A எனது நாட்குறிப்பு: நண்பேன்'டா

Monday, October 18, 2010

நண்பேன்'டா

வாங்க சார். இது ஒரு மொன்ன சுய சொரிதல், வேற வேலையில்லன்னா மேலப் படிங்க. சும்மா என்னோட ஃபிரண்ட்ஸுங்க ஞாபகம் வந்திடுச்சு. நண்பன்'ங்ற பதத்தின் வேல்யூ எனக்கு எட்டு வயசிலயே அதுவும் கிராமத்துல படிக்கும்போது ஆரம்பிச்சிடுச்சு. படிப்பு,விளையாட்டுன்னு ஆரம்பிச்சு, பாதினோரு வயசுல சென்னைக்கு வந்தபிறகு கிராமத்து நண்பர்கள் என்னைக் கண்டால் நட்பாக சிரிப்பது மட்டுந்தான். பேச்சு முன்னைப்போல் இல்லை.ஏதோ ஒருக் கூச்சந்தான் என்னைவிட்டு அவர்களை விளக்கியது.

அடுத்து காலேஜில் புது நட்புகள் கிடைத்தாலும் பள்ளிகால நட்பைப்போல வெள்ளந்தியாக இல்லை. உள்குத்துப் பேச்சும்,படாடோபமும் சாதாரணமாக இருந்தது. அதையும் மீறிப் பூக்கும் நட்பகளும் சின்ன சின்ன விசயத்துக்கும் வெடித்து சிதறும் நிலயிலயே இருந்தது.


பின்னர், வேலை சேர்ந்த இடத்திலும், கல்யாணத்துக்குப்பின்னும் ஏற்படும் நட்புகளும் என்னதான் விரும்பியதாக இருந்தாலும் ஒரு செயற்கைத்தனம் இருக்கத்தான் செய்கிறது. மொத்தத்தில் சட்டென நினைக்கும் போது " நான் நல்ல நண்பனாக இருந்திருக்கேன்,இருக்கின்றேன், ஆனால் அவர்கள் எனக்கு நல்ல நண்பர்களா என்று எனக்குத் தெரியாது".

அப்படி இதுவரை என்னைக் கடந்த சில நட்புகளும் அவர்கள் விட்டுச்சென்ற தடயங்களும்...

கல்லூரி முடிந்து வேலைக்கு சேர்ந்த பிறகு என் ஜூனியராக வேலைக்கு சேர்ந்தார். அவர் வெளியூர் என்பதால் என் வீட்டிலிருந்தே அவருக்கும் சாப்பாடு எடுத்து செல்வேன். அந்தளவுக்கு நெருக்கம். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள், என் வீட்டுக்கு அவரும் அவர் வீட்டுக்கும் நானும் உரிமையாய் செல்லும் அளவுக்கு நட்பு வளர்ந்திருந்தது.அப்படி இருக்கையில், என் திருமண் விடுப்பு முடிந்து திரும்பி வந்தால், அலுவலகத்தில் என்னென்ன மாறுதல்கள் செய்ய வேண்டுமோ எல்லாம் செய்துவிட்டு, மேலாளரிடமும் சில தேவையில்லா வார்த்தைகளையும் சொல்லிவிட்டார். மேலாளர் என்னை அழைத்து அவர் சொன்ன அத்தனை விசயத்தையும் என்னிடம் சொல்ல, வருத்தமாக இருந்தாலும் "அவருக்கு தன்னை முன்னிருத்த ஆசை இருக்கும்தானே சார்" என்று சொல்லிவிட எனக்கும் மேலாளருக்கும் இன்னும் நெருக்கம் அதிகமானது.

அதன்பின் மேலும் 3 வருடங்கள் ஒன்றாக வேலை செய்தோம். ஆனால் நட்பு மட்டும் விலகவில்லை.

வெளிநாடு வந்ததும், அதே நண்பர் திரும்ப திரும்ப வேண்டுகோள் வைத்ததால், 3 மாதத்தில் அழைத்துக் கொண்டேன். நிலமை என்னவென்றால், இங்கும் அவர் ஜூனியர். அடுத்த 3 மாதந்தான் அவரால் பொறுத்துகொள்ள முடிந்தது, நான்காவது மாதத்தில் தனக்கு தனியா பொறுப்பு தந்தால்தான் வேலை செய்வேன் என என் நிறுவனத்திடம் சொல்ல, "நீ கிழம்பினால் போதும்" என்று அவரைக் கிழப்பிவிட்டது. இதை நிறுவனமோ அவரோ என்னிடம் சொல்லவில்லை. நான் திரும்ப திரும்ப அவரிடம் கேட்க,"வீட்டுப் பிரச்சினை சார், நான் போயே ஆகனும்" என்று சொல்லிவிட்டார்.அதுதான் உண்மையென்று நான் நினைத்துக்கொண்டிருந்த போது என் முதலாளி உண்மைய சொல்ல ஆச்சரியமில்லாமல் எதிர்பார்த்த ஒன்றுதானே என்று சிரித்துக்கொண்டேன்.

