வேலை செய்வேன் என என் நிறுவனத்திடம் சொல்ல, "நீ கிழம்பினால் போதும்" என்று அவரைக் கிழப்பிவிட்டது. இதை நிறுவனமோ அவரோ என்னிடம் சொல்லவில்லை. நான் திரும்ப திரும்ப அவரிடம் கேட்க,"வீட்டுப் பிரச்சினை சார், நான் போயே ஆகனும்" என்று சொல்லிவிட்டார்.அதுதான் உண்மையென்று நான் நினைத்துக்கொண்டிருந்த போது என் முதலாளி உண்மைய சொல்ல ஆச்சரியமில்லாமல் எதிர்பார்த்த ஒன்றுதானே என்று சிரித்துக்கொண்டேன்.

இது முதல் நண்பேன்'டா.

அடுத்து, அதே பழைய நிறுவனம். நான் உற்பத்தி பிரிவு. அவர் தறம் பிரிப்பு பிரிவு. நல்லது கெட்டது சொல்லமுடியும். உற்ப்பத்தி செய்ய முடியாது. ரொம்ப அன்னோன்யம். வேலை முடிந்ததும் நேராக என் வீட்டுக்கு வருவார். சில நேரம் இரவுவரை பேசிக்கொண்டே இருப்பார். விடுமுறை நாட்களிலும் என்னிட தொலைபேசாமல் இருக்கமாட்டார். என் அம்மா உருக்கு சென்றுவிட்டால் என்னுடனே தங்கிவிடுவார். பாசக்காரர். "வெளிநாட்டில் ஒரு ரெண்டு வருசம் வேலை செஞ்சுட்டு செட்டிலாய்டனும் சார்" என்று அடிக்கடி சொல்வார். என் வகுப்பு தோழர்கள் பலர் வெளிநாட்டில் வேலை செய்ததால் அடிக்கடி என்னைப் பேச சொல்வார். எனக்கேத் தேவைப்பட்டதுதான். ஆனால் கேட்க கூச்சம். ஆனால் அடுத்தவருக்கு கேட்க்க கூச்சம் இல்லை.கேட்டேன். நணபன் ஒருவன் ஓகே சொல்ல, இரண்டே மாததில் வெளிநாடு சென்றுவிட்டார். ஆனால் மூன்று மாதங்களுக்கு மேலாகியும் பேசவில்லை. ஹாஹா எதிர்பார்த்ததுதான். மறந்தேவிட்டேன்.

என்றோ ஒரு நாள் ஹிண்டு நாளிதழ் விளம்பரம் பார்த்து அப்ளை செய்த, வெளிநாட்டு வேலை எனக்கு கிடைக்க சந்தோசத்தில் திக்குமுக்காட, சேர்ந்தும்விட்டேன். அப்புறந்தான் அந்த முதல் "நண்பேன்'டா" விசயம் நடைபெற்றது.

கொஞ்ச நாள் அமைதியாக இருந்தேன். ஒரு தொலைபேசி வந்தது. நண்பன் மூலமாக வெளிநாடு சென்றாரே அதே நண்பர். ஆனால் இந்திய தொலைபேசி எண்."என்ன சார், எப்ப இந்தியா வந்தீங்க"என்றேன். "அடப்போங்க சார்,ரொம்ப டார்ச்சர் சார், எக்கசக்க பாலிடிக்ஸ் சார், முடியல வந்துட்டேன்" என்றார். "சரி சார், பயோடேட்டா அனுப்புங்க,இப்போதைக்கு ப்ரொடக்ஷன்ல ஒரு வேகண்ட் இருக்கு,செலக்சன்ல ஓப்பனிங் இருந்தா கால் பண்றேன்" என்றேன். " சார் கோச்சுக்காதீங்க, ப்ரொடக்சன்ல இருந்தாகூட எனக்கு கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும், நீங்க இருக்கீங்கல்ல, அப்படியே கேடு கேட்டு பிக்கப்பண்ணிக்குவேன்"ன்னார். யோசிக்க முடியவில்லை. நட்பு வெல்ல, பொய்சொல்லி இவரை அழைக்க வேண்டியதாகியது.

