தென் சூடானுக்குப் பிறகு தமிழ் ஈழம் தான்!
சிங்கள ராணுவத்தின் பிடியில் இருந்து, வழக்கறிஞர் கயல் என்ற அங்கயற்
கண்ணியை மீட்டதற்காக, உயர் நீதிமன்ற தமிழ் இலக்கியப் பேரவை, கடந்த 26-ம் தேதி வைகோவுக்கு நன்றி பாராட்டும் விழா நடத்தியது. வழக்கறிஞர்கள் அறிவழகன், இராம.சிவசங்கர், காசிநாதபாரதி ஆகியோர் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்திற்கு, கட்சிகளைக் கடந்து 2,000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், ''பிரதமரை சந்திக்க என்னையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றார் வைகோ. அது அவசரப் பயணம். குறிப்பிட்ட நேரத்துக்குள் பிரதமர் இல்லம் போய்விட முடியுமா? எனத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே வந்தார். பெற்ற மகளைப் பறிகொடுத்தது போலப் பதைபதைத்தார். பிரதமரை வைகோ சந்தித்த பிறகு, இலங்கை அரசுக்கு நமது வெளியுறவுத் துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர். அதற்குப் பிறகுதான், அங்கயற்கண்ணி விடுவிக்கப்பட்டார்...'' என விவரித்தார்.
அடுத்துப் பேசினார் அங்கயற்கண்ணி... ''எங்களைக் கைது செய்ததுமே, வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்போவதாக மிரட்டி வந்தார்கள் இலங்கை அதிகாரிகள். திடீரென அவர்கள் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அன்றுதான் இங்கே, பிரதமரை வைகோ சந்தித்து இருக்கிறார்!'' என்று நெகிழ்ந்தார்.
இறுதியாக மைக் பிடித்தார் வைகோ. ''எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை தமிழர்களின் நலனுக்காகப் பயன்படுத்துவேன். வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, சிங்கள ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார் என்ற செய்தி கேள்விப்பட்டபோது, நான் தஞ்சாவூருக்கு காரில் சென்றுகொண்டு இருந்தேன். உடனே, பிரதமருக்கு போனில் தகவல் தெரிவித்தேன். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அன்றுதான் நான் அவரிடம் பேசினேன். காங்கிரஸ் கட்சியின் பிரதமராக எனக்கு அவரைப் பிடிக்காது. மன்மோகன்சிங் என்ற தனி மனிதராகப் பிடிக்கும். 'சிங்கள ராணுவம் பிடித்துவைத்து இருப்பது பாவலர் பெருஞ்சித்திரனார் என்ற தமிழ்ப் புலவரின் பேத்தியை. உடனே, அவர் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இதற்கான பின் விளைவுகளை மத்திய அரசு சந்தித்தே தீர வேண்டும். இது தொடர்பாக நான் உங்களை சந்திக்க வேண்டும். முடிந்தால், நேரம் ஒதுக்குங்கள்’ என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டேன். சிறிது நேரத்தில், 'மறுநாளே சந்திக்க வரலாம்...’ என, பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. எனது ஆதங்கத்தை அவரிடம் நேரில் கொட்டினேன். உடனே நடவடிக்கை எடுத்தார்.
இதே மன்றத்தில்தான் ஈழத்தில் நடப்பது என்ன? என்று நான் பேசியதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இலங்கையில் நடந்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் என ஐ.நா. குழு இன்று கூறியுள்ளது. ராஜபக்ஷேவும் அவரது கூட்டமும் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.
நெஞ்சைப் பிழியவைக்கும் தகவல் ஒன்றை நான் கேள்விப்பட்டேன். ஈழத்தில் போர் நடந்தபோது, ஒரு வீட்டுக்குள் புகுந்த சிங்கள ராணுவத்தினர், அங்கிருந்த வயதான தாயையும் கற்பழித்துள்ளனர். பூப்பெய்தி சில நாட்களே ஆன 13 வயது சிறுமியையும் விடவில்லை. இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. 25 லட்சம் அப்பாவிகள் பலியான தெற்கு சூடான் ஜூலை 1-ம் தேதி சுதந்திர தேசமாக, புதிய விடியலுடன் உதயமாகிறது. இந்த விடியல் ஈழத்திலும் நிகழும்.
ஈழப் போர் இன்னும் முடியவில்லை. அதை இயக்குவதற்கு தாய்த் தமிழகம் தயாராக இருக்க வேண்டும். மாவீரன் பிரபாகரன் தோன்ற வேண்டிய நேரத்தில் தோன்றி படையை வழி நடத்துவார். இந்த இயக்கம் இருக்கும் வரை... என் உயிர் ஓயும் வரை.. நான் பிறந்த இந்த மண்ணுக்கும், தமிழர்களுக்கும் என்னால் முடிந்த சேவைகளை செய்துகொண்டே இருப்பேன்...'' என்று சீறினார் வைகோ!
நன்றி-சூவி
ஒரு நல்ல தலைவனுக்கு நேரம் எப்போ கனியுமென்று தெரியவில்லை.
எனது நாட்குறிப்பு
மாற்றங்கள் முதலில் உன்னுள்ளும் உன்னை சார்ந்தவர்களுள்ளும் ஆரம்பிக்கட்டும்.
Saturday, April 30, 2011
Friday, April 29, 2011
திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்!-தலைகீழான ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு

சென்னை: தேர்தலுக்கு முன்புவரை 'அதிமுகதான் ஜெயிக்கும், ஜெ முதல்வராவார்' என கூறிய இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி, இப்போது நிலைமை திமுகவுக்கே சாதகமாக உள்ளதாகக் கூறியுள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடேயும் ஓஆர்ஜி நிறுவனமும் இணைந்து தேர்தலுக்குப் பின் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
மே 10ம் தேதி வரை கருத்துக் கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பதால், எக்ஸிட் போல் எனும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தவில்லை என்றும், வாக்களித்த மக்களிடம் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையில் இந்த முடிவுகளை வெளியிட்டிருப்பதாகவும் ஹெட்லைன்ஸ் டுடே தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் முடிந்த இரு தினங்களில் வாக்காளர்களைச் சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். 2009 நாடாளுமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.
அதில், திமுக கூட்டணி 130 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் அதிமுக கூட்டணி 105 முதல் 120 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
திமுக மட்டும் தனியாக 90 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் வாய்ப்புள்ளதாகவும் இதில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஹெட்லைன்ஸ் டுடே கூறியிருப்பதாவது:
"இந்தத் தேர்தலில் ஜெயித்து முதல்வராவது அம்மாவா, கலைஞரா? இதை அதிகாரப்பூர்வமாகத் தெரிந்து கொள்ள இன்னும் 15 நாட்கள் உள்ளன. ஆனால், இந்தியா டுடே- ஓஆர்ஜி இணைந்து மேற்கொண்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுகவின் கையே ஓங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்பில்லை என்பதும் தெரிகிறது.
தேர்தலுக்கு கடைசி பதினைந்து நாளில், அதிமுகவை விட சிறப்பாக தேர்தல் பணியாற்றியதோடு, மக்களின் வாக்குகளைக் கவரும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளது திமுக.