இது முதல் நண்பேன்'டா.

அடுத்து, அதே பழைய நிறுவனம். நான் உற்பத்தி பிரிவு. அவர் தறம் பிரிப்பு பிரிவு. நல்லது கெட்டது சொல்லமுடியும். உற்ப்பத்தி செய்ய முடியாது. ரொம்ப அன்னோன்யம். வேலை முடிந்ததும் நேராக என் வீட்டுக்கு வருவார். சில நேரம் இரவுவரை பேசிக்கொண்டே இருப்பார். விடுமுறை நாட்களிலும் என்னிட தொலைபேசாமல் இருக்கமாட்டார். என் அம்மா உருக்கு சென்றுவிட்டால் என்னுடனே தங்கிவிடுவார். பாசக்காரர். "வெளிநாட்டில் ஒரு ரெண்டு வருசம் வேலை செஞ்சுட்டு செட்டிலாய்டனும் சார்" என்று அடிக்கடி சொல்வார். என் வகுப்பு தோழர்கள் பலர் வெளிநாட்டில் வேலை செய்ததால் அடிக்கடி என்னைப் பேச சொல்வார். எனக்கேத் தேவைப்பட்டதுதான். ஆனால் கேட்க கூச்சம். ஆனால் அடுத்தவருக்கு கேட்க்க கூச்சம் இல்லை.கேட்டேன். நணபன் ஒருவன் ஓகே சொல்ல, இரண்டே மாததில் வெளிநாடு சென்றுவிட்டார். ஆனால் மூன்று மாதங்களுக்கு மேலாகியும் பேசவில்லை. ஹாஹா எதிர்பார்த்ததுதான். மறந்தேவிட்டேன்.

என்றோ ஒரு நாள் ஹிண்டு நாளிதழ் விளம்பரம் பார்த்து அப்ளை செய்த, வெளிநாட்டு வேலை எனக்கு கிடைக்க சந்தோசத்தில் திக்குமுக்காட, சேர்ந்தும்விட்டேன். அப்புறந்தான் அந்த முதல் "நண்பேன்'டா" விசயம் நடைபெற்றது.

கொஞ்ச நாள் அமைதியாக இருந்தேன். ஒரு தொலைபேசி வந்தது. நண்பன் மூலமாக வெளிநாடு சென்றாரே அதே நண்பர். ஆனால் இந்திய தொலைபேசி எண்."என்ன சார், எப்ப இந்தியா வந்தீங்க"என்றேன். "அடப்போங்க சார்,ரொம்ப டார்ச்சர் சார், எக்கசக்க பாலிடிக்ஸ் சார், முடியல வந்துட்டேன்" என்றார். "சரி சார், பயோடேட்டா அனுப்புங்க,இப்போதைக்கு ப்ரொடக்ஷன்ல ஒரு வேகண்ட் இருக்கு,செலக்சன்ல ஓப்பனிங் இருந்தா கால் பண்றேன்" என்றேன். " சார் கோச்சுக்காதீங்க, ப்ரொடக்சன்ல இருந்தாகூட எனக்கு கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும், நீங்க இருக்கீங்கல்ல, அப்படியே கேடு கேட்டு பிக்கப்பண்ணிக்குவேன்"ன்னார். யோசிக்க முடியவில்லை. நட்பு வெல்ல, பொய்சொல்லி இவரை அழைக்க வேண்டியதாகியது.