வந்தார். உண்மையிலே கஷ்டப்பட்டார். கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப் போல் சொல்லித்தற, ஒரு வருடத்திலயே பிக்கப் செய்துகொண்டார். ஆனால் எனக்குதான் தாவு தீர்ந்துவிட்டது.அவர் வேலையும் சேர்த்து என் வேலையும் பார்க்க வேண்டும். இரண்டு வருடங்கள் ஓட, என்னுடன் கம்பேர் செய்ய ஆரம்பித்துவிட்டார். கார்,வீடு,சம்பளம், வேலைக்காரர்கள் இப்படி... ஆனால் நல்ல வேலையாக இவர் என்னிடமே கேட்டார். நானும் விளக்கி சொன்னேன். என்னுடைய பொசிசன் வேறசார்.நான் அதெற்கென்று படித்தவன். மேலும் என் பதவி. அவர் ஒரு அனுபவஸ்தர் மட்டுமே. படிப்பில்லை. சொன்னாலும் புரியவில்லை. என்னிடம் நேரடியாக சொல்லாமல் அடுத்தவரிடம் குறை சொல்ல ஆரம்பித்தார். என் காதுக்கு வந்தபோது வேதனையாக இருந்தாலும், உடனுக்குடன் அழைத்து என் ஞாயத்தை சொல்லிவந்தேன். இதில் முக்கியமாக, அவரில்லாமல் ஒன்றும் செய்யமுடியாது, ஸ்தம்பித்துவிடும் என்று தீவிரமாக நம்பினார். அவரை என்கரேஜ் செய்ய சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவரை சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்சில் விட்டிருப்பது தெரிந்தது. 5 வருடம் கழித்து, பல உயர்வு பெற்றும்கூட என்னைக் கம்பேர்செய்து விரக்தியாகிவிட்டிருந்தார். அப்போது அவரின் சம்பளம் ஒன்றரை லட்சம். படித்தவரில்லை, ஒரு அனுபவஸ்தர் என்பது கவனத்தில் வைக்கவேண்டும். மிரட்டும் விதமாக அவருக்கும் எனக்கான சலுகைகள் தந்தால்தான் வேலை செய்வேன் என சொல்ல, நிறுவனமும் தாராளமாக நின்றுகொள்ளலாம் என சொல்ல, தலைமுடியைப் பிய்த்துக் கொண்டார். நானோ எந்த ஒரு முடிவும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தேன். ஊருக்குச் சென்ற ஆறே மாதத்தில் " சார் தெரியாம தப்பு செஞ்சுட்டேன், இனிமேல் அப்படி நடக்க மாட்டேன், தயவு செஞ்சு ஒரு சான்ஸ் கொடுங்க" என்றார். கொடுக்கலாம். வாய்ப்புக்கிடைத்தால். இவர் என் இரண்டாவது நண்பேன்'டா.

அடுத்து, இவர் என் நண்பரின் நண்பர். அப்படியே எனக்கும் நண்பரானார். ஒரு நாள், " சார் அடுத்த வாரம் ஊருக்குப் போறேன், அர்ஜெண்டா கொஞ்சம் பணம் வேணும், கம்பெம்னியிலக் கேட்டிருக்கேன், என்னமோ தெரியல டிலே பன்றாங்க, நீங்க குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும், திரும்பி வரும்போது குடுத்திட்றேன்" என்றார்.

நிஜமாலும் நல்ல டைப். அதிர்ந்து பேசமாட்டார். ஞாயிற்றுக் கிழமையானது, தோசை போட்டு வைத்துவிட்டு என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்து சாப்பிடவைப்பார். அவரைப்பார்த்து ஆச்சரியமாக இருக்கும். மீதி வேலை நாட்களில் என் வீட்டில்தான் சாப்படு. என் வீடு எப்போதும் பேச்சுலர்களின் சொர்க்கம். எல்லாம் கிடைக்கும். அதுவும் தங்கமணி டெலிவரி விசயமாக இந்தியா சென்றுவிட்டதால், நான் மட்டுந்தான். ஞாயிற்றுக்கிழமை வேலைக்காரி வராததால் எனக்கு இந்த அழைப்பு. வரும் பல பேச்சுலர்களில் இவர் மட்டும் என்னை அழைப்பதால் அவரின் அந்த நேர்மைக்கு அடிமை. அவர் மனைவி விசா விசயமாக இந்தியாவில் இருந்தார். அனேகமாக திரும்பி வரும்போது அழைத்து வரலாம்.