இதன் விளைவு, இந்தத் தேர்தலில் 115 முதல் 130 தொகுதிகள் வரை திமுக கூட்டணிக்கே கிடைக்க வாய்ப்புள்ளது. அதிமுக அணி 105 முதல் 120 தொகுதிகள் வரை பெறக்கூடும். கடந்த தேர்தலை விட 33 முதல் 48 வரையிலான தொகுதிகளை திமுக இழந்தாலும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்பது உறுதியாகியுள்ளது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி, 36 முதல் 51 தொகுதிகள் வரை கூடுதலாகப் பெற்றாலும் ஆட்சியமைக்கும் வாய்ப்பில்லை.
இந்தத் தேர்தலில் சுவாரஸ்மான விஷயம், தேர்தலுக்கு முன்பு எடுத்த கருத்துக் கணிப்பில் 45 சதவீதம் பேர் திமுகவுக்கு ஆதரவாகப் பேசினார்கள். ஆனால் தேர்தலுக்குப் பின் கருத்துக் கணிப்பு நடத்தியபோது, 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் திமுகவுக்கே வாக்களித்ததாய் கூறியுள்ளனர்.
கிராமப் புறங்களில் 2ஜி, தமிழ் ஈழப் பிரச்சினைகள் எடுபடவில்லை. அங்கே அந்த மக்களின் தேவைகளை யார் சரியான முறையில் நிறைவேற்றினார்கள், நிறைவேற்றுவார்கள் என்பதே பிரதான பிரச்சனையாக இருப்பது இப்போது புரிகிறது. கிராமப் பகுதிகளில் திமுகவுக்கு பெரும் ஆதரவு நிலவுகிறது. அங்கு திமுக 5 சதவீதம் அதிகமாக வாக்குகளைப் பெறும்.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, மொத்தத்தில் திமுக அணி 3 சதவீத வாக்குகளை கூடுதலாகப் பெறும் வாய்ப்புள்ளது. அதிமுகவுக்கு 7 சதவீத வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தாலும், கூட்டணி பலமின்மை அவருக்கு பாதகமாக உள்ளது. வைகோவை அவர் கடைசி நேரத்தில் இழந்திருக்கக் கூடாது. குறிப்பாக கடைசி நேரத்தில் அவரை புண்படுத்தி வெளியேற்றியது அதிமுகவுக்கு பெரிய பின்னடைவு. வைகோ இருந்திருந்தால் 3 சதவீத கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கும். அது கதையையே மாற்றியிருக்கும்.
இதுவே இந்தத் தேர்தலில் ஆட்சியை மீண்டும் திமுகவிடம் ஒப்படைக்கப் போதுமானதாக உள்ளது.
முன்பை விட அதிக தொகுதிகளைப் பெற்றாலும், அதிமுக எதிர்க்கட்சி வரிசையிலேயே உட்கார வேண்டிய நிலைதான் அடுத்த 5 ஆண்டுகளும்.
thanks/thatstamil

Wednesday, April 27, 2011
தமிழினக் காவலர்கள் எங்கேப்பா?
தீண்டாமையின் பிடியில் சிக்கிய பள்ளி மாணவர்கள்: தினமும் ஒன்பது கி.மீ., நடந்து செல்லும் அவலம்
டி.என்.பாளையம்:தீண்டாமை கொடுமையால் அருகிலுள்ள பள்ளியில் பயில முடியாமல், 4.5 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்லும் பரிதாபமான நிலை, சத்தி அருகேயுள்ள கிராம குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
சத்தி அருகே செண்பகப்புதூர் பஞ்சாயத்துக்குட்பட்டது குட்டை மேட்டூர் காலனி. இங்கு 100 குடும்பங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அனைவருமே கூலித்தொழில் செய்து வரும் ஏழைகள்.இப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கல்வியை துவங்க வேண்டுமானால், 4.5 கி.மீ., தொலைவிலுள்ள நஞ்சப்பக்கவுண்டன் புதூர் நடுநிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது.ஏன் இந்த கொடுமை; அருகில் ஏதும் பள்ளிகள் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.காலனிக்கு அருகிலேயே 1.5 கி.மீ., தொலைவில் குண்டி பொம்மனூரில் யூனியன் நடுநிலைப் பள்ளி உள்ளது. ஆனால், அங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகளை சேர்க்க, ஜாதிக் கொடுமை குறுக்கே நிற்கிறது.
குண்டிபொம்மனூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மக்கள், தங்கள் ஊரில் உள்ள யூனியன் பள்ளியில், குட்டை மேட்டூர் காலனியை சேர்ந்த குழந்தைகள் கல்வி பயில, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக தொடரும் இவர்களது எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், குட்டை மேட்டூர் காலனி மக்கள், வேறு வழியின்றி நஞ்சப்பக்கவுண்டன் புதூர் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். குழந்தைகளும் தினமும் ஒன்பது கி.மீ., பாத யாத்திரை செல்கின்றனர்.இப்பள்ளிக்கு செல்ல பிஞ்சு குழந்தைகள் நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்பதை விட, எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சத்தி - கோவை தேசிய நெடுஞ்சாலை மற்றும் சத்தி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையைக் கடப்பதுதான் பெரும் சோதனை.
அந்தளவுக்கு குண்டி பொம்மனூரில் தீண்டாமை கொடுமை நிலவுகிறது. இங்குள்ள நடுநிலைப்பள்ளியில் 70 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களில் 64 பேர் ஒரு சமூகத்தையும், ஆறு பேர் மற்றொரு சமூகத்தையும் சேர்ந்தவர்கள். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எவரும் பல ஆண்டுகளாக பயின்றதில்லை என்பது இப்பள்ளியின் வரலாறு.
இப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், "குழந்தைகளை சேர்ப்பதில் நாங்கள் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. இங்கு நிலவும் எதிர்ப்பால், குட்டைமேட்டூர் காலனி மக்கள் இங்கு குழந்தைகளை சேர்ப்பதை நிறுத்திக் கொண்டனர்' என்றனர்.தங்கள் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி வெளிப்படையாக கூறவும், குட்டைமேட்டூர் காலனி மக்கள் தயங்குகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 32 மாணவர்கள் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளைக் கடந்து, நான்கரை கி.மீ., நடந்து, நஞ்சப்பகவுண்டன் புதூர் பள்ளிக்கு செல்வதை பார்க்க பரிதாபமாக உள்ளது.ஜாதிய ஒடுக்கு முறை பள்ளி செல்லும் மாணவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை என்பது வேதனைக்குரியது.
***
இந்தக் கொடுமை எங்கே நடக்குது? குண்டி பொம்மனூர். பேரே நாத்தமடிக்கையில வேற என்னத்த சொல்ல.
ங்கொய்யால இத ஒருத்தனும் கேக்கமாட்டான். இது இன்னக்கி நேத்து இல்லடி. தலைமுறை தலைமுறையா நடக்குது.இந்த பரதேசி நாய்கள் இதைக் கேக்கமாட்டானுங்க. ஏன்னா...? பாவம் இவிங்களுக்கென்ன வெளிநாட்டு பணமா கெடக்கு? ஒன்னுமில்லாதவனுங்கதான.
உள்ளூர்ல வெலை போகாத மாட்டுக்கு வெளியூர் சந்தைக் கேக்குது.