வந்தார். உண்மையிலே கஷ்டப்பட்டார். கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப் போல் சொல்லித்தற, ஒரு வருடத்திலயே பிக்கப் செய்துகொண்டார். ஆனால் எனக்குதான் தாவு தீர்ந்துவிட்டது.அவர் வேலையும் சேர்த்து என் வேலையும் பார்க்க வேண்டும். இரண்டு வருடங்கள் ஓட, என்னுடன் கம்பேர் செய்ய ஆரம்பித்துவிட்டார். கார்,வீடு,சம்பளம், வேலைக்காரர்கள் இப்படி... ஆனால் நல்ல வேலையாக இவர் என்னிடமே கேட்டார். நானும் விளக்கி சொன்னேன். என்னுடைய பொசிசன் வேறசார்.நான் அதெற்கென்று படித்தவன். மேலும் என் பதவி. அவர் ஒரு அனுபவஸ்தர் மட்டுமே. படிப்பில்லை. சொன்னாலும் புரியவில்லை. என்னிடம் நேரடியாக சொல்லாமல் அடுத்தவரிடம் குறை சொல்ல ஆரம்பித்தார். என் காதுக்கு வந்தபோது வேதனையாக இருந்தாலும், உடனுக்குடன் அழைத்து என் ஞாயத்தை சொல்லிவந்தேன். இதில் முக்கியமாக, அவரில்லாமல் ஒன்றும் செய்யமுடியாது, ஸ்தம்பித்துவிடும் என்று தீவிரமாக நம்பினார். அவரை என்கரேஜ் செய்ய சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவரை சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்சில் விட்டிருப்பது தெரிந்தது. 5 வருடம் கழித்து, பல உயர்வு பெற்றும்கூட என்னைக் கம்பேர்செய்து விரக்தியாகிவிட்டிருந்தார். அப்போது அவரின் சம்பளம் ஒன்றரை லட்சம். படித்தவரில்லை, ஒரு அனுபவஸ்தர் என்பது கவனத்தில் வைக்கவேண்டும். மிரட்டும் விதமாக அவருக்கும் எனக்கான சலுகைகள் தந்தால்தான் வேலை செய்வேன் என சொல்ல, நிறுவனமும் தாராளமாக நின்றுகொள்ளலாம் என சொல்ல, தலைமுடியைப் பிய்த்துக் கொண்டார். நானோ எந்த ஒரு முடிவும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தேன். ஊருக்குச் சென்ற ஆறே மாதத்தில் " சார் தெரியாம தப்பு செஞ்சுட்டேன், இனிமேல் அப்படி நடக்க மாட்டேன், தயவு செஞ்சு ஒரு சான்ஸ் கொடுங்க" என்றார். கொடுக்கலாம். வாய்ப்புக்கிடைத்தால். இவர் என் இரண்டாவது நண்பேன்'டா.

அடுத்து, இவர் என் நண்பரின் நண்பர். அப்படியே எனக்கும் நண்பரானார். ஒரு நாள், " சார் அடுத்த வாரம் ஊருக்குப் போறேன், அர்ஜெண்டா கொஞ்சம் பணம் வேணும், கம்பெம்னியிலக் கேட்டிருக்கேன், என்னமோ தெரியல டிலே பன்றாங்க, நீங்க குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும், திரும்பி வரும்போது குடுத்திட்றேன்" என்றார்.

நிஜமாலும் நல்ல டைப். அதிர்ந்து பேசமாட்டார். ஞாயிற்றுக் கிழமையானது, தோசை போட்டு வைத்துவிட்டு என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்து சாப்பிடவைப்பார். அவரைப்பார்த்து ஆச்சரியமாக இருக்கும். மீதி வேலை நாட்களில் என் வீட்டில்தான் சாப்படு. என் வீடு எப்போதும் பேச்சுலர்களின் சொர்க்கம். எல்லாம் கிடைக்கும். அதுவும் தங்கமணி டெலிவரி விசயமாக இந்தியா சென்றுவிட்டதால், நான் மட்டுந்தான். ஞாயிற்றுக்கிழமை வேலைக்காரி வராததால் எனக்கு இந்த அழைப்பு. வரும் பல பேச்சுலர்களில் இவர் மட்டும் என்னை அழைப்பதால் அவரின் அந்த நேர்மைக்கு அடிமை. அவர் மனைவி விசா விசயமாக இந்தியாவில் இருந்தார். அனேகமாக திரும்பி வரும்போது அழைத்து வரலாம்.

மறுக்கத் தோணவில்லை. "இங்க இல்ல சார். நீங்க ஊருக்குப்போங்க. என்னோட மிஸ்ஸஸ்கிட்ட சொல்லி அனுப்புறேன். ஆமா அமவ்ண்ட் எவ்ளோ சொன்னீங்க?" என்றேன். "எழுபதாயிரம், போர் போடனும்" என்றார். "ஓகே சார், செஞ்சிடலாம்" என்றேன்.

அதன்பிறகு பெரியக்கதை. ஊருக்குப்பேசினால் தங்கமணிக்கு கோபம். காரணம் சிலபல எக்ஸ்பீரியன்ஸ். ரிசல்ட் ஒன்னுமே சரியில்ல. எல்லாமே நாமம்தான். எல்லாமே "நண்பேன்'டா"தான். என்னை வறுத்தெடுத்தாலும், "வாக்குக் குடுத்திட்டேன் செல்லம், ப்ளீஸ் இந்தெ ஒரு முறை" இப்படி ஏதோதோக் கெஞ்ச , " இன்னிக்கி வெள்ளிக்கிழமங்க யாருக்கும் பணம் குடுக்கமுடியாது" என்று சொல்ல, "ப்ளீஸ் நாளக்கியாவாதும் அனுப்பிடு, இது அவர் அக்கவுண்ட் நம்பர்" எனக்குடுக்க, "நாளைக்கி சனிக்கிழம் பேங்க் ஆப்டே தான், அறக்கப் பறக்க செய்யமுடுயாதுன்னு" சொல்ல அப்புறம் நான் கத்த, கடைசியாக ஒரு சின்ன சண்டையின் வழியாக பணம் பரிவர்த்தனையானது.