மறுக்கத் தோணவில்லை. "இங்க இல்ல சார். நீங்க ஊருக்குப்போங்க. என்னோட மிஸ்ஸஸ்கிட்ட சொல்லி அனுப்புறேன். ஆமா அமவ்ண்ட் எவ்ளோ சொன்னீங்க?" என்றேன். "எழுபதாயிரம், போர் போடனும்" என்றார். "ஓகே சார், செஞ்சிடலாம்" என்றேன்.

அதன்பிறகு பெரியக்கதை. ஊருக்குப்பேசினால் தங்கமணிக்கு கோபம். காரணம் சிலபல எக்ஸ்பீரியன்ஸ். ரிசல்ட் ஒன்னுமே சரியில்ல. எல்லாமே நாமம்தான். எல்லாமே "நண்பேன்'டா"தான். என்னை வறுத்தெடுத்தாலும், "வாக்குக் குடுத்திட்டேன் செல்லம், ப்ளீஸ் இந்தெ ஒரு முறை" இப்படி ஏதோதோக் கெஞ்ச , " இன்னிக்கி வெள்ளிக்கிழமங்க யாருக்கும் பணம் குடுக்கமுடியாது" என்று சொல்ல, "ப்ளீஸ் நாளக்கியாவாதும் அனுப்பிடு, இது அவர் அக்கவுண்ட் நம்பர்" எனக்குடுக்க, "நாளைக்கி சனிக்கிழம் பேங்க் ஆப்டே தான், அறக்கப் பறக்க செய்யமுடுயாதுன்னு" சொல்ல அப்புறம் நான் கத்த, கடைசியாக ஒரு சின்ன சண்டையின் வழியாக பணம் பரிவர்த்தனையானது.

சரி முடிஞ்சதா. இப்ப பிரச்சினைக்கு வருவோம். கிட்டத்தட்ட 4 மாதங்கள் கழித்து, வெளியில் பர்ச்சேஸ் செய்ய நான் செல்ல, அந்த நண்பரும் ஏதோ வாங்க என் காரிலேயே வந்தார். பொருட்கள் வாங்கினோம். எனக்குப்பிடித்த பொருள்வாங்க பணம் போதுமானதாக இல்லை. நமதூரில் ஆயிரம் ரூபாய் மதிப்பு, தந்தார். நானும் திரும்பித்தற மறந்துவிட்டேன். மேலும் என் எழுதாயிரம் அவரிடமிருந்த மிதப்போ என்னவோ. சுத்தமாக மறந்துவிட்டேன். ஒரு நாள் என் தங்கமணி" ஏங்க அவர்கிட்ட ஆயிரரூபா வாங்கினீங்களா?" என்றார்."ஆமாம், அதுக்கென்ன இப்போ" என்றேன். "ஆமா நல்லா ஃபிரண்டு பிடிக்கிறீங்க, அத அவர் ஒய்ஃபுகிட்ட சொல்லி, அந்த பொண்ணு 10 முறைக் கேட்டுடுச்சு" என்றார். "கொடுத்தற வேண்டியதுதானே" என்றேன். "என்ன ஆளுங்க நீங்க, நம்ம பணம் 70 ஆயிரம் கிட்டத்தட்ட 6 மாசமா அவங்ககிட்ட இருக்கு, அதுக்கு பதிலக்காணோம், ஆயிரம் ஓவா வேணுமாக்கும்"ன்னு சொல்ல எனக்கே அவர்கள் கேப்பது ஓவராகப்பட்டது. கேட்பதுமில்லாமல் சலித்துக்கொள்ளும் தோரனை என் தங்கமணியை விசனப்படுத்தியிருக்கிறது."ஒரு வேள அந்தப் பொண்ணுக்கு தெரியாம இருக்கலாம், அடுத்த முறக்கேட்டா 70 ஆயிரத்துல ஆயிரத்தக் கழிச்சுட்டு மீதி 69 ஆயிரம் எப்பத் தர்றீங்கன்னு கேளு"ன்னுடு நானும் மறந்துட்டேன்.

மூனு நாள் கழித்து, நண்பர் மனைவியுடன் வந்தார். 69 ஆயிரம் தந்தார். வசதியாக அதற்குமுன் தந்த ஐந்தாயிரத்தை ஏனோ மறந்திருந்தார். எனக்கு கேக்கத்தோணவில்லை.

போகும்போது ஒரு வார்த்தை சொன்னார், நீங்க இப்படி இருப்பீங்கன்னு தெரியாது. ஊர்ல வாங்குனது வேற. இது வேற. தேவையில்லாம ரெண்டையும் குழப்பிக்கிறீங்க. ரொம்ப தேங்ஸ் என்றவர் இன்றுவரை ஒரு ஃபார்மாலிட்டி சிரிப்பு மட்டுமே. "நண்பேன்'டா"



அடுத்து... (என்னது அடுத்துன்னுதானே கேக்குறீங்க?) நண்பர்கள் புடைசூழ வளர்ந்ததால் எனக்கு எல்லாமே நண்பர்கள்தான். "நான் அவர்களுக்கு நல்ல நண்பன், ஆனால் எனக்கு..?

Saturday, October 16, 2010

இவர்களை எப்படி அழைக்கலாம்..?

நீங்கள் அடிக்கடிப் பார்த்தவர்கள்தான். படிக்கும் இடத்தில்,வேலை செய்யும் இடத்தில், வசிக்கும் இடத்தில் இப்படி. அவர்களை உங்களால் அனுசரித்து செல்லவும் முடியாது. அதே சமயம் ஒதுக்கவும் முடியாது. எந்தவொருக் கட்டமைப்பு வைத்தாலும் அவர்கள் ஊடுருவிக்கொண்டே இருப்பார்கள். யாரப்பற்றி சொல்கிறேன் என்று புரியாதவர்களுக்கு "எட்டப்ப வகயறாக்கள்" என நினைவுபடுத்துகிறேன்.

இந்த எட்டப்ப வகையறாக்களால் நம்மால் வரையறுக்கமுடியா பல துன்பங்கள் மனிதன் தோன்றியக் காலம் தொட்டே வருவது கண்கூடு. ஒருவேளை இவர்கள் மட்டும் இல்லாமல் போனால் மனித குலமே ஒரு பிடிப்பில்லாமல் சப்பென செல்லக்கூடும். ஆம் அவர்கள்தான் இந்த மனித குலத்தையே இயக்குபவர்கள்.

இவர்கள் வரலாற்றில் இருந்து வலைப்பூக்கள்வரை விரவி இருக்கிறார்கள். வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு எட்டப்பன் இல்லையென்றால் "வீரபாண்டியக் கட்டபொம்மன்" தடையமில்லா வரலாற்றில் ஒழிந்து இருக்கலாம்.

ஆங்கிலேயா ஏகாதிபத்தியத்தில் எண்ணற்ற எட்டப்பர்கள் இருக்கவேதான் எத்தனை போராட்டங்கள், எத்தனை இழப்புகள். அதுவே அழியா வரலாறாகவும் மாறியிருக்கிறது. அந்த எட்டப்பர்கள் மட்டும் இல்லையென்றால், அந்த வெள்ளைக்கார நாய்களுக்கு பணிவிடை செய்ய குமாஸ்தா நாய்கள் இல்லாமல் போயிருக்கலாம், மொழிபெயர்க்க பல இந்திய நாய்கள் கிடைக்காமல் போயிருக்கலாம், அவர்களைப் பாதுகாக்க பல இந்திய ராணுவ நாய்கள் கிடைக்காமல் போயிருக்கலாம், இப்படி அந்த வெள்ளைக்காரர்களுக்கு அனைத்து வேலைகளையும் செய்தது நம் இந்திய நாய்கள்தான். அப்படிமட்டும் செய்யாமல் இருந்திருந்தால், "மேதகு எலிசபத் ராணியே, இந்தியர்கள் யாரும் எங்கள் பேச்சைக் கேட்பதில்லை,வெறும் அம்பதாயிரம் பேர்களால் ஒரு முடியும் புடுங்க முடியவில்லை" என்று பின்னங்கால்கள் பிடனியில் பட ஓடியிருப்பார்கள்.நமக்கும் இந்த அரிய வரலாறும் மகாத்மாவும்,மாமாவும் கிடைக்காமல் போயிருக்ககூடும். அப்படியெல்லாம் இருந்தால் சுவாரஷ்யம் இல்லைதானே.

நேற்று ஈழத்தில் நடந்தது என்ன? விடிவெள்ளி கருணா. பிரபாகரனுடனே இருந்தார். போராடினார். பேசித்தீர்க்கும் பிணக்குகள். வெளியேறினார். போராடவா? இல்லை, காட்டிக் கொடுக்க.

காட்டிக்கொடுப்பவர்கள் இல்லாதவரைதான் ஒரு போராட்டம் போராட்டமாக இருக்கும். கூடவே இருந்தவன் அல்லது இருப்பவன் காட்டிக்கொடுக்க ஆரம்பித்தால், முடிந்தது கதை. அது நாடாக இருக்கட்டும்,ஒரு சமூகமாக இருக்கட்டும் இல்லை ஒரு தனிமனிதனாக இருக்கட்டும்.

ஆனால் எட்டப்பர்கள் இல்லாத ஒரு இடம் சாத்தியமா? சாத்தியம் என்று நினைத்தால் நீங்கள் அப்பாவி. ஆப்பிலேயே அமர்ந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இதில் பல எட்டப்பர்களுக்கு தாங்கள் எட்டப்பர்கள் என்பது தெரியமலேப் போவது துரதிஷ்டம்.
அதிலும் அந்த எட்டப்பர், அதே சமூகமாகிப்போனால் அந்த சமூகத்தின் கதி அதோகதிதான்.புரியும்படியாக சொல்வதென்றால், "பெண்களுக்கு 33 சதவிகிதம் ஒதுக்கீடு" என்ற ஒரு கோரிக்கை வலுப்பெரும்போது, பெரும்பணக்காரகளின் மனைவிமார்களின் ஏதோ ஒரு சங்கம், அதற்கெதிரா ஒரு வழக்கு போட்டால், அதுவும் பெண்களே பெண்களுக்கு எதிராகப்போட்டால் என்னாகும்? நீர்த்துப் போகும்தானே.

அதுவரை சப்போர்ட்டாக இருந்த ஆண்களுக்கும் தலைசுத்துவது வாஸ்தவம்தான். அதிலும் விவரம் புரியாதவர்களுக்கு ஒன்னும் விளக்கததேவையில்லை. வீட்லயே ஒன்னும் புடுங்க முடியலயாம், இதுல நாட்டுலெவலுல எடம் கேக்குதாம் என எள்ளி நகையாடாமல் முடியாது.

இந்த ட்ரெண்டுக்குப் பேர்தான் நம்ம விரலால நம்ம கண்ண குத்துறது. நாமலே நம்மல செருப்பால அடிச்சுக்கிறது.ராஜபக்சே ஒரு கிரிமினல்'ன்னு ஐநா சொல்லும்போது "நான் தமிழர்களை கொலை செய்யல"ன்னு ராஜபக்சே சொல்றதுக்கும், ஒரு தமிழனே, " ச்சே ச்சே இட்ஸ் டூ மச், ராஜபக்சே தமிழனக்கு உதவியாய் இருக்கிறார், தமிழர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள்"ன்னு சொல்றதுக்கும் உள்ள வித்தியாசம்.

இந்தமாதி ஸ்டேட்மெண்ட ஒரு தமிழனோ, தமிழ் அரசியல்வாதியோ விட்டால் டோட்டலா நமக்குதான் டேமேஜ்.

இந்தக் கேடுகெட்ட வேலைய பலர் தெரியாமலே செய்வதுதான் கொடூரம்.

ஒரு நிகழ்ச்சி. அவர்களுக்கு அது புரட்சித் திருமணம். ஆம் சாதி மதத்தில் உருண்டு சேராகிக் கிடந்தவர்களுக்கு நடுவே வெவ்வேறு சாதியும் வெவ்வேறு மதத்தையும் சேர்ந்த இருவருக்குமிடையே நடந்த ஒரு திருமணம். சிலருக்கு புரட்சியாகத் தெரியலாம். சிலருக்கு அப்படி இருக்க அவசியமில்லை. ஆனால் கண்டிப்பாக அதை நக்கல் செய்யவேண்டிய அவசியம் இல்லை.

ஒரு வேளை அந்த நிகழ்வை விவரித்தவர் மட்டமானவராகவே இருந்தாலும் கூட. பாராட்டியாகவேண்டியக் கட்டாயமில்லை. ஆனால் கண்டிப்பாக மட்டம்தட்டுவது அருவருப்பானது.

மட்டம்தட்டியது அந்த மனிதரையா? அந்த திருமணத்தையா? இல்லை அந்த இணந்த உள்ளங்களையா?

யோசிக்க வேண்டிய விசயம். இது நமக்கு புதிதல்ல. நாம் தமிழேண்டா. நம்மை ஆள்பவர்கள் எவ்வழியோ நாம் அவ்வழி.கருணாநிதி ஜெயலலிதாவ புகழ்ந்தும்,ஜெயலலிதா கருணாநிதியப் புகழ்ந்தும் கேட்டிருக்கீங்க? இது உதாரணத்துக்காக.

ஒரு நல்ல விசயத்துக்கு உண்ணாவிரதமிருந்த போது, அதன் எதிரிலேயே உண்ணும் விரதம் இருந்தவர்கள்.

அடுத்து நமது பெண்களுக்கான சுதந்திரத்தை கிணற்றுத்தவளையாக கணித்தல். வெளியில் வரவேண்டும்.உலகம் பெரியது. இதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. இதில் தெரிந்தோ தெரியாமலோ அடக்கியோ அடங்கியோ இருக்கிறார்கள். ஒரு தனி மனிதனால் தீர்க்ககூடியது அல்ல. ஊர்கூடி இழுக்கும் தேர்போல. நாமும் இழுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் எதிர்புறமாக தள்ளுவது அபத்தமானது.

பலர் அது தெரியாமலயே எதிர்வினை புரிகிறோம். நேர்வினை புரிபவரின் நம்பிக்கையில் ஐயப்பாடு காரணமாக இருக்கலாம். அதுக்கு அவர்களைப் பிண்ணிப் பெடலெடுத்தால் பாராட்டக்கூடியது அதுவும் சரியானக் காரணங்களுடன். அது சரியானதா என்பதை சிந்திக்க வேண்டும்.

சில சுதந்திரம் போராட்டத்திலும் சில சுதந்திரம் புரிதலிலும் சில சுதந்திரம் விட்டுக்கொடுத்தலிலும் உள்ளது.

பெண் சுதந்திரமென்பது புரிதலில் மட்டுமே உள்ளது என்பது என் அபிப்ராயம். பெண் சுதந்திரம் என்பது ஆண் செய்யும் அத்துமீறல்கள் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆக பெண் சுதந்திரம்மென்பது கருவியாகமட்டுமில்லாமல் இயக்கியாகவும் இருத்தலே. இதில் அனைத்தும் அடங்கும்.

உடனே சில வில்லப் பெண்கள் உங்கள் ஞாபகத்தில் வந்து உங்களைக் குதறினால், உலகில் நடக்கும் க்ரைம்கள் 95 சதவிகிதம் ஆண்களாலே நடந்தது, நடக்கிறது என்பதை நினைவில் கொண்டால் கொஞ்சம் கோபம் மட்டுப்படலாம்.

இருட்டில் இருந்துகொண்டு இருட்டென்று சொல்லாதவர்கள் ஒரு நாள் இருட்டென்று உணருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பது சகஜம், ஆனால் இருட்டை வெளிச்சமென்று சொல்பவர்களுக்கு நாம் நல்ல முறையில் சொல்வது கடமை. ஏனென்றால் அவர்களும் நம் சகோதரர்(ரி)களே...!

டிஸ்கி: இது யாரைப் பற்றியும் அல்ல.