ச்சீமா(ன்)னிடர்களே... கொஞ்சம் இத்தயும் யோசிங்கப்பா.

Thursday, April 14, 2011
தேவகோட்டையில் சாத்தான்!
கண்மாய் கரையில் கற்பழித்து.. பீர் பாட்டிலை உடைத்து சங்கை அறுத்து...
தேர்தல் சத்தத்தை மீறி, பஞ்சவர்ணத்தின் அழுகுரல் சிவகங்கை
மாவட்டத்தைத் திடுக்கிடவைத்தது. நடந்த கொடூரம் கேட்டு அதிர்ந்து நிற்கிறார்கள், மக்கள்!
தேவகோட்டையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டரில் இருக்கிறது கீழஉச்சாணி. இந்தக் கிராமத்தின் ஆதி திராவிடர் காலனியைச் சேர்ந்தவர்கள் கண்ணன் - பஞ்சவர்ணம் தம்பதி. செங்கல் சூளையில் வேலை பார்த்தவர்களின் மகள் செல்வ பிரியா. அந்த 11 வயதுப் பூ இன்று இல்லை. காமக் கொடூரன் ஒருவனால் பாழ்படுத்தப்பட்டு உயிரையும் இழந்துவிட்டாள்!
பித்துப் பிடித்தவர்போல் உட்கார்ந்திருந்த கண்ணன் நடந்த கொடுமையைத் தயக்கத்துடன் சொன்னார்.
''அடுத்தாப்புல இருக்கிற மேலஉச்சாணி கிராமத்துக்கு செங்கல் அறுக்குறதுக்காக நானும் என் பொஞ்சாதியும் இருபது நாளைக்கு முந்தி போனோம். அங்க இருந்து இங்க வந்து போறதுக்கு சிரமமா இருந்ததால, சூளைக்குப் பக்கத்துலயே ஒரு குடிசையைப் போட்டு குடும்பத்தோட தங்கிட்டோம். இந்த வீட்டுல எங்க ஆத்தா மாத்திரம் இருந்துச்சு. அந்த கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமியும் ராஜேந்திரனும் அடிக்கடி சூளைக்குப் பக்கம் உக்காந்து தண்ணியடிப்பாங்க. போதையில எங்கிட்ட ஏதாச்சும் பேசி வம்பு பண்ணுவாங்க. நான் அதைப் பெருசா எடுத்துக்கலை.
அஞ்சு நாளைக்கு முன்னாடி ராத்திரி நானும் என் பொஞ்சாதியும் வீட்டுக்குள்ள படுத்து இருந்தப்ப வேலுச்சாமி குடிபோதையில எங்க வீட்டுக்குள்ள புகுந்துட்டான். அவனப் புடிச்சு வெளிய தள்ளி, 'இந்த வேலை எல்லாம் எங்க கிட்ட வேணாம். அப்புறம் மானம் மருவாதி இருக்காது’ன்னு திட்டிட்டேன். அவங்க சாதிக்காரரான எங்க முதலாளிகிட்டேயும் இதைச் சொன்னேன். அவரும் கண்டிச்சார். பஞ்சவர்ணத்துகிட்ட வம்பு பண்ணுவான்னு நினைச்சேன். ஆனா, அந்தப் பாவி எம் புள்ளய...'' என்று மேலே சொல்ல முடியாமல் மயங்கினார். அவரை ஆறுதல்படுத்திவிட்டுத் தொடர்ந்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேவகோட்டை ஒன்றிய துணைச் செயலாளர் ரத்தினம்.
''அன்னிக்கு ஸ்கூல் விட்டு வந்ததும், அப்பத்தாவுக்கு ராத்திரி சோறு குடுக்குறதுக்காக செங்கல் சூளையில இருந்து கௌம்பி இருக்கா செல்வ பிரியா. தூக்குச் சட்டியோட கிளம்புன புள்ள, மறுபடியும் செங்கல் சூளைக்குப் போய்ச் சேரலை. கண்ணன் தேடிப் போயிருக்கார். எங்க தேடியும் புள்ளையைக் காணோம். என்னாச்சோ... ஏதாச்சோன்னு ராத்திரியில் இருந்து தேடி இருக்காங்க. பொழுது விடிஞ்சப்ப, சூளைக்குப் பக்கத்துல இருக்கிற கண்மாய்க்குள்ள செல்வ பிரியா பொணமாக் கிடந்ததைப் பார்த்தாங்க. பீர் பாட்டிலை உடைச்சு சங்கை அறுத்த பாவிங்க, அதுக்கு முந்தி அந்தப் பச்ச மண்ணை கண்மாய் கரையில போட்டு நாசம் பண்ணி இருக்காங்க. தப்பிக்கிறதுக்காக கண்மாய்க் கரையில இருந்த புல்லை எல்லாம் பிடிச்சுப் பிறாண்டி இருக்கு அந்தப் புள்ள. கொலையைப் பண்ணிட்டு பொணத்தை கண்மாய் சகதிக்குள்ள அமுக்கிவெச்சுட்டாங்க.
புள்ளையைக் காணோம்னு கண்ணன் தேடுனப்ப, வேலுச்சாமியும் ராஜேந்திரனும் சேர்ந்து தேடுற மாதிரி நடிச்சிருக்காங்க. உடம்பு கிடைச்சப்பவும் பரிதாபமா நின்னுக்கிட்டு இருந்தாங்க. போலீஸ் மோப்ப நாய் விறுவிறுன்னு ஓடிப் போயி வேலுச்சாமி வீட்டுல படுத்துக்கிச்சு. உடனே வேலுச்சாமி, ராஜேந்திரன், பிரபாகர்னு மூணு பேரை போலீஸ் தூக்கிட்டுப் போயிட்டாங்க...'' என்றார் வேதனையாக.
தொடர்ந்து பேசிய ஏ.ஐ.ஒய்.எஃப்-பின் முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.கே.பாண்டியன், ''சாப்பாடு குடுத்துட்டுப் போன செல்வபிரியா, ராஜேந்திரனோட சைக்கிளில் போனதைப் பார்த்து இருக்காங்க. ஆக, இவங்க ரெண்டு பேரும்தான் கூட்டுச் சேர்ந்து அந்தப் புள்ளய நாசம் பண்ணிக் கொன்னு இருக்காங்க. இவங்களுக்கு உடந்தையா பிரபாகரன்கிற பையனும் இருந்திருக்கான். ஆனா, வேலுச்சாமியை மட்டும் வழக்கில் சேர்க்கப் பாக்குறாங்க. எங்களுக்கு சரியான நியாயம் கிடைக்கணும்!'' என்றார்.
வேலுச்சாமியின் உறவினரான போஸ், ''வேலுச்சாமி தப்புச் செஞ்சிருந்தா, அவனை தூக்கில் போட்டாலும் எங்களுக்கு சம்மதம். ஆனா, கொலை செய்யுற அளவுக்கு அவனுக்குத் தைரியம் பத்தாது. அதனால உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கணும்!'' என்றார்.
தேவகோட்டை டி.எஸ்.பி-யான கணேசன், ''பத்து நாளைக்கு முந்தியே அந்தப் பொண்ணைத் தனியா கூட்டிட்டுப் போயி சில்மிஷம் பண்ணி இருக்கான். அந்தச் சின்னப் பொண்ணுக்கு விஷயம் தெரிலை பாவம்! நேத்திக்கும் கண்மாய் கரையில வெச்சு எல்லை மீறவும் அலறிக்கிட்டு ஓடி வந்துருக்கா. விஷயத்தை வெளியில் சொல்லிடுவாங்கிற பயத்துல அவளை மடக்கிப் பிடிச்சு பீர் பாட்டிலை ஒடைச்சு சங்கை அறுத்துட்டான். இதுதான் நடந்திருக்கு. சந்தேகத்தின் பேரில் இன்னும் சிலரை விசாரித்தோம். ஆனா, அவங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு தெரிய வந்ததால், அவங்களை ரிலீஸ் பண்ணிட்டோம். கொலை, கற்பழிப்பு, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை உள்ளிட்ட செக்ஷன்களில் வழக்கு பதிவு செய்து இருக்கிறோம்...'' என்றார்.
''இங்கதான் புள்ளையப் பொதைச்சோம்!'' என்று காலனி மக்கள் காட்டிய இடத்தில், செவ்வந்தி மாலை கசங்காமல் கிடந்தது. அவள் மட்டும் மண்ணுக்குள்!
ஜூவியில் வந்தது. நானும் ஜூவி படித்தேன். எனக்கென்னமோ இந்த செய்தி செவுளில் அடித்தது. வடநாட்டுக்காரன திருத்தனும் அடுத்த நாட்டுக்காரனத் திருத்தனுமுங்றதுவிட்டுட்டு தமிழ்நாட்டுகாரனுங்களத் திருத்தத்தான் நிரையத் தேவைப்படுதில்லையா?
மேலவளவு கீழவளவு பத்தி எழுத ஆளில்லை.
உத்தப்புரம் பிரமிடு பத்தி எழுத ஆளில்லை.
கீரிப்பட்டி,பாப்பாபட்டி சமத்துவம் பத்தி எழுத ஆளில்லை.
வெண்ணைங்க பாலிடிக்ஸ் பத்திமட்டும் எழுதவந்துட்டானுங்க, கொடி பிடிக்க.
அறிவுகெட்ட உள்ளூர்காரனும், வெளியூர்க்காரனும்.
Tuesday, April 12, 2011
ஜெயலலிதாவை தோற்கடிக்க பலக் காரணங்கள்.
வாங்க டுயூட்ஸ். என்னப் பொருத்து யார் வேணாலும் ஜெயிக்கலாம். ஆனால் ஜெயலலிதா மட்டும் ஜெயிக்கக் கூடாது. தமிழ்,தமிழன்,தமிழ்நாடு என அனைத்துக்கும் விரோதி இவர். சே.. சே.. அப்படியெல்லாம் இல்லேன்னு சொல்றவங்க ச்சோ.. ச்சோன்னுட்டு சோ’கிட்டயோ இல்ல சுப்ரமணிய சுவாமிகிட்டயோ கேட்டு டவுட்ட க்ளியர் செஞ்சுக்குங்க.
நீங்க பதிவுலகல இருந்து தெரிஞ்சுக்கனுமுன்னா ”எங்கே பிரா’மணன்” எழுதிய கில்லிதாண்டக் கேட்டுக்கங்க.
சரி.. காரணங்களுக்குப் போகலாமா?
1. என் மரியாதைக்கும் மட்டுக்கும் உரிய வைகோ,சீமான் போன்ற நிஜ தமிழ் உணர்வாளர்களையும், இணையவெளியில் மட்டும் வாள் சுழற்றும் கிஞ்சுத்தும் களப்பணியாற்றாத மாதிரி தமிழ் உணர்வாளர்களையும் பொடா’விலோ,தடா’விலோ வேலுருக்கு அனுப்பக் கூடாது என்ற நல்லெண்ணத்தால் ஜெயா தோற்கடிக்கப் பட வேண்டும்.
2. பட்டினிச் சாவு என்ற ஒன்றை மறந்திருக்கும் என் தொப்புள் கொடி உறவு தமிழ்நாட்டு மக்களுக்கு மறுபடியும் எலிக்கறியும், கஞ்சித் தொட்டியும் கொண்டு வரக் காரணாமாயிடக்கூடாது என்பதற்காகவும் ஜெயாவும் அவரின் குடும்ப அங்கமான சசியும் தோற்க்கடிக்கப்பட வேண்டும்.
3. சகோதரி சகோதரி என்று ஒரு பக்கம் பாசமும், மறுபக்கம் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து களப்பணியாற்றிய நேசமும் கொண்ட ஒரே சிங்கத் தமிழனை, கேவலம் ஆயிரம் கோடி ரூபாய்க்காகவும் ராஜபக்சேவின் கைக் கூலிகளான இந்து ராம்,தினமலர்,தினமணி, மற்றும் அறிவிளி சோவுக்காகவும் தூக்கி எறிந்த நம்பிக்கை துரோகத்துக்காகவும் ஜெயாவும் அவர் குடும்பமும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
4.ஆசிட் வீசும் கலாச்சாரம் ஒழிந்து போக ஜெயாவும் அவரின் குடும்ப உறுப்பினர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
5. அரசு ஊழியர்களை ஒடுக்க எஸ்மா,டெஸ்மா மீண்டும் வராமல் தடுக்க ஜெயாவும் அவர் குடும்பமும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
6. மிகவும் கீழ்தரமாக வயசான கவர்னர் சென்னாரெட்டி மீது தவறாக நடக்கப் பார்த்தார் என்று எந்தக் கூச்ச நாச்சமில்லாமல் சொன்னவர் எதையும் செய்வார் என்பதால் ஜெயாவும் அவரின் அருமை சசியும் தோற்க்கடிக்கப்பட வென்ண்டும்.
7.தன் மேல் கூறப்படும் எதிர்ப்புகளை சமாளிக்க திராணியில்லாமல் விமான நிலையத்தில் வைத்தே அதுவும் பெண்களைக் கொண்டே மட்டமான செய்கைகளால் பரபரப்பாகிய ஜெயாவும் சசியும் தோற்க்கடிக்கப்பட வேண்டும்.
8.தமிழ் நாட்டின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு எந்த ஒரு திட்டமும் தீட்டாமல், எந்த ஒரு தொழில் வளர்ச்சிக்கும் வித்திடாமல் அனைவரையும் காலில் விழவைத்து தமிழனை தலைகுனிய வைத்த ஜெயாவும் சசியும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
9.கோயில்களுக்கு யானை வழங்கி தமிழனை கி.மு’க்கு அழைத்து செல்லும் இந்த ஜெயாவும், சசியும் மண்ணை கவ்வச் செய்ய வேண்டும்.
10. கடந்த 5 வருடம் ஒரு ஆக்கம் சிறந்த எதிர்க் கட்சியாக இல்லாமல் கொட நாட்டில் ஓய்வெடுத்த ஜெயாவும் சசியும் தமிழ்நாட்டை விட்டே விரட்டப்பட வேண்டும்.
11.இனியொரு வளர்ப்பு மகன் திருமணத்தைக் காணும் தெம்பு இல்லாததால் ஜெயாவும் சசியும் தோற்க்கடிக்கப்பட வேண்டும்.
12. மறந்து போன கஞ்சா கேசு மறுபடியும் அறங்கேறாமல் இருக்க ஜெயாவும் சசியும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
13.முக்கியமாக ஒரு தமிழனை தமிழனே ஆளவாவதும் ஜெயாவும் சசியும் தோற்க்கடிப்பட வேண்டும்.
14. கலைஞர் கொண்டுவந்த நல்ல திட்டங்கள் தொடர்ந்து செயல்பட ஜெயாவும் சசியும் தோற்க்கடிக்கப்பட வேண்டும்.
15. மிக முக்கியமாக குறுக்குப்பட்டை கூட்டணியான இந்து ராம்,தினமலர்,தினமணி,சோ தோற்கடிக்கப்பட்டால்தான் தமிழனுக்கு அங்கீகாரம் கிடைக்க போராட முடியும். மேலே சொன்ன சனியன்கள் சேர்ந்தால் எந்த காலத்திலும் தமிழின விரோதிகளை வீழ்த்தமுழியாது. அதற்காகவாவதும் இந்த ஜெயாவும்,சசியும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
சிந்தியுங்கள் மக்களே.
மீண்டும் மூனுசதவீத
மினுக்கிகள் ஆள வேண்டுமா?
ஒத்த ரூவா அரிசியும்
ஓடி வரும் நூத்தியெட்டும்
கலைஞர் காப்பீடும்
கடன் தீர்ந்த விவசாயிம்
காரைவீட்டு கோவிந்தனும்
ரெண்டு ஏக்கர் கரிசலும்
காப்பாத்தும் கலைஞரை.

Monday, April 11, 2011
நக்கீரன் கருத்துக் கணிப்பு. ஜெயலலிதாவும் சோ’வும் கலக்கம்.
திமுக கூட்டணிக்கு 140-அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள்:
சென்னை: நக்கீரன் இதழ் நடத்தியுள்ள இறுதிக் கட்ட கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி 140 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 94 இடங்களிலும் வெற்றி பெரும் என்று தெரியவந்துள்ளது.
நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மார்ச் 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் நக்கீரன் முதல் கட்ட கருத்துக் கணிப்பு நடத்தியது.
அப்போது அதிமுக கூட்டணியில் மதிமுக இருந்தது. திமுக-அதிமுகவின் இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகள் வெளியாகவில்லை. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேர் வீதம் 234 தொகுதிகளில் 1,170 பேர் களமிறங்கி இந்த மெகா சர்வேயை நடத்தினர்.
ஒரு தொகுதிக்கு 400 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் ஆண், பெண்களிடம் சரிபாதியாக, படித்தவர்கள், பாமரர், கிராமத்தினர், நகர்ப்புறத்தினர், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர், சொந்தத் தொழில் செய்வோர், மாணவர்கள், வீட்டுவேலை செய்வோர், இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வியபாரம் செய்வோர், சொந்த விவசாயம் செய்வோர், விவசாயக் கூலிகள், கூலி வேலை செய்வோர், உயர் நிலை பணியாளர்கள், வேலையில்லாதோர் என அனைத்துத் தரப்பினரிடமும் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
தொகுதிக்கு 400 பேரை ஆண்கள், பெண்கள் சரிபாதி அளவிலும், வயதளவில் 18-25, 25-40, 40-55, 55க்கு மேற்பட்டோர் என்று பிரித்தும் தேர்வு செய்து கருத்துக் கணிப்பை நக்கீரன் நடத்தியது.
அதிலும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மத வழி சிறுபான்மையினர் என அந்ததந்தப் பகுதியில் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாச்சாரப்படி வாக்காளர்களை அடையாளம் கண்டு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
அந்தக் கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி 146 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 80 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளதும், 8 தொகுதிகளில் நிலைமையை கணிக்க முடியாத அளவுக்கு இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளதும் தெரியவந்தது.
அதே நேரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் இரு கட்சிகளும் ஒன்று அல்லது இரண்டு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் ஒருவரைவிட ஒருவர் முன்னணியில் இருந்ததும் தெரியவந்தது.
இந் நிலையில் அதிமுக கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறியது. மேலும் திமுக, அதிமுக ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு தங்களது இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கின.
நக்கீரன் 2வது கட்ட கருத்துக் கணிப்பு:
இந் நிலையில் நக்கீரன் 234 தொகுதிகளிலும் தனது 2வது கட்ட கருத்துக் கணிப்பை நடத்தியது.
திமுக கூட்டண் 140-அதிமுக கூட்டணி 94:
இதன் விவரங்களை கடந்த 3 இதழ்களில் நக்கீரன் வெளியிட்டது. அதன்படி, திமுக கூட்டணிக்கு மொத்தம் 140 இடங்களும் அதிமுக கூட்டணிக்கு 94 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
திமுகவுக்கு 90 இடங்கள்:
திமுக கூட்டணியில் திமுகவுக்கு 90 இடங்களும், காங்கிரசுக்கு 24 இடங்களும், பாமகவுக்கு 17 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 4 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு 3 இடங்களும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 1 இடமும், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னணிக் கழகத்துக்கு 1 இடமும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
இந்தக் கூட்டணிக்கு மொத்தத்தில் 140 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
அதிமுகவுக்கு 74 இடங்கள்:
அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு 74 இடங்களும், தேமுதிகவுக்கு 8 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்களும், மனித நேய மக்கள் கட்சிக்கு 1 இடமுநம், சமத்துவ மக்கள் கட்சிக்கு 1 இடமும், கொங்கு இளைஞர் பேரவைக்கு 1 இடமும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள் கிடைக்கும் என்று நக்கீரன் கூறியுள்ளது.

திமுக வெற்றி உறுதி!
நன்றி:யுவகிருஷ்ணா
http://www.luckylookonline.com/
April 11, 2011
ஒரு வழியாக திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது. அதிமுக மெஜாரிட்டி பிடிக்கும். ஸ்வீப் அடிக்கும் என்று மிரட்டிக் கொண்டிருந்த ஊடகங்கள் ஒருவழியாக தரையில் கால் பதித்திருக்கின்றன. ‘அதிமுக வரும், ஆனா வராது’ என்று சொல்லத் தொடங்கியிருக்கின்றன. போஸ்ட் போல் சர்வேயில் தங்களது தவறுகளை திருத்திக் கொண்டு திமுக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கிறது என புதுக்கணிப்பு சொல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் கணிப்புக்கு மிகக்கடுமையாக உழைத்தாக வேண்டும். கிட்டத்தட்ட மூன்றரைக் கோடி வாக்காளர்களின் மனநிலையை 5000 பேரின் கருத்துகளை வைத்து பொதுமைப்படுத்திவிட முடியாது. சாம்ப்ளிங் அளவு குறைந்தபட்சம் மூன்றரை லட்சமாகவாவது இருந்தால்தான் ஓரளவுக்காவது உண்மைநிலையை நெருங்க முடியும். ஆயினும் இந்த எண்ணிக்கையே கூட துல்லியமான முடிவுகளை தரப் போதுமானதல்ல. லென்ஸ் ஆன் நியூஸ் எனும் இணையத்தளம் 12 தொகுதிகளில் ‘சர்வே’ செய்து, அதிமுக தனித்தே 144 இடங்களை கைப்பற்றும் என்று கணித்த காமெடியை எல்லாம் லீசில் விட்டுவிடலாம்.
நக்கீரன் இதழின் கருத்துக் கணிப்புகள் ஓரளவுக்கு துல்லியமாகவே இருக்கிறது. 98ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் திமுக-தமாகா கூட்டணி தோல்வியடையும் என்று நக்கீரன் சொன்னபோது யாரும் நம்பவேயில்லை. அதுபோலவே கடந்த 2009 பாராளுமன்றத் தேர்தலில் திமுக-காங் கூட்டணி 28 இடங்களை பிடிக்கும் என்றபோதும் யாரும் நம்பவில்லை. இம்முறை நக்கீரனின் கணிப்பே கூட மகிழ்ச்சிகரமாக பொய்த்துப்போக வாய்ப்பிருக்கிறது. 140 தொகுதிகள் வரை திமுக கூட்டணி பெறும் என்று நக்கீரன் கணிப்பதாக தெரிகிறது.
தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் இன்றைய நிலையில் திமுக கூட்டணி 150 முதல் 160 இடங்கள் வரை வெற்றியடையும் என்பதாகவே நமக்கு தோன்றுகிறது.
ஜூனியர் விகடனின் நேற்றைய கணிப்பு திமுக கூட்டணிக்கு பெரிய மனதோடு, தாராளமாக 92 இடங்களை அளித்திருக்கிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜூ.வி. திமுக கூட்டணிக்கு 7 இடங்களை தந்திருந்தது. ஆனால் தேர்தல் முடிவில் திமுக கூட்டணி 28 இடங்களை கைப்பற்ற முடிந்தது. எனவே ஜூ.வி.யின் இப்போதைய கணிப்பை வைத்து கணக்கிட்டுப் பார்த்தால் திமுக கூட்டணி ஸ்வீப் அடித்தாலும் (180க்கும் மேல்) ஆச்சரியப்பட ஏதுமில்லை.
எனவே ‘மாற்றம், மாற்றம்’ என்று முழங்கிக் கொண்டிருப்பவர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது 2014 வரைக்குமாவது கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். வேண்டுமானால் உங்களுக்காக ‘பாண்டிச்சேரி’ தற்காலிக நிவாரணத்தை அளிக்கலாம்.
தேர்தல் கணிப்புகளை வெளியிட்ட சில ஊடகங்களில், விட்டுப்போன அல்லது வேண்டுமென்றே விட்டுவிட்ட, முக்கியமான சில விஷயங்கள் உண்டு.
ஒன்று. அரசு ஊழியர்களுக்கு அதிமுக மீது இருக்கும் அச்சம். தமிழகத்தில் சுமார் எட்டு லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களையும் சேர்த்து, இவர்களது கட்டுப்பாட்டில் (அதாவது குடும்பம், நட்பு, சுற்றம்) தோராயமாக முப்பது லட்சம் வாக்குகள் இருக்கிறது.
இரண்டு. 21 லட்சம் குடும்பங்களுக்கு கான்க்ரீட் வீடு கட்டித்தரும் திட்டம். இத்திட்டத்தில் நடப்பாண்டில் மூன்று லட்சம் குடும்பங்கள் பயனடைந்திருக்கின்றன. மீதி 18 லட்சம் குடும்பங்களுக்கு படிப்படியாக அடுத்த ஐந்தாண்டுகள் என்று திமுக அரசால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, டோக்கனும் வழங்கப்பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்தால் நிச்சயம் இத்திட்டம் அரோகராதான் என்று டோக்கன் வாங்கியவர்களுக்கு தெரியும். கிட்டத்தட்ட 60 லட்சம் வாக்குகள் இத்திட்டத்தில் சம்பந்தப்பட்டிருப்பதை எந்த ஊடகமும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
ஒரு ரூபாய் அரிசியில் தொடங்கி 108 ஆம்புலன்ஸ், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மகளிருக்கு திருமண உதவித்திட்டம், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, கைம்பெண்கள் மற்றும் வயதானோர் உதவித்தொகை, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பொருளாதார ரீதியில் கைகொடுத்தது, விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட் என்று ஏராளமான நலத்திட்டங்களால் வாக்களிக்கவிருக்கும் ஒவ்வொரு வாக்காளரும் ஏதோ ஒருவகையில் நேரடியாகவே திமுக அரசால் இந்த ஆட்சிக் காலத்தில் பயன் பெற்றிருக்கிறார்கள். எனவே அதிமுக, தேமுதிக கட்சியினரைச் சேர்ந்தவர்கள் கூட திமுக கூட்டணிக்கு வாக்களிக்கும் வாய்ப்பு அதிகமிருப்பதாக யூகிக்கிறேன்.
நலத்திட்டங்கள் மட்டுமின்றி வளர்ச்சிப் பணிகளிலும் திமுக அரசு குறை வைக்கவில்லை. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மதுரை மற்றும் 3 நகரங்களில் கைத்தறி பூங்காக்கள், உலகத் தரம் வாய்ந்த நூலகம் சென்னையில், தலைமைச் செயலகம், சென்னைக்கு மெட்ரோ ரயில், தமிழகமெங்கும் பாலங்கங்கள், கான்க்ரீட் சாலைகள், புதிய அரசுக் கட்டிடங்கள், நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் என்று 95 சதவிகித தாலுகாக்கள் மற்றும் யூனியன்களில் ஏதேனும் ஒரு பெரிய கட்டமைப்பினை உருவாக்கியிருக்கிறது.
ஸ்பெக்ட்ரம், குடும்ப ஆதிக்கம், லொட்டு, லொசுக்குவெல்லாம் ஆட்சிக்கு எதிரான அலையை கிளப்ப போதுமானதல்ல. திமுகவுக்கு எதிரான விஷயங்கள் என்றால் மின்வெட்டு மற்றும் விலைவாசியாக மட்டுமே இருக்கக்கூடும். விஜய்-அஜித் ரசிகர்களின் எதிர்ப்பு திமுகவுக்கு அச்சுறுத்தல் என்றொரு மகா த்ராபையான காரணத்தை கூட ஒரு பத்திரிகை கண்டுபிடித்திருந்ததை வாசித்தேன். என்னத்தைச் சொல்ல?
திமுக இம்முறை வெல்லப்போவது அதிமுக கூட்டணியை மட்டுமல்ல. திமுகவுக்கு எதிராக அதிமுகவோடு கூட்டணி அமைத்திருக்கும் ஊடகங்கள் மற்றும் தேர்தல் கமிஷனையும் சேர்த்துதான்.
படித்தவர்கள் இம்முறை திமுகவை ஆதரிக்க மாட்டார்கள் என்றொரு கருத்தாக்கம் இருக்கிறது. நகர்ப்புறங்களில் திமுக வாஷ்-அவுட் என்றும் சொல்லி வருகிறார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சென்னையில் இருக்கும் 16 தொகுதிகளில் 10 தொகுதிகளை திமுக கூட்டணி வெல்லப் போகிறது.
பூனை மட்டுமல்ல, யானை கண்ணை மூடிக்கொண்டாலும் கூட பூலோகம் இருண்டுவிடாது.
எழுதியவர் யுவகிருஷ்ணா at Monday, April 11, 2011

Friday, April 8, 2011
ஒரு அனானியின் அசத்தல் கமெண்ட்
கீழே நீங்கள் படிக்கப் போவது ஒரு அனானியின் கமெண்ட். ஒரு பதிவில் கண்டது. அதை அவர் பெயரிட்டே பதிந்திருக்கலாம். எனக்குப் பிடித்திருந்தது. உங்கள் பார்வைக்கு.
சீமான்! உங்கள் மீது அதிக மதிப்பு வைத்திருந்தேன். ஆனால் கடந்த சில நாட்களில் நீங்கள் செய்யும் காரியங்கள், என்னை மிக வேதனை படுத்தி விட்டது. நீங்கள் சில விசயங்களை யோசித்து பாருங்கள் :
1. தமிழகத்தில் LTTE கு எவ்வளவு ஆதரவு இருந்தது, அதை ஒழித்து ...கட்டியவள், இன்று நீங்கள் யாருகக வோட்டு கேட்கிறீர்களோ அந்த ஜெயா.
2. திமுக அரசு விடுதலைப்புலிகளுக்கு உதவியதற்காக,ஜெயா சுப்பிரமணி சுவாமியுடன் இணைந்து கலைஞர் அரசைக் கலைத்தார். அதற்கு தமிழக மக்கள் என்ன செய்திருக்க வேண்டும்? கலைஞர் அரசை திரும்பக் கொண்டு வந்தார்களா?
3. ஜெயா நடப்பு அரசியலை மிக மோசமாக்கினார் என்றால் மிகையல்ல.எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது, தமிழகத்தின் பொதுப்பிரச்சினைகளான காவிரி/முல்லை/ஈழம் ஆகியவற்றுக்கு கருணாநிதி ஆதரவே அளித்துள்ளார். ஆனால் ஜெயா அதிகாரத்திற்கு வந்த பிறகு,எந்த ஒரு பொது விசயத்திற்கும் இவர் கருணாநிதியுடன் ஒத்துப்போகவில்லை என்பதை உணர்கிறீரா? அதனால் தமிழகம் ரெண்டு பட்டதுதான் மிச்சம். மேலும் 1989 லிருந்து எந்த ஒரு பொது விடயத்திற்கும் இணைந்து போராடவில்லை. நன்றாக ஞாபகம் இருக்கிறது, விடுதலைப்புலிகளை ஆதரித்து எம்.ஜி.ஆர் நடத்திய பந்துக்கு கருணாநிதி முழு ஆதரவு அளித்தது. ஆனால் இந்த பெண் அனைத்தையும் கெடுத்துவிட்டார். இவரயா நீங்கள் ஆதரிக்கப் போகிறீர்?
4.ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கு, திமுக’வை வெளியேற்றுங்கள் நான் ஆதரவு தருகிறேன் என்று அவர் கூவியது இன்னும் என் காதில் ஒலிக்கிறது. உங்களுக்கு? மேலும் சில நாட்களுக்கு முன் கம்யூனிஸ்ட்டையும்,மற்ற கட்சிகளையும் காக்க வைத்தாரே எதற்கு? காங்கிரஸ் கூட்டணி தனக்கு கிடைக்காதா என்ற தாகத்தில்தானே.
5.இளங்கோவன் விஜயகாந்துக்கு லட்டு ஊட்டுன போது,விஜயகாந்த் முத்துக்குமார் பத்தி நினைத்து இருப்பாரா? அவரும் கடைசிவரை காங்கிரஸ்சுடன் கூட்டு வைக்க தானே துடித்தார். கூட்டணி முடிவகரவரை காங்கிரஸ் ஐ எதிர்த்து எதாவது பேசினாரா? ஈழத்திற்கு ஏதாவது குரல் குடுத்தாரா? அவருக்கு நீங்க சப்போர்ட் பண்ணித்தான் ஆகனுமா?
6. நல்லவர்கள் அரசியலுக்கு வரணும்னு விஜய்க்கு ஜால்ரா அடிச்சிங்களே, இந்த விஜய்
விஜய் ஏன் ராகுலை சந்தித்தார்? சந்திப்புக்கு பிறகு அப்பாவும் மகனும் சேர்ந்து ராகுலை புகழ்ந்து விட்ட அறிக்கைகளுக்கு பதில் என்ன? எல்லோரும் வெறுத்து ஒதுக்கிய அசினை மீண்டும் தன்னுடன் நடிக்க வைத்து வாழ்வு கொடுத்தது ஏன்?
எல்லாவற்றுக்கும் போராட்டம் மற்றும் அறிக்கை தரும் நீங்கள் இவற்றை எதிர்த்து ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. உண்மையில் எனக்கு கடைசியாக உங்கள் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்றைக்கு விஜய்க்கு எல்லாம் சப்போர்ட் பண்ணிகுட்டு. இருப்பதைப் பார்த்தல் யாரையும் நம்ப முடியவில்லை.
7. ஜெயா தான் மீண்டும் வரணுமென்று துடிக்கும், நீங்கள் எல்லாம் மீண்டும் பட்டால்தான் தெரியும். LTTE ஒழிபதற்கு, ltte கு தமிழ்நாட்டில் இருந்த அதரவை அழித்ததற்கு முதல் கரணம் ஜெயா தான். வைகோவை துரத்திய பிறகாவது நீங்கள் நல்ல முடிவு எடுபிர்கள் என்று நம்பினேன். ஆனால் நீங்கள் விஜய் அளவுக்கு இறங்கி போகி விட்டிர்கள்.
இனி வுங்களை நம்பி ஒரு பயனும் இல்லை.
8. உண்மையில் தாமரை உங்களுக்கு கடிதம் எழுதிய போது அவர் மீது கோவ பட்டேன், ஆனால் இப்போது உணர்கிறேன் அவர் சொன்னது தான் சரி என்று.
அந்த அனானி நபரின் கமெண்ட் ஓவர்.
இது ஒரு நண்பரின் பதிவில் அனானி நண்பர் இட்ட கமெண்ட். அவருக்கெல்லாம் நல்ல நல்ல அனானி இருக்கிறார்கள். ஆனால் எனக்கு? ஏதோ எரிச்சலுக்கு என்னிடம் களிம்பு கேட்டு அழுதுகொண்டு இருக்கிறார்.
அனேகமாக இன்றிரவுக்குள் களிம்பு அனுப்பிவிடுவேன் என நம்புகிறேன்.

ஆறாவது முறையும் அவரே ஆள்வார்!
தலைவர் கலைஞரே தமிழகத்தின் முதல் அமைச்சர் நாற்காலியில் அமரப்போகிறார். இது காலத்தின் கட்டாயம்; தமிழகத்தின் எதிர் காலம்!
இன்றைக்குத் தலைவர்களாக வலம் வருபவர்களைப்போல, நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல கலைஞர். 'தமிழாய்ந்த பெருமகன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருதல் வேண்டும்’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கனவை நிறைவேற்ற வந்தவர் கலைஞர். 'காலம் நமக்குத் தந்த கொடை கலைஞர். அவரது ஆட்சியை இன்னும் 10 ஆண்டுகளுக்குக் கண்ணும் கருத்துமாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்’ என்றார் பெரியார். 'என்னை அறிந்தவர்கள் இந்தக் கழகத்தில் நிறையப் பேர் உண்டு. ஆனால், முழுமையாக அறிந்தவர் தம்பி கருணாநிதி மட்டும்தான்!’ என்றார் அண்ணா. திராவிட இயக்கத்தின் தத்துவத்தை அறிமுகப்படுத்திய பெரியாரும், அதை நடைமுறைப்படுத்திய அண்ணாவும், கலை இலக்கியத் தளத்தில் கொண்டுசேர்த்த பாரதிதாசனும் பாராட்டிய பெருமை கலைஞருக்கு மட்டுமே உண்டு.
13 வயதில் திருவாரூர் வீதிகளில் கொடி பிடித்துக் களம் கண்டவர், 87 வயதில் இன்றும் தமிழ் இனத்துக்காக, நாட்டுக்காக வாதாடி வருகிறார்; போராடி வருகிறார். இதுவரை தங்களது மன சிம்மாசனத்தில் வைத்து வாழ்த்தி வந்த தமிழ்நாட்டு மக்கள், இம்முறையும் அதே இருக்கையில் அவரை அமர்த்தி அழகு பார்க்கக் காத்திருக்கிறார்கள்!
பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு 1969-ல் இருந்து ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கலைஞர், தமிழகம் வளம் பெற எவ்வளவோ திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். பேருந்துகள் நாட்டுடைமை, அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்பு, குடிசை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வசதிகள், கண்ணொளித் திட்டம், கம்யூனிஸ்ட்கள் ஆளும் மேற்கு வங்கத்தில்கூட செயல்படுத்தப்பட முடியாத கை ரிக்ஷா ஒழிப்பு, இந்தியாவுக்கே முன்னுதாரணமாகக் காவலர்கள் வாரியம், மே தினத்துக்கு ஊதியத்தோடு விடுமுறை, இந்தியாவிலேயே முதலாவது வேளாண்மைப் பல்கலைக்கழகம், மீனவர்களுக்கு இலவச வீட்டு வசதித் திட்டம், அநாதைச் சிறுவர்களுக்கு கருணை இல்லங்கள், சேலம் உருக்காலைத் திட்டம், நெய்வேலி இரண்டாவது சுரங்கம், சிப்காட் தொழில் வளாகங்கள், விவசாயத்துக்கு இந்தியாவிலேயே முதன் முதலாக இலவச மின்சாரம், பெண்களுக்கு சொத்துரிமை... என்று எத்தனையோ திட்டங்கள் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் அறிமுகமாகின.
ஆனால், 1991, 2001 என்ற இரண்டு முறை தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா பொறுப்புக்கு வந்தவுடன், தனது ஆட்சியை, எவ்வாறு மக்கள் விரோத ஆட்சியாக நடத்தினார் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அவருடைய நடவடிக்கைகளைத் திரும்பிப் பார்த்தால், ரண வேதனைகளே ஏற்படும். பாரதி குறிப்பிட்டவாறு 'பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்தான் அரசாளும்’ என்ற வரிகளே நினைவுக்கு வரும். ஜெயலலிதா ஆட்சியில் நடந்தவற்றை, தமிழக வாக்காளர்கள் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.
. உலகமே கண்ணீர் வடிக்கும் வகையில், தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களை நடு இரவில் வீடு புகுந்து தாக்கிக் கைது செய்தது; இந்த நிகழ்வை குருவாயூர் கோயிலில் இருந்துகொண்டு ஜெயலலிதா செல்போனில் அகந்தையோடு ரசித்தார்; நினைவில் வாழும் முரசொலி மாறன், தளபதி, டி.ஆர்.பாலு ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளானது!
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டியின் கார் திண்டிவனம் அருகே தாக்கப்பட்டது; அவரைப்பற்றித் தரக் குறைவான விமர்சனங்களை ஜெயலலிதா செய்தார்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காரைக்குடி செல்லும் வழியில் அவரது கார் மறிக்கப்பட்டு, முட்டைகளை எறிந்து தாக்குதல் நடந்தது! பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது. ஜெயலலிதா அரசுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போகிறார் என்பதற்காக மூத்த வழக்கறிஞர்கள் விஜயன், சண்முகசுந்தரம் ஆகியோர் தாக்கப்பட்டனர்.
அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தூத்துக்குடி ரமேஷ், மதுராந்தகம் சொக்கலிங்கம், உப்பிலியாபுரம் ரவிச்சந்திரன் தாக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சட்டமன்ற விடுதிக்குள்ளேயே தாக்கப்பட்டார். இவை யாவும் ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்றன. ஜெயலலிதாவின் சாதனைகள் இவை மட்டும்தானா?
பொடா சட்டத்தின் கீழ் வைகோ, பழ.நெடுமாறன் போன்றவர்களைப் பகை உணர்வோடு சிறையில் அடைத்தவரும் இவரே. கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் மூன்று பேர் கொடூரமாக, பட்டப் பகலில் எரித்துக் கொல்லப்பட்டதற்கும் இவரது சுயநலம்தான் காரணம். மதுரையில் இளம் பெண் செரினா கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட மர்மம் இன்னமும் விலகவில்லை... என்று ஜெயலலிதாவின் அராஜக நடவடிக்கைகளை இன்னும் பட்டியல் போடலாம்!
கலைஞர் ஆட்சிக் காலம் சாதனைகளைக்கொண்டது. ஜெயலலிதா காலம் வேதனைகளைக்கொண்டது.
தி.மு.க-வின் 2011 தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது. இலவச கிரைண்டர், மிக்ஸி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, வயதானவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்பவை உட்பட பல வாக்குறுதிகள் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளன. அதைக் கண்டு பொறுக்க முடியாமல், அலறியடித்துக்கொண்டு தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது. அதை நம்புவதற்கு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.
1991, 2001 சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் பலவற்றைக் காற்றில் பறக்கவிட்டவர் ஜெயலலிதா. இன்று எங்களது அறிக்கையைப் பார்த்து காப்பி அடித்து தேர்தல் அறிக்கை வெளியிடுவதை நம்ப தமிழ் மக்கள் தயாராக இல்லை!
தலைவர் கலைஞர், இந்தியத் திருநாட்டின் அரசியல் களத்தில் 75 ஆண்டுகளுக்கு சொந்தக்காரர். தி.மு.க-வையும், தமிழகத்தையும் சோதனைக் காலத்தில் வழி நடத்தியவர். எப்போதும், எவரும் அவரை சந்திக்கலாம். ஆனால், ஜெயலலிதாவை அவரது கூட்டணிக் கட்சித் தலைவர்கள்கூட சந்திக்க முடியாது. எப்போதும் உழைக்கத் தயாராக இருக்கும் கலைஞர் வேண்டுமா, சதா ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கும் ஜெயலலிதா வேண்டுமா என்பது தமிழக மக்கள் முன் உள்ள கேள்வி.
தொலைநோக்குப் பார்வைகொண்ட தமிழ் மக்கள் கலைஞரையே தேர்ந்து எடுப்பார்கள்!
நன்றி:ஜூவி (நடு நிலையாம்)

Subscribe to:
Posts (Atom)