சரி முடிஞ்சதா. இப்ப பிரச்சினைக்கு வருவோம். கிட்டத்தட்ட 4 மாதங்கள் கழித்து, வெளியில் பர்ச்சேஸ் செய்ய நான் செல்ல, அந்த நண்பரும் ஏதோ வாங்க என் காரிலேயே வந்தார். பொருட்கள் வாங்கினோம். எனக்குப்பிடித்த பொருள்வாங்க பணம் போதுமானதாக இல்லை. நமதூரில் ஆயிரம் ரூபாய் மதிப்பு, தந்தார். நானும் திரும்பித்தற மறந்துவிட்டேன். மேலும் என் எழுதாயிரம் அவரிடமிருந்த மிதப்போ என்னவோ. சுத்தமாக மறந்துவிட்டேன். ஒரு நாள் என் தங்கமணி" ஏங்க அவர்கிட்ட ஆயிரரூபா வாங்கினீங்களா?" என்றார்."ஆமாம், அதுக்கென்ன இப்போ" என்றேன். "ஆமா நல்லா ஃபிரண்டு பிடிக்கிறீங்க, அத அவர் ஒய்ஃபுகிட்ட சொல்லி, அந்த பொண்ணு 10 முறைக் கேட்டுடுச்சு" என்றார். "கொடுத்தற வேண்டியதுதானே" என்றேன். "என்ன ஆளுங்க நீங்க, நம்ம பணம் 70 ஆயிரம் கிட்டத்தட்ட 6 மாசமா அவங்ககிட்ட இருக்கு, அதுக்கு பதிலக்காணோம், ஆயிரம் ஓவா வேணுமாக்கும்"ன்னு சொல்ல எனக்கே அவர்கள் கேப்பது ஓவராகப்பட்டது. கேட்பதுமில்லாமல் சலித்துக்கொள்ளும் தோரனை என் தங்கமணியை விசனப்படுத்தியிருக்கிறது."ஒரு வேள அந்தப் பொண்ணுக்கு தெரியாம இருக்கலாம், அடுத்த முறக்கேட்டா 70 ஆயிரத்துல ஆயிரத்தக் கழிச்சுட்டு மீதி 69 ஆயிரம் எப்பத் தர்றீங்கன்னு கேளு"ன்னுடு நானும் மறந்துட்டேன்.

மூனு நாள் கழித்து, நண்பர் மனைவியுடன் வந்தார். 69 ஆயிரம் தந்தார். வசதியாக அதற்குமுன் தந்த ஐந்தாயிரத்தை ஏனோ மறந்திருந்தார். எனக்கு கேக்கத்தோணவில்லை.

போகும்போது ஒரு வார்த்தை சொன்னார், நீங்க இப்படி இருப்பீங்கன்னு தெரியாது. ஊர்ல வாங்குனது வேற. இது வேற. தேவையில்லாம ரெண்டையும் குழப்பிக்கிறீங்க. ரொம்ப தேங்ஸ் என்றவர் இன்றுவரை ஒரு ஃபார்மாலிட்டி சிரிப்பு மட்டுமே. "நண்பேன்'டா"



அடுத்து... (என்னது அடுத்துன்னுதானே கேக்குறீங்க?) நண்பர்கள் புடைசூழ வளர்ந்ததால் எனக்கு எல்லாமே நண்பர்கள்தான். "நான் அவர்களுக்கு நல்ல நண்பன், ஆனால் எனக்கு..?

5 comments:

Radhakrishnan said...

ஏமாளின்னு சொல்ல வரீங்களா? அதில்லைங்க சிலருக்கு கொடுத்து மட்டுமே வாழும் பாக்கியம் உண்டு.

நர்சிம் said...

நல்ல பகிர்வு பாஸ். தடங்கள்தான் விட்டுச்செல்வார்கள்.

http://urupudaathathu.blogspot.com/ said...

அவரும் இதே ஊருதானா???


நன்பேண்டா....

சரியான தலைப்பு தான்!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எதாச்சும் ஒரு நண்பன் (நல்ல) படிச்சு வருத்தப்படப்போறார்ங்க பாத்து.. நீங்க தான் நல்ல நண்பனாச்சே மன்னிச்சு மறந்துருங்க..:)

Thekkikattan|தெகா said...

இதெல்லாம் ‘சகஜமப்பா’ ரகம்... :) - நண்பே(ண்)டா...

